Monday, 30 September 2013
அமெரிக்காவில் டி.டி.ஹெச்சில் விஸ்வரூபம் 2
by admin
TamilSpyToday,
விஸ்வரூபம் 2 படத்தை இந்தியாவில் வெளியிட எதிர்த்தால் அமெரிக்காவில் டி.டி.ஹெச்சில் வெளியிடப் போவதாக கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.
கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படமே டிடிஹெச்சில் வெளியிடுவதாக இருந்தது.
அதன் பிறகு பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு ஒரு வழியாக தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் கமல் விஸ்வரூபம் 2 படத்தை டிடிஹெச்சில் வெளியிட முடிவு செய்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த இந்திய திரைப்பட தொழில் வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய கமல் கூறுகையில்,
படங்களை டிடிஹெச் மூலம் டிவிகளில் வெளியிடுவது அதை எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கை ஆகும்.
டிவியில் ஒளிபரப்புகையில் உரிய கட்டணம் வசூலிக்கப்படும்.
மக்கள் படத்தை டிவியில் மட்டுமே பார்க்க முடியும் என்று இல்லை.
தியேட்டர்களிலும் படம் ரிலீஸ் செய்யப்படும்.
இருப்பினும் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
அனைத்து வீடுகளிலும் சமையல் அறைகள் உள்ளது.
இருப்பினும் எதற்காக ஏராளமான ஹோட்டல்கள் உள்ளன.
விஸ்வரூபம் 2 படத்தை டிடிஹெச்சில் வெளியிட திட்டமிட்டிருக்கிறேன்.
இதற்கு இந்தியாவில் அனுமதி கிடைக்காவிட்டால் அமெரிக்காவில் ஒளிபரப்புவேன் என்றார்.
அதிசயமான மனிதர்கள் – வீடியோ…
Show commentsOpen link