News Update :
Powered by Blogger.

பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களை காக்க அதிநவீன ஆயுதம்

Penulis : Tamil on Wednesday, 7 August 2013 | 21:33

Wednesday, 7 August 2013

இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள், கற்பழிப்புகள், மானபங்கப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றுக்கு எதிராக சட்டங்கள் பல கொண்டு வந்தும், இந்த சமூகக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியவில்லை. இந்தக் கொடுமையே பெண்களுக்கு நேராமல் தடுப்பதற்கு ஏற்ற வகையில் ஒரு அதிநவீன ஆயுதம் ஒன்றை ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கி உள்ளது.

அசாம் மாநிலத்தில்தான் உலகிலேயே அதிக காரம் உள்ள மிளகாய் விளைவிக்கப்படுகிறது. இந்த மிளகாய்ச்சாறில் இருந்துதான் இந்த தெளிப்பான் (ஸ்பிரே) உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடக்கக்கூடிய தருணத்தில் இந்த தெளிப்பானை எதிர் தரப்பினர் மீது தெளிக்க ஆயுதமாகப் பயன்படுத்தலாம்.

டெல்லி மேல்-சபையில் ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்தபோது இந்த தகவலை ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி வெளியிட்டார். இந்த தெளிப்பான் சோதனைகளில் பயன்படுத்தப்பட்டபின்னர், டி.ஆர்.டி.ஓ. அமைப்பே இதை பிரபலப்படுத்தும் எனவும் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger