News Update :
Powered by Blogger.

சீனா ஜப்பான் பிரச்சினைகளால் பெரிய அளவுக்கு மோதல் வெடிக்கும் ஆபத்து: அமெரிக்கா கவலை

Penulis : karthik on Wednesday 19 September 2012 | 22:14

Wednesday 19 September 2012

சீனா ஜப்பான் பிரச்சினைகளால் பெரிய அளவுக்கு மோதல் வெடிக்கும் ஆபத்து: அமெரிக்கா கவலை சீனா ஜப்பான் பிரச்சினைகளால் பெரிய அளவுக்கு மோதல் வெடிக்கும் ஆபத்து: அமெரிக்கா கவலை
சீனா ஜப்பான் பிரச்சினைகளால் பெரிய அளவுக்கு மோதல் வெடிக்கும் ஆபத்து: அமெரிக்கா கவலை

பெய்ஜிங், செப்.20-

ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. எண்ணெய் வளம் உள்ள சில தீவுகளை உரிமை கொண்டாடுவதில் இந்த நாடுகளுக்கு இடையே நெடுங்காலமாகவே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 1931-ம் ஆண்டு ஜப்பான் ஆக்கிரமிப்பை நினைவுகூறும் நாளை சீனா கடந்த செவ்வாய்க்கிழமை கடைப்பிடித்தது.

இதுதொடர்பாக சீன நகரங்களில் ஜப்பானுக்கு எதிராக கடந்த 4 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்றன. இதே போன்று கடல் பகுதியில் சீன படகுகளும், ஜப்பான் படகுகளும் கடுமையாக மோதிக்கொண்டன. கிழக்கு சீன கடல் தீவு பகுதிகளில் இந்த மோதல்கள் நடைபெற்றன. சீனாவின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பதிலடி தருகிற வகையிலும் சீன நகரங்களில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான ஜப்பான் வர்த்தக நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.

ஜப்பான் எதிர்ப்பு போராட்டம் வலுத்துவிடுமோ என்ற எண்ணத்தில் ஜப்பான் நிறுவனங்கள் தங்களது பல தொழிலாளர்களை ஜப்பானுக்கு திருப்பி அனுப்பியது. இதற்கிடையே பெய்ஜிங்கில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் முன்பாக போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, தூதரகத்தின் மீது தண்ணீர் பாட்டில்களை வீசினர். அவர்கள் சீனக்கொடிகளை அசைத்தவாறு, ஜப்பான் ஆக்கிரமிப்புக்கு எதிராக கோஷங்களை முழங்கினர� ��.

இந்த போராட்டம் மீண்டும் நடக்காதவாறும், கலவரங்களைத் தடுக்கும் விதத்திலும் சீனா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஜப்பான் தூதரகத்தின் முன்பாக சீன கலவர தடுப்பு போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளனர். இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் பற்றி சீனா சென்றுள்ள அமெரிக்க ராணுவ மந்திரி லியோன் பானட்டா கருத்து தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் பெரிய மோதல்களாக, கலவரங்களாக வெடிக்கும் ஆபத்து உள்ளது. இதில் அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின்போது, சீனா தான் அனுபவித்த வேதனைகளை நினைத்துப்பார்க்கிறது. அதே நேரத்தில் நாம் கடந்த காலத்தை நினைத்துக்கொண்டு வாழ்ந்து விட முடியாது என்றார்.  
comments | | Read More...

ஒருநாளைக்கு 900 கிலோ தங்கம் உற்பத்தி

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை திறப்பு: ஒருநாளைக்கு 900
கிலோ தங்கம் உற்பத்தி ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை
திறப்பு: ஒருநாளைக்கு 900 கிலோ தங்கம் உற்பத்தி
[image: ]
ஜூபா, செப். 20 - ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய தங்க சுத்திகரிப்பு ஆலையை
சூடான் அதிபர் ஓமர் அல்பஷீர் திறந்து வைத்தார். இந்த ஆலை ஒரு நாளைக்கு
900 கிலோ தங்கத்தையும் மற்றும் 200 கிலோவெள்ளியையும் உற்பத்தி செய்யும்.
கடந்த வருடம் தெற்கு சூடான் தனியாக பிரிந்து சென்றது. அதனை தொடர்ந்து
ஏற்பட்ட எண்ணை வருமான இழப்பை சரிசெய்ய இந்த ஏற்பாடை சூடான் அரசு
செய்துள்ளது. சூடானில் உள்ள த�® �்கத் தொழிற்சாலைகளில் வருடத்திற்கு 328
டன் தங்கத்தை உற்பத்தி செய்து வருகிறது. இந்த ஆலை உற்பத்தியின் மூலம்
சுமார் 300கோடி டாலர் அளவிற்கு தங்கம் விற்பனை செய்ய எதிர்
பார்க்கப்படுகிறது. இப்பகுதியில் வெட்டி எடுக்கப்படும் தங்கம் மட்டும்
இல்லாமல் வெளிநாட்டிலிருந்து வரும் தங்கத்தையும் இங்கு சுத்திகரிப்பு
செய்ய முடியும்.
comments | | Read More...

மம்தா பானர்ஜி விலகியதால் நிலையற்று போய்விட்டது மத்திய அரசுஎந்த நேரத்திலும் கவிழலாம்: அத்வானி

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ்
விலகுவதாக அதன் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் அதிரடியாக
அறிவித்தார். இதனால்மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த
நிலையில் இதுகுறித்து பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, திரிணாமுல்
காங்கிரஸ் தனது ஆதரவை திரும்பப்பெற்றதை தொடர்ந்து, ஐக்கிய முற்போக்கு
கூ�® �்டணி அரசு நிலையற்று போய்விட்டது. எந்த நேரமும் ஆட்சி கவிழலாம்
எனகருத்து தெரிவித்தார். மேலும், மத்திய அரசை காப்பாற்றப்போவது சமாஜ்வாடி
கட்சியா, பகுஜன் சமாஜ் கட்சியா என்று தெரிந்துகொள்வதற்கு
பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு பாரதீய ஜனதா
வலியுறுத்தும் என தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே ஐதராபாத்தில் பாரதீய
ஜனதா செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் நேற்று நிருபர்களிடம் பேசினார்.
அப்போது அவர், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மூழ்கும்
கப்பல்.நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல், டீசல் விலை உயர்வு,
கியாஸ்சிலிண்டர் கட்டுப்பாடு போன்றவற்றால் தள்ளாடுகிற கப்பல் (மத்திய
அரசு) எந்த நேரமும் மூழ்கும். இந்த மூழ்கும் கப்பலில் பயணம்
செய்கிறவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தங்களை காத்துக்கொள்ள
வேண்டும். மக்க ள் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். பாரதீய
ஜனதா துணைத்தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, லக்னோவில் நேற்று
நிருபர்களிடம் பேசுகையில், மம்தா அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பார்
என்பதை இப்போதே கூற முடியாது. ஆனால் இப்போது ஐக்கியமுற்போக்கு
கூட்டணியில் இடம் பெற்றுள்ள பல கட்சிகள், பாரதீய ஜனதா கூட்டணியில்
இருந்து சென்றவைதான். எங்கள் கூட்டணியில் சேர விரும்புகிறவர்க
வரவேற்கிறோம் என தெரிவித்தார்.
comments | | Read More...

மகேஷ்பூபதி குற்றச்சாட்டுக்கு இந்திய டென்னிஸ் சங்கம் மறுப்பு

கடந்த மாதம் லண்டனில் முடிந்த ஒலிம்பிக் போட்டியில், டென்னிஸ் ஆண்கள்
இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் லியாண்டர் பெயசுடன் ஜோடி சேர்ந்து
விளையாட சக வீரர்கள் மகேஷ் பூபதியும், ரோகன் போபண்ணாவும் மறுத்தனர்.
இதனால் வேறு வழியின்றி ஒலிம்பிக்குக்கு இரண்டு ஜோடிகளை இந்திய டென்னிஸ்
சங்கம் அனுப்பியது.
அணித்தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளால், ஒலிம்பிக் டென்னிசில் இந்திய
வீரர்கள் யாரும் கால்இறுதியை கூட தாண்டவில்லை. இதைத் தொடர்ந்து பெயசுடன்
இணைந்து விளையாட மறுத்த மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா ஆகியோர் மீது அகில
இந்திய டென்னிஸ் சங்கம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
சில தினங்களுக்கு முன்பு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை
டென்னிஸ் போட்டியில் அவர்கள் இருவரும் சேர்க்கப்படவில்லை. அத்துடன்
2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்திய அணிக்காக டேவிஸ் கோப்பை டென்னிசில்
விளையாட அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
டென்னிஸ் சங்கத்தின் முடிவுக்கு மகேஷ் பூபதி கண்டனம் தெரிவித்தார்.
இதற்கிடையில்மும்பையில் இந்திய வீரர் மகேஷ்பூபதி நேற்று முன்தினம் அளித்த
பேட்டியில், இந்திய டென்னிஸ் சங்கத்தின் நிர்வாகமும் அதன் சர்வாதிகார
போக்கும் எதிர்கால இந்திய டென்னிசுக்கு தீங்கானவை. அகில இந்திய டென்னிஸ்
சங்க தலைவர் அனில் கன்னா, லியாண்டர் பெயசை பயன்படுத்தி என்னை பல முறை
அவர்பழிவாங்கியுள்ளார்.
வீரர்களை பிரித்தாளும் அனில் கன்னா, இந்திய டென்னிஸ் சங்கத்தின்
நிர்வாகத்தை ஒரு நபராக நடத்தி வருகிறார். செயற்குழு உறுப்பினர்கள்
எல்லாம் பெயரளவுக்கு தான் இருக்கிறார்கள். என் மீதான தடையை எதிர்த்து
வழக்கு தொடர ஆலோசனை செய்து வருகிறேன் என்றார். மகேஷ்பூபதியின்
குற்றச்சாட்டுக்கு அகில இந்தியடென்னிஸ் சங்கம் நேற்று மறுப்பு தெரிவித்து
இருக்கிறது.
இது குறித்து அகில இந்திய டென்னிஸ் சங்க செயற்குழு உறுப்பினர்கள்
சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய டென்னிஸ் சங்க
செயற்குழு உறுப்பினர்கள் பெயரளவுக்கு தான் இருக்கிறார்கள் என்று
மகேஷ்பூபதி கூறியிருப்பது எங்களை அவமானப்படுத்தும் செயலாகும். செயற்குழு
உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவதுடன், ஒவ்வொரு விஷயத்தையும்
செயற்குழுவில் விவாதித்து த�® �ன் முடிவு எடுக்கப்படுகிறது.
இது தான்உண்மையில் நடப்பதாகும். அகில இந்திய டென்னிஸ் சங்க நிர்வாகம்
தொழில் ரீதியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 6 கமிட்டிகளின்
சேர்மன்களும் மிகுந்த தகுதியும், திறமையும் அனுபவமும் படைத்தவர்கள். அகில
இந்திய டென்னிஸ் சங்க நிர்வாகம் ஜனநாயக ரீதியாகவும், வெளிப்படையாகவும்
செயல்பட்டு வருகிறது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger