How To Avoid Feeling Shy In Bed? How To Avoid Feeling Shy In Bed?
காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை. என்ன வேண்டுமோ தவறாமல் கேட்டுப் பெற வேண்டும். அந்த நேரத்தில் வெட்கப்பட்டால வேலைக்கு ஆகாது. இது பெண்களுக்கு சில நேரங்களில் புரிவதில்லை. அநியாயத்திற்கு வெட்கப்பட்டு இறுக்கமாக இருப்பார்கள். இதனால் நஷ்டம் அவர்களுக்�® �ுத்தான் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.
சரி வெட்கப்படுவதை விட்டுட்டு கொஞ்ச நேரம் இந்தப் பக்கம் வாங்க, வெட்கத்தை ஓரம் கட்டும் வழியைப் பார்ப்போம்.
பொதுவாக படுக்கை அறையில் ஆண்களுக்கு எப்பவுமே வெட்கம் வருவதே இல்லை. அநியாயத்திற்கு சுதந்திரமாக இருப்பார்கள். பல நேரங்களில் ஆண்களின் இந்த திறந்த மனோபாவம்தான் பெண்களை வெட்கப்பட வைக்கும். பல பேர் முதலிரவு என்றாலே ம�¯ �ற்றும் துறந்த இரவு என்று நினைத்து பால் சொம்புடன் வரும் மனைவியை பயமுறுத்துவது போல காட்சி தருவார்கள். அந்த நிமிடமே அந்தப் பெண்ணுக்கு கணவர் மீது ஒருவிதமான பயம் வந்து விடுமாம். எனவே அப்படிப்பட்ட துறவு நிலையை ஆண்கள் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லதாம்.
பெண்களைப் பொறுத்தவரை வெட்கத்தை துறக்க வேண்டும் என்றால் அது ஆண்களின் கையில்தான் உள்ளது. தனது துணை வெட்கப்படாமல் இருகà ��கும் வகையில், இயல்பாக பேசி அவர்களை சகஜ நிலைக்குக் கொண்டு வர வேண்டும். ரிலாக்ஸ்டாக இருக்குமாறு அவர்களை இயல்புப்படுத்த வேண்டும். அதற்கேற்ற வகையில் முரட்டுத்தனமாக செயல்படுவதை விட்டு விட்டு மென்மையாக அணுக வேண்டும்.
நான்தானே உன்னுடன் இருக்கிறேன், என்னை முழுமையாக நம்பலாம் என்று நயமாக பேசி அவர்களை சகஜமாக்க வேண்டும். எடுத்ததுமே செக்ஸ் குறித்துப் பேசாமல் வேறு சில டா பிக்குகளுக்குள் நுழைந்து மெதுவாக செக்ஸ் பக்கம் போக வேண்டும்.
காமம் பாவம் அல்ல, அசிங்கம் அல்ல, அதில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் அறுவறுப்பானது அல்ல, உடலுக்கும், மனதுக்கும் இன்பம் பயக்கக் கூடியதே என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். கிட்டத்தட்ட நீங்கள் ஒரு செக்ஸ் கல்வியாளர் போல மாறி விட வேண்டும் இந்த இடத்தில்.
ஆரம்பத்திலிருந்தே அவரது போக்குக்கு நீங் கள் மாறி அவர் வழியிலேயே போக வேண்டும். அப்போதுதான் உங்களது துணை இயல்பு நிலைக்கு வருவார், உங்களிடம் முழுமையாக சரணடைய முன்வருவார்.
செக்ஸ் விளையாட்டுக்கள் சிலவற்றை சில பெண்கள் விரும்ப மாட்டார்கள். குறிப்பாக ஓரல் செக்ஸில் பல பெண்களுக்கு நாட்டம் இருக்காது. எனவே அதை நீங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. அதேசமயம், அதனால் ஏற்படும் இன்பங�¯ �களை நீங்கள் பக்குவமாக கூறி அதை ஏற்கும் வகையில் செய்வது உங்களது சாமர்த்தியம்.
எதைச் செய்தாலும் உங்களை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு செய்யாதீர்கள். மாறாக, துணையின் விருப்பத்தையும் அறிந்து, அவரது மூடையும் புரிந்து, அவரது சாய்ஸையும் தெரிந்து பின்னர் ஈடுபடும்போது முழுமையான இன்பம் கிடைக்கும்.
எனவே மனைவியின் சேலையைக் கழற்றுவதில் வேகம் காட்டாமல் அவரைச் சுற்றியி ருக்கும் வெட்கம் என்ற வேலியைக் கழற்றுவதில்தான் உங்களது சாமர்த்தியும், சக்ஸஸும் அடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!
Post a Comment