News Update :
Powered by Blogger.

அழகிரி ஆதரவாளர்கள் ஸ்டாலின் நிகழ்ச்சிகளை புறக்கணிதத்தின் பின்னணி

Penulis : karthik on Wednesday, 18 April 2012 | 23:07

Wednesday, 18 April 2012



தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரையில் கடந்த 15-ந்தேதி காலை தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தினார். அன்று மாலை மின் கட்டண உயர்வ� �� கண்டித்து தி.மு.க. பொதுக்கூட்டத்திலும் பேசினார். 

இந்த இரு நிகழ்ச்சிகளுக்கும் தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி, இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராம் தவிர மற்ற நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சிகளை மத்திய மந்திரியும், தென்மண்டல தி.மு.க. அமைப்புச்செயலாளருமான மு.க.அழகி� ��ியின் ஆலோசனையின்படி தி.மு.க. நிர்வாகிகள் புறக்கணிப்பு செய்ததாக தகவல் வெளியானது. 

இதனிடையே கட்சி நிர்வாகிகள் தி.மு.க. இளைஞர் அணி நேர்காணலுக்கு சென்ற பல இளைஞர்களை போகவிடாமல் தடுத்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் நகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் தி.மு.கவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத மதுரை நகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் அவைத்தலைவர் இசக்கிமுத்து, பொருளாளர் மிசா பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வி.கே.குருசாமி, தர்மலி� ��்கம், மன்னன், ஜெயராஜ் மாவட்ட துணைச்செயலாளர்கள் சிவக்குமார், உதயகுமார், சின்னம்மாள், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், பொன்சேது, ஒச்சுபாலு, கோபிநாதன், பாண்டிய ராஜன், முபாரக் மந்திரி, முருகன், ராமலிங்கம் ஆகிய 17 பேர்களுக்கு கட்சி மேலிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. 

அந்த நோட்டீசில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது ஏன்? இளைஞர் அணி நேர்காணலுக்கு சென்ற இளைஞர்கள் பலரை தடுத்தீர்களா? இது தொடர்பாக 7 நாட்களுக்குள் எழுத்து பூர்வமாக பதில் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இந்த நோட்டீசை பெற்ற தி.மு.க. நிர்வாகிக ள் 17 பேரும் தி.மு.க. தலைமைக்கு விளக்கம் அளிக்க முடிவு செய்துள்ளனர். மத்திய மந்திரி மு.க.அழகிரி நாளை (வெள்ளிக்கிழமை) மதுரை வருகிறார். அப்போது அவரிடம் இதுதொடர்பாக முறையிடவும் முடிவு செய்துள்ளனர். 

மு.க.அழகிரியின் ஆலோசனையை பெற்று நோட்டீசிற்கு பதில் அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித� ��தும் முடிவு செய்கிறார்கள். இதுதொடர்பாக தி.மு.க. பகுதி செயலாளர் ரவீந்திரன் கூறியதாவது:- 

பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகள் மதுரையில் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 10-ந்தேதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், மத்திய மந ்திரி மு.க.அழகிரி வெளிநாட்டில் இருக்கும் நேரத்தில் இளைஞர் அணி நேர்காணல் நிகழச்சியை மதுரையில் நடத்த வேண்டுமா? என்று கேட்டோம்.

கட்சி மேலிடம் தேதியை அறிவித்து விட்டது என்று மாவட்ட செயலாளர் தளபதி கூறினார். அப்படி என்றால் முறைப்படி மத்திய மந்திரி மு.க.அழகிரியின் பெயரை அழைப்பிதழில ் போட வேண்டும் என கேட்டோம். ஆனால் இரு நிகழச்சிகளிலும் மு.க.அழகிரியின் பெயர் போடப்படவில்லை. இது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. 

தென் மண்டல அமைப்பு செயலாளராகவும், மத்திய மந்திரியாகவும் பதவி வகித்து வரும் மு.க.அழகிரியின் பெயரை போடாததால் இரு நிகழ்ச்சிகளையும் புறக்கணிக்க வ ேண்டிய நிலை ஏற்பட்டது. நாங்கள் மட்டும் அல்ல மதுரை மாநகரில் உள்ள 72 வட்டக்கழக செயலாளர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள், இன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் யாருமே அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. 

தி.மு.க. ஒரு ஜனநாயக கட்சி. எந்த கட்சியிலும் உள்கட்சி பிரச்சினைகள் ஏற்படு வது சகஜம். இதனை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம். கட்சி மேலிடம் அனுப்பிய நோட்டீசிற்கு அண்ணன் மு.க.அழகிரியின் ஆலோசனைகளை பெற்று பதில் அளிக்க தயாராக இருக்கிறோம். 

இவ்வாறு அவர் கூறினார். 

அவ� �த்தலைவர் இசக்கி முத்து உள்பட நிர்வாகிகள் அனைவரும் இதே கருத்தை தெரிவித்ததுடன், கட்சி மேலிடம் அனுப்பிய நோட்டீசை சந்திக்க தயாராக இருப்பதாக கூறினர். இந்த விவகாரம் மதுரை மாநகர் தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







comments | | Read More...

செல்வராகவனின் இரண்டாம் உலகம் - முதல் பார்வை




மயக்கம் என்ன படத்துக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவன் உருவாக்கி வரும் இரண்டாம் உலகம் படத்தின் முதல் பார்வை� ��்கான படங்கள் வெளியாகியுள்ளன.

செல்வராகவன் - யுவன் - அரவிந்த் கிருஷ்ணா கூட்டணியாக இருந்தபோது உருவான ஐடியா இந்தப் படம். இவர்களின் 'ஒயிட் எலிபென்ட்' நிறுவனம் உடைந்து சிதறியதில், இந்தப் படம் உருவாவதும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது, கிட்டத்தட்ட 6 ஆண்டுகள்.

இந்தப் படத்தின் ஹீரோக்கள் தனுஷ், ராணா, அல்லு அர்ஜூன் என மாறிக்கொண்டே இருந்தார ்கள். கடைசியில் ஆர்யா -அனுஷ்கா என்பது உறுதியானது.

ஆரம்பத்தில் யுவன், பின்னர் ஜீவி பிரகாஷ், மீண்டும் யுவன், இப்போது ஹாரிஸ் ஜெயராஜ்... இசையமைப்பாளர்கள் மாறிய 'ஆர்டர்' இது.

ஒளிப்பதிவு ராம்ஜி. ஷுட்டிங் தொடங்குவதும் நிற்பதுமாக இதோ அதோ என இழுத்தடித்த ஒரு படம்.. இப்போது படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்கிறார்கள்.

ஸ்டில்களைப் பார்த்தால், ஒரு இனிமையான உணர்வு வருகிறது. படம் பார்க்கும்போது அந்த உணர்வு இருந்தால் நன்றாக இருக்கும்!



comments | | Read More...

சொத்து குவிப்பு வழக்கு: ஜெ., - சசி புதிய மனு தாக்கல்




முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்வழக்கில் தற்போது சசிகலாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை  சசிகலாவிடம் 504 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதற்காக தனக்கு கூடுதல் ஆவணங்கள் அரசு தரப்பில் தரப்பட வேண்டுமென்று சசிகலா கோரியிருந்தார்.



இந்த கோரிக்கையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வாக்குவாதங்களை கேட்டபின் ஆவணங்களை தர இயலாது என தீர்ப்பளித்து சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்றைய விசாரணைக்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆஜரானார்கள் சசிகலா, ஜெயலலிதா சார்பில்  புதிய மனு ஒன்று இன்று தாக்கல் செய் யப்பட்டது.

அந்த மனுவில் ஆவணங்கள் படித்து பார்க்கவாவது தங்களுக்கு அனுமதி வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டிருந்தது. அதனால் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அரசு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி மல்லிகார்ஜூனையா இதன் மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று கூறி இந்த வழக்கின் விசாரணையும் நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.



comments | | Read More...

உலக அரங்கில் அதிகாரமிக்க தலைவர்கள் வரிசையில் மம்தா பானர்ஜி




உலக அரங்கில் 2012-ம் ஆண்டில் அதி� �ாரமிக்க 100 தலைவர்களின் பெயர்களை 'டைம் இதழ்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்காவைச் சேர்ந ்த அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்க நாட்டின் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் தொழிலதிபர் வாரன் பப்பெட் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளன.

இந்தப்பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இடம்பெற்றுள்ளார். மம்தா பானர்ஜி தவிர அட்வோகேட் அஞ்சலி கோபாலன் பெயரும் இதில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசு நூலகம், மற்றும் அரசு உதவி பெரும் நூலகங்களில் குறிப்பிட்ட நாளிதழ்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவது மற்றும் முதல்வர் குறித்தான கார்� ��்டூன் வெளியிட்ட பேராசிரியர் கைது போன்ற செயல்கள் விமர்சனத்திற்கு உள்ளாகிவரும் நிலையில் இச்செய்தி வந்துள்ளது குறிபிடத்தக்கது.

மேலும் டைம் இதழ் மம்தா பல ஆண்டுகளாக போராடி தன்னை வலிமைமிக்க அரசியல்வாதியாக உலகிற்கு காட்டியுள்ளார் எனவும் புகழாரம்  சூட்டியுள்ளது.

கடந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் இடதுசாரி கட்சியை வீழ்த்தி தனிப்பெரும்பான்யுடன் ஆட்சியை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பெரும் சவாலாகவும் உள்ளார்.



comments | | Read More...

கெடு முடிந்த நிலையில் மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை ஏற்க ஒடிசா அரசு சம்மதம்




ஒடிசா மாநிலத்தில் கடந்� � மார்ச் மாதம் 24-ந் தேதி ஆளும் பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். எம்.எல்.ஏ.வை விடுவிக்க வேண்டுமானால், சிறையில் உள்ள மாவோயிஸ்டுகள் மற்றும் ஆதரவாளர்கள் 29 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் முதலில் நிபந்தனை விதித்தனர். பின்னர் அவர்களில் 13 பேர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்தனர்.
 
தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற மாவோயிஸ்டுகள் விதித்திருந்த கெடு இன்று மாலை 5 மணியுடன் முடிந்தது. தங்களுக்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்த நிலையில், மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை நிறைவேற்ற ஒடிசா அரசு தற்போது சம்மதம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் இன்று மாலை கெடு முடிவடைந்த நேரத்தில், மாவோயிஸ்டுகள் பத்திரிகையாள� �்களுக்கு அனுப்பிய தகவலில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வின் விதி நாளை மக்கள் நீதிமன்றத்தில் நிர்ணயிக்கப்படும் என  தெரிவித்திருந்தனர்.
 
கடத்தப்பட்ட எம்.எல்.ஏ எப்போது மீட்கப்படுவார் என்ற கேள்வியும், மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை ஏற்று 55 போலீசாரை கொன்ற தீவிரவாதியை ஒடிசா அரசு விடுவித்து விடுமோ என்ற எண்ணமும் ஒடிசாவில் பெரும் எதிர்பார்ப்புக� ��ை ஏற்படுத்தியுள்ளன.



comments | | Read More...

நடிகை மீனாவுக்கு விஜய் அழைப்பு




நடிகை மீனாவுக்கு கடந்த 2009-ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் அவர் சினிமாவில் நடிக்கவில்லை. 2011-ல் பெண் குழ ந்தை பிறந்தது. குழந்தைக்கு நைனிகா என்று பெயர் சூட்டினார். பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க மீனாவை அணுகினர். அவர் மறுத்து விட்டார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். சட்டம் ஒரு இருட்டறை படத்தில் அக்கா வேடத்தில் நடிக்க மீனாவுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தை விஜயகாந்தை வைத்து எஸ்.ஏ. சந்திசேகரன் இயக்கி இருந்தார். அது தற்போது ரீமேக் செய்யப்படுகிறது. விஜயின் அப்பாவான எஸ்.ஏ. சந்திசேகரன் இப்படத்தை தயாரிக்கிறார். இதில் கதாநாயகனின் அக்கா வேடத்துக்கு பலரை பரிசீலித்தனர். இறுதியில் மீனா பொருத்தமாக இருப்பார் எ ன்று அழைத்துள்ளனர். இதில் மீனா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.




comments | | Read More...

சென்னையில் கூடுதலாக 30 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்




சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று காலை மேயர் சை� �ை துரைசாமி தலைமையில் நடந்தது. துணை மேயர் பெஞ்சமின், கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
 
சுபாஷ் சந்திரபோஸ் (தி.மு.க.):- சென்னையில் பரவி வரும் பன்றிக்காய்ச்சலை தடுக்க மாநகராட்சி என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது?
 
மேயர் சைதை துரைசாமி:- பன்றிக்காய்ச்சல் பரவும் முறை, இதற்கான அறிகுறிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 120 பள்ளி, 8 கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளது. தற்போது 28 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியது கண்பிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் குணம் அடைந்து வருகிறார்கள். பொதுமக்கள் மஞ்சள், மிளகு, சோற்று கற்றாலை, பூண்டு, சிறிய வெங ்காயம் ஆகிய ஐந்தையும் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் எந்த நோயும் அண்டாது.
 
ஜானகிராமன் (அ.தி. மு.க.)- துரைப்பாக்கம் பகுதியில் குப்பைகளை லாரியில ் மூடாமல் எடுத்து செல்வதால் ரோட்டில் செல்லும் பொதுமக்கள் மீது விழுகிறது.
 
மேயர்:- அவ்வாறு செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
 
சுகுமார்பாபு (அ.தி.மு,க.)- 1 முதல் 12-ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வியை கட்டாயமாக கொண்டு வரவேண்டும்.
 
மேயர்:- இது முதல்வரின் கவனத்தில் உள்ளது. பரிசீலித்து முடிவு எடுப்பார்.
 
தமிழ்ச்செல்வன் (காங்):- மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வியுடன் இந்தியும் கற்று தர வேண்டும்.
 
மேயர்:- அரசின் கொள்கை முடிவுகள் பற்றி இங்கு பேச வேண்டாம்.
 
இதையடுத்து நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-
 
சென்னை பள்ளிகளில் ஏற்கனவே 69 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உயர்கல்விக்கு வசதியாக இத்� ��ிட்டத்தை மேலும் விரிவுபடுத்தி இந்த ஆண்டு கூடுதலாக 30 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும். சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் தொழில்வரி சீராய்வு செய்யப்பட்டு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி தொழில் வரி அரையாண்டுக்கு ரூ.100 முதல் ரூ.1,095 வரை வசூலிக்கப்படும். சென்னை மாநகரில் செயல்பட்டு வர� ��ம் நகை கடை மற்றும் பெட்ரோல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமிரா பொருத்தினால்தான் லைசென்சு புதுப்பிக்கப்படும். சரியாக பராமரிக்காத நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
விவாதத்தின்போது கடந்த மாநகராட்சி நிர்வாகத்தில் மாநகராட ்சி பள்ளிகளில் சென்னை பள்ளிகள் என்று மைனாரிட்டி தி.மு.க. அரசு பெயர் மாற்றம் செய்ததாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். இதற்கு தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் கண்ணிய குறைவாக பேசியதாக கூறி தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூச்சல் போட்டனர். அவர்களை மேயர் சமாதானப்படுத்தி அறிவுர� � வழங்கினார்.
 
அப்போது அவர் கூறும்போது, ''மன்ற விதி எல்லோருக்கும் பொதுவானது. தி.மு.க.வினர் திட்டமிட்டு காரணங்களை தேடிப்பிடித்து வெளிநடப்பு செய்கிறார்கள். நீங்களும் அவர்களை போல் நடந்துக் கொள்ளக்கூடாது. தி.மு..கவினர் கூறும் எந்த குற்றச்சாட்டுக்கும் என்னால் பதில் சொல்ல முடியும். ஆனால் மன்றம் அமைதியாக நடக்கக் கூடாது என்று தி.மு.க. வினர் த� �ட்டமிட்டு ஏதாவது செய்கிறார்கள். எனவே நீங்கள் கூட்டத்தில் அமைதியாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் எழுந்து நின்று பேசுவது இதுவே கடைசியாக இருக் கட்டும்'' என்றார்.




comments | | Read More...

புது வீடு கட்ட ரூ.85 லட்சம் கோரிய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்!



புதுவீடு கட்டுவதற்காக ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மத்திய அரசிடம் ரூ.85  லட்சம் கேட்டதாக அவர் மீது மேலும் ஒரு புகார் கிளம்பியுள்ளது. 

ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் 5 ஆண்டு பதவிக் காலம் வருகிற ஜூலை மாதம் 25-ம்  தேதியுடன் முடிவடைகிறது.
 
� ��ய்வு பெற்ற பிறகு பிரதிபா பாட்டீல், புனேவில் புதிய பங்களாவில் குடியேற முடிவு  செய்துள்ளார்.இதற்காக அவருக்கென பிரத்யேகமாக புதிய வீடு கட்டப்படுகிறது.இதற்காக   ராணுவ நிலத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தின் அளவு தொடர்பாகவும் சர்ச்சை எழுந்தது. 

அவருக� �கு விதிமுறைகளின்படி ஒதுக்கப்படவேண்டிய நிலத்தை விட, ஆறு மடங்கு  அதிகமாக ராணுவ நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தகவல் உரிமைச் சட்டத்தின்  கீழ் தெரிய வந்துது. 

இந்நிலையில் புதிய பங்களா கட்ட தனக்கு ரூ.85 லட்சம் அரசு பணத்தை தர வேண்டும்  என்று ப� ��ரதிபா பாட்டீல் மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதிய தகவலும் தற்போது தெரிய  வந்துள்ளது. 
 
ஆனால் பிரதிபாவின் இந்த கோரிக்கையை உள்துறை அமைச்சகம் அதை ஏற்கவில்லை.  ஓய்வு பெறும் ஜனாதிபதிக்கு வீடு கட்ட ரூ.20 லட்ச ம் மட்டுமே தர முடியும் என்று  கூறிவிட்டது. 

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஒருவருக்கு வீடு கட்டுவதற்காக மத்திய  அரசு பணம் கொடுப்பது இதுவே முதல் முறையாகும்.

பிரதிபா பாட்டீல் சர்க்கரை ஆலை உள்பட பல தொழிற்சாலைகள் வைத்துள்ளார்.  பணக்காரரான அவர் வீடு கட்ட மத்திய அரசிடம் பணம் கேட்டது பலருக்கும்  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜனாதிபதி பதவி வகித்தவர்களில் அரசு பணத்தை அதிக அளவில் செலவழித்தது  இவர்தான் என்று ஏற்கனவே பல தடவை சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.





comments | | Read More...

ஜெ ஆதரவு யாருக்கு... விஜய் அப்பாவுக்கா ? விஜயகாந்த் நண்பருக்கா?




குழம்பம், � �ோதல், பரபரப்பின் உச்சத்திலிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

பெப்சி Vs தயாரிப்பாளர்கள் என்று ஆரம்பித்த பிரச்சினை, இப்போது தயாரிப்பாளர்கள் Vs தயாரிப்பாளர்கள் என்று முட்டிக் கொண்டு நிற்கிறது. ஒருவேளை பெப்சியுடன் பேசுவைத் தவிர்க்க பேசி வைத்துக் கொண்டு மோதுகிறார்களோ என கமெண்ட் அடிக்கும் அளவுக்கு அரசியல் வாடை!

சினிமா தொழிலாளர் சம்பள விவகாரம் குறித்து பேசுவதில் பெப்சிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ஏற்பட்ட மோதல், புதிய தொழிலாளர் அமைப்பு ஒன்றை உருவாக்கும் அளவுக்குப் போனது. இத� ��ல் பெப்சியின் பக்கம் நின்ற அமீரைத்தான் முதலில் குறி வைத்தது தயாரிப்பாளர் சங்கம். அமீரும் பெப்சியும் அம்மாவிடம் முழுமையாக சரணடைந்து, நடந்த அனைத்தையும் கூறி காப்பாற்றுமாறு உருக, இந்தப் பிரச்சினையை கையாள தொழிலாளர் நலத்துறை மற்றும் அதன் அமைச்சருக்கு உத்தரவிட்டுவிட்டார்.

தொழிலாளர்களுக்கு விரோதமான தீர்வை ஆதரிக்க முடியாது என்று ஆரம்பத்திலேயே தமிழக அரசு உறுதியாக இருந்ததால், பெப்சியுடன் பேச தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. தமிழக அரசையும் ப கைத்துக் கொள்ள முடியவில்லை.

அதுவரை, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரனுக்கு இருந்த இமேஜ், அதிமு க அபிமானி, முதல்வருக்கு வேண்டப்பட்டவர் என்பது.

ஆனால் இவர் சங்கத் தலைவரானதிலிருந்து ஜெயலலிதாவைப் பார்க்க ஒருமுறை கூட அனுமதி கிடைக்கவில்லை. அட, ரூ 25 லட்சத்தை தானே புயல் நிவாரண நிதிக்குக் கொடுக்க நேரம் கேட்டு தவம் கிட ந்து பார்த்தார்கள். ஜெயலலிதா கண்டு கொள்ளவே இல்லை. பெப்சி பிரச்சினை குறித்து பேச ஜெயலலிதாவிடம் அப்பாயின்ட்மெண்ட் கேட்டனர் தயாரிப்பாளர்கள். ம்ஹூம்... அந்த நேரத்தில் ரஜினி, கமல், சூர்யா குட� ��ம்பம் என்று வரவழைத்துப் பார்த்துப் பேசினார்.

இதையெல்லாம் கவனித்து வந்த எதிர்த் தரப்புக்கு, எஸ் ஏ சந்திரசேகரன், அம்மா ஆட்சி க்கு வேண்டப்பட்டவர் அல்ல என்பது புரிந்துவிட்டது.

அப்போதுதான் அதிமுகவில் சேர்ந்தார் விஜயகாந்தின் முன்னாள் நண்பர் இப்ராகிம் ராவுத்தர். நேரடி கட்சிக்காரர் என்பதால் ராவுத்தருக்குதான் இப்போது முதல்வரின் ஆதரவு என்பதால், பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ராவுத்தர் அணிக்குப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.

ராவுத்தர் அணி சட்டவிரோதம் என்று எஸ்ஏ சந்திரசேகரன் கூறினாலும், அவர் பின்னால் எவ்வளவு தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. முதல்வர் மனநிலை புரிந்து நடந்து கொண்டால்தான் சினிமா தொழில் சிக்கலின்றிப் போகும் என்பதால், மற்ற தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்களாம்.

இப்போது எஸ்ஏ சந்திரசேகரன் பொதுக்குழு கூட்டுவதாக அறிவித்துள்ள நிலையில், எத்தனை தயாரிப்பாளர்கள் வருவார்கள், போலீஸ் பாதுகாப்பு கிடைக்குமா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன



comments | | Read More...

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்துவோம்- எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை




பெட்ரோல் மீதான கலால் வரியை (excise duty) மத்திய அரசு குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 10 வரை உயர்த்துவோம் என்று மத்திய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிறுவனத்தின் தலைவரான ஆர்.எஸ்.புடோலா கூறுகையில், ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ. 14.78 கலால் வரி விதிக்கப்படுகிறது. இதை நாங்கள் மத்திய அரசுக்கு செலுத்துகிறோம். இப்போது ஒ� ��ு லிட்டரை பெட்ரோல் விற்பதால் எங்களுக்கு ரூ. 8 முதல் ரூ. 10 வரை நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்துவிட்டாலும், டிசம்பர் மாதத்துக்குப் பின் பெட்ரோல் விலையை நாங்கள் உயர்த்தவில்லை (5 மாநில சட்டமன்றத் தேர்தல்களை மனத� �ல் வைத்தும், திரிணமூல் காங்கிரஸ்-திமுக மிரட்டலாலும் மத்திய அரசு விலையை உயர்த்த விடவில்லை). இதனால் ஒரு நாளைக்கு பெட்ரோல் விற்பனையால் மட்டும் எங்கள் நிறுவனத்துக்கு ரூ. 49 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

எங்களுக்கு ஏற்படும் இந்த இழப்பை மத்திய அரசு தர வேண்டும் அல்லது விலையை லிட்டருக்கு ரூ. 8 முதல் ரூ. 10 வரை உயர்த்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

இனியும் எங்களால் கடன் வாங்கி பெட்ரோலியத்தை இறக்குமதி செய்ய முடியாது என்றார்.

பெட்ரோல் விலையை உயர்த்த அனுமதிக்கிறார்களோ இல்லையோ, அதன் மீதான கலால் வரியை குறைக்கச் செய்யவே இந்தக் கருத்தை புடோலா தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

பெட்ரோல் தவிர டீசல், மண்ணெண்ணெய், சமையல் கேஸை குறைந்த விலைக்கு விற்பதால் மத்த ிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினந்தோறும் ரூ. 573 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டு சதி தான் '2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்': ராசா




தொலைத் தொடர்பு சேவையில் புதிய நிறுவனங்கள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக சில தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டு சதி தான் (telecom cartel's conspiracy) 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று முன்னாள் அமைச்சர் ராசா குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் ராசாவின் வழக்கறிஞர் சுஷில் குமார் கடந்த சில நாட்களாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் டி.எஸ்.மாத்தூரிடம் (இந்த வழக்கில் முக்கிய சாட்சியான இவர் ராசாவுக ்கு எதிராக வாக்குமூலம் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராசா கைது செய்யப்பட்டதற்கு 2011ம் ஆண்டில் சிபிஐயிடம் இவர் தந்த வாக்குமூலமும் முக்கிய காரணம்) குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.

இன்றும் தனது குறுக்கு விசாரணையைத் தொடர்ந்த சுஷில் குமார், ராசாவின் சார்பில் டி.எஸ்.மாத்தூரிடம் சில அதிரடி கேள்விகளை எழுப்பினார்.

ராசாவின் மீதான இந்த 2ஜி வழக்கே சில தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டு சதி தான் என்ற சுஷில் குமார், டி.எஸ்.மாத்தூரைப் பார்த்து, நீங்கள் Cellular Operators Association of India (COAI) அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள். (இந்த அமைப்பில் ஏர்டெல், வோடபோன், ஏர்செல் உள்ளிட்ட ஜிஎஸ்எம் செல்போன் நிறுவனங்கள் உள்ளன). நீங்கள் பதவியில் இருந்தபோது இந்த அமைப்பைச் சேர்ந்த செல்போன் நிறுவனங்களுக்கு 2ஜி லைசென்ஸ் தந்தபோது அதை நீங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், புதிதாக இந்தத் துறையில் காலடி எடு த்து வைக்கும் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் தரப்பட்டபோது மட்டும், அதற்கு எதிராக குறிப்புகளை எழுதினீர்கள் என்றார்.

ஆனால் இதை டி.எஸ்.மாத்தூர் மறுத்தார். அவர் கூறுகையில், நான் COAI அமைப்பில் உள்ள செ� �்போன் நிறுவனங்களுக்கு ஆதரவாக சாட்சியளிப்பதாகக் கூறுவது தவறு. ஏற்கனவே இந்தத் துறையில் உள்ள செல்போன் நிறுவனங்களுக்கு லைசென்ஸை தந்தபோது அதை நான் எதிர்க்கவில்லை என்பது உண்மை தான். காரணம், அப்போது மிகக் குறைவான விண்ணப்பங்களே வந்தன. இதனால் ஸ்பெக்ட்ரம் தட்டுப்பாடு என்ற பிரச்சனை யே எழவில்லை. ஆனால், புதிதாக இந்தத் துறையில் காலடி எடுத்து வைக்க பல நிறுவனங்களும் போட்டி போட ஆரம்பித்த பின்னர் தான் ஸ்பெக்ட்ரம் தட்டுப்பாடு குறித்து நான் எனது கருத்துக்களை பதிவு செய்தேன் என்றார்.

இதையடுத்துப் பேசிய ராசாவின் வழக்கறிஞர், ராசா மீது சிபிஐ விசாரணை தொடங்கி பல மாதங்கள் வரை மாத்தூர் அமைதி காத்தது ஏன்?. தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏற்பட்ட தொலைத் தொடர்பு ஒப்பந்தங்கள் தொடர்பாக விசாரித்த நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிஷன், அப்போதும் செயலாளராக இருந்த மாத்தூர் மீதும் குற்றம் சாட்டியுள்ளது என்றார்.

மேலும் சிபிஐ நெருக்கியதாலும், இந்த வழக்கில் சிபிஐ தன்னையும் குற்றவாளிப் பட்டியலில் சேர்த்துவிடும் என்று பயந்து தான் ராசாவுக்கு எதிராக மாத்தூர் வாக்குமூலம் அளித்து� �்ளார் என்றும் வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளையும் மாத்தூர் மறுத்தார்.

இந்த வழக்கில் 6 நிறுவனங்கள், 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் ராசா மற்றும் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரா தவிர அனைவரும் ஜாமீனி� ��் வெளியே வந்துவிட்டனர். பெகுராவுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ராசா இதுவரை ஜாமீனே கோரவில்லை.

ராசாவிடம் விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழு முடிவு:

இந் நிலையில் 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் ராசாவிடம் விரைவில் விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழு திட்டமிட்டுள்ளது.

இத் தகவலை 2ஜி குறித்து விசாரணை நடத்தி வரும் கூட்டுக் குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ தெரிவித்தார். மேலும் 2ஜி வழக்கு தொடர்பான விசாரணை முடிவடையாததால் குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger