Thursday, 5 September 2013
பாகிஸ்தானில் வர்த்தக நகராக திகழ்வது கராச்சி. இங்கு கிரிமினல்
குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகம். நூற்றுக்கணக்கான ரவுடி கும்பல்கள்
கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆள் கடத்தல், வழிப்பறி,
மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு
வருகிறார்கள்.
இதன் மூலம் தினமும் அவர்கள் 300 கோடி ரூபாய் வரை சம்பாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் தினமும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு கறுப்பு பணங்களை சம்பாதிப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது.
உலகிலேயே கிரிமினல் குற்றவாளிகள் அதிகம் நிறைந்த நகரங்களில் ஒன்றாகவும் கராச்சி திகழ்கிறது. கராச்சி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் தினமும் 10–க்கும் மேற்பட்டோர் கொல்லப்படுகிறார்கள்.