News Update :
Powered by Blogger.

என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல்: திருவண்ணாமலை மாணவர் தேவபிரசாத் முதல் இடம்- 32 பேர் 200க்கு 200 மார்க்

Penulis : karthik on Friday, 29 June 2012 | 23:55

Friday, 29 June 2012

இந்த வருடம் என்ஜினீயரிங் படிப்புக்காக 1 லட்சத்து 80 ஆயிரத்து 71 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவ- மாணவிகளுக்கான "ரேண்டம்" எண் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையிலான "ரேங்க்" பட்டியல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று வெளியிடப்பட்டது. இதில் திருவண்ணா மலையை சேர்ந்த மாணவர் தேவபிரசாத் முதலிடத்தை பிடித்துள்ளார், வேலூர் சிவகுமார் 2-வது இடம் பெற்றார் (பிற்படுத்தப்பட்டோர் வகுப்புக்கான ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்றுள்ளார்) திருச்சி கவுதம் 3 வது இடம் பெற்றார். (பிற்படுத்தப்பட்டோர் வகுப்புக்கான ஒதுக்கீட்டில் 2-வது இடம்) இவர்கள் உள்பட 32 பேர் 200க்கு 200 கட்-ஆப் மதிப் பெண் பெற்றுள்ளனர். தமிழக அரசு உயர் கல்வித்துறை செயலாளர் ஸ்ரீதர் இந்த ரேங்க் பட்டியலை வெளியிட்டார். அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் சண்முகவேல், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்திரியராஜ் , பேராசிரியர் சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். என்ஜினீயரிங் பட்டப் படிப்பில் சேரும் விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. பொது கவுன்சிலிங் 13-ந்தேதி தொடங்குகிறது. ரேங்க் பட்டியல் அடிப்படையில் மாணவர� ��கள் கவுன்சிலிங்குக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பித்த மாணவர்கள தங்கள் கவுன்சிலிங் தேதியை அண்ணா பல்கலைக் கழக இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டு விண்ணப்பித்த அனைவருக்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

comments | | Read More...

சிவசங்கர் மேனனின் இலங்கை பயணத்தில் நடந்தது என்ன?

இலங்கையில் தமிழர்களின் பூர்வீக பிரதேசமான வடக்கில் நிலத்தை ராணுவம் ஆக்கிரமித்திருப்பது, ராணுவ நடமாட்டத்தை குறைக்காதது, இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு காணபதில் முட்டுக்கட்டைகளை அகற்றாதது ஆகியவறை தொடர்பாக இந்தியாவின் அதிருப்தியை தேசிய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் தமது கொழும்பு பயணத்தின் போது வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சென்ற சிவசங்கர் மேனன் அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புகளின் போது இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண இந்திய தரப்பில் அதிகம் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும் சிவசங்கர் மேனன் சந்தித்தார். இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர் மேனன், அரசியல் நல்லிணக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது என்றார்.

comments | | Read More...

இளையராஜாவைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் ஒலிம்பிக்கில்...!

இசைஞானி இளையராஜாவைத் தொடர்ந்து இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறவுள்ளது.ஒரு சர்வதேச நிகழ்ச்சியில் இந்தியத் திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களின் இசை ஒரே நேரத்தில் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களும், குறிப்பாக தமிழ் ரசிகர்க� �் பெரும் குஷியடைந்துள்ளனர்.லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இசைஞானி இளையராஜா முன்பு இசையமைத்த ராம் லட்சுமண் திரைப்படத்தில் இடம் பெற்ற நான்தான் ஙொப்பண்டா என்ற பாடல் இடம் பெறுகிறது. இந்த நிலையில், தற்போது இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறுகிறது. திரைப்பட இயக்குநர் டேணி பாயில் தலைமையிலான விழாக் குழுவினர்தான் தொடக்க விழா நிகழ்ச்சிகளை இறுதி செய்து வருகின்றனர். இதே பாயில் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்திருந்தார். இதன் மூலம் ஆஸ்கர் விருதுகளையும் அவர் வென்றார். இந்த நிலையில் பாயிலுடன் மீண்டும் இணைந்துள்ளார் ரஹ்மான். ஒலிம்பிக் தொடக்க விழாவில் எந்த மாதிரியான பங்களிப்பை ரஹ்மான் தரவுள்ளார் என்பது தெரியவில்லை. இருப்பினும் ஏற்கனவே உருவாக்கிய பாடலாக இல்லாமல்,பிரத்யேகப் பாடலாக ரஹ்மான் உருவாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

comments | | Read More...

ஜே.பி.ஜே. நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவரா? இதைப் படியுங்கள்

ஜே.பி.ஜே. நிறுவனத்தில் நிலம் வாங்க பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் மனு அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஜே.பி.ஜே. சிட்டி டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்திற்கு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட இந்தியா முழுவதும் பல மாநிலங்களிலும் 120 கிளை நிற� �வனங்கள் உள்ளன. சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக ஜஸ்டின் தேவதாஸ் என்பவர் உள்ளார்.இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் 1/4 கிரவுண்டு, 1/2 கிரவுண்டு, 1 கிரவுண்டு, 2 கிரவுண்டு என்று இடங்களை சலுகை விலையில் விற்பனை செய்வதாக அறிவித்தது.இதை நம்பி தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மக்கள் பல கோடி ரூபாய் வரை பணம் முதலீடு செய்துள்ளதாக கூறப்� �டுகின்றது. இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள தலைமை அலுவலகம் திடீரென மூடப்பட்டது. மேலும் ஜே.பி.ஜே. நிறுவன அதிபர் ஜஸ்டின் தேவதாஸ் மோசடி வழக்கில் பெங்களூரில் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இந்த நிலையில் ஜே.பி.ஜே. நிறுவனர் ஜஸ்டின் தேவதாஸ் ரூ.1,000 கோடி வரை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் சுமார் 60 பேர் புகார் கொடுத்தனர்.இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஜஸ்டின் தேவதாஸ் உள்ப� �� அவரது ரியல் எஸ்டேட் நிறுவன அதிகாரிகள் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.புகார்களின் எண்ணிக்கை அதிகமானதால் இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி டி.ஜி.பி. ராமானுஜம் உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.இந்த நிலையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பத� �வது,ஜே.பி.ஜே., சிட்டி டெவெலப்பர்ஸ் நிறுவனத்தினர் அதிக எண்ணிக்கையில் வீட்டு மனைகளை உருவாக்கி விற்பனை செய்ததில் முறைகேடுகள் நடந்தது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. வீட்டு மனை வாங்க, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்ப கிடைக்காதவர்கள் சென்னை, அண்ணா நகர், இரண்டாவது அவென்யூ, சி-48 என்ற முகவரியில் உள்ள வீட்டுவசதி வாரிய கட்டடத்தில் செயல்படும், பொருளாதார குற ்றப்பிரிவு அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன், அடுத்த ஒரு வாரத்திற்குள் நேரில் ஆஜராகலாம் என்று அவர் அதில் தெரிவி்த்துள்ளார்.

comments | | Read More...

நெல்லை பல்கலைக்கழகத்தில் ஆண்டாள் பற்றிய சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆண்டாள் பற்றிய சர்ச்சைக்குரிய பாடம் நீக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகங்களில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஒரு ஆண்டிற்கு முன்பே பாடக்குழு கூடி அனைத்து கல்வியாளர்கள் மற்றும் பதிப்பகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரைகளை பரீசிலித்து பாடத்திட்டத ்தில் சேர்க்க வேண்டும்.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2012-13ம் கல்வியாணடில் முதலாம் பருவத்திற்கு பாடங்கள் மாற்றப்பட்டுள்ளன. பல்கலைக்கழக இணையதளத்தில் பாடத்திட்டம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் தமிழ் பாடத்தில் ஆண்டாளை தேவதாசியாகவும், அவர் பெரியாழ்வாருக்கு திருட்டுத்தனமாக பிறந்ததாகவும், ஆண்டாள் மீது மன்னர் வல்லபதேவன் மோகம் கொண்டு பரிசுகள� � அனுப்பியதாகவும் சிறுகதை உள்ளது. மேலும் ஆபாச வர்ணனைகளும் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டது.இதையடுத்து தமிழக அரசும், உயர் கல்வித்துறையும் இந்த சர்சைக்குரிய பாடம் எப்படி இடம் பெற்றது என நெல்லை பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டன. இது மட்டுமல்லாது பல்வேறு தரப்பிடம் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. இதையடுத்து சர்சைக்குரிய பாடம் நீ்க்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக� ��் தெரிவித்துள்ளது.

comments | | Read More...

கார் விபத்தில் அமிதாப்பச்சன் இறந்ததாக இண்டர்நெட்டில் வதந்தி

கார் விபத்தில் இறந்ததாக அமிதாப்பச்சன் பற்றி வதந்தி பரவியுள்ளது.  இணைய தளங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன. இணைய தள செய்தியில் கூறி இருப்பதாவது:- இந்தி நடிகர் அமிதாப் பச்சன் அமெரிக்காவில் உள்ள மோரிஸ் டவுனுக்கும் ரோஸ் வெல்லுக்கும் இடையே காரில் சென்று கொண்டு இருந்தார். அந்த கார் அமிதாப்பச்சனின் நண்பருக்கு சொந்தமானதாகும். 95 கிலோ மீட்டர் வேகத்தில் � �து சென்று கொண்டு இருந்தது. அப்போது கார் திடீரென நிலை தடுமாறி ரோட்டின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. பல தடவை கார் உருண்டது. இந்த விபத்தில் காரில் இருந்த அமிதாப்பச்சன் அந்த இடத்திலேயே பலியானார். அவர் அணிந்திருந்த அடையாள அட்டையை வைத்து  அமிதாப்பச்சன் என போலீசார் உறுதி செய்தனர். இவ்வாறு அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த செய்தி சில நி மிடங்களிலேயே நூற்றுக் கணக்கான இணைய பக்கங்களில் பரவியது. அமிதாப்பச்சன் நலமாக இருக்கிறார் அவரைப் பற்றி வெளியான செய்திகள் வதந்திதான் என்று அமிதாப் தரப்பில் மறுக்கப்பட்டு உள்ளது. இந்த வதந்தியால் அமிதாப்பச்சன் குடும்பத்தினர் அதிர்ச்சியாகி உள்ளனர்.

comments | | Read More...

ஜெயலலிதா அந்தர் பல்ட்டி ;குடியரசுத் தலைவர் போட்டியிலிருந்து சங்மா விலக வேண்டும்

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து பி.ஏ.சங்மா விலக வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா விருப்பம் தெரிவித்துள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அவர் பாஜக மூத்த தலைவர் அத்வானியிடம் பேசியிருப்பதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.குடியரசுத் தலைவர் தேர்தலில் சங்மா போட்டியிடுவதாகவும் அவரைத் தாங்கள் ஆதரிப்பதாகவும் முதலில் அறிவித்தவர்கள் ஜெயலலிதாவும், ஒட� ��சா முதல்வர் நவீன் பட்நாயக்கும்தான். அதைத் தொடர்ந்து சங்மாவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியிலும் இருவரும் இறங்கினர்.ஆனால் அவர்களது முயற்சிக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு அத்தனையும் காங்கிரஸ் பக்கம் போய் விட்டது.அதேசமயம், அப்துல் கலாம் பெய� ��ை வைத்து மமதா பானர்ஜி திடீரென புதிய திருப்பத்தைக் கொண்டு வந்தார். ஆனால் அதற்கும் வரவேற்பு கிடைக்கவில்லை.இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய திருப்பம் ஏற்படும் போலத் தெரிகிறது. தான் ஆதரவளித்துள்ள சங்மா போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா விருப்பம் தெரிவித்துள்ளதாக புதிய பரபப்புச் செய்தி வெளியாகியுள்ளது.இதுதொடர்பாக நேற்று தன்னிடம் தொலை� �ேசியில் அத்வானியிடம் ஜெயலலிதா கூறுகையில், வேட்பு மனுவைத் தாக்கல் செய்து விட்டு பின்னர் சங்மா போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று தெரிவித்தாராம். இதைக் கேட்டு அத்வானி அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.இன்று சங்மா வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அப்போது ஜெயலலிதாவும் டெல்லியில் இருக்கும்படி கேட்டுக் கொள்வதற்காக ஜெயலலிதாவுக்குப் போன் செய்தபோதுதான் அத்வானிக்க ு இந்த அதிர்ச்சிச் செய்தியைக் கொடுத்தாராம் ஜெயலலிதா. மேலும் தான் டெல்லிக்கு வர முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறி விட்டாராம்.கொடநாடு எஸ்டேட்டில் தான் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும், ஒரு மாதத்திற்கு தன்னால் எங்கும் பயணம் செய்ய முடியாது என்றும் அத்வானியிடம் ஜெயலலிதா கூறியதாக தெரிகிறது.ஜெயலலிதாவின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதையடுத்து பாஜக தனது நிலை குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளது. அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனையில் அது இறங்கியுள்ளது.தேர்தல் முடிவதற்குள் இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் நடக்கப் போகுதோ, நாராயணா....!

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger