News Update :
Powered by Blogger.

சென்னை சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 61 நிறுவனங்களுக்கு சீல் வைப்பு

Penulis : karthik on Wednesday, 2 November 2011 | 22:55

Wednesday, 2 November 2011

 

சென்னை தி.நகரில் உள்ள 61 சிறிய மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்து மூடி விட்டனர். இதனால் இந்த நிறுவனங்களில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் பெரும் கவலையுடன் கடைகளுக்கு முன்பு கூடி நிற்கின்றனர்.

சென்னை தி.நகரில் உஸ்மான் சாலையிலும், ரங்கநாதன் தெருவிலும் பெருமளவில் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இவற்றில் முக்கியமானவை.

இன்று காலை தி.நகருக்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் தங்க மாளிகை, ரத்னா ஸ்டோர்ஸின் 3 கடைகள், காதிம்ஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 61 வர்த்தக நிறுவனங்களைப் பூட்டி சீல் வைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சீல் வைக்கும் பணிக்காக பெருமளவில் போலீஸாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

ஏன் சீல்?

முறையான கட்டட வரைபட அனுமதி இல்லாமல் கட்டியது, பார்க்கிங் வசதி செய்யப்படாதது, தீயணைப்பு வாகனங்கள் சென்று வர வசதியில்லாத இடங்களில் பல அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டியது, பல்வேறு விதிமுறை மீ்றல்கள், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த நிறுவனங்களுக்கு ஏற்கனவே பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக வழக்குகளும் பெருமளவில் தொடரப்பட்டிருந்தன.

பல்வேறு நோட்டீஸ்களுக்குப் பிறகும் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எடுக்கவில்லை என்பதால் தற்போது சீல் வைக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாகவே சீல் வைக்கும் நடவடிக்கையை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் மக்களுக்குப் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக காத்திருந்து இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

(tt)


Filed under: Hot News Tagged: இந்திய அரசியல், சமூக பிரச்சனைகள், தமிழ்நாடு செய்திகள்
comments | | Read More...

கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

 


ஜனவரி 2008 சட்டமன்ற கூட்டத்தொடரில் நடந்த விவாதம்...


பா.ம.க. உறுப்பினர் வேல்முருகன்: தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மொழி, பண்பாடு, கலாசாரம், உறவு முறை ஆகிய அனைத்திலும் கலாசார சீரழிவை நோக்கி இட்டுச் செல்கிறது. தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை முறையை கொண்டுவர முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சன் டி.வி., ஜெயா டி.வி., ராஜ் டி.வி., விஜய் டி.வி., முதல்-அமைச்சர் பெயரை தாங்கி வரும் கலைஞர் டி.வி. போன்ற தொலைக்காட்சிகளில் வரும் ஜோடி நம்பர் ஒன், ஜில்லுன்னு ஒரு காதல், மானாட மயிலாட போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும், தொடர்களிலும் ஆபாசங்களும், வன்முறைகளும் நிறைந்துள்ளன.

துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி:
- இதையெல்லாம் நீங்கள் காட்சிக்கு காட்சி ரசித்து பார்த்திருக்கிறீர்கள்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி:- உறுப்பினர் வேல்முருகனும் படத்தில் நடித்திருக்கிறார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனம், நாட்டியம் தான் ஆடுகிறார்கள். அதில் ஆபாசம் இல்லை. அதில் எந்த அணி வெற்றி பெறுகிறது என்பதை பொதுமக்கள் தான் பார்த்து முடிவு செய்கிறார்கள்.

வேல்முருகன்:- அந்த நிகழ்ச்சியில் நடுவராக வரும் நடிகை நமீதா அரைகுறை உடையில் தான் வருகிறார். முதல்-அமைச்சர் கலந்து கொண்ட ஒரு விழாவில் நடிகை சுரேயா (ஸ்ரேயா என்பதை அவர் அப்படித்தான் உச்சரித்தார். அதனை கேட்டு அனைவரும் சிரித்தனர்.) மிகவும் ஆபாசமாக உடை அணிந்து வந்துள்ளார்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி:- நடிகை ஸ்ரேயா விழாவில் வந்த விதம் குறித்து குறிப்பிட்டார். நடிகைகள் எல்லாம் இப்படித்தான் டிரஸ் போட வேண்டும் என்று சட்டம் கொண்டுவர முடியாது. அறிவுரை வேண்டுமானால் அவர்களுக்கு கூறலாம். எந்த உடை போட வேண்டும் என்று நடிகைகள் தான் முடிவு செய்கிறார்கள். அதை அரசு முடிவு செய்வதில்லை.

வேல்முருகன்:- இந்த ஆபாசங்களை எல்லாம் ஏன் தணிக்கைத்துறை கண்டிப்பதில்லை.


அமைச்சர் துரைமுருகன்:- ஆபாசத்திற்கு எந்தவித அளவுகோலும் கிடையாது. இத்தனை `இஞ்ச்' தான் இடுப்பு தெரிய வேண்டும். இத்தனை இஞ்சுக்கு பிரா போடலாம், இத்தனை இஞ்சுக்கு பாவாடை போடலாம் என்றெல்லாம் அளவு எதுவும் இல்லை. ஆபாசம் என்பது அவரவர் மனதை பொறுத்தது தான். வேல்முருகன் நடித்த படத்தையும் பார்த்தோம். அதிலும் தான் ஜிங்கு ஜிங்குன்னு ஆடும் நடனம் வருகிறது.(இதனை இடுப்பை ஆட்டிக் காட்டியபடி கூறினார். இதனை பார்த்த அனைவரும் சிரித்தனர்.)

ஜி.கே.மணி:- ஆபாசம் அவரவர் மனதில் தான் இருக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார். அதற்காக அரைகுறை ஆடை உடுத்தி ரோட்டில் போக முடியுமா? இதில் அரசு அக்கறை செலுத்த வேண்டும். திரைப்படங்கள், பொது இடங்களில் இதுபோல் ஆபாசமாக உடை உடுத்தி வருவது கலாசார சீரழிவை ஏற்படுத்தும். எவ்வளவு கற்பழிப்புகள் நடக்கிறது என்ற புள்ளிவிவரங்கள் எல்லாம் வருகிறது. இதுபோன்ற செயல்களுக்கெல்லாம் காரணம் என்ன? சமுதாயத்தை நல்வழிப்படுத்தத்தான் இந்த கருத்தை தெரிவிக்கிறோம்.

வேல்முருகன்:- ஆங்கில கலப்பில்லாமல் ஒரு படம் வருகிறது என்பதால் தான் அதில் நான் நடித்தேன். ஆபாசத்தை விதைப்பதற்கு அல்ல. ``கட்டிப்புடி, கட்டிப்புடிடா'', ``எப்படி, எப்படி, சமைஞ்சது எப்படி'' என்ற பாடல்களெல்லாம் எப்படி அனுமதிக்கப்பட்டது? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை முறை வேண்டும். இவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. பண்பாடு, கலாசாரம் எல்லாம் மறைந்து போய்விடுமோ என்று தான் கூறுகிறோம்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி:- நாகரிகத்தை காப்பாற்ற நாளை முதல் வேல்முருகன் வேட்டி-சட்டை அணிந்து வந்தால் நல்லது.

வேல்முருகன்:- இதனை நான் விளையாட்டுக்காகவோ, சிரிப்புக்காகவோ சொல்லவில்லை.

அமைச்சர் பொன்முடி:- ஆடை அணிவது நாகரிகத்தின் வெளிப்படுதல் தான். முன்பு பெண்கள் புடவை அணிந்து வந்தனர். இப்போது சைக்கிள், இருசக்கர வாகனங்களில் செல்கிறார்கள். அதற்கு வசதியான உடைகளை அணிந்து வருகிறார்கள். அதற்காக கலாசாரம் அழிந்துவிட்டது என்று கூற முடியுமா? கலாசாரத்தை காக்கத்தான் சமத்துவ பொங்கல் என்று கலாசார திருவிழாவை நடத்தும்படி முதல்-அமைச்சர் கூறியிருக்கிறார்.

ஏர் உழுபவன் கோவணம் கட்டிக்கொண்டு தான் உழுகிறான், அதற்காக அதை ஆபாசம் என்று கூறமுடியுமா? காலத்திற்கேற்ப மாறுவது இயற்கை. வேல்முருகன் கூறுவதை நான் முழுமையாக மறுக்கவில்லை. இதனால் கலாசாரம் சீரழிகிறது என்று மிகைப்படுத்தி கூறுவதை ஏற்க முடியாது.

வேல்முருகன்:- நான் ஒட்டுமொத்த திரைப்படங்களையும் குறை கூறவில்லை. 90 சதவீதம் இப்படித்தான் இருக்கிறது என்று தான் கூறுகிறேன். அதேபோல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் டி.ஆர்.பி.ரேட் (மக்கள் பார்க்கும் விகிதம்) அதிகமாக வேண்டும் என்பதற்காகவும், தனிப்பட்ட வருமானம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் இப்படிப்பட்ட ஆபாச காட்சிகளை திணிக்கிறார்கள். நம்மை கேட்க யாருக்கும் நாதியில்லை என்று சென்று கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் சுட்டிக் காட்டுகிறேன். தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சரிடம் கூறினால் இதற்கும் நியாயம் கிடைக்கும், வழி பிறக்கும் என்று தான் கூறுகிறேன். இளைஞர்கள் தடம் மாறிச் செல்வதை தடுக்க வேண்டும். ஒரு மாணவன் படம் பார்த்துவிட்டு கொலை செய்தேன் என்கிறான். எனவே இதுபோன்ற ஆபாசம், வன்முறை ஆகியவற்றை தடுத்து நிறுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம் வரி பணத்தில் நடை பெற்ற விவாதம்...
( http://idlyvadai.blogspot.com/2008/01/blog-post_2784.html )

இன்றைய செய்தி : இப்பேர்பட்ட வேல்முருகனை பாமகவில் இருந்து இன்று நீக்கிவிட்டார்கள் !.


பொதுவாக சூரனை தான் முருகன் சூரசம்ஹாரம் செய்வார் ஆனால் இன்று வேல்முருகனை ... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!. ராமதாஸுக்கு கோவிந்தா கோவிந்தா
comments | | Read More...

சிம்பு தாளத்திற்கு ஆடவில்லை: ரிச்சா

 
 

ஜீவா படத்தில் நடிக்க வேண்டாம் என்று சிம்பு என்னிடம் கூறவில்லை. நான் எப்பொழுதும் சுயமாக முடிவு எடுப்பவள் என்று நடிகை ரிச்சா தெரிவித்துள்ளார்.

நடிகை ரிச்சா சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜீவாவின் புதிய படத்தில் நடிக்க ரிச்சா முதலில் சம்மதித்ததாகவும், பிறகு சிம்பு சொன்னதால் நடிக்க மறுத்ததாகவும் செய்திகள் வந்தது.

சிம்பு-ஜீவா மோதல் தமிழகமே அறிந்தது. கோ படத்தில் முதலில் சிம்பு நடிப்பதாக இருந்தது. பின்னர் அவரை மாற்றி விட்டு ஜீவா நடித்தார். அதிலிருந்து இருவருக்குள்ளும் முட்டிக்கொள்ள ஆரம்பித்தது. சிம்பு ஏதாவது சொல்ல பதிலுக்கு ஜீவா ஏதாவது சொல்ல என்று அவர்களின் வார்த்தை விளையாட்டு முடிவின்றிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜீவா படத்தில நடிக்க வேண்டாம் என்று ரிச்சாவிடம் சிம்பு தெரிவித்ததாக செய்தி வந்தது.

இது குறித்து ரிச்சா கூறியதாவது,

ஜீவா ஜோடியாக நடிக்குமாறு யாருமே என்னைக் கேட்கவில்லை. அப்படி இருக்கையில் ஜீவாவுடன் நடிக்கக் கூடாது என்று சிம்பு கூறியதாக செய்தி வந்தது. அது வெறும் வதந்தி தான். என் படம் தொடர்பான விஷயங்களில் யாரும் தலையிடுவதில்லை என்றார்.

இதற்கிடையே, நான் எப்பங்க ரிச்சாகிட்ட ஜீவா கூட நடிக்கக் கூடாதுன்னு சொன்னேன் என்று சிம்புவும் தெரிவித்துள்ளார்.

எங்கு 'வம்பு' என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் வம்பு வலுத்து வருவது மட்டும் தெரிகிறது!

[five-star-rating]

comments | | Read More...

யார் இந்த சோனியா காந்தி ? இந்தியர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

 

இந்தியர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் அது இப்போது இந்தியாவையே மன்மோகன் சிங் எனும் பொம்மை கொண்டு இந்தியாவின் சொந்த குடிமக்களாகிய நம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஒரு இத்தாலிய சூனிய காரி பெண்ணான "அன்னை சோனியா" என்று நம் தமிழ் காவலர் கருணா நிதியால் அழைக்கப்படும் "சோனியா காந்தி" தான்.
 
யார் இந்த சோனியா காந்தி ?
 
இந்தியர் பலருக்கு புரியாத புதிருமாய் , விளங்காத விடயுமாய் உள்ளது இந்த கேள்வி, இதோ அவருடைய சரித்திரத்தை புரட்டி பார்ப்போம்.
 
அலுவலக ரீதியாக உலக அளவில் இவர் பெயர் சோனியா காந்தி கிடையாது, பாஸ்போர்டில் கூட இவரது பெயரில் காந்தி என்ற பெயரோ - சோனியா என்ற பெயரோ கிடையாது, எல்லாமே வெளி வேஷம்.
 
உண்மையான பெயர் : எட்விட்ஜ் அந்தோனியா அல்பினா மைனோ (Edvige Antonia Albina Maino)

எல்லோரும் இவர் இத்தாலி என்று கூறுவர் இவரது இந்திய பொய் பெயரான "சோனியா" எனபது இத்தாலி கிடையாது, உண்மையில் இந்த பெயர் ரஷிய பெயராகும்.

எப்படியோ இவரது உண்மையான பெயர் "சோனியா" என்பது இல்லை. மாறாக அந்தோனியா (Antoniya) என்ற இத்தாலிய பெயரை தான் இவர் தனது பாஸ் போர்டில் வைத்து உள்ளார்,


நன்கு ஆராய்ந்து பார்த்தால் காந்தி - காந்தி என்று நம்மை ஏமாற்றும் காங்கிரெஸ் காரர்கள் அடிப்படையில் முஸ்லிம் கள், எப்படி என்று கேட்கிறீர்களா? ராஜீவ் காந்தியின் உண்மை பெயர் ராஜீவ் கான் காரணம் இவர் தந்தை பெரோஸ் கான், மேலும் இவர்கள் குடும்பத்தில் வரும் காந்தி என்ற பெயர் கூட பொய்யானது, ராஜிவின் அன்னை இந்திராவின் உண்மை பெயர் இந்திரா பிரிய தர்ஷினி. காந்தி என்ற பெயரை இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக அரசியல் நோக்கத்துக்காக இவர்கள் இட்டுக்கொண்ட அடை மொழி.

சரி நாம் அன்னை சோனியாவின் வண்டவாலத்துக்கு வருவோம், சோனியாவின் தந்தை ஸ்டீபன் (Stefano Eugene Maino) முதலில் ஜெர்மனி யின் ஹிட்லரின் ராணுவத்தில் பணி புரிந்து கொண்டிருந்தார் , அப்போது ரஷ்யா மீது ஹிட்லர் போர் தொடுத்த பொது, இவர் ரஷ்யாவில் கைதாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் அவருக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனையை ரஷியா அளித்தது,பின்னர் அவருக்கு நான்கு ஆண்டுகளாக தண்டனையை குறைத்து விடுதலை செய்தது ரஷ்யா, அங்கிருந்து வரும்போது தான் தன மகளுக்கு ரஷியா பெயரை வைத்தார். அதுவும் அந்த மகள் "சோனியா" இவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பொது பிறந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.



ஆகவே சோனியா பிறப்பில் கூட ஒரு மர்மம் மறைந்து கிடைக்கிறது, மரபியல் ரீதியாக தந்தை பெயர் தெரியாத ஒரு பெண் தான் இப்போது இந்தியாவை ஆட்டிக்கொண்டு இருக்கிறார்.


சோனியாவின் அறிக்கையின்படி அவர் இத்தாலியில் பிறந்தார் என்றார், அனால் பிறப்பு சான்றிதழ் மூலம் இவர் ச்விட்செர்லாந்தில் மிலிடரி காம்பில் பிறந்தார் என்று உறுதி செய்யப்பட்டது. ஆக இவர் எங்கு பிறந்தார் என்று கூட இவருக்கு நினைவு இல்லை.


இவர் ராஜிவை மனம் முடிக்கையில் தான் இங்கிலாந்தில் உள்ள காம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் பட்டம் முடித்ததாக சொல்லி இருந்தார், பின்னர் அது பொய் என்றும் இவர் பள்ளியில் 5 வகுப்பை தாண்ட வில்லை என்றும் நிருபனமானது.

இப்போது புரிகிறதா நம்மை ஆட்டுவிக்கும் பெண் ஒரு படிக்காத மாமேதை என்று இதை எல்லோரும் மற்றவர்களுக்கு பகிர்ந்து கூறி, உறங்கி கொண்டிருக்கும் அப்பாவி இந்தியர்களை விழிக்க செய்வோம், "இனி ஒரு விதி செய்வோம்".
comments | | Read More...

தமிழின் முதல் சூப்பர் சூப்பர் ஸ்டாருக்கு நடந்த ஒரு பரிதாப நினைவஞ்சலி!

 
 
தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெருமை மிக்க தியாகராஜ பாகவதர் (உண்மையில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அன்றைக்கு அவர் பெயருக்கு முன் யாரும் போடவில்லை. பின்னாளில் சினிமா ஆய்வாளர்கள் அப்படி அழைக்கின்றனர்!) நினைவஞ்சலி நிகழ்ச்சியில் வெறும் மூன்று பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
 
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில் மக்களை தனது இனிய குரல் மற்றும் நடிப்பால் மயக்கியவர் தியாகராஜ பாகவதர். ஏழிசை மன்னர் என்றும் பாகவதர் என்றும் அன்றைய நாட்களில் அவரை மக்கள் அழைத்து மகிழ்ந்தனர்.
 
திருச்சி பாலக்கரைதான் அவரது சொந்த ஊர். 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தாலும், நல்ல இசைஞானம், கணீர் குரல் வளம் அவருக்கு. எனவே பவளக் கொடி என்ற படத்தின் மூலம் கடந்த 1934-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
 
தொடர்ந்து நவீன சாரங்கதாரா, அம்பிகாபதி, திருநீலகண்டர், சிவகவி, ஹரிதாஸ், அசோக்குமார், ராஜமுக்தி உள்பட 14 படங்களில் நடித்து பிரபலமானார்.
 
அன்றைக்கு பாகவதர் மேலிருந்து அபரிமிதமான ஈர்ப்பு, நாடகத்தைத் தவிர மாற்று பொழுதுபோக்கே இல்லாத சூழல் காரணமாக அவரது ஹரிதாஸ் படம் 3 வருடங்கள் சென்னையில் ஓடி சாதனைப் படைத்தது.
 
சந்திரமுகி படம் வரும் வரை, தமிழில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமை பாகவதர் படத்துக்கே இருந்தது.
 
ஆனால் லட்சுமிகாந்தன் கொலை வழக்குக்குப் பிறகு, புகழ் வெளிச்சம் மங்கிய நிலையில் பாகவதர் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானார். ஆனால் வறுமையிலும் பெருமையை காத்தார். கம்பீரத்தை இழக்காத வாழ்க்கை வாழ்ந்தார். தன்னைத் தேடி வந்த வாய்ப்புகள், பண உதவிகளை மறுத்துவிட்டார்.
 
1959ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி உடல் நலிந்து சென்னை பொது மருத்துவமனையில் இறந்தார். திருச்சிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க இறுதி ஊர்வலம் நடந்தது. திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை ரோடு அருகேயுள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
 
இப்போதும் ஒரு சாமானிய மனிதனின் கவனிக்கப்படாத சமாதியாகவே பாகவதர் அடக்கம் செய்யப்பட்ட இடம் காட்சி தருகிறது.
 
மூன்றே பேர்...
 
இந்நிலையில், தியாகராஜ பாகவதரின், 53வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவஞ்சலிக்கு தமிழ் சினிமாவிலிருந்து மட்டுமல்ல, அக்கம்பக்கத்திலிருந்தும் கூட யாரும் வரவில்லை.
 
தியாகராஜ பாகவதரின் சின்னம்மா சம்பூரணத்தம்மாளின் மகள் ஆனந்தலட்சுமி, அவரது கணவர் தெட்சிணாமூர்த்தி, இவர்களது மகன் தனபால் ஆகிய மூவர் மட்டுமே பாகவதர் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த நேற்று வந்தனர்.
 
1948ம் ஆண்டு தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான ராஜமுத்தி சினிமாவில் இடம் பெற்ற, "மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ' என்ற பாடலை உரக்கப் பாடி அவரது கல்லறையில் அஞ்சலி செலுத்தினர்.
 
தமிழ் சினிமாவில் ஒரு பெரும் மன்னரின் கம்பீரத்தோடு ஆட்சி செலுத்திய முதல் சூப்பர் ஸ்டார் பாகவதரின் நினைவு நாளை அனுசரிக்கவும் நேரமின்றி திரையுலகம் பரபரப்பாக ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த வருத்தம் இருந்தாலும், அதை வெளிக்காட்டாத குடும்பத்தினர், அவரவர் பணி அவரவருக்கு... யாரையும் குற்றம் சொல்வது சரியல்ல என்று கூறி தங்கள் அஞ்சலியை முடித்துச் சென்றனர்!
 
மேன் மக்களல்லவா!



comments | | Read More...

சிம்பு ரிச்சாவிடன் சொன்னது உண்மையா? -ரிச்சா பதில்

 
 
 
ஜீவா படத்தில் நடிக்க வேண்டாம் என்று சிம்பு என்னிடம் கூறவில்லை. நான் எப்பொழுதும் சுயமாக முடிவு எடுப்பவள் என்று நடிகை ரிச்சா தெரிவித்துள்ளார்.
 
நடிகை ரிச்சா சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜீவாவின் புதிய படத்தில் நடிக்க ரிச்சா முதலில் சம்மதித்ததாகவும், பிறகு சிம்பு சொன்னதால் நடிக்க மறுத்ததாகவும் செய்திகள் வந்தது.
 
சிம்பு-ஜீவா மோதல் தமிழகமே அறிந்தது. கோ படத்தில் முதலில் சிம்பு நடிப்பதாக இருந்தது. பின்னர் அவரை மாற்றி விட்டு ஜீவா நடித்தார். அதிலிருந்து இருவருக்குள்ளும் முட்டிக்கொள்ள ஆரம்பித்தது. சிம்பு ஏதாவது சொல்ல பதிலுக்கு ஜீவா ஏதாவது சொல்ல என்று அவர்களின் வார்த்தை விளையாட்டு முடிவின்றிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜீவா படத்தில நடிக்க வேண்டாம் என்று ரிச்சாவிடம் சிம்பு தெரிவித்ததாக செய்தி வந்தது.
 
இது குறித்து ரிச்சா கூறியதாவது,
 
ஜீவா ஜோடியாக நடிக்குமாறு யாருமே என்னைக் கேட்கவில்லை. அப்படி இருக்கையில் ஜீவாவுடன் நடிக்கக் கூடாது என்று சிம்பு கூறியதாக செய்தி வந்தது. அது வெறும் வதந்தி தான். என் படம் தொடர்பான விஷயங்களில் யாரும் தலையிடுவதில்லை என்றார்.
 
இதற்கிடையே, நான் எப்பங்க ரிச்சாகிட்ட ஜீவா கூட நடிக்கக் கூடாதுன்னு சொன்னேன் என்று சிம்புவும் தெரிவித்துள்ளார்.
 
எங்கு 'வம்பு' என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் வம்பு வலுத்து வருவது மட்டும் தெரிகிறது!



comments | | Read More...

தூக்கத்தில் பிறந்தநாள் கொண்டாடும் ஷாருக்!

 
 
 
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சற்று வித்தியாசமாக தூங்கிக் கொண்டே பிறந்தநாள் கொண்டாடுகிறார்.
 
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது சூப்பர்ஹீரோ படமான ரா ஒன் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக ஆடி, ஓடித் திரிந்து கலைத்துவிட்டார். அதனால் தனது பிறந்தநாளை சற்று வித்தியாசமாக தூங்கிக் கொண்டே கொண்டாடுகிறார்.
 
இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
 
வீட்டுக்கு வந்தால் என் வீட்டு வாசலில் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூற பலர் காத்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதில் எனக்கு கண்ணீரே வந்துவி்ட்டது. தூங்கப் போகிறேன். நீண்ட நேரம் தூங்கப் போகிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வயதான மாதிரி ஃபீலிங்கே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 
ஷாருக்கானின் ரா ஒன் படம் வசூலில் புதிய சாதனைகள் படைத்துள்ளதால் அவர் குஷியாக உள்ளார். சூப்பர் ஹீரோவாக நடிக்க என் வயது உகந்ததில்லை என்று தெரிந்தும் முயற்சித்து தான் பார்க்கலாமே என்று நடித்தேன். தற்போது படம் நன்றாக ஓடுவதால் மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் கூறினார்.



comments | | Read More...

கமலா தியேட்டரில் ஏழாம் அறிவு தூக்கப்பட்டு வேலாயுதமா! தியேட்டர் நிர்வாகம் பதில்

 
 
 
கமலா திரையரங்கில் ஏழாம் அறிவு படம் எடுக்கப்பட்டு அங்கே, வேலாயுதம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியானதை அந்த தியேட்டர் நிர்வாகம் மறுத்துள்ளது.
 
தீபாவளியை முன்னிட்டு ஏழாம் அறிவு படம் வெளியானது. அதற்கு போட்டி என்று சொல்லும் வகையில் விஜய் நடித்த வேலாயுதம் வெளியானது.
 
இந்த நிலையில் ஏழாம் அறிவு படத்தை கமலா தியேட்டரில் எடுத்துவிட்டு, வேலாயுதம் திரையிடப்பட்டதாகவும், இதனால் விஜய் ரசிகர்கள் மொட்டை போட்டு காவடி தூக்கி ஊர்வலம் நடத்தி அதைக் கொண்டாடியதாகவும் செய்தி வெளியானது.
 
இதை மறுத்து கமலா தியேட்டர் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில், "எங்கள் கமலா திரையரங்கில் 7ஆம் அறிவு படம் முதல் வாரத்தின் 2 திரையரங்கில் திரையிட ஒப்பந்தம் செய்திருந்தோம். 3-ம் வாரத்தில் இருந்து "ஒப்பந்தப்படி ஸ்கிரீன் 1-ல் 7 ஆம் அறிவும், ஸ்கிரீன் 2-ல் வேலாயுதம் திரையிடப்படமும் திரையிடப்பட்டு 2 படங்களும் எங்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று குறிப்பிடப்பட்டு உள்ளது,
 
இலங்கையில் வசனங்கள் நீக்கம்
 
இதற்கிடையே, ஏழாம் அறிவு படத்தில் தமிழருக்கு ஆதரவாக வரும் வசனங்களை நீக்கிவிட்டு இலங்கையில் படம் வெளியிட்டுள்ளனர்.
 
இலங்கையில் தமிழன் தோற்றதற்கு காரணம் சில நாடுகளின் கூட்டு சதிதான் என்பன போன்ற வசனங்கள் இடம்பெற்று உள்ளன. ஒருத்தனை ஒன்பது நாடுகளஷ் சேர்ந்து தாக்குவது வீரமா என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது. இதற்கு இலங்கையில் எதிர்ப்பு கிளம்பியது. அங்கு இப்படத்தை வெளியிட அனுமதி மறுத்து மறு தணிக்கைக்கு அனுப்பினர்.
 
சிங்களர்களுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் இருந்த வசனங்களை நீக்கிய பிறகே படத்தை இலங்கையில் வெளியிட அனுமதித்தனர்.



comments | | Read More...

7ஆம் அறிவு படத்திலிருந்து சிங்களருக்கு எதிரான வசனம் நீக்கம்

 
 
சூர்யா, கமல் மகள் ஸ்ருதி ஜோடியாக நடித்த 7ஆம் அறிவு படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஒடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். சீனா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு குங்பூ என்ற தற்காப்பு கலையை அறிமுகப்படுத்திய தமிழர் போதிதர்மர் கதையே இப்படம்.
 
இதில் தமிழர் பெருமை பேசும் வசனங்கள் பல உள்ளன. குறிப்பாக ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலும் மறைமுகமாக காட்டப்பட்டு உள்ளது. தமிழன் தோற்ககூடாது இலங்கையில் தமிழன் தோற்றதற்கு காரணம் சில நாடுகளின் கூட்டு சதிதான் என்பன போன்ற வசனங்கள் இடம் பெற்று உள்ளன. இதற்கு இலங்கையில் எதிர்ப்பு கிளம்பியது. அங்கு இப்படத்தை வெளியிட அனுமதி மறுத்து மறு தணிக்கைக்கு அனுப்பினர்.
 
சிங்களர்களுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் இருந்த வசனங்களை நீக்கி விட்டு படத்தை வெளியிட அனுமதித்தனர். தமிழகம் முழுவதும் கூடுதல் தியேட்டர்களில் 7ஆம் அறிவு திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. வடபழனி கமலா தியேட்டரில் இப்படத்தை மாற்றிவிட்டதாக வெளியான தகவலை மறுத்து அத்தியேட்டர் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்
 
எங்கள் கமலா திரையரங்கில் 7ஆம் அறிவு படம் முதல் வாரத்தின் 2 திரையரங்கில் திரையிட ஒப்பந்தம் செய்திருந்தோம். 3-ம் வாரத்தில் இருந்து "ஒப்பந்தப்படி ஸ்கிரீன் 1-ல் 7 ஆம் அறிவும், ஸ்கிரீன் 2-ல் வேலாயுதம் திரையிடப்படமும் திரையிடப்பட்டு 2 படங்களும் எங்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது,

 


comments | | Read More...

நடிகர்கள் மீது பிரகாஷ்ராஜ் பாய்ச்சல்!

 
 
 
பிரகாஷ்ராஜ் கூறியது: நான் உள்பட வேறு எந்த நடிகர்களும் தமிழ் சினிமாவுக்காக கடந்த 10 வருடத்தில் எதையுமே செய்யவில்லை. இது கசப்பான உண்மை. ஆனாலும் தமிழ் சினிமா மற்றவர்களால் மதிக்கப்படுகிறது. அதற்கு காரணம் புதிய இயக்குனர்கள். அவர்களது திறமையால் புதிய களங்களில் படங்கள் வருகிறது. நடிகர்களை தவிர இசை அமைப்பாளர்கள் முதல் கதாசிரியர்கள் வரை ஏதாவது ஒரு புது முயற்சியை வெளிப்படுத்துகிறார்கள்.
 
இதில் ரசிகர்களும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி சொல்வதால் என் மீது நடிகர்கள் கோபப்படாமல் கமர்சியல் நோக¢கத்தை கைவிட்டு, புதிய முயற்சிகளை தர முன்வர வேண்டும். என் மகள் 10ம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு நிறையவே படிப்பு சுமைகள். வாழ்க்கை என்பது படிப்பு மட்டுமல்ல. அதையும் தாண்டி நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது. இதைத்தான் நான் இயக்கும் 'டோனி' படம் விளக்கப் போகிறது.



comments | | Read More...

டெல்லியைத் தாக்க பாக். தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவல்!

 
 
 
டெல்லியில் பயங்கர தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை நேற்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. இந்த தீவிரவாதிகள், பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களான லஷ்கர்- இ- தொய்பா, ஜெய்ஸ்- இ- முகமது ஆகியவற்றை சேர்ந்தவர்கள் ஆவர்.
 
இவர்களில் ஐந்து, ஆறு பேர் ஏற்கனவே டெல்லிக்குள் ஊடுருவி விட்டதாக உளவுத்துறை கூறியுள்ளது. டெல்லியில் மெட்ரோ ரெயில் நிலையங்கள், சாதாரண ரெயில் நிலையங்கள், சேனா பவன் உள்ளிட்ட இடங்களை தகர்க்கும் நோக்கத்துடன் இந்த தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை கூறியுள்ளது.
 
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்த டெலிபோன் அழைப்புகளை இடைமறித்து கேட்டபோது, இந்த பயங்கர சதித்திட்டம் தெரிய வந்ததாக உளவுத்துறை கூறியுள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, டெல்லி முழுவதும் முழு உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
 
விமான நிலையம், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீசார் ஆங்காங்கே ரோந்து சுற்றி வருகிறார்கள். வாகன பரிசோதனையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. டெல்லி மட்டுமின்றி, மும்பை, பெங்களூர், ஆமதாபாத் போன்ற நகரங்களும் முழு உஷார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
 
எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில், போலீசார் தயார்நிலையில் உள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு, பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள், மும்பையில் பயங்கர நாசவேலையை நிகழ்த்தினர்.
 
266 பேரை பலிகொண்ட அந்த தாக்குதலுக்கு பிறகும், மும்பை, டெல்லி ஐகோர்ட்டு போன்ற இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புதிய தாக்குதல் திட்டம் தெரிய வந்திருப்பதால், பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger