News Update :
Powered by Blogger.

ஈழம் குறித்துப் பேசும் கருணாநிதி பயங்கரவாதி- சொல்கிறார் கோத்தபயா

Penulis : karthik on Thursday, 19 April 2012 | 22:52

Thursday, 19 April 2012




ஈழம் பற்றி யார் பேசுகிறார்களோ அவர்களை நாம் பயங்கரவாதிகளாகவே கருதுகிறோம். தழீழத்தை அமைக்கும் தனது கனவை, திமுக தலைவர் மு.கருணாநிதி இந்தியாவில் வைத்துக் கொள்ளட்டும், இலங்கையில் அது ஒருபோதும் சாத்தியமாகாது என ராஜபக்சேவி்ன் தம்பி கோத்தபயா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கையில் வாழும் தமிழர்களை விட மிகவும் அதிகமான தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர். அவரால் இலங்கையில் ஈழத்தை உருவாக்க முடியாது. இது ஒ� �ு இறைமையுள்ள நாடு.

ஈழம் பற்றி யார் பேசுகிறார்களோ அவர்களை நாம் பயங்கரவாதிகளாகவே கருதுகிறோம். இலங்கையில் இப்போது போர் இல்லை. இன இணக்கப்பாடு உள்ளது.

எல்லோருடைய வாழ்வும் அமைதியாக உள்ளது. இலங்கையில் உள்ள தமிழ் மக்களை கருணாநிதி தூண்டிவிடக் கூடாது. சர்ச்சைக்குரிய அறிக்கைகளின் மூலம் எமது நாட்டை அழிக்கும் இந்திய அரசியல்வாதிகளில் கருணாநிதியும் ஒருவர். இது அரசியல் ஆதாயத்துக்கான தரம்குறைந்த தந்திரோபாயம்.

எமது நாடு சுதந்திரமான ஒரு நாடு என்பதை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தை உருவாக்க அவர் முயற்சிக்கக் கூடாது. அவருக்கு ஈழத்தை அமைக்கும் விருப்பம் இருந்தால் அதை பெருமளவு தமிழர்கள் வசிக்கும் தமிழ்நாட்டில் உருவாக்கட்டும் என்றார் கோத்தபயா.



comments | | Read More...

மதுரையில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் திருட்டு விசிடி விநியோகம்




மதுரை முழுவதும் நேற்று நள்ளிரவில் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் திருட்டு விசிடியை சிலர் விநியோகித்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் புகார் மனு கொடுக்க உள்ளனர். திருட்டு விசிடியை விநியோகித்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு உதயநிதி சார்பில் திமுக பிரமுகர் மனு கொடுக்க உள்ளார்.




comments | | Read More...

ஈழத்து எம்.ஜி.ஆர். டக்ளஸ் தேவானந்தா : காங். எம்.பி. எழுப்பிய சர்ச்சை




இந்தியா தேடப்படும் ஒரு கொலைக்குற்றவாளியை ஈழத்து எம்.ஜி.ஆர்.  என புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய எம்.பி. சுதர்சன நாச்ச்சியப்பன்.


இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர் நேற்று மாலை 5 மணியளவில் யாழ். மத்திய கல்லூரிக்கு வந்தனர்.

   
இவர்களை இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் வரவேற்றார். அவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவும் கலந்து கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன்,  டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து ஈழத்து எம்.ஜி.ஆர் என அழைத்ததும் அவர் தன்னையே மறந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

சுதர்சன நாச்சியப்பன் பெயர் சூட்டலின்படி டக்ளஸ் தேவானந்தாவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் போலும் என அங்கிருந்த சிலர் பேசிக் கொண்டி ருந்ததைக் காணமுடிந்தது.


எம்.ஜி.ஆரை ஈழமக்கள் போற்றிவருகின்றனர்.  இந் நிலையில்,  எந்தவகையில் டக்ளஸ் தேவானந்தா ஈழத்து எம்.ஜி.ஆர்.  ஆவார் என கொந்தளித்துள்ளனர் ஈழ ஆதரவாளர்கள்.

தமிழகத்தில் உள்ள எம்ஜிஆர் ரசிகர்களும், அதிமுகவினரும் என்ன செய்யப்போகிறார்கள் ....? 




comments | | Read More...

இந்தியா எதிரி நாடு அல்ல: அக்னி-5 ஏவுகணை சோதனை பற்றி சீனா கருத்து




இந்தியா இன்று அணு ஆயுதங� ��களை சுமந்து கொண்டு, 5 ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக சென்று தாக்கும் வல்லமை கொண்ட, அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.
 
இதுபற்றி சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லியூ வெய்மின் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:-
 
இந்தியாவின் ஏவுகணை சோதனை பற்றி சீனா முன் எச்சரிக்க� ��யுடன் கவனத்தில் கொண்டுள்ளது. இரு நாடுகளிடையேயும் நல்ல நட்புறவு நிலவி வருகிறது. ஆசிய கண்டத்தில் சீனாவும், இந்தியாவும் சக்தி வாய்ந்த நாடுகளாக வளர்ந்து வருகின்றன.
 
இந்தியா எங்களுக்கு எதிரி நாடு அல்ல. இரண்டு நாடுகளும் கூட்டுறவு பங்காளிகள். நாங்கள் ஒத்துழைப்புடன் சந்தோஷமாக செயல்படுவோம்.
 
சமீபத்தில் டெ ல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இரு நாடுகளிடையேயும் ராஜாங்க ரீதியாக நட்புறவை முன்னெடுத்து செல்வோம்.
 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.



comments | | Read More...

தற்கொலைக் கூடங்களாகும் கல்விக்கூடங்கள்-வாரம் ஒரு தற்கொலை!



சென்னை: தமிழகக் கல்விக் கூடங்கள் தற்கொலைக் கூடங்களாக மாறி வருகின்றன. இந்த ஆண்டில் வாரம் ஒரு மாணவர் தற்கொலை செய்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைக்க� � ஆரம்பள்ளி மாணவர்கள் தொடங்கி ஐ.ஐ.டியில் எம்.டெக் படிக்கும் மாணவர்கள் வரை சரமாரியாக தற்கொலை முடிவை நாடத் தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம் மாணவர்களுக்கு எதார்த்தமான சூழ்நிலையை பழக்காததே. காதல் தோல்வியோ, தேர்வில் தோல்வியோ எதையும் தாங்கிக்கொள்ள இயலாமல் மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மரணத்தைதான்.

பணத்தை வாங்கிக் கொண்டு மார்க் வாங்குவது குறித்து கற்றுக்கொடுக்கும் கல ்விக்கூடங்களில் தோல்வியை தைரியமாக எதிர்கொள்வது குறித்த வாழ்க்கையில் எதார்த்தத்தை கற்றுக்கொடுக்காமல் விடுவதே இதற்கு காரணம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

2011 – 12 கல்வி ஆண்டில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 15 ம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி திறந்து ஒரு வாரத்திற்குள் சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது அனைவரையும் அ� ��ிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்பொழுதே கல்வித்துறை விழித்துக்கொண்டிருந்தால் நேற்றைய தைரியலட்சுமியின் தற்கொலை வரை மாணவர்களின் மரணம் நீண்டிருக்காது.

கல்வியின் நிலை

2011 மே மாதம் 4-ஆம் தேதி, ஐஐடி சென்னையில் எம்டெக் மாணவன் நிதின் குமார் ரெட்டி விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இதே ஐ.ஐ.டியில் கடந்த ஏப்ரல் 8 ம்தேதி காதல் தோல்வியால் உத்திரபிரதேச மாணவர் ஒருவர் � ��ற்கொலை செய்து கொண்டார்.

தமிழக மாணவர்கள் உயர்கல்விக்காக கனவு காணும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பொறியியல் மாணவர் மணிவண்ணன் 26 அரியர் உள்ளது என்பதற்காக தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதே பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பொறியியல் படித்த மாணவி தைரியலட்சுமி பாடங்கள் புரியவில்லை, படிக்க சிரமமாக இருக்கிறது, தேர்வில் பாஸாக மாட்டோம் என்ப� �ற்காக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

2012 ம் ஆண்டு பிப்ரவரி தொடங்கி ஏப்ரல் 17 ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி தேர்வு தோல்வியாலும், காதல் தோல்வியாலும், ஆசிரியர்களின் அவமானம் தாங்காமலும் 15 மாணவர்கள் வரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கான காரணங்கள் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். ஆனால் உயிர் என்பது ஒன்றுதான். எதைப்பற்றியும் யோசிக்காமல் சட்டென்று உ யிரை மாய்த்துக்கொள்ளும் தைரியம் எப்படி இந்த மாணவர்களுக்கு வருகிறது என்பதுதான் புரியாத புரிதாக இருக்கிறது.

இந்த ஆண்டில் மட்டும் சராசரியாக வாரம ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது. சென்னையில் மட்டும் இதுவரை இந்த ஆண்டு 19 மாணவ, மாணவியர் தற்கொலை முடிவை நாடியுள்ளனர். இவர்களில் 12 பேர் படிப்பை சுமையாக கருதி � ��ரணத்தைத் தழுவியுள்ளனர்.

19 பேரில் 11 பேர் கல்லூரி மாணவர்கள், மற்ற 8 பேரும் பள்ளிச் சிறார்கள் என்பது இன்னொரு அதிர்ச்சி.

2011ம் ஆண்டு 84 மாணவ, மாணவியர் தற்கொலை முடிவை நாடியதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மூன்று வயதில் ஆரம்ப பள்ளிகளில் நுழைந்து 17 வயதில் மேல்நிலைப் பள்ளி முடித்து மாணவர்கள் வெளியே வருவது வரை 15 வருட பள்ளி வாழ்க்கையில் மாணவர்களுக்கு என்ன கற்றுத ்தரப்படுகிறது என்பதுதான் புரியாத புரிதாக இருக்கிறது.

மதிப்பெண் குறித்த கண்ணோட்டத்துடனேதான் மாணவர்கள் பார்க்கப்படுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் வாங்கினால்தான் மதிப்பு என்று பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தம். நூறு சதவிகித தேர்ச்சிக்காக பள்ளி நிர்வாகம் கொடுக்கும் அழுத்தம் அனைத்தும் சேர்ந்துதான் மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.< br />
படிப்பு என்பது கௌரவமா?

ஐஐடி, பொறியியல் போன்ற படிப்புகளில் நுழைவதே கௌரவமாகவும் அதற்குமேல் வேலைக்கான உத்தரவாதமாகவும் பெற்றோர்களாலும் பொதுமக்களாலும் பார்க்கப்படுகிறது. இந்த​ பொதுப்புத்தி, பட்டப்படிப்பு முடித்ததும் கார்ப்பரேட் கம்பெனிகளில் கிடைக்கப்போகும் வேலை உத்தரவாதத்தைப் பற்றியும் வெளிநாட்டு சொகுசு வாழ்க்கை பற்றியும் கனவுகளை மாணவனுக்குள் உருவாக்கிறது.

ஐஐடி, பொறியியல் மாணவர்களில் 80%ற்கும் மேலானோர் வங்கிக்கடனை நம்பி படிக்கும் நடுத்தர​ வர்க்கத்தினர். பட்டப்படிப்பை முடித்ததும் இக்கடனை திருப்பி செலுத்த​ வேண்டிய​ நிர்பந்தமும் அம்மாணவனுடைய​ உடனடி வேலைத் தேவைக்கு காரணமாகிறது.

பொறியியல், மருத்துவம், ஐஐடி போன்ற படிப்புகள் மட்டுமே வாழ்க்கை என்றால் அந்த படிப்புகளை படிப்பதற்கான திறமை மாணவர்களுக� ��கு இருக்கவேண்டும். ப்ளஸ்டூவில் ஆயிரத்து நூறுக்கு மேல் எடுத்து நுழைவுத்தேர்வில் நல்ல ரேங்க் வாங்கினால் அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்து விடும் என்பது உண்மைதான்.

அதேசமயம், நான்கு ஆண்டுகள் அந்த கல்வியை படிக்க ஈடுபாடு வர வேண்டுமே. பொறியியல் படிக்க விருப்பமில்லாத நிலையிலும் அவர்களை அந்த படிப்புகளுக்குள் தள்ளிய பெற்றோர்கள்தான் முதல் குற்றவாளிகளாக கருதவ� ��ண்டும். ஏனெனில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டு மாணவர்களுமே ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள். மேல்நிலைக் கல்வியில் வேறு துறையில் பயணிக்க நினைத்தவர்களை பொறியியல் பக்கம் திசை திருப்பியதே அவர்களின் தற்கொலைக்கு காரணமாகிவிட்டது.

ஆசிரியர்களின் நிலை

கல்விக்கூடங்களில் பாடம் நடத்தும் ஆசிரியர்களும் பாடம். மதிப்பெண் என்பதைத்தாண்டி வேற ு எதைப்பற்றியும் கருத்தில் கொள்வதில்லை.

90 களில் கூட பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடத்தை கூட விளையாட்டு போல நடத்துவார்கள். பாடத்தை தாண்டி விளையாட்டு, அரசியல், சினிமா, வேடிக்கை பேச்சு, நீதிபோதனை என கல்விக்கூடங்களில் பலவற்றையும் கற்பித்தார்கள். என்றைக்கு கல்வியில் தனியார்மயம் நுழைந்து போட்டி கல்வியானது கூவி கூவி விற்பனை செய்யப்பட்டதோ அன்றைக்கே ஆசிரியர்களும், ம� �ிப்பெண்களை மட்டுமே கருத்தில் கொண்டனர்.

மாணவர்களின் மனதைப் பற்றியோ அவர்களின் தேவைகளைப் பற்றியோ இன்றைய கல்வி நிறுவனங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அக்கறையில்லை. அதனால்தான் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது நீடிக்கிறது. சில சமயங்களில் மாணவர்கள் கொலையும் செய்கிறார்கள்.

தற்கொலைக்கான தூண்டுதல்கள்

இந்த​ கல்விமுறை மாணவனுக்கு சமூகம் சார்ந்த​ எந்த​ புரிதலையும் உருவாக்கிக் கொடுக்காமல் இருப்பதும், சமூக​ யதார்த்தங்களிலிருந்து அன்னியப்பட்ட​ நடுத்தர​ வர்க்கப் பின்னணியும், அம்மாணவன் பட்டப்படிப்பை முடிப்பதில் சிக்கல் ஏற்படும் போது அதை தனக்கு மட்டுமே உரிய​ பிரச்சனையாகப்பார்ப்பதும், அவனது சமூகப்பொருளாதார​ நிலைமைகளுமே அவனை தற்கொலைக்குத் தூண்டுகிறது.ஆனால் சாதாரண அரசு கல்லூரிகளில் இருக்கும் மாணவர்களின் விழி� �்புணர்வு ஐஐடி போன்ற உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இன்றைக்கு மாணவர்களின் தேவையே பிரச்சினையை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தைரியம்தான் அதை எந்த கல்விக்கூடங்களிலும் கற்றுக்கொடுப்பதாக தெரியவில்லை. கல்விக்கூடங்களில் சூழ்நிலை மாறினாலே மாணவர்களின் நிலை மாறும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும். அரசும் கல்வித்துறையும் இனியாவது விழித்துக்கொள்ளுமா? என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வி.

நன்றி தட்ஸ் தமிழ்


http://kallaool.blogspot.in




comments | | Read More...

"ஏடாகூட' சி.டி.,யில் சிங்வி "எக்கச்சக்கம்': காங்., செய்தி தொடர்பாளர் பதவி நீக்கம்



காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனுசிங்வி, தன் சக பெண் வழக்கறிஞர் ஒருவருடன், ஏடாகூடாமாக இருப்பது போன்ற சி.டி., வெளியாகி, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சி.டி.,யை வெளியிடக் கூடாது என்று, சிங்வி தரப்பு கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியுள்ள நிலையில், இந்த சி.டி.,யை வெளியிட்ட அவரின் டிரைவரும், பல்டி அடித்துள்ளார். இந ்த சர்ச்சையால், அவர் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து சத்தமின்றி நீக்கப்பட்டார்.

சம்பளம் அதிகம்: காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்து வருபவர் அபிஷேக் மனுசிங்வி. சுப்ரீம் கோர்ட் வட்டாரங்களில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் மிகச் சில வழக்கறிஞர்களில், இவரும் ஒருவர். கட்சியில் பல செய்தித் தொடர்பாளர்கள் இ ருந்தபோதிலும், அவர்களில் மிக முக்கியமானவர். மிகச் சிக்கலான பிரச்னைகள் எழும்போதெல்லாம் இவர், தனது லாவகமான பேச்சுத் திறமையை கொண்டு பேட்டியளிப்பார். தவிர லோக்பால் மசோதாவை பரிசீலித்து, வரும் பார்லிமென்ட் நிலைக்குழுவின் தலைவராகவும் இருக்கிறார்.

காணவில்லை: ஒவ்வொரு வாரமும், திங்கட்கிழமை அன்று சிங்வி நிருபர்களை சந்திப்ப� �ு வழக்கம். ஆனால், கடந்த இரண்டு வாரங்களாகவே திங்கட்கிழமை அன்று வராமல் தவிர்த்தார். இந்த சூழ்நிலையில் தான் டில்லி பத்திரிகையாளர் மத்தியில், ஒரு சி.டி., புழங்க ஆரம்பித்தது. ரகசியமாக வினியோகிக்கப்பட்ட அந்த சி.டி.,யில், ஒரு பெண்ணுடன் பல்வேறு ஏடா கூடமான நிலையில் தென்படுகிறார். இது, பெரும் பரபரப்பை கிளப்பியது. அந்த பெண், சிங்வியோடு பணியாற்றும் ஒரு வழக்கறிஞர் என்றும் சொல்லப ்பட்டது.

அரசல் புரசல்: அரசல் புரசலாக பேச்சுகள் கிளம்பியதும், சில தினங்களுக்கு முன் சிங்வி தரப்பில், இந்த சி.டி.,க்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. தன் ஜூனி யர் ஒருவரை விட்டு, இந்த வழக்கை டில்லி ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ள சிங்வி, இந்த சி.டி.,யை தடை செய்ய வேண்டுமென்றும் கோரினார். இந்த சி.டி., பொய்யானது. இதில் ஜோடிக்கப்பட்ட காட்சிகள் உள்ளன. எனவே, தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும், இந்த சி.டி.,யை வெளியிட தடை விதிக்க வேண்டும். குறிப்பாக, ஆஜ்தக், இந்தியா டுடே, ஹெட்லைன்ஸ் டுடே போன்ற ஊடகங்களில் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும் என் று, அதில் குறிப்பிடப்பட்டது. தன்னிடம் பணியாற்றிய டிரைவர் முகேஷ்குமார் லாலுக்கும், தனக்கும் ஏற்பட்ட அதிருப்தியில், இதுபோன்ற பொய்யான சி.டி.,யை தயாரித்து உலவவிடப் பட்டிருக்கிறது.

தடை கோரிக்கை: இது "பிளாக்மெயில்' செய்யும் நோக்கில் வெளியிடப் பட்டுள்ளது. ஆகவே, இந்த சி.டி.,க்கு தடை விதிக்க வேண்டும் என கோரிய, அந்த மனுவை ஏற்றுக் � �ொண்ட ஐகோர்ட், இடைக்கால தடையை விதித்துள்ளது.

சமரசம்: இந்த தடை உத்தரவுக்கு பிறகு முகேஷ்குமார் லாலும், அபிஷேக் மனுசிங்வி தரப்பும், சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், ஒரு சமாதான முயற்சியில் இறங்கியதாகவும் கூறப்படுகிறது. அதன் விளைவாக திடீரென நேற்று முன்தினம், டிரைவர் முகேஷ்குமார் லால் தரப்பில் கோர்ட்டில், தானாகவே ம ுன்வந்து ஒரு விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் அந்த டிரைவர், "சிங்வியிடம் நான் பணியாற்றினேன். அவர் என்னை நடத்திய விதம் சரியில்லை. அவருக்கு பாடம் புகட்டவும், பழி வாங்கவும் முடிவு செய்தேன். அதன்படி, பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா நகரில், இந்த சி.டி.,யை நான் தான் தயாரித்தேன். இது பொய்யானது தான். கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர் சிங்வி. ஆனால், அவரிடம் பணியாற்றும் எனக்கோ மிகவு ம் குறைவான ஊதியத்தை மட்டுமே வழங்கி வந்தார். சம்பள உயர்வு கேட்டு பார்த்தும் பலனில்லை. பாதிக்கப்பட்ட நான் வேறு வழியின்றி சிங்வியை களங்கப்படுத்திட, இதுபோன்ற காரியத்தை செய்தேன் 'என்று, விளக்கம் அளித்துள்ளார். இம்மனு, கோர்ட்டின் பரிசீலனையில் தற்போது இருந்து வருகிறது.

நீக்கம்: காங்கிரசின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சிங்வியை மையமாக வைத்து, புயலை கிளப்பியுள்ள விவகாரத்தினால், காங்கிரஸ் ஆடிப்போய் உள்ளது. இந்த சர்ச்சை வெடித்தவுடன் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து சிங்வியை, சத்தமில்லாமல் நீக்கியும் உள்ளது. இந்த விஷயம் குறித்து, கட்சியின் மேலிட வட்டாரங்கள் கூறுகையில், "இந்த சி.டி., விவகாரம் கட்சிக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது தான். என்ன செய்ய. மு க்கிய தலைவர்களே இதுபோல சர்ச்சையில் சிக்கிக் கொள்வது கவலையளிக்கிறது,' என்றன.

எப்போ வருவாரோ, ஏது சொல்வாரோ? சி.டி., சர்ச்சையில் சிக்கிய அபிஷேக் மனுசிங்வி, கடந்த சில நாட்களாகவே எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றபோதும், போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. செய்தித் தொடர்பாளர் பதவியில் இரு� �்து நீக்கிய விஷயமும் கூட பரவலாக வெளிவரவில்லை. இதற்கு முன்பும், ஒருமுறை மனுசிங்வி பதவி நீக்கம் செய்யப்பட்டார். லாட்டரியை தடை செய்ய வேண்டுமென, கேரளாவில் அம்மாநில காங்கிரசார் கடுமையாக போராடிக் கொண்டிருந்த சமயம். அப்போது கள்ள லாட்டரி அதிபர் ஒருவருக்கு ஆதரவாக அபிஷேக் மனுசிங்வி, கோர்ட்டில் ஆஜரானார். இதனால் கோபம் கொண்ட கேரளா காங்கிரசார் கட்சி மேலிடத்தில் முறையிட்டதன� �� விளைவாக, செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து பதவிநீக்கம் செய்யப்பட்டார். பின் பதவி தரப்பட்டது. ஆனால், இம்முறை பலான சர்ச்சையில் சிக்கியுள்ளதால், திரும்பவும் அப்பதவிக்கு எப்போது வருவாரோ என்ற கேள்வியும், பரபரப்பும் டில்லியில் நிலவுகிறது.

  thanks to dinamalar


http://kallaool.blogspot.in




comments | | Read More...

பால்வினை நோய்க்கு இளம் வயதினர்: அதிர்ச்சி ரிப்போர்ட்



பள்ளி செல்லும் மாணவர்கள் கூட செக்ஸ் பற்றி பேசும் காலம் வந்து விட்டது. பள்ளி மாணவிகள் கழிவறையில் குழந்தை பெற்று மறைத்து வைத்து அதிரவைக்கிறார்கள். அமெரிக்காவில் அல்ல � ��ந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில்தான். இவ்வாறு இளம் வயதில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதினால் எஸ்.டி.டி ( STD) sexually transmitted diseases எனப்படும் பால்வினை நோய்க்கு பதின் பருவத்தினர் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சிகரமான ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 40 சதவிகித பதின் பருவத்தினர் கர்ப்பமடைகின்றனர் என்று தெரியவந்துள்ளது. இணையம், தொலைக்காட்சிகளின் புண்ணியத்தில் இந்தியாவிலும் இந்தநிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் இள வயதினர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான இளவயதினர் கர்ப்பம் ஏற்படுவதை தவிர்க்க முறையற்ற வழிகளை கையாளுகின்றனர் இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கிறது.

பதின் பருவத்தில் ஏற்படும் செக்ஸ் ஆர்வம் அவர்களை எஸ்.டி.டி எனப்படும் பால்வினை நோயிலும் தள்ளிவிடுகிற� ��ு. இந்த எஸ்.டி.டி பற்றி இன்னமும் பெரும்பாலானோருக்கு விழிப்புணர்வு இல்லை. ஹெச்ஐவி, எய்ட்ஸ் போல இதுவும் அச்சம் தரக்கூடிய நோய் என்பதை உணரவேண்டும்.

இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கவும், அமெரிக்காவில் ஆங்காங்கே எஸ்.டி.டி கிளீனிக்குகள் உள்ளன. தற்போது பெரும்பாலான டீஜ் ஏஜ் வயதினர் அறியாமையினால் எஸ்.டி.டி நோய்க்� ��ு ஆளாகி வருவதாகவும் எச்சரித்துள்ளனர்.

பதின் பருவத்தில் செக்ஸ் ஈடுபாடு குறித்து அமெரிக்காவின் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் டீஜ் ஏஜ் செக்ஸ் மூளை நரம்புகளை பாதிக்கும் என்று எச்சரித்துள்ளனர். எலிகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டது.

இந்தியாவில் இளம் வயதினரிடையே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த� �்பட்டுள்ளதாக தெரியவில்லை. பள்ளி பருவத்திலேயே பாலியல் குறித்த விழிப்புணர்வும், அது குறித்த அவசியமும் கல்வி வாயிலாக அறிவுறுத்தப்பட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


நன்றி தட்ஸ் தமிழ்


http://kallaool.blogspot.in




comments | | Read More...

இப் போ "தை" க்கு இருக்கட்டும் சித்திரை.2



குஜால் மற்றும் வினோத்குமாரின் மறு மொழிகளுக்கான பதில்.

இந்தியாவின் காலண்டர்தான் உலகிலேயே மிகவும் பழமையானது. இந்தியரின் வானியல் திறமைக்கு இந்தக் காலண்டரும் ஒரு சாட்சிதான். நாம்தான், எல்லாரையும் விட வானியலில் 3000 வருடங்கள் முன்னேறியவர்கள் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அதிலும் நாம் எடுத்துக் க ொண்டதோ கலியுகத்தை மட்டுமே.
மேலும் விவரங்களுக்கு

அக்காலத்தில் பாமரனுக்கும் பாராளுபவனுக்கும் வானியல் விளக்கங்களைக் கூறி அன்றைய நாள் எப்படிப் பட்டது, என்ன வருடம், என்ன மாதம், என்ன தேதி, என்ன கிழமை, என்று கூறுவதற்கு ஒரு ஆள் தேவைப் பட்டான். அதற்காகவே ஒரு குழுவினர் இருந்த� ��ர். அவனும் தனது முன்னோர்களின் வாய்மொழியில் பின் பற்றப்பட்ட காலண்டரை தினசரி அப்டேட் செய்து கண்கானித்து அவனே ஒரு நாட்காட்டியாகவும், (Event Manager) ஈவண்ட் மேனேஜராகவும் செயல்பட்டான். 

உதாரணமாக, ஒருவர் கணபதி பூஜை செய்து இந்தப் பதிவை இடுகிறார் என்றால், அந்த செயலின் முதல் பூஜையாக ஸங்கல்பம் என்பது அமையும். ஸங்கல்பம் என்பது இறைவனிடம் இந்த கணபதி � ��ூஜையின் வாயிலாக பலனை அடையக் கேட்கப்படும் மந்திரமாக அமைகின்றது. அடுத்தமுறை விஷேசங்களில் கலந்து கொள்ளும் போது கவனியுங்கள்.

அந்த மந்திரம், விக்னங்கள் எனும் வினைகளை நீக்கும் விநாயகரை வழிபடும் ஸ்லோகமாகிய "ஓம் சுக்லாம் பரதம் ..... சாந்தயே" என்ற மந்திரத்தோடு ஆரம்பிப்பார்கள் .

அடுத்து வருடம்,மாதம் ,கிழமை, திதி, � ��ட்சத்திரத்தையும் (மொத்தத்தில் காலத்தையும்) அடுத்து பூகோள ரீதியாக இடத்தையும் குறிப்பிடுவார்கள், உதாரணத்திற்கு இன்றைய நாளுக்கான மந்திரமும் விளக்கமும்.

"சுபாப்யாம் சுபேசோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண:த்வீதிய பரார்த்தே
இந்த இனிய நல்ல வேளை ,பிரம்மனின் இரண்டாவது பரார்த்தத்தில்
ஸ்வேத வராஹ க ல்பே
முப்பத்தாறு கல்பங்களில் முதல் கல்பமாகிய ஸ்வேத வராஹ கல்பத்தில்
வைவஸ்வத மன்வந்த்ரே
பதினான்கு மன்வந்திரங்களில் ஏழாவது மன்வந்திரமாகிய வைவஸ்வத மன்வந்திரத்தில் .
அஷ்டாசாவிகும்சதி தமே
71 சதுர்யுகங்களில் 28வது சதுர்யுகத்தில்
கலி யுகே 5113
நான்காவது யுகம ாகிய கலியுகத்தில் 5113வது வருடத்தில் . (2012)
ப்ரதமே பாதே
பிரபஞ்சத்தின் முக்கியமான பகுதியில்
ஜம்புத்வீபே
ஏழு தீபகற்பங்களில் முதல் தீபகற்பமாகிய ஜம்பூ த்வீபத்தில் (நீரால் சூழப்பட்டுள்ள,  நாம் வசிக்கும் இந்திய தீப கற்பத்தில்),
பாரத வருஷே
ஒன்பது வர்ஷத்தில் முதல் வர்ஷமாகி� � பாரத வர்ஷம், (இதுவும் இடம் பற்றியதே)
பரத கண்டே
ஒன்பது கண்டங்களில் முதல் கண்டமாகிய.பரத கண்டத்தில்,
மேரோர்: தக்ஷ'ணே பார்ச்வே
மேரு எனும் மலையின் தெற்கு புறத்தில்.
சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவகாரிகே பிரபவாதீனாம் சஷ்டியா: ஸம்வத்ஸராணாம் மத்யே
மேற்கண்ட பிரம்ம காலம் தொ� ��ங்கி, பரத கண்டத்தின் தெற்கு புறத்தில், பூஜை செய்யும் கர்த்தாவானவர் 60 வருடங்கள் கொண்ட சுழற்சியில், தற்காலமாகிய
நந்தன.. நாம ஸம்வத்ஸரே
26 வது வருடமாகிய ..நந்தன.. எனும் பெயர் கொண்ட வருடத்தின் பனிரண்டு மாதங்கள் கொண்ட ஸம்வத்ஸரத்தில்,
(உத்தர/தக்ஷ¢ண) உத்தராயனே
உத்த்ராயண காலத்தில்
(வஸந்த/ � �்ரீஷ்ம/ வருஷ/ சரத்/ ஹேமந்த/ சிசிர்) வஸந்த ருதௌ
வஸந்த ருது எனப்படும் வஸந்தகால பருவத்தில்
சித்திரை மாஸே
சித்திரை மாதத்தில்
(சுக்ல/ கிருஷ்ண) கிருஷ்ணபட்க்ஷ திரயோதசி
தேய்பிறையில் திரயோதசி திதியில்
சுபதிதௌ வாஸர:
(பானு/ இந்து/பௌம/ ஸெளம்ய / குர ு/ ப்ருகு/ ஸ்திர) குரு வாஸர யுக்தாயாம்
சுபயோக சுபதினமான வியாழக்கிழமையில் (19-04-2012)
.உத்திரட்டாதி...... நக்ஷத்ர ஸம்யுக்தாயாம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில்
சுப நக்ஷத்ர சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷெண வசிஷ்டாயாம் அஸ்யாம்"
இந்தப் பதிவு இடப்பட்டது. என்று முடித்து, யார் இந்த கணப� �ி ஹோமத்தைச் செய்கின்றார்களோ அவர்களின் பெயர் நக்ஷத்திரங்கள் சொல்லப்பட்டு, அந்த ஹோமத்தினால் கிடைக்கும் பலன்களை வேண்டுவதாக முடியும்.
மேலும் விளக்கமறிய

இவ்வாறு பரம்பரை பரம்பரையாக சில குடும்பத்தினர் அப்டேட் செய்து பஞ்சாங்கம் வெளியிடுகிறார்கள். மேலும் நீங்� �ளே பஞ்சாங்கம் தயாரித்துக் கொள்வதற்கான அட்டவணைகளும் தற்பொழுது வந்துவிட்டன. 

திண்டுக்கல்லைச் சேர்ந்த இரா.அருள்வேல் என்பவர் கூட மூன்று புத்தகங்கள் வெளியிட்டு உள்ளார்.


காலத்தை இவ்வளவு தெளிவாக கணிதம் செய்த� �� இருப்பவன், இவர்கள் கூறும் அயனாம்சத்தையும் தெளிவாக கண்டு அதற்கான கணக்கீடுகளையும் அப்டேட் செய்துள்ள விதமறிய பஞ்சாங்கம் வாங்கிப் படித்துப்பாருங்கள் . இவர்களது கணிதம் துல்லியமானது என்பதை அறிய கிரஹணங்கள் பற்றிய குறிப்புகள் ஒன்றே போதும், நிகழும் நேரம் மற்றும் எடுத்துக் கொள்ளும் காலம் (Duration) ஆகியவற்றை வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு ஒரு (பல) வருடத்திற்கு முன ்பே கணித்துக் கூறும் திறமை ஒன்றே போதும் பஞ்சாங்கத்தின் நம்பகத்தன்மை பற்றி தெரிந்து கொள்ள. 

காலண்டரைப் பற்றி அறியாத மூடன்தான் தனது இஷ்டத்திற்கு தகுந்தாற் போல் வருடப் பிறப்பை மாற்றுவான். இப்பொழுது "தை " மாதம் என்பார்கள். பின்பு சங்ககாலத்தில் "தயா "என்று இருந்ததை ஒரு குள்ள நரிக் கூட்டம் "தை" என்று மாற்றி விட்டது என்பார்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிளாக்கில் பூமியின் அச்சுக்கு ஏற்படும் பம்பர சுழற்சியைப் பற்றியும் அது 25783 வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்கிறது என்றும் அதனால் காலம் சிறிது சிறிதாக முன் செல்கிறது எனவும் கூறப் படுகிறது.

 
அதனால்தான் 2200 வருடங்களுக்கு முன்பு தையாக இருந்தது இன்று சித்திரையாகிவிட்டது என கூறப்படுகிறது. அப்படியானால் இன்னும் கொஞ்சம் முன்னால் போய் 25783 வருடங்களுக்கு முன் இதே மாதம் சித்திரையாகத் தானே இருந்திருக்க வேண்டும்.

ஆகவே குஜ்ஜாலின் objection if any,overruled.


எது எக்கேடு கெட்டாலும் பூமத்திய ரேகை இடம் மாறுவதற்கான வாய்ப்பு கிடையாது. ஆகவே காலக் கணித த்தில் தவறு ஏற்படுவதற்கான வாய்ப்பு
இல்லை.
A 12th century text by Bhāskara II[9] says: "sampāt revolves negatively 30000 times in a Kalpa of 4320 million years according to Suryasiddhanta, while Munjāla and others say ayana moves forward 199669 in a Kalpa, and one should combine the two, before ascertaining declension, ascensional difference, etc."[10] Lancelot Wilkinson translated the last of these three verses in a too concise manner to convey the full meaning, and skipped the portion combine the two which the modern Hindi commentary has brought to the fore. According to the Hindi commentary, the final value of period of preces sion should be obtained by combining +199669 revolutions of ayana with −30000 revolutions of sampaat to get +169669 per Kalpa, i.e. one revolution in 25461 years, which is near the modern value of 25771 years.

துருவ நட்சத்திரம் என்று ஒன்று இருப்பதால் அதை வைத்து இந்த பம்பர சுழற்சியையும் ஜோதிடர்கள் 5000 வருடங்களுக்கு முன்பே தங்கள் கணக்கீட்டில் வைத்துள்ளனர். அயாணாம்சம் என வைத்து அதற்கான திருத்தத்தையும் வைத்துள்ளனர். தங்கள் கணிதத்தில் இவர்கள் கூறும் பம்பர சுழற்சி யினால் சுமார் 12,000 வருடங்களுக்கு ஒரு முறை தென் துருவத்தில் நிகழும் வெட்பதட்ப நிலை வட துருவத்திலும், வடதுருவத்தில் நிகழும் வெட்ப தட்ப நிலை தென்துருவத்திலும் மாறி மாறி நிகழும். சிலர் இதைத் தவறாக புரிந்து கொண்டு தென் துருவம் வடதுருவமாக மாறிவிடும் என்பார்கள். அப்படியெல்லாம் பூமி தலைகீழாக மாறுவதில்லை. சுக்கிரன்தான் அப்படி சுமார் (177 அதாவது தலைகீழுக்கு 3 டிகிரி கம்மி) தல� ��கீழாக மாறுகிறது. ஆகவே பஞ்சாங்கம் தவறென்பதற்கும் வழி இல்லை.

ஆகவே வினோத்குமாரின் objection overruled.

இரா.சந்திரசேகர்,
பழனி.


http://tamilsexstorys2u.blogspot.com




comments | | Read More...

ஐ.பி.எல்.போட்டி: சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி




ஐ.பி.� �ல் போட்டித் தொடரின் 24-வது லீக் ஆட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும் மோதின.
 
சென்னை அணியில் கடந்த போட்டியில் விளையாடிய முரளி விஜய், அல்பி மோர்கெல், யோ மகேஷ் ஆகியோர் நீக்கப்பட்டு, விர்த்திமன் சஹா, பொலிஞ்சர், சதாப் ஜகதி ஆகியோர் சேர்க்கப்பட ்டுள்ளார்.
 
புனே அணியில் கடந்த போட்டியில் விளையாடிய அசோக் திந்தா நீக்கப்பட்டு, முரளி கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டு பிளிசிஸ்ஸும் பத்ரிநாத்தும் களமிறங்கினர். இந்த ஜோடி  116 ரன்கள் எடுத்தது. அந்நிலையில் டு பிளிஸ்ஸி 58 ரன்னில் ஆட்டம் இழந்தார்.தொடர்ந்து பத்ரிநாத்தும் 57 ரன்னில் வீழ்ந்தார்.
 
களமிறங்கிய உடனேயே அதிரடியாக ஆட முயன்ற ரெய்னா ரன் ஏதும் எடுக்காமலும், பிராவோ 12 ரன்னிலும் வெளியேறினர்.
 
ஆட்டத்தின் கடைசி பந்தில் ஜடேஜா 7 ரன்னில் அவுட்டாக, சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 � ��ன்கள் எடுத்தது. டோனி 12 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
புனே அணி தரப்பில் சாமுவேல்ஸ் 3 விக்கெட்டும், நெக்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்த� �ு. இதனால் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



comments | | Read More...

தனித்தமிழீழம் நிச்சயம் ஒருநாள் உருவாகும்: கருணாநிதி




இலங்கை தமிழர்களின் லட்� �ியமான தனித்தமிழீழம் என்றாவது ஒருநாள் நிச்சயம் உருவாகும் என தி.மு.க தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
இலங்கை தமிழர்களின் எதிர்காலம் பற்றி இன்று பேசிய கருணாநிதி, 'தமிழீழம் என்பது வரலாற்று ரீதியாக தமிழருக்கு வழங்கப்பட வேண்டிய உரிமை. இலங்கை மண்ணில் தமிழர்கள் சிந்திய ரத்தமும், உயிர் பலிகளும் வீண் போகாது. என்றாவது ஒருநாள் � ��ிச்சயம் தமிழீழம் உருவாகும். இலங்கை தமிழர் விவகாரத்தில் ஐ.நா தலையிட்டு, பிற நாடுகளைப் போல் பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழீழத்தை உருவாக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
  ;
மேலும் ஐ.நா.வின் தலையீட்டால் கொசாவோ, மாண்டி நீக்ரோ, தெற்கு சூடான், கிழக்கு தைமூர் போன்ற நாடுகள் உருவானதையும் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சமீபத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வுப் பணிகளை பார்வையிட இந்தியாவில் இருந்து சுஷ்மா சுவராஜ் தலைமையில் 14 பேர் கொண்ட அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்தது. இந்த எம்.பி.க்கள் குழுவில் இருந்து அ.தி.மு.க. விலகிக்கொள்வதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடைசி நேரத்தில் தி.மு.க.வும் இலங்கை செல்லும் எம்.பி .க்கள் குழுவில் இருந்து விலகியது.  
 
இதுபற்றி பேசிய கருணாநிதி, 'எம்.பி.க்கள் குழு பயணத்தால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதற்கு பழைய கால உதாரணங்கள் இருக்கின்றன. எனவே அந்தப் பயணத்தை தி.மு.க சார்பாக யாரும் மேற்கொள்ளவில்லை' என்றார்.
 
இந்நிலையில் கருணாநிதி தற்போது தமிழீழம் நிச்சயம் உருவாகும் என நம்பிக்� ��ை தெரிவித்துள்ளார்.



comments | | Read More...

சட்டசபையில் அழகிரியை பற்றி விமர்சனம்; திமுக எம்எல்ஏக்கள் அமளி- 4 பேர் சஸ்பெண்ட்!




சட்டசபையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை அதிமுக எம்எல்ஏ விமர்சித்துப் பேசியதால் திமுக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்� ��னர். இதையடுத்து அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போது சபாநாயகருக்கு எதிராக கோஷமிட்டதால் 4 திமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சட்டசபையில் இன்று வேளாண்மைத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அப்போது நடந்த விவாதம்,

தமிழரசன் (அதிமுக): கடந்த ஆட்சியின்போது மதுரையில் மு.க. அழகிரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரால் மதுரைக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. மதுரையில் வெட்டு குத்து போன்றவைதான் நடந்தது.

இதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சபாநாயகர் ஜெயக்குமார்: இது உறுப்பினரின் கன்னிப் பேச்சு. ஒரு உறுப்பினர் முதன் முதலாக பேசும்போது மற்றவர்கள் குறுக்கிடக்கூடாது. அடுத்து உங்கள் கட்சி சார்பில் உறுப்பினர் பேச இருக்கிறார். அவர் பேசும் போது இந்த கருத்துக்கு உங்கள் உறுப்பினர் எதிர்ப்பு தெரிவ� �க்கலாம்.

ஆனாலும் தமிழரசனின் பேச்சுக்கு பதில் தர அனுமதி கோரி திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று குரல் கொடுத்தனர்.

சபாநாயகர்: திமுக உறுப்பினர்கள் அனைவரும் உட்காருங்கள். உறுப்பினர் தமிழரசன் பேசி முடித்ததும் திமுக கொறடாவுக்கு வாய்ப்பு அளிக்கிறேன்.

(ஆனாலும் தொடர்ந்து திமுகவினர் குரல் கொடுத்தனர்)

சபாநாயகர்: அனைவரும் உட்காருங்கள். இல்லை என்றால் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

இருப்பினும் திமுகவினர் தொடர்ந்து குரல் எழுப்பியதால் சபையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அப்போது சிலர் சபாநாயகருக்கு எதிராக கோஷமிட்டபடியே வெளியே சென்றனர். மேலும் சட்டமன்ற வளாகத்திற்குள்ளும் சபாநாயகருக்கு எதிராக கோஷமிட்டனர்.

அப்போது சட்டமன்றத்தில் பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் வாய்ப்பு கொடுக்கிறேன் என்று சொன்ன பிறகும் அவர்கள் மோசமாக நடந்து கொண்டனர். ஒழிக என்று கோஷமிட்டவ ர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், அவை நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அதைப் பார்த்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து சில அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்ட திமுக எம்.எல்.ஏக்களின் பெயர்களை சபாநாயகரிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சபாநாயகருக்கு எதிராக கோஷமிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் கொண்டு வந்தார்.

அந்தத் தீர்மானத்தில், கண்ணியமான இந்த சபையில் அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காகவும் சபாநாயகரின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் கோ ஷமிட்ட திமுக உறுப்பினர்கள் எ.வ.வேலு, லால்குடி செளவுந்தர பாண்டியன், மைதீன் கான், கம்பம் ராமகிருஷ்� �ன் ஆகியோரை அபை நடவடிக்கைகளில் இருந்து 10 நாள் நீக்கி வைக்க வேண்டும் என்று கோருகிறேன் என்று கூறப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து 4 திமுக எம்எல்ஏக்களையும் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

திமுக வெளியேற்றப்பட்டபோது அக் கட்சியின் சட்டமன்றத் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் ஆகியோர் அவையில் இல்லை.

துரைமுருகன் தலைமையில் திமுக இன்றும் வெளிநடப்பு:

முன்னதாக சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் பேசுகையில், தமிழ்ப் புத்தாண்டை திமுக தலைவர் கருணாநிதி மாற்றியதை விமர்� �ித்துப் பேசினார்.

இதற்கு திமுக உறுப்பினர் சிவசங்கரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூச்சலிட்டதால் அவருக்கு சபாநாயகர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து பேசவே, அவரை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து காவலர்கள் சிவசங்கரனை வெளியேற்றினர்.

இதன்பிறகு திமுக எம்எல்ஏ துரைமுருகன் விளக்கம் அளித்து பேச முற்பட்டார். ஆனால் அவருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் துரைமுருகன் தலைமையில் திமுகவினர் அனைவரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.






comments | | Read More...

கெடு முடிந்ததால் மாவோயிஸ்டுகளின் மக்கள் மன்றத்தில் நிறுத்தப்பட்டார் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா




பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவை, கடந்த மாதம் 24-ந்தேதி மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றனர். அவரை விடுவிக்க ஜெயிலில் இருக்கும் தங்கள் அமைப்பைச் சேர்ந்த கைதிகள் 29 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுக ள் நிபந்தனை விதித்தனர்.

ஆனால் அவர்களிடம் 25 பேரை மட்டும் ஜாமீனில் விடுவிப்பதாக ஒடிசா அரசு முதலில் அறிவித்தது. இதை ஏற்க மாவோயிஸ்டுகள் மறுத்து விட்டனர். ஜெயிலில் இருப்பவர்களை ஜாமீனில் விடுவிப் பதோடு மட்டுமல்லாமல், அவர்மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் அரசு வாபஸ் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர்.

இந்நிலையில், எம்.எல்.ஏ.வை விடுதலை செய்ய மாவோயிஸ்டுகள் விதித்திருந்த கெடு, நேற� �று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.

இதற்கிடையில் மாவோயிஸ்டுகளின் ஆந்திரா- ஒடிசா மாநில எல்லை சிறப்பு மண்டல கமிட்டி தலைவர் அருணாவிடம் இருந்து பத்திரிகைகளுக்கு ஒரு ஆடியோ டேப் வந்தது. அதில் ஒடிசா அரசின் செயல்பாடுகள் சரியில்லை. அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே மக்கள் மன்றம் முன்பாக எ ம்.எல்.ஏ. ஹிகாகாவின் தலைவிதி தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி மாவோயிஸ்டுகளின் வழக்குகளை நடத்தி வரும் வக்கீல் நிஹார் ரஞ்சன் பட்நாயக் கூறுகையில், மாவோயிஸ்டுகள் குறிப்பிட்டுள்ள மக்கள் மன்றம் அநேகமாக இன்று கூடலாம் என எதி� ��்பார்க்கப்படுகிறது. ஆனால், எந்த இடம், எப்போது என்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கோராபுட் மாவட்டத்தில் நாராயன்பத்னா பகுதியில் காட்டுப்பகுதியில் வைத்து மக்கள் மன்றத்தில் எம்.எல்.ஏ. நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இனி மக்கள் மன்றமே அவர் வித� ��யை தீர்மானிக்கும் என வழக்குரைஞர் நிஹார் ரஞ்சன் பட்நாயக் தெரிவித்தார். இருந்தபோதும் எம்.எல்.ஏ மீதான மக்கள் மன்றத்தில் எந்த விதமான தீர்ப்பு வழங்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் தனக்கு தெரியாது என அவர் மேலும் தெரிவித்தார்.






comments | | Read More...

அரவிந்த் சாமியின் தங்கை நடிக்கும் 'மதில் மேல் பூனை'




ரோஜா, பம்பாய் போன்ற படங்களில் நாயக� ��ாக நடித்த அரவிந்த் சாமியின் தங்கை விபா 'மதில் மேல் பூனை' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது இப்படத்தின் இயக்குனர் பரணி ஜெயபால் கூறியதாவது:

வளரும் சிறுவர்களுக்கு நல்ல பெற்றோரும், நல்ல ஆசிரியர்களும் அமைந்து விட்டால் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதில் ஏதேனும் ஒன்று தவறினால் அதன் விளைவு என்ன என்பத� �த்தான் இப்படத்தின் கதையாக்கி இருக்கிறோம்.

படத்தின் இடைவேளைக்கு முன்னால் வரும் 20 நிமிடக் காட்சியை ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு அமைத்திருக்கிறோம். சிறுவர்கள் வாழ்க்கை, காதலர்கள் வாழ்க்கை என இரண்டு தளங ்களில் பயணிக்கும் கதை இடைவேளையில் ஒன்றாக சந்திக்கின்றன. அப்போது பிரச்சினை எழுகிறது. அதன் முடிவு என்ன என்பதை படத்தின் இரண்டாம் பகுதி சொல்லும்.

இப்படத்தின் நாயகனாக விஜய் வசந்த, நாயகியாக புதுமுகம் விபா நடித்திருக்கின்றனர். தம்பி ராமையா காமெடி பகுதியை பார்த்துக் கொள்கிறார்.

பரமக்குடி, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு கள் நடைபெற்றுள்ளன. இது ஓர் ஆக்ஷன், திரில்லர் படமாகும். ரேணிகுண்டா படத்தின் இசையமைப்பாளரான கணேஷ் ராகவேந்திரா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்றார்.

இப்படத்தின் நாயகி விபா கூறியதாவது;

நான் சென்னை பொண்ணு. மாடலிங் பண்ணிட்டிருக்கும் போது கன்னடத்துல 'ஆட்டா' என்ற பட� �் பண்ணினேன். தமிழ்ல இதுதான் எனக்கு முதல் படம். எனது பெரியம்மா மகன் அரவிந்த் சாமி. அதாவது என் அண்ணன்தான் அரவிந்த் சாமி. ''நல்ல படமா பார்த்து பண்ணு. அதுவும் ஹார்ட் வொர்க் பண்ணு''ன்னு அண்ணன் சொ� �்னார்.

இப்படத்துல நான் ஒரு போல்டான ஹீரோயினா நடிச்சிருக்கேன். ஸ்டண்ட்டும் பண்ணியிருக்கேன். கேரளாவிலுள்ள அடர்ந்த காட்டில் ஒன்றரை மாசம் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த அனுபவமே ரொம்ப த்ரில்லிங்கா இருந்தது என்றார்.

இப்படத்தின் இசையமைப்பாளரான கணேஷ் ராகவேந்திரா கூறியதாவது:

இப்படத்துல மொத்தம் 5 பாடல்கள். அதுல இன்டர்வெல் பிளாக்ல ஒரு பாடல் வரும். அதை கவிஞர் தாமரை எழுதியிருக்காங்க. அந்த பாட்டு இப்படத்தின் கதைக்கே உயிர்நாடி. சென்னை பத்தி ஒரு பாட்டு இருக்கு. இதை புதுமுக கவிஞர் அன்சரா பாஸ்கர் எழுதியிருக்கார். இப்பாடலை நடிகர் சிம்பு ப� ��டியிருப்பது இதன் ஹைலைட். படத்தின் இரண்டாம் பாதியில் இரண்டு, மூன்று காடசிகளில் மட்டுமே டயலாக் இருக்கும். மீதமுள்ள காடசிகளை எல்லாம் ரீ ரிக்காடிங் இசையால் நகர்த்தியிருக்கிறோம்.

விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது என்றார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger