அரியானா எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அரியானா எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
புதுடெல்லி, செப். 2-
அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அம்மாநில ஜான்கிட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் அரசில் சேர்ந்தனர். இவர்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று, ஜான்கிட் காங்கிரஸ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
5 பேரும் காங்கிரஸ் அரசில் சேருவதற்கு தற்காலிகமாக அனுமதி மறுத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனு மீது இன்று விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்தது. மேலும் 5 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்வது பற்றி சபாநாயகர் 3 மாதத்திற்குள் முடிவு எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
Post a Comment