அமெரிக்க தூதரகத்தை தாக்கிய வழக்கு: கைது செய்யப்பட்ட 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன் அமெரிக்க தூதரகத்தை தாக்கிய வழக்கு: கைது செய்யப்பட்ட 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை, செப்.29-
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட படத்தில், நபிகள் நாயகத்தை அவமதிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதை கண்டித்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பு கடந்த 14-ந் தேதி சிலர் போராட்டம் நடத்தினர்.
அப்போது, அமெரிக்க தூதரகத்தின் கண்ணாடிகள், கேமராக்கள் அடித்து உடைக்கப்பட்டது. இதுகுறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 15-ந் தேதி பலரை கைது செய்தனர்.
200-க்கும் மேற்பட்டவர்களை தேடி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, மேற்கு தாம்பரத்தை சேர்ந்த அப்துல்ரஹீம், அன்சாரி, யாக்கூப், ரஹமத்துல்லா, சேக்மொய்தீன், ஜமால் ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பொன்.கலையரசன்,மனுதாரர்கள் அப்துல்ரஹீம் உட்பட 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன். இந்த 6 பேரும் மதுரையில் தங்கியிருந்து, அங்குள் செசன்சு கோர்ட்டில் 10 நாட்களுக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என்று உத்தரவிட்டார்.
Post a Comment