News Update :
Powered by Blogger.

கோபப்படுவது என் ஸ்டைல். லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல்: விஜயகாந்த் பேச்சு

Penulis : karthik on Thursday, 2 August 2012 | 23:18

Thursday, 2 August 2012






கோபப்படுவது தான் என் ஸ்டைல். லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல் என்று தேனியில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசின ார்.

தேனியில் தே.மு.தி.க., சார்பில், வறுமை ஒழிப்பு தின விழா நடந்தது. நாட்டுப்புற கி ராமிய கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கட்சி தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:

ஆட்சியில் உள்ளவர்கள் மக்கள் வரிப்பணத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்கள். நாங்கள் தொண்டர்களின் சொந்த பணத்தில் உதவிகள் செய்கிறோம். ஏழை மக்கள் வறுமையில் வாடும் போது, கொடநாட்டில் முதல்வர் ஓய்வெடுக்கிறார். வெறும் அறிக்கையில் ஆட்சி நடத்துகிறார்கள்.



கேரள மருத்துவ கழிவுகளை, குமுளியிலும்,பொள்ளாச்சியிலும் கொட்டுகின்றனர். இத� � கேட்க ஆள் கிடையாது. நான் ஆட்சிக்கு வந்தால் போலீசார் லஞ்சம் வாங்க முடியாது. படித்த போலீஸ் அதிகாரிகள், பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

முல்லை பெரியாறு அணை பிரச்னை தீர்க்கப்படாததால், 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக முதன்முதலில் போராடியவன் நான். தண்ணீர் கொள்ளை, கனிம வளம் கொள்ளை, எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம். விலைவாசி உயர்ந்துள்ளது.


ஐந்து லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளனர். இதில் ஒரு லட்சம் பேருக்காது வேலை கொடுக்க முடியுமா. விஜயகாந்த் கோபப்படுகிறான், என்று சொல்கிறார்கள். கோபப� ��படுவது தான் என் ஸ்டைல். லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல். கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும்.



விஜயகாந்த் எதற்கும் பயப்பட மாட்டான். எதிர்த்து பேசினால் என்ன செய்வீர்கள். சிறை செல்லவும் தயார். வருகிற எம்.பி., தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும். நில அபகரி� ��்பு என்று கைது செய்கிறீர்கள். நாளை இந்த சட்டம் உங்களுக்கும் திரும்பும். இதற்காக 2016 வரை காத்திருக்க வேண்டாம். 2014 ல் நாம் தனியாக ஆட்சியை பிடிப்போம். 16 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு குறித்து கலெக்டர் சகாயத்தின் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன. இவ்வாறு பேசினார்.











comments | | Read More...

'பில்லா 2' நஷ்ட கணக்கு...ஒரு கோடிகூட வசூலாகல்ல





அஜீத்தை 'க� �ங் ஆஃப் ஓபனிங்' என்பார்கள்  திரைப்பட விநியோகஸ்தர்கள். காரணம் அவரது படம் வெளியான முதல் வாரம் எந்த ஒரு திரையரங்கிலும் டிக்கெட் கிடைப்பது அரிது.

விநியோகஸ்தர்கள் முதல் வாரத்தில் கடகடவென கல்லாவை கட்டி விடுவார்கள் . 'பில்லா 2' விலும் நல்லா கட்டலாம் கல்லா என  நினைத்த விநியோகஸ்தர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறார்கள்.

தமிழகத்தில் இரண்டாம் நாள் முதலே பட வசூல் குறைய ஆரம்பித்தது. பார்வையாளர் மிகவும் குறைய ஆரம்பித்ததால், இப்போது பல தமிழக திரையரங்குகளில் 'நான் ஈ' கொடி கட்டி பறக்கிறது.

இப்போது 'பில்லா 2' படத்தின் வெளிநாட்டு வசூல் எவ்வளவு என்பது அதிகாரப்பூர்வமாக � �ெரியவந்துள்ளது.  அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒரு கோடி ரூபாய் கூட பில்லா 2 வசூல் செய்யவில்லை.

பிரிட்டனில் 'பில்லா 2' முதல்வாரம் ஈட்டிய தொகை ரூ 61.20 லட்சம். பிரிட்டன் மற்றும் அய ர்லாந்தில் 20 திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

அமெரிக்காவில் மிகவும் பிரம்மாண்டமாக 31 திரையரங்குகளில் இப்படத்தை வெளியி்ட்டனர். அங்கு முதல்வாரம் மொத்தம் 64 லட்சத்தை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது.

மூன்று வாரங்களில் அமெரிக்காவில் 90 லட்சம், பிரிட்டனில் 79 லட்சம் மட்டுமே வசூல் செய்து இருக்கிறது. இத்தகவல்களை, பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ் வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு உரிமையை வாங்கிய  விநியோகஸ்தருக்கு 'பில்லா 2' பெரும் நஷ்டத்தை ஏற்ப டுத்தி இருக்கிறது.







comments | | Read More...

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: புதுவை முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரத்துக்கு குற்றப்பத்திரிகை





புதுவை மாநில அமைச்சரவையில் கல்விதுறை அமைச்சராக இருந்தவர் கல்யாணசுந்தரம். இவர் கடந்த செப்டம்பர் மாதம் திண்டிவனத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தனிதேர்வில் ஆள்மாறாட்டம் செய்து எழுதியதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து முன்னாள் அமைச்சர் க ல்யாணசுந்தரம் மற்றும் அவருக்கு உதவிய 3 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். 

இந்த நிலையில் கல்யாணசுந்தரம் தலைமறவானார். பின்னர், சுப்ரீம் கோர்ட்டில் நிபந்தனை ஜாமீன் பெற்றார். இதற்கிடையே அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி நீக்கினார். தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட குற்றபிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். 

கல்யாணசுந்தரத்தின் கையெழுத்து பிரதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் தேர்வு எழுதியது கல்யாணசுந்தரம் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கல்யாணசுந்தரம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 

மனுவை விசாரித்த ஐகோர்ட்டு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யாவிட்டாலும் காப்பி அடித்து எழுதியதற்கான முகாந்திரம் இருப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 18-ந் தேதி விழுப்புரம் குற்றவியல் போலீசார் திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றபத்திரிகையை தாக்கல் செய்தன. 

இதனையடுத்து நீதிபதி சரிதா கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் ஆஜராக உத்தரவிட்டார். இதன்படி முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம், ஆசிரியர் ஆதவன், கல்விதுறை ஊழியர் ரஜினிகாந்த் ஆகியோர் திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அவர்களுக்கு குற்றபத்திரிகை நகல் வழங்கப்பட்டது.



























comments | | Read More...

சுஷில் குமார் பதவியேற்ற முதல் நாளிலேயே குண்டு வெடித்து 'வரவேற்ற' தீவிரவாதம்!





மத்திய உள்துறை அமைச்சராக சுஷில் குமார் ஷிண்டே பதவியேற்ற முதல் நாளிலேயே அவரை தீவிரவாதம் சொந்த மாநிலமான மகாராஷ� ��டிராவில் வைத்து வரவேற்றுள்ளது மத்திய அரசை அதிர வைத்துள்ளது.

நேற்றுதான் புதிய உள்துறை அமைச்சராக சுஷில் குமார் ஷிண்டே பதவியேற்றார். தனது பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே அவருக்கு பெரும் சோதனை ஏற்பட்டு விட்டது.

சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் புனே நகரில் நேற்று நடந்த அடுத்தடுத்த நான்கு வெடிகுண்டுச் சம்பவங்கள் மத்திய அரசுக்கும், ஷிண்டேவுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத் தியுள்ளது.

அதிலும் குண்டுவெடிப்பு நடந்த இடமான பால் கந்தர்வ் தியேட்டருக்கு நேற்று மாலை வருவதாக இருந்தார் ஷிண்டே. ஆனால் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. அந்த இடத்தில்தான் ஒரு குண்டு வெடித்தது. இதனால் புனே நகரில் மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகளு� ��், உளவுத்துறையினரின் பணிகளும் பெரும் கேள்விக்குறிகளை ஏற்படுத்தியுள்ளன.

உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது தீவிரவாத தாக்குதல் சம்பவங்களை ஒடுக்க கடுமையாகப் போராடினார். அப்படி இருந்தும் அடுத்தடுத்து பெரும் பெரும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடக்கத் தவறவில்லை. இந்த நிலையில் புதிய உள்துறை அமைச்சர் பதவியேற்றுள் முதல் நாள ிலேயே அவரது சொந்த மாநிலத்தில் ஐந்து குண்டுகள் வெடித்திருப்பது, ஷிண்டேவுக்கு தீவிரவாதம் சவாலுடன் விடுத்துள்ள மிகப் பெரிய எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.








comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger