Saturday, 13 July 2013
ஒடிசா மாநிலம் கஜ்சம் மாவட்டம் பேஜிபுட்
என்ற இடத்தைச் சேர்ந்தவர் சுசாந்த்குமார்
ஸ்வைன். இவர் ஒரு பெண்ணை காதலித்தார்.
போன் மற்றும் எஸ்.எம்.எஸ்.கள் மூலம்
காதலை வளர்த்துக் கொண்டனர்.
இந்த நிலையில் சுசாந்த் குமார்
காதலியை அடைய திட்டமிட்டார்.
இதையடுத்து காதலிக்கு எஸ்.எம்.எஸ்.
அனுப்பி புவனேஸ்வர் வருமாறு அழைத்தார்.
அவரை நம்பி சென்ற காதலியை சுசாந்த்குமார்
காரில் அழைத்துச் சென்றார்.
வழியில் திருமணம் செய்வதாக
ஆசை வார்த்தை கூறி ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார்.
ஆனால் காதலி மறுத்ததால்
காரிலேயே வலுக்கட்டாயமாக
இருமுறை கற்பழித்தார்.
பின்னர் காரில்
இருந்து வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை சிலர்
மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர்
சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்தனர்.
போலீசார்
வழக்குப்பதிவு செய்து தலைமறைவான
காதலனை தேடி வருகிறார்கள்.