சென்னை, செப்.29-
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு பெண் உள்பட 3 பேர் சென்னை விமான நிலையத்திற்கு கடந்த புதன்கிழமை இரவு கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் வந்தனர்.
நாகாய் ஷின்சுகே (45), உன்டோஸ் யோகோ (49), வடரிடா மாகுலா (61) என்ற அந்த 3 பேரும் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க இடிந்தகரைக்கு செல்வதற்காக வந்துள்ளதாக மத்திய உளவுத்துறை மூலம் விமான நிலைய குடியுரிமை பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அந்த 3 பேரிடமும் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் வந்த ஒரு மணி நேரத்திற்குள் இரவு 7 மணி அளவில் வேறு விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஏற்கனவே ஜெர்மன் நாட்டை சேர்ந்த சொன்டெக் ரெய்னர் ஹெர்மான் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் தொடர்புள்ளவராக கண்டுபிடிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment