Friday, 3 August 2012
லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச் சண்டையில் 69 கிலோ எடைப் பிரிவில் தகுதிச் சுற்றில் இந்தியாவின் விக� ��ஷ் கிருஷ்ணன் வெற்றி பெற்றதை சர்வதேச குத்துச் சண்டை சங்கம் திரும்பப் பெற்றதால் இந்தியாவின் பதக்க கனவு பறிபோனது.
ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் 69 கிலோ எடைப் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், அமெரிக்காவின் எர்ரால் ஸ்பென்சுடன் � �ோதினார்.
இப்போட்டியில் அமெரிக்க வீரரை 13-11 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி விகாஸ் கிருஷ்ணன் காலிறுதிக்கு தகுதிபெற்றார். 2011-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றவரான விகாஸ், செவாய்க்கிழமை நடக்க உள்ள காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் ஆண்ட்ரே சாம்கொவோவுடன் மோதுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் விகாஷ் கிருஷ்ணன் பெற்ற வெற்றியை திரும்பப் பெறுவதாக சர்வதேச குத்துச் சண்டை சங்கம் அறிவித்திருக்கிறது. மேலும் அமெரிக்காவின் எர்ரால் வென்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பதக்க வாய்ப்புகளில் ஒன்று பறிபோய்விட்டது.