அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு: விக்கிரமராஜா தலைமையில் டெல்லியில் நூதன ஆர்ப்பாட்டம் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு: விக்கிரமராஜா தலைமையில் டெல்லியில் நூதன ஆர்ப்பாட்டம்
புதுடெல்லி, செப். 28-
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வணிகர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி அகில இந்திய வணிகர் சம்மேளன நிர்வாகிகளின் அவசர கூட்டம் தேசிய தலைவர் பார்ட்டியா தலைமையில் டெல்லியில் நடந்தது. இதில் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலை வர் ஏ.எம். விக்கிரமராஜா, மாநில பொதுச் செயலாளர் கே.மோகன், மற்றும் டெல்லி, உ.பி., சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், அரியானா, குஜராத், ஒரிசா, உள்பட பல்வேறு மாநில வணிக தலைவர்கள் பங்கேற்றனர். பின்னர் அனைத்து மாநில தலைவர்கள் ஒன்று திரண்டு டெல்லி ஜந்தர்மந்தரில் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கைகளில் விலங்கிட்டு வாயில் கறுப்பு துணி கட்டி நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு பேரமைப் பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.பொதுச் செயலாளர் மோகன், டெல்லி பிரதிநிதி சிவக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய தலைவர் ஏ.பி.பரதன், பங்கேற்று பேசினார். கூட்டத்தில் நாடு தழுவிய அளவில் அடுத்து நடைபெறும் போராட்டங்களை தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் அறிவித்தார். * அக்டோபர் 1 முதல் 15-ந்தேதிவரை முதல்-அமைச் சர், கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்களை சந்தித்து முறையிடுவது. * அக்டோபர் 2-ந் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து காந்தி சிலை முன்பு அமர்ந்து பிரார்த்தனை செய்வது. * அக்டோபர் 23-ந்தேதி உருவ பொம்மை எரிப்பது. * நவம்பர் மாதம் முழுவதும் தர்ணா, ஊர்வலம், பொதுக் கூட்டம் நடத்துவது. * பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது டெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடத்துவது உள்பட பல்வேறு தீà ��்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Post a Comment