News Update :
Powered by Blogger.

பிரணாப்முகர்ஜிக்கு எதிராக மேலும் 2 புகார்கள்: தேர்தல் ஆணையரிடம் சுப்பிரமணியசாமி மனு

Penulis : karthik on Saturday, 7 July 2012 | 22:40

Saturday, 7 July 2012


ஐக்கிய முற்போக்கு கூட்டணி  ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி,   ஆதாயம் தரும் பதவியான, இந்திய புள்ளியல் நிறுவன தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து அளிக்கப்பட்ட கடிதம் போலி என்ற  குற்றச்சாட்டு உள்ளது. 

அந்த கடிதத்தில் உள்ள பிரணாப் முகர்ஜியின் கையெழுத்து சர்ச்சையை ஏற்படுத் தி இருக்கிறது. இந்த சர்ச்சை ஓயாத நிலையில்,  பிரணாப்முகர்ஜிக்கு எதிராக புதிய குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. 

பிரணாப்முகர்ஜி, மேலும் 2 ஆதாயம் தரும் பதவிகளில் உள்ளார். அந்தப் பதவிகளை அவர் ராஜினாமா செய்ய வில்லை என்று புகார் கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர்  பி.ஏ. சங்மா சார்பாக  ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி உள்� �ட 3 பேர் கொண்ட குழு,  தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து  ஜனாதிபதி தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலர் மீது அதிருப்தி தெரிவித்து மனு அளித்தனர். 

மேலும், பிரணாப் முகர்ஜி ஆதாயம் தரும் 2 பதவிகளில் இன்னும் தொடர்வதாக இரண்டு தனித்தனி புகார் மனுக்களையும் அளித்தனர்.அந்த  மனுக்களில், ஜனாதிபதி வேட்பாளரான பிரணாப்முகர்ஜி, பிர்பும் என்ஜினீயரி� �்  மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி துணைத் தலைவரகாவும், ரவீந்திரநாத் பாரதி பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்ட  ரவீந்திர பாரதி சொசைட்டியின்  தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவை இரண்டும் ஆதாயம் தரும்  பதவிகள் ஆகும். 

இந்த பதவிகளை இன்னும் அவர் ராஜினாமா செய்ய வில்லை. இதன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கு றிப்பிடப்பட்டுள்ளது. 

இதுபற்றி, சுப்பிரமணிய சாமி கூறியதாவது:- 
பிரணாப் முகர்ஜி ஆதாயம் தரும் இரண்டு பதவிகளில் இருந்து வருகிறார்.  தேர்தல் நடத்தும் அதிகாரியின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. எனவே, தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து எங்களின் அதிருப்தியை தெரிவித்தோம். நாங்கள்  எ� �ுப்பியுள்ள பிரச்சினை மோசடி சம்பந்தப்பட்டது. அதாவது, மோசடி கையெழுத்து தொடர்பானது. வேட்பு மனுவில் மோசடி நடைபெற்றுள்ளதா? என்று தேர்தல் கமிஷன்  விசாரணை நடத்தி முடிவு செய்ய வேண்டும். நாங்கள் இப்போது அளித்துள்ள புதிய புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார். 

 

comments | | Read More...

மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழக்கு: அன்புமணிக்கு `பிடிவாரண்டு' சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு

மத்திய சுகாதார துறை முன்னாள் மந்திரி அன்புமணி. இவர் மீது மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தகுதியற்ற தனியார் மருத்துவ கல்லூரிக்கு அதிகார துஷ்பிரயோகம் செய்து அனுமதி அளித் ததாக  சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கில் அன்புமணி, தற்போது மத்திய அமைச்சரவை செயலகத்தில் துணை செயலாளராக இருக்கும் கே.வி.எஸ்.ராவ் (அன்புமணி பதவியில் இருந்த போது மத்திய சுகாதார துறை துணை செயலாளராக இருந்தார்), சுகாதார அமைச் சகத்தின் பிரிவு அலுவலர் சுதர்ஷனகுமார், சப்தர் ஜிங் மருத்துவமனை மருத்துவர்கள் ஜே.எஸ்.தூபியா, திபேந்திரகுமார், இந்தூர் இன்டெக்கில் மர ுத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைவர் சுரேஷ்சிங் பதோ ரியா, கல்லூரியின் முன்னாள் டீன் டோங்கியா, மருத்துவ கல்லூரி இயக்குனர் சக்சேனா, நிதின் கோத்வால், டாக்டர் பவன் பம்பானி ஆகியோருக்கு எதிராக கடந்த ஏப்ரல் 27-ந்தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

கே.வ� �.எஸ்.ராவ் அரசு உயர் பொறுப்பில் உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் கடந்த மே  மாதம் 16-ந்தேதி கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு அனுமதி அளித்து சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி தலவந்த்சிங் இந்த வழக்கு விசாரணையை ஜுலை 7-ந்தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தார். 

குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட அனைவரும் இன்று நடைபெறும் விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று அன்புமணி உள்பட 10 பேருக்கு சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது. இந்த வழக்கு இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அன்புமணி கோர்ட்டில் ஆஜராகவில்லை. 

இதைத் தொடர்ந்து நீதிபதி தலவந்த்சிங் அன்புமணிக்கு ஜாமீனில் வெளியே வரக் கூடிய பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். அதோடு வருகிற 20-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.




comments | | Read More...

'ரசிகர்கள் உணர்வே முக்கியம்': இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் ஹரிஹரன்!


தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பை மதித்து இலங்கை தலைநகர் கொழும்பில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் திட்டத்தை ரத்த ு செய்தார் பாடகர் ஹரிஹரன்.

இலங்கைக்கு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக இன்று சனிக்கிழமை பாடகர் ஹரிகரன் செல்வதாக இருந்தார்.

இதனை அறிந்ததும் உலகம் முழுவதும் உள்ள ஈழ ஆதரவாளர்களிடமிருந்தும், தமிழகத்தில் இருந்தும் பலத்த எதிர்ப்புக் குரல் எழுந்தது.

கொட்டும் மழையிலும் அவரது மும்பை வீட்டை தமிழ் உணர்வாளர்கள் முற்றுகையிட்டு, தமிழர்களுக்குப் பிடித்த பாடகரான ஹரிஹரன், தமிழர் விரோத நாட்டுக்கு பாடச் செல்லக் கூடாது என்று கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து ஹரிஹரன் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'எனது இசை உலகம் முழுவதும் அமைதியையும், அன்பையும் பரப்பி வருகிறது. இதில், ஏதாவது ஒரு விதத்தில் எனது ரசிகர்கள் மனது பாதிக்கப்படுமானால் இசையின் நோக்கத்திற்கு இழப்பு ஏற்பட்டுவிடும். அதனால்தான் எனது இலங்கை பயணத்தை ரத்து செய்துவிட்டேன்,' என்று கூறியுள்ளார்.


comments | | Read More...

தலை வழுக்கையா? ஸ்டெம் செல் சிகிச்சை செய்து முடி வளர்க்கலாம்


உலகம் முழுவதும் சராசரியாக 25 சதவீத ஆண்கள் 30 வயதுக்குள் வழுக்கை ஆகின்றனர். மற்றவர்கள் 60 வயதுக்குள் ஆகின்றனர். வயது மட்டுமின்றி பரம்பரை, அதிக வேலைச்சுமை, மன இறுக்கம், மன அழுத்தம� ��, சுற்றுச்சூழல் என பல காரணங்கள் தலை வழுக்கைக்குக் காரணிகளாவதாகக் கூறப்படுகிறது.
தலை வழுக்கை ஏற்பட்டாலே ஆண்களுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது. இதற்கு காரணம் முடி உதிர்ந்தாலே முழு அழகும் போய்விட்டது என்று கருதுவதுதான். இதனால்தான் கூந்தல் தைல விற்பனையில் அருவிபோல பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகி� �து. காலகாலமாக, வழுக்கை தலையில் முடி வளர்த்துப் பார்க்க உலகெங்கும் உள்ள அறிவியலாளர்கள் பெரிதும் முயன்று வருகின்றனர். தலை வழுக்கையானவர்கள் இனி கவலை வேண்டாம், ஸ்டெம் செல் சிகிச்சை செய்து முடி வளர்க்கலாம் என்று ஜப்பானிய பல்கலைகழக ஆராய்ச்சி ஒன்று நம்பிக்கை அளிக்கிறது.
ஸ்டெம்செல் உதவியுடன் வழுக்கை தலையில் � ��ுடி முளைக்க வைப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஜப்பானின் டோக்கியோ பல்கலையில் உள்ள சுஜி அறிவியல், தொழில்நுட்ப ஆய்வு மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். எலிகளை வைத்து தங்கள் ஆராய்ச்சியைத் தொடங்கிய அவர்கள் ஸ்டெம்செல்லில் இருந்து முடி வளர்ச்சிக்கு தேவையான ஃபோலிக்கிள் எனப்படும் வேதிப் பொருளை மட்டும் எடுத்து, வழுக்கை எலியின் தலையில் பொருத்திப் பார்த்ததில், ஆராய� �ச்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.
எலியின் தலையில் வழக்கம்போல முடி முளைப்பதாக ஆராய்ச்சி குழுவின் தலைவர் டகாஷி சுஜி கூறியுள்ளார். எனவே இனி வழுக்கை ஆகிவிட்டதே என்று கவலைவேண்டாம் ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் முடியை வளர்த்துக்கொள்ளலாம் என்று நம்பிக்கைத் தருகின்றனர் ஆய்வாளர்கள்.


comments | | Read More...

இனி 'குடிகார நாடு என்கிற தமிழ்நாடு' என்பதே பொருத்தமாக இருக்கும் - டாக்டர் ராமதாஸ்


தமிழகத்தை இனி குடிகார நாடு என்கிற தமிழ்நாடு என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும், என்றார் டாக்டர் ராமதாஸ்.

மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் பா.ம.க. சார்பில் வரும் 11-ம் தேதி நடக்கிறது. இப்போராட்டத்தை விளக்கி கூடுவாஞ்சேரி கூட்ரோடு பகுதியில் பா.ம.க. பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

இளைஞர்களை கெடுக்கும், இளம் விதவைகளை உருவாக்கும், விபத்துக்களை ஏற்படுத்தும், உழைக்கும் மக்களை சுரண்டும், தமிழ் மக்களை சீரழிக்கும் குடி மக்களை குடிகார மக்களாக்கும் அரசு மதுபான கடைகளுக்கு வருகிற 11 ந்தேதி பூட்டு போடும் போராட்டம் நடைபெற உள்ளது.

நாங்கள் மக்களை பற்றி கவலைபடுகிறோம். சாராயம் குடிக்க கூடாது என்று மக்கள் மத்தியில் சொல்கிறோம். இளைஞர்களிடத்தில் சொல்கிறோம். சாராய கடைகளை மூடு என்று சொல்கிறோம். அதற்காக போராட்டம் நடத்துகிறோம்.

சமூக பிரச்சினைகளுக்கான கூட்டம், வாழ்கின்ற சமூகத்தில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இளைஞர் பாதிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக பெண்கள் பாதிக்கப்படுகிறா� �்கள் என்ற கவலை கரிசனம் நமக்கு மட்டும்தான் உண்டு. வேறு யாருக்கும் இருக்காது. கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் ரூ. 18 ஆயிரம் கோடி, அடுத்த வருடத்திற்கு ஒரு இலக்கு வைத்துள்ளனர். 2013 ல் ரூ. 21 ஆயிரம் கோடிக்கு மேல் கிடைக்கும்.

தெரு தெருவாக சாராய கடைகளை திறந்து குடி மக்களாக ஆக்கி விட்டார்கள். தமிழகத்தையே சீரழித்து விட்டார்கள். தமிழ்நாட்டை குடிகார நாடு என்கிற தமிழ்நாடு என்றால்தான் இனி பொருத்தமாக இருக்கும்.

தமிழகத்தில் மது வெள்ளமாக ஓடுகிறது. அரசியல்வாதிகள் பணத்தில் மிதக்கிறார்கள். இந்த பிரச்சினையை தமிழ் நாட்டில் பா.ம.க. மட்டும்தான் எடுத்துச் சொல்கிறது. பா.ம.க. 1989 ல் உதயமானது. 2 மாதம் கழித்து அக்டோபர் 2 ந் தேதி காந்தி பிறந்த நாளன்று பெண்களை கொண்டு தமிழ்நாடு முழுவது� �் மது ஒழிப்பு போராட்டம் நடத்தினோம். நமது கட்சிக்கு சமூகத்தை பற்றிய கவலை இருக்கிறது.
பா.ம.க. சமூக இயக்கம். இளைஞர்களுக்கு வழி காட்டுவதைத் தொடர்ந்து 22 வருடமாக செய்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கு 13 வயது சிறுவன் கூட குடிக்கின்றான். சாராய கடைகளை இவர்கள் மூட மாட்டார்கள். நாம்தான் மூட வேண்டும். இளைஞர்களை கெடுக்கும், உழைக்கும் மக்களைச் சுரண்டும், தமிழ் மக்களை சீரழிக்கும், குடிமக்களை குடிகார மக்களாக்கும் அரசு மதுபான கடைகளுக்கு 11 ந்தேதி பூட்டு போடும் போராட்டம் அறவழியில் நடைபெற உள்ளது.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.


comments | | Read More...

'ஹலோ கலெக்டர் சாரா... சரக்கு வேணும்... கடை எப்ப திறப்பீங்க?'

மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்    

'ஹலோ கலெக்டர் சாரா... சரக்கு வேணும்... கடை எப்ப திறப்பீங்க?'




comments | | Read More...

லண்டனில் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை வாங்க இந்திய அரசு ஒப்பதம்


லண்டனில் மகாத்மா காந்தி இருந்தபோது எழுதிய கடிதங்கள் மற்றும் பயன்படுத்திய பொருட்களை வாங்க உலகின் பெரிய ஏல மையமான சொத்பியுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
 
இது குறித்து ஒப்பந்தம் கையெழுத்தானதால் வரும் ஜூலை 10-ம் தேதி நடக்கவிருந்த இந்த மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களின் ஏலம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
 
இந்த சேமிப்பில், மகாத்மா காந்தியின் ஆயிரக்கணக்கான கடிதங்கள் மற்றும் ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் அங்குள்ள புகைப்படங்கள் காந்திஜியின் நண்பரான ஹெர்மான் கல்லேன்பச் என்பவருடன் உள்ள முரண்பாடான உறவுகள் குறித்து காட்டுவதாக இருக்கிறது. இது வரலாறு குறித்து ஆராயும் ஆய்வாளர்களுக்கு முக்கிய ஆவணங்களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகி� ��து.
 
மத்திய கலாச்சார துறையை சேர்ந்த நிபுணர்கள் அங்கு சென்று நடத்திய ஆய்வில் இந்த தொகுப்புகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய அறிய அற்புத பொக்கிசங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
 
இந்த ஆவணங்கள் 500000 பவுண்ட்களிலிருந்து 700000 பவுண்டுகள் வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதை இந்திய அரசு வாங்கியுள்ளது என்ற செய்தி உறுதி செய்யப்படமுடியவில்லை.
 
காந்தி மற்றும் அவரது நண்பர் ஹெர்மான் கல்லேன்பச் இருவரிடையே உள்ள உறவை பற்றி இது முழுமையாக அறிய உதவுவதோடு காந்தியின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி அறிய அடிப்படையாக அமையும் என்றும் ஏல மையத்தினர் சொல்கிறார்கள்.
 
கடிதங்களை பொறுத்தவரை, மகாத்மா காந்தியின் முதலாவது மகன் ஹரிலால் எழுதிய உருக்கமான கடிதங்களும், ஹெர்மான் கல்லேன்பச் மற்றும் காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் உடனான நெருக்கமான நட்பு குறித்த கடிதங்களும் அடங்கும்.
 
மேலும் காந்தியின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் கடிதங்களும் இதில் அடங்கும். இங்குள்ள பதிவுகள் அனைத்தும் காந்தியின் வாழ்க்கையையும் மற்றும் அவரது உள்வட்ட நண்பர்களைப பற்றியும் அறிய உதவும் என்று ஏல மையத்தினர் தெரிவித்தனர்.



comments | | Read More...

ஒரே நாளில் ஹீரோவான 'ஈ'!!


ஹீரோ இறந்து ஈயாக மாறி எதிரிகளைப் பழிவாங்கும் ஒரு சாதாரண கதையை, மூக்கின் மீது விரல் வைக்கும் அளவுக்கு பிரமாண்டமாகவும், தொழில்நுட்ப நேர்த்தி குறையாமலும் தந்த ராஜமவுலிக்கு பாராட்டுக்களும் வசூலும் குவிகின்றன (மனிதர் இத்தனை வெற்றி கொடுத்தும் சாதாரண ஐ டென் காரில்தான் போகிறாராம்!)

தெலுங்கில் இந்தப் படம் ரூ 34 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. அங்கே கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்தால், இந்தப் படம் விற்பனைத் தொகையை இரண்டு மடங்காக திருப்பித் தந்துவிடு ம் நிலை உள்ளது.

தமிழில் நேரடிப் படமாகவே வெளியாகியுள்ளது. போட்டிக்கு வேறு படங்களும் இல்லை. சோலோ ரிலீஸ். பல அரங்குகளில் சகுனியையும் ஸ்பைடர்மேனையும் கூட தூக்கிவிட்டு நான் ஈயை வெளியிட்டுள்ளனர்.

படம் வெளியான வெள்ளிக்கிழமை தமிழகத்தின் அத்தனை அரங்குகளிலும் 99 சதவீத பார்வையாளர்கள் கூட்டம். சிறுவர்கள் ஆர்வம் காட்டுவதால், இனி குடும்பம் குடும்பமாக வர வாய்ப்பிருப்� �தால், நான் ஈயை வாங்கியவர்கள் முகமெல்லாம் சந்தோஷம்!

ஆக, ஒரேநாளில் ஹீரோவாகிவிட்டது ஈ!


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger