News Update :
Powered by Blogger.

மகன் அகிலேஷ் அரசு மீது முலாயம் அதிருப்தி

Penulis : karthik on Wednesday, 1 August 2012 | 21:38

Wednesday, 1 August 2012





சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தனது மகனும், உத்தர பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளார்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கூட்டத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று கூட்டினார். இந்த க ூட்டத்தில் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், ஆலம் கான் உள்ளிட்ட அமைச்சர்கள், சமாஜ்வாடி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராம் அச்ரே குஸ்வாஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முலாயம் கூறுகையில்,

இந்த அரசில் ஏதோ குறையாக உள்ளது. கடந்த அரசுக்கும், இந்த அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் உணர நான் உங்களுக்கு 6 மாத அவகாசம் கொடுத்துள்ளேன். அதில் 4 மாதங்கள் முடிந்துவ� �்ட்டன. இன்னும் 2 மாதங்கள் தான் உள்ளன. அதற்குள் எதாவது உறுப்படியாக செய்தால் நல்லது என்றார்.

அவர் விளாசித் தள்ளியபோது அனைவரும் அமைதியாக இருந்தனர்.

அந்த கூட்டத்தில் முலாயம் தெரிவித்ததாக ஒருவர் கூறுகையில்,

பல அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. அவர்கள் தங்கள் செய்லபாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே தங்கள் பணியை ஒழுங்காக செய்கின்றனர். அமைச்சர்கள் பொது இடங்களில் தங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடு குறித்து பேசக் கூடாது. அது அவப் பெயரைத் தான் ஏற்படுத்தும். மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். எனவே நீங்கள் உங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.







comments | | Read More...

கதாநாயகனாகும் கனவு நிறைவேறியது: இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி





இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி 'நான்' என்ற படம் மூலம் கதாநாயகனாகியுள்ளார். நாயகியாக ரூபா மஞ்சரி மற்றும் சித்தார்த், அனுயா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தை ஜீவசங்கர் இயக்கியுள்ளார்.

'நான்' படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பின்னர் விஜய் ஆண்டனி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இதுவரை 25 படங்களுக்கு இசை அமைத்து விட்டேன். நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது. 'நான்' படம் மூலம் அது நிறைவேறியுள்ளது. நடிகனாக விரும்பியதுமே நிறைய பேர் கதையுடன் வந்தார்கள். அவை இசை சார்ந்தே இருந்தன.

தில்லானா மோகனம்பாள் அளவுக்கெல்லாம் அவை இருந்தன. ஆனால் எனக்கு அந்த கதைகளில் உடன்பாடு இல்லை. 'நான்' படத்தின் கதை திருப்தியாக இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். படம் நன்றாக வந்துள்ளது.

கதாநாயகி ரூபாவுக்கும், எனக்கும் கெமஸ்டரி இல்லை. என்னை அவர் அண்ணன் என்றே அழைத்தார். என் மனைவி பாத்திமாவால்தான் இப்படம் உருவாகியுள்ளது. ஒருவன் நல்லவனாக வாழ்வதை சூழ்நில� ��கள் தீர்மானிக்கின்றன. அத்தகு சூழ்நிலை அமையாத ஒரு இளைஞனின் வாழ்க்கையே 'நான்' படத்தின் கதை. இந்த படத்தில் பாடல்கள் வரவேற்பு பெற்றுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.







comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger