Friday, 13 September 2013
விஜய்யின் 'ஜில்லா' ஷூட்டிங் 'திடீர்' நிறுத்தம், மோகன்லால் உடல்நிலை காரணமாக!
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாததால் விஜய்யின் ஜில்லா படத்தின் ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட்டுள்ளது.
தலைவா சர்ச்சைகளையெல்லாம் தாண்டி விஜய் குஷி மூடில் நடித்து வரும் படம் தான் ஜில்லா.
இந்தப்படத்தில் விஜய்யுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் ஒரு முக்கியமான கேரக்டரின் இணைந்து நடித்து வருகிறார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து வரும் இந்தப்படத்தை நேசன் டைரக்ட் செய்து வருகிறார்.
விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க அவர்களுடம் ரவி மரியா மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் மற்றும்பலர் நடித்து வருகின்றனர்.
இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இதில் மோகன்லாலும் படத்தின் வில்லனான ரவி மரியாவும் மோதிக்கொள்ளும் காட்சிகள் படமாக்க திட்டமிட்டிருந்தார்கள்.
ஆனால் திடீரென நடிகர் மோகன்லாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் தற்போது ஜில்லா படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் கிடைத்திருக்கும் கால்ஷீட்டுகளை சும்மா விடக்கூடாது என்று அந்த கேப்பில் சென்னையில் விஜய்யின் ஆக்ஷன் சீன்களை எடுக்க முடிவெடுத்திருக்கிறாராம் டைரக்டர் நேசன்.
Show commentsOpen link