Thursday, 24 October 2013
இந்திரா காந்தி படுகொலை ஏன்? அகாலி தளம் தலைவரின் கருத்தால் சர்ச்சை Indira Gandhi why murder Akali Dal leader comment dispute
புதுடெல்லி, அக். 24-
ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, "என் பாட்டி இந்திரா காந்தி மற்றும் தந்தை ராஜீவ் காந்தி ஆகியோர் வகுப்புவாதம் மற்றும் வெறுப்பு அரசியலால் படுகொலை செய்யப்பட்டனர். அதேபோல் நானும் கொல்லப்படலாம். அதற்காக கவலைப்பட மாட்டேன்" என்று உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.
அரசு செய்த சாதனைகளைக் கூறி வாக்கு கேட்க முடியாததால், ராகுல் காந்தி தனது பாட்டியின் மரணத்தை நினைவுபடுத்தி வாக்கு சேகரிக்க முயற்சிப்பதாக பா.ஜனதா விமர்சனம் செய்துள்ளது.
இந்நிலையில், இந்திரா காந்தி படுகொலையை மீண்டும் நினைவுபடுத்தி வரும் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அகாலி தளம் தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பஞ்சாப் முதல்வர் பாதலின் மருமகளான ஹர்சம்ரத் இதுபற்றி கூறுகையில், "மற்றவர்களின் மகன்களையும், கணவன்களையும் கொலை செய்யும்போது இந்திரா காந்தி என்ன செய்துகொண்டிருந்தார்? சீக்கியர்கள் வழிபடும் இடத்தை (பொற்கோவில்) தகர்த்து அங்குள்ளவர்களை கொலை செய்ய உத்தரவிட்டபோது என்ன நினைத்தார்? அவருக்கு தண்டனை இல்லாமல் போகுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
"அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏன் அந்த தலைவிதி ஏற்பட்டது? என்பதற்கான காரணங்களை வெளிக்கொண்டு வர ராகுல்காந்தி கொஞ்சம் ஆழமாக சென்றிருக்கிறார். நீங்கள் செய்த செயல்களுக்கான விலையை கொடுத்துள்ளீர்கள்" என்றும் ஹர்சிம்ரத் கூறியுள்ளார்.
இந்திரா காந்தி கொலை தொடர்பாக ஹர்சிம்ரத்தின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
...
shared via