Tuesday, 24 July 2012
பெட்ரோல் விலை நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து உயர்த்தப்பட்டு உள்ளது. லிட்டருக்கு 70 காசு முதல் 91 காசு வரை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் விலை நிர்ணய உரிமை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதால், ச� ��்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
ஆனால், டீசல், சமையல் கியாஸ் போன்ற மற்ற பெட்ரோலிய பொருட்களின� � விலை நிர்ணயம் தொடர்ந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.
இந்தநிலையில், பெட்ரோல் விலையைத் தொடர்ந்து டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையையும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பெட்ரோலிய அ மைச்சக உயர் அதிகாரி ஒருவர் இந்த தகவலை நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
டீசல், சமையல் கியாஸ் மட்டுமின்றி, மண்எண்ணெயின் விலையையும் உயர்த்துவதில் முழுமையான கருத்து ஒற்றுமை ஏற்பட்� ��ு உள்ளது. ஆனால், இந்த விலை உயர்வு எப்போது இருக்கும்? எந்த அளவுக்கு விலை உயர்வு இருக்கும் என்பது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
ஆகஸ்டு 7-ந் தேதி அன்று துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, அத� ��்கு முன்பாக விலை உயர்வை அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு கருதுகிறது. துணை ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததும், பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கூட இருக்கிறது. பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது விலை உயர்வை அறிவித்தால் ஆளும் காங்கிரசுக்கு தர்மசங்கடம் ஏற்படும். எனவே விலை உயர்வு எப்போது என்பதை பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்து அறிவிப்பார். இவ்வாறு அந்த அதிகாரி க� ��றினார்.
அவர் மேலும் கூறும்போது,
சில்லரை வர்த்தகத்த� �ல் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதி மறுப்பு போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளை விட, தற்போது உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம், டீசல், மண் எண்ணெய் மற்றும் சமையல் கியாசுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்துவதுதான் என்றார்.
பேட்டியின்போது அவர் மேலும் கூறியதாவது:-
கச்சா எண்ணெய் விலை அதிகரித்தும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து இறக்குமதி செலவு அதிகரித்த போதிலும் கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதிக்குப்பிறகு பெட்ரோல் தவிர மற ்ற பொருட்களின் விலை உயர்த்தப்படவில்லை. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.11.26-ம், மண்எண்ணெய்க்கு ரூ.28,56-ம், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.319-ம் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே விலையை உயர்த்தாவிட்டால் இந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படும்.
பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயத்துக்காக பிரணாப் முகர்ஜி தலைமையில் மத்திய மந்திரிகளைக் கொண்ட உயர் அதிகார குழு அமைக்கப்பட்டு இருந்தது. ஜனாதிபதி தேர்தலையொட்டி அந்த பதவியில் இருந்து பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்தபின் அந்த குழு இன்னும் மாற்றியமைக்கப்பட வில்லை.
எனவே, விலை உயர்வு குறித்த அறிக்கையை மத்திய மந்திரிசபையின் பொருளாதார விவகார குழுவிற்கு அனுப்பி வைக்க பெட்ரோலிய துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன் பரிந்துரைப்படி, விலை உயர்வு குறித்து பிரதமர் மன்மோ கன்சிங் இறுதி முடிவை எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.