Thursday, 11 July 2013
இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன்
டென்னிஸ் தொடரில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை ஆடவர் ஒற்றையர்
இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர்
வீரரான ஆண்டி முர்ரே, செர்பியாவின் நோவக்
ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம்
வென்றார்.
இறுதிப் போட்டியில் முர்ரேயின் ஆட்டத்தைக்
காண ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் வாங்க
காத்திருந்தனர். அவர்களுக்காக விம்பிள்டன்
பார்க்கில் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில்,
அங்கு டிக்கெட்டுக்காக காத்திருந்த 34
வயது பெண்ணை, 30 வயது மதிக்கத்தக்க
ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக
கூறப்படுகிறது.
இதுதொடர்பாக புகாரின் அடிப்படையில் அந்த
வாலிபரை போலீசார்
கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர்
அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரிடம்
செப்டம்பர் மாதம் மீண்டும்
விசாரணை நடத்தப்படும்
என்று ஸ்காட்லாந்து யார்டு போலீசார்
தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட
பெண்ணுக்கு மருத்துவ
பரிசோதனை செய்யப்பட்டது.