News Update :
Powered by Blogger.

வன்முறையில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாமா?: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

Penulis : karthik on Tuesday, 17 July 2012 | 21:29

Tuesday, 17 July 2012





அரசியல் கட்சிகள் வன்முறை போராட்டத்தில் இறங்கி, பொதுச்சொத்துக்களுக்கு சேதாரம் விளைவிப்பதை தடுக்க வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டி ல் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி பிரகாஷ் சிங் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, எஸ்.கே. முகோபாத்யா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "வன்ம� ��றை போராட்டத்தில் இறங்கி பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கிற அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாமா? தற்போது இருக்கிற சட்டங்களைக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்க முடியுமா?'' என்பது குறித்து மத்திய அரசு தனது பதிலை ஒரு வாரத்தில் தெரிவிக்கும்படி உத்தரவிட்டனர்.







comments | | Read More...

ஜஸ்ட் ஆறே படங்கள்... கார்த்தி சம்பளம் ரூ 14 கோடி!





ஆறே ஆறு படங்கள்தான் நடித்திருக்கிறார்... அதிலும கடைசி படம் பெரிய வெற்றி என்று கூட சொல்ல முடியாது. ஆனால் இன்று அவ� ��் வாங்கும் சம்பளம் படத்துக்கு ரூ 14 கோடிக்கு கிர்ரென்று உயர்ந்திருக்கிறது.
இது கிட்டத்தட்ட விஜய், அஜீத், சூர்யாவுக்கு இணையானதாகும்.

'பருத்தி வீரன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'நான் மகான் அல்ல', 'பையா', 'சிறுத்தை', 'சகுனி' ஆகிய 6 படங்கள்தான் கார்த்தி நடித்தவை.
இவற்றில் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் சகுனி பாக்ஸ் ஆபீஸில் சுமாராகப் போயின. பருத்தி வீரன் க்ளாஸிக் என்ற அந்தஸ்தைப் பெற்றது. நான் மகா� ��் அல்ல நல்ல பெயரைக் கொடுத்தது.
சிறுத்தை ஒரு ரீமேக். ஆனாலும் நல்ல வசூல். கடைசியாக வந்த சகுனிக்கு நல்ல ஓபனிங். ஆனாலும் எதிர்ப்பார்த்த மாதிரி படம் இல்லாததால், அந் த ஓபனிங்கை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.
அடுத்து அலெக்ஸ் பாண்டியன், பிரியாணி என பெரிய படங்களைக் கையில் வைத்துள்ள கார்த்திக்கிடம் அடுத்த பட கால்ஷீட்டுக்கு ரூ 14 கோடி பேசியுள்ளாராம் ஒரு தயாரிப்பாளர். கார்த்திக் மேலும் யோசித்தால், மேலும் ஒரு கோடி தரவும் தயார் என்கிறாராம்.

விஜய், அஜீத், சூர்யா போன்றோர் பல படங்களில் நடித்த பிறகுதான் ரூ 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அலெக்ஸ் பாண்டியனுக்குப் பிறகு இந்த சம்பளம் ரூ 20 கோடியில் போய் நின்றாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள்.







comments | | Read More...

மாற்றான் குறித்து கே.வி. ஆனந்த்





மாற்றான் படத்தில் சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். � ��ே.வி. ஆனந்த் இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மாற்றான் படத்தை ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின் மென்ட் தயாரித்துள்ளது. படம் குறித்து கே.வி. ஆனந்த் கூறியதாவது:-

மாற்றான் படத்தில் எலிலன், விமலன் என இரு கேரக்டரில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக சூர்யா நடித்துள்ளார். வித்தியாசமான இரு சூர்யாக்களை இதில் பார்க்கலாம். ஒருவர் திருக்கு றள் போன்ற புத்தகங்களை படிக்கும் பண்புள்ள கேரக்டரிலும், மற்றவர் பார், கிளப் என திரியும் ஜாலி கேரக்டரிலும் வருகின்றனர்.

பிரெஞ்ச் ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து சண்டைக் காட்சிகளை எடுத்துள்ளோம். உயர்தரமானதொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமான சமூக பிரச்சினை ஒன்றும் படத்தில் உள்ளது. காதல், பாசம், சாகசம், காமெடி அனைத்தும் இருக்கும்.

மாற்றான் படத்துக்காக மூன்று டிரெய்லர் தயார் செய்துள்ளோம். இரு வேடங்களிலும் சூர்யா 5000 தடவைகள் மாறி மாறி நடித்துள்ளார். அவர் மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். சில சீன்கள் திருப்தி இல்லாமல் இருந்தால் அவற்றில் மீண்டும் நடித்தார்.

ரஜினியை வைத்து நான் படம் இயக்கப் போவதாக வதந்திகள் பரவுகின்றன. அப்படி எந்த திட்டமும் இல்லை. ரஜினி படத்தை இயக்குவதற்கு என்னை நான் நிறைய தயார் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.







comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger