News Update :
Powered by Blogger.

பாரதிராஜாவுக்கு காங்கிரஸ் அழைப்பு

Penulis : karthik on Sunday 22 January 2012 | 20:49

Sunday 22 January 2012

சென்னையில் நடந்த விழா ஒன்றில் இயக்குநர் பாரதிராஜா பேசும்போது , ''
நான் தீவிர காங்கிரஸ்காரன். காங்கிரஸுக்காக மேடையில் ஏறி தேர்தல்
பிரச்சாரம் செய்திருக்கிறேன். என் தாயின் நகைகளை விற்று காங்கிரஸுக்காக
என் தந்தை பாடுபட்டுள்ளார்.
நேரு போன்ற பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் இன்றுசோனியா தலைவராக
இருக்கிறார். இதனால் காங்கிரஸில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு.
அந்த கருத்து வேறுபாடு அப்பா- அம்மா , அண்ணன்-தம்பிக்கு இடையேயான கருத்து
வேறுபாட்டைப்போன்றது நான் கலைஞனாகவே இருக்கவிரும்புகிறேன் '' என்றார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசுகையில் ,
தமிழகத்தில் எந்த இயக்கத்திற்கும் காங்கிரஸ் சளைத்தது அல்ல. பெரியார்
பிரச்னையாகட்டும் , மீனவர் பிரச்னையாகட்டும் , அணுமின் நிலையமாகட்டும்.
தமிழக மக்களின் நலனுக்காக காங்கிரஸ் போராடும்.
பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும் , சுதர்சன நாச்சியப்பன்
எம்பியும் பாரதிராஜா போன்றவர்கள் காங்கிரஸில் இணைய வேண்டும் என அழைப்பு
விடுத்தனர்.
comments | | Read More...

1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, ஆசிரியர்களை நியமிக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தரம் உயர்த்தப்பட்ட 1,049 நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக, 1,267 பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, ஆசிரியர்களை நியமிக்க, முதல்வர்
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த பணியிடங்கள் இந்த ஆண்டுக்குள்
உருவாக்கப்படும். இந்த அறிவிப்பால், கிராமப்புற பள்ளிகளுக்கு,
ஆசிரியர்கள் அதிகளவில் நியமிக்கப்பட உள்ளனர்.
பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், புதிய
ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கவும் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து
நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பின், இதுவரை 55
ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள்
வெளியிடப்பட்டுள்ளன. இதில், 16,549 பகுதி நேர ஆசிரியர்களை தேர்வு
செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, தற்போது ஆசிரியர்கள் தேர்வு
செய்யப்பட்டு வருகின்றனர். மற்ற ஆசிரியர் பணியிடங்களை பொறுத்தவரை,
போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்களா அல்லது பதிவு மூப்பு
அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்களா என்பது இன்னும் இறுதி
செய்யப்படவில்லை. அவ்வாறு போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட்டாலும்,
இடைநிலைக் கல்வி சட்டப்படி, அந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி,
ஆசிரியராக நியமிக்கப்பட தகுதி பெற்றிருக்க வேண்டும்.
இது தொடர்பான பணிகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்கக்
கூடும். இந்நிலையில், இப்போது தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பு நேற்று
வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு காரணமாக, கிராமப்புற நடுநிலைப்
பள்ளிகளில் அதிகளவு ஆசிரியர்கள் இடம் பெற உள்ளனர். இது, கிராமப்புற
மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு : இந்த அரசு பதவியேற்ற பின்,
பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் அடிப்படையில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், 2009ம்
கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட, 831 நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா, ஒரு
ஆசிரியர்வீதம், 831 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கவும்,
2010-2011ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட, 218 நடுநிலைப்
பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு, இரண்டு ஆசிரியர்கள் வீதம், 436 ஆசிரியர்
பணியிடங்கள் என மொத்தம், 1,267 பணியிடங்களை புதிதாக உருவாக்க, முதல்வர்
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய பணியிடங்கள், இந்த கல்வியாண்டிலே
உருவாக்கப்பட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
வரவேற்பு : அரசு உத்தரவு குறித்து நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியன்
கூறும்போது, ""புதிதாக ஆசிரியர் நியமனம் தொடர்பான
அறிவிப்புகள்வரவேற்கத்தக்கது.
ஆனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய,
அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.""மத்திய அரசின்
விதிக்குட்பட்டு, தகுதித் தேர்வு நடத்தி ஆசிரியர்களை தேர்வு செய்வதா
அல்லது இப்போதைக்கு மாநிலத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும்
தேர்வு மட்டும் போதுமா என்பதில் முடிவு எடுக்கப்படவில்லை. இதில் விரைவில்
முடிவு எடுத்து, காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க
வேண்டும்,'' என்றார்.
மேஜை, நாற்காலிக்கு ரூ.36 கோடி :பள்ளிகளில் கட்டமைப்பு
வசதிகளைமேம்படுத்தும் நோக்கத்தில், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான சாய்வு மேஜை, நீள் இருக்கை,
மேஜை, நாற்காலி முதலான இருக்கை வசதிகளை ஏற்படுத்த, 36 கோடியே 17 லட்சம்
ரூபாய் ஒதுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது
comments | | Read More...

`கொலை வெறி’ பாடல் சிங்களர்களுக்கு எதிரானதா? இலங்கை பாராளுமன்றத்தில் காரசார விவாதம்

தனுஷ் எழுதி பாடிய ஒய்திஸ் கொலைவெறி பாடல் உலகம் முழுவதும் பரவியுள்ளது.
ஜப்பான், பாகிஸ்தான் நாட்டினர் இதை பாடுகின்றனர். இலங்கை
பாராளுமன்றத்தில் ஈழத் தமிழர்களை படுகொலை செய்த சிங்களர்களை மனதில்
வைத்து இப்பாடல் எழுதப்பட்டு உள்ளதாக காரசார விவாதம் நடந்தது.
இலங்கை பாராளுமன்றத்தில் ஊழியர் சகாய நிதியம் திருத்த சட்ட திருத்த மசோதா
மீதான விவாதத்தில் ஆளும் கட்சி எம்.பி.யான அஸ்வர் பங்கேற்று பேசும் போது
ஜே.வி.பி. கட்சி எம்.பி.க்களை பார்த்து `ஒய் திஸ்கொலை வெறி', `ஒய்திஸ்
கொலை வெறி' என்றார்.
பதிலுக்கு ஜே.வி.பி. கட்சி எம்.பி.க்கள் எமக்கு நோ கொலை வெறி என்றனர்.
தொடர்ந்து அஸ்வர்எம்.பி. பேசும் போது தமிழ் நாட்டுகாரர்களுக்கு கொலை வெறி
பிடித்துள்ளது. அதனால் தான் அவர்கள் கொலை வெறி, கொலை வெறி எனபாடலில் கூட
பாடுகின்றனர். எங்கள் மீது உள்ள கொலை வெறியில்தான் நம்மை பார்த்து இந்த
பாடலைபாடியுள்ளனர் என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய ஜோகராஜன் எம்.பி. ஒய் திஸ் கொலை வெறி
பாட்டுக்கு வேறு அர்த்தங்கள் உள்ளன. அஸ்வர் எம்.பி. தமிழகத்தவர்களுக்கு
உள்ள கொலை வெறியில் தான் இந்த பாடல் பாடப்பட்டதாக சொல்வது தவறு. நீங்கள்
பாடலுக்கு தவறான அர்த்தத்தை கற்பிக்க வேண்டாம் என்றார். ஆனால் அஸ்வர்
எம்.பி. குறுக்கிட்டு நான் சொல்வது தான் சரி எங்கள் மீது உள்ள கொலை
வெறியில் தான் இந்த பாடலை பாடி உள்ளனர் என்றார்.
comments | | Read More...

ஓட்டுத் துணி இல்லாமல் பூஜா காந்தி நடித்த படம்-பெங்களூரில் ஆர்ப்பாட்டம்!

தண்டுபாளையா என்ற கன்னடப் படத்தில் தனது முழு முதுகையும் துணி இல்லாமல்
காட்டி நடித்துள்ள நடிகை பூஜா காந்தியைக் கண்டித்து பெங்ளூரில் ,
திரைப்பட வர்த்தக சபை முன்பு கர்நாடக அம்பேத்கர் கிராந்தி சேனா என்ற
அமைப்பின் சார்பி்ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழில் கொக்கி , திருவண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா
காந்தி. தற்போது கன்னடத்தில் பிரபல நடிகையாக உள்ளார். சமீபத்தில்
தேவகவுடாவை ரோல் மாடலாக அறிவித்து அவரது மகன் குமாரசாமி தலைமையில் இயங்கி
வரும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அரசியலுக்கு வரும் முன்பு அவர் தண்டுபாளையா என்ற படத்தில் முக்கால்
நிர்வாணமாக நடித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சலசலப்பு
காரணமாகவே எதிர்ப்புகளிலிருந்து தப்பும் வகையில் அவர் கவுடா கட்சியில்
இணைந்தார் என்று பேசப்படுகிறது.
சீனிவாஸ் ராஜ் என்பவர் இயக்கி தயாரித்துள்ள தண்டுபாளையா படம்ஒரு ரவுடிக்
கும்பலின் கதையாகும். இதில் முதுகுப் பகுதி உள்ளிட்ட பின்பகுதிகள்
முழுவதும் அப்பட்டமாக தெரியும்வகையில் , முக்கால் நிர்வாணமாக
நடித்துள்ளார் பூஜா காந்தி. இப்படத்தில் தான் நடித்தது குறித்து முன்பு
பூஜா காந்தி கூறுகையில் , படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால் , அவ்வாறு
நடித்து உள்ளேன் , முதுகுபுறத்தை மட்டும் நிர்வாணமாக காட்டி உள்ளேன்.
முன்புறம் சேலையால் மறைக்க முயற்சி செய்து இருக்கிறேன் என்று
கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. அதில்
பின்பகுதி மட்டுமல்லாமல் , முன்பகுதியிலும் கூட எந்த டிரஸ்ஸையும்
பூஜாகாந்தி அணிந்திருப்பதாகத் தெரியவில்லை. மாறாக முன்புறமும் கூட அவர்
ஒட்டுத் துணியில்லாமல் இருப்பதாகவே தெரிகிறது. இது பெங்களூரில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கர்நாடக அம்பேத்கர்கிராந்தி சேனா என்ற
அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெங்களூர் திரைப்பட வர்த்தக சபை முன்பு கூடி
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
comments | | Read More...

70 வயது முதியவர் கோடீஸ்வரன் ஆனார்: கடனாக வாங்கிய லாட்டரிக்கு ரூ.1 கோடி பரிசு

கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆலுவாய் அருகே உள்ள கடங்கநல்லூரைச் சேர்ந்தவர்
அய்யப்பன். 70 வயது முதியவரான இவர் கடந்த 40 வருடங்களாக சவுண்டு சர்வீஸ்
நடத்தி வருகிறார்.
இவருக்கு குட்டி என்ற மனைவியும் , பாபு என்ற மகனும் , பிந்து , சிந்து
ஆகிய மகள்களும் உள்ளனர். வறுமையின் பிடியில் வாழ்க்கை நடத்தி வந்த
அய்யப்பனின் மகன் மற்றும் மகள்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
மூத்த மகள் பிந்துவுக்கு திருமண ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். ஆனால்
போதிய பணம் இல்லாததால் மாப்பிள்ளை வீட்டார் பிந்துவை திருமணம்
செய்யவில்லை. அய்யப்பனுக்கு சொந்தமான 2 1/2 சென்ட் நிலத்தில் ஒரு ஓலை
குடிசை வீட்டிலேயே அனைவரும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் கொண்ட அய்யப்பன்
கொச்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கடையில் இருந்து கேரள மாநில அரசின்
சிறப்பு குலுக்கலான ரூ. 1 கோடி பரிசு தொகை கொண்ட 5 லாட்டரி
சீட்டுகளைகடந்த 2 நாள்களுக்கு முன்பு வாங்கினார். அதற்குரிய பணத்தை அவர்
கொடுக்காமல் கடனாகவே வாங்கிச் சென்றார்.
இந்த லாட்டரி குலுக்கல் நேற்று நடந்தது. இதில் அய்யப்பன் வாங்கிய லாட்டரி
சீட்டு நம்பருக்கு ரூ. 1 கோடி பரிசு கிடைத்தது. அவர் வாங்கிய மற்ற 4
லாட்டரி சீட்டுகளுக்கும் ஆறுதல் பரிசான ரூ. 10 ஆயிரம் முதல் 40 ஆயிர வரை
கிடைத்தது.
இந்த தகவலை லாட்டரி விற்பனையாளர் சுரேஷ் அய்யப்பனிடம் தெரிவிக்க அவருடைய
வீட்டுக்குச் சென்றார். ஆனால் அவர் அங்கு இல்லை. பக்கத்தில் உள்ள கோவில்
திருவிழாவிற்காக மின்அலங்காரம் செய்து கொண்டிருந்தார். அவரை கண்டு
பிடித்து விஷயத்தை கூறியபோது ஆனந்த அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் தான்
கடனாக வாங்கிய லாட்டரி சீட்டுகளுக்கு பரிசு கிடைத்தது மகிழ்ச்சி
அளித்தாலும் , அதற்கு பணம் கொடுக்காததால் அந்த சீட்டுகள் சுரேசுக்கு
சொந்தமானது என்றார்.
ஆனால் சுரேஷ் அதை ஏற்கவில்லை. லாட்டரி சீட்டுகள் வைத்திருக்கும்
உங்களுக்கே பரிசு தொகை சொந்தமானது என்றார்.இதையடுத்து லாட்டரி
விற்பனையாளர் சுரேசின் நேர்மையை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள்.
comments | | Read More...

காதல் கசந்துவிட்டது: துறவியாகி விட்டேன்- நடிகை மல்லிகா ஷெராவத்

பிரபல நடிகை மல்லிகா ஷெராவத் ஆலிவுட்டில் பிரபலமானதை அடுத்து லாஸ்
ஏஞ்சல்ஸ் நகரில் நிரந்தரமாக தங்கிவிட்டார். தற்போது 2 இந்தி படங்களில்
நடிக்க மும்பை வந்துள்ளார். இருபடங்களிலும் ஹீரோ விவேக் ஒபராய்.
மும்பையில் மல்லிகா ஷெராவத் அளித்த பேட்டி வருமாறு:-
லாஸ்ஏஞ்சல்ஸ்சில் இருந்தாலும் மும்பையில் உள்ள எனது வீட்டில் இருப்பது
போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது. இங்கு என்னைப்பற்றி நிறைய வதந்திகள் உலா
வருகின்றன. நான் இப்போது நடித்து வரும் படங்கள் அவற்றுக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் தேவையில்லாத கற்பனைகளையும் தகர்த்து எறியும்.
மும்பை பட உலகில் நேர்மையை எதிர்பார்ப்பது கடினம். ஆலிவுட்டில் ,
சொந்தக்காரர்கள் என்பதற்காக தகுதி இல்லாதவர்களுக்கு ஒரு போதும் வாய்ப்பு
அளிக்கப்படுவதில்லை.
ஆலிவுட்டில் உள்ளவர்கள் என்னை அன்புடன் வரவேற்று மரியாதையுடன்
நடத்துகின்றனர். என்னைப் பொறுத்தவரை அனைத்து விஷயங்களும் சுதந்திரமாக
நடைபெற வேண்டும். இங்கு பெண்களுக்கு , அதிகளவில் வாய்ப்புகள்
கிடைப்பதில்லை. சுதந்திரமும் அளிக்கப்படுவதில்லை. ஆனால் அமெரிக்காவில்
பெண்களுக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்படுகிறது. ஒரு முறை அதிபர் ஒபாமாவை
சந்தித்த போது , அமெரிக்காவில் சுதந்திர உணர்வுக்கு
மதிப்பளிக்கப்படுவதாகவும் சுதந்திர உணர்வு மீது தான் அமெரிக்கா
கட்டப்பட்டுள்ளது.
நீங்களும் (இந்தியா) அதைதான் பின் பற்று கிறீர்கள். உங்களை நினைத்து
நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றார். நான் அமெரிக்காவில் போய் செட்டில்
ஆனதால் இங்கு எதையும் இழக்கவில்லை. அவ்வப்போது மும்பை வந்து கொண்டுதான்
இருக்கிறேன். சினிமா உலகம் என்னை புறக்கணித்து விட்டது என்று
கூறினார்கள். அது என்னை பாதிக்கவில்லை. இதை நினைத்து கவலைப்பட்டதே
கிடையாது.
ஆலிவுட் , பாலிவுட் என்று நான் பிரித்துப் பார்ப்பதில்லை. நல்ல கதையுடன்
யார் வந்து அணுகினாலும் அவர்கள் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வேன்.
பாம்புகளை முத்தமிட எனக்கு ரொம்ப பிடிக்கும். பாம்புகளை அதிகம்
நேசிக்கிறேன். இப்போது யாராவது காதலைப் பற்றி பேசினாலே , எரிச்சல் ,
எரிச்சலாக வருகிறது.
நான் இப்போது ஒரு பெண் துறவியாகிவிட்டேன். எனவே , காதல்பற்றி பேசுவதற்கு
ஒன்றுமில்லை. இப்போது , எனது கவனம் முழுவதையும் , தொழில் மீது மட்டுமே
செலுத்தி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
comments | | Read More...

சொன்னது உண்மையாகி போச்சுப்பா இப்போ ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது

கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு அமெரிக்காவில்
இருந்து பெற்று ஜெர்மனியை சேர்ந்த ஒருவர் மூலம் நிதி அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் வந்த பணத்தை தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள்சிலருக்கு வட்டிக்கு விட்டும் வருமானத்தைபெருங்கி தங்களை
வளப்படுத்திக்கொண்டனர் என்றும் தெரிய வந்திருக்கிறது. ரூ. 14 ஆயிரம் கோடி
செலவில் கூடன்குளம் அணுமின் நிலையத்தின் மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம்
உற்பத்தி செய்ய 8 யூனிட்டுகள் துவக்கப்பட்டன. பணிகள் அனைத்தும்
முடிவடைந்தவேளையில் இது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்ற
பீதியை உருவாக்கி உதயக்குமார் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு
வருகிறது. இதற்கு மாநில அரசின் உதவியையும் சிறுபான்மை சமூகம் என்பதால்
ஒரளவு பெற்று விட்டார். இதனால் இவர்கள் கூறியதை கேட்டு தமிழக அரசு மத்திய
அரசுக்கு மக்களின் அச்சம் நீங்கும் வரை இதனை திறக்க கூடாது என்றும்
கடிதம் எழுதியது. இதனை தொடர்ந்து போராட்டம் வலுப்பெற்ற காரணத்தினால்
மத்திய அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு, போராட்டக்காரர்களுடன்
பேச்சு நடத்தப்பட்டது. 3 முறை நடந்த இந்த பேச்சு தோல்வியில் முடிந்தது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அணுஉலையை பார்வையிட்டு, இது இந்திய
நாட்டுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும், எவ்வித பாதிப்பையும்
ஏற்படுத்தாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் சர்டிபிகேட் கொடுத்தார்.
இருப்பினும் இந்த பகுதியினர் எதிர்ப்பை கைவிடவில்லை.
இந்த போராட்டம் பல நாட்கள் தொடர்ந்து நடந்தது. இப்பகுதி கிராமத்தினர்
பணிக்கு கூட செல்லாமல் அணுமின்நிலைய வாசல் அருகே மேடை அமைத்து காத்து
கிடந்னர். போராடும் மக்களுக்கு சாப்பாடு முதல் படி காசு வரை செம கவனிப்பு
நடந்தது. ஒரு தனியார் போராட்டக்குழு இப்படி தொடர்ந்து போராட எங்கிருந்து
நிதி வருகிறது என்றும், இது வெளிநாட்டு பணமாக இருக்குமோ என்றும் மத்திய
அதிகாரிகளுக்குசந்தேகம் வலுத்தன.
இதனை தினமலர் நாளிதழ் கூட பல முறை செய்தியாக வெளியிட்டுள்ளது. மத்திய
அமைச்சர் நாராயணசாமி இந்த நிதி குறித்து ஆராய வருமான வரித்துறை
அதிகாரிகளிடம் பணித்துள்ளோம் என்றார்.
வட்டிக்கு விட்டு பிழைப்பு நடந்தது : இதன்படி கடந்த வாரம் வருமானவரி
மற்றும் உள்துறை மத்திய அதிகாரிகள் தூத்துக்குடி மற்றும் மதுரையில் உள்ள
தனியார் தொண்டு நிறுவனங்களில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில்
முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர், பின்னர் டில்லி சென்ற
குழுவினர் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை எதுவும் வெளியிடாமல்
இருந்தனர். இந்நிலையில் இந்த நிதி அமெரிக்காவில் இருந்து அனுப்பி
வைக்கப்பட்ட பணம் , ரெய்னா ஹெர்மான் என்ற ஜெர்மனியை சேர்ந்தவர் மூலம்
நிதி போராட்டக்காரர்களை சென்றடைவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பணம் கேரள
மீனவ சங்கங்கள் மூலம்தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வந்து பின்னர்
கூடன்குளம் போராட்டக்காரர்களுக்கு போய் சேர்ந்திருக்கிறது. இந்த பணத்தை
சிலர் வட்டிக்கும் விட்டு பிழைத்துள்ளனர். அணு ஆயுதத்தை பொறுத்தவரை
இந்தியா முன்னேறுவது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளான ஜெர்மன்,
பிரான்ஸ்சுக்கு பொறாமையாகத்தான் இருந்து வருகிறது. சமீபத்திய பொக்ரான்
அணு சோதனை மூலம் அமெரிக்கா இந்தியாவின் திறமையை கண்டு ஆச்சரியம்
அடைந்தது. இதனால் ரஷ்யா மூலம் இந்தியா கூடன்குளம் அணுமின் நிலைய துவக்கம்
இந்நாடுகளுக்கு மன நெருடலாகவே இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக
அமெரிக்கா தூண்டுதலின் பேரில் இந்த போராட்டம் வலுப்பெற்று இருக்குமோ என்ற
சந்தேகமும் எழுந்துள்ளது.
பீடி தொழிலாளர் மற்றும் மீனவர்கள் தங்களின் சொந்த காசை கொடுத்ததன் பேரில்
எங்கள் போராட்டம் நடந்து வருகிறது என உதயக்குமார் கூறி வந்தார்.
இந்நிலையில் மத்திய அரசின் ஆய்வில் தெரிய வந்திருப்பதால் தொண்டு
நிறுவனங்கள் மீதும் போராட்டக்காரர்கள் மீதும்
கேரளாவில் படித்தவர் உதயக்குமார்: போராட்டத்தை முன்னிறுத்தி நடத்திவரும்
உதயக்குமார் கேரள பல்கலை.,யில் பட்டம் பயின்றவர். இதனால் இவருக்கும்
இங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது.
ஜெர்மன் மூலம் வந்த நிதி கேரளாவுக்கு வந்தது, இந்த பணத்தை
போராட்டக்காரர்களிடம் ஒப்படைக்க கேரளத்தை சேர்ந்தவர்கள் அடிக்கடி
கூடன்குளம் வந்து போயுள்ளனர். வரும் 31 ம் தேதி மத்தியகுழுவினர் 4 ம்
கட்ட் பேச்சு நடத்தவுள்ளனர். இந்த பேச்சு வார்த்தையில் போராட்டக்குழுவில்
இடம் பெற்றுள்ள நிபுணர்களையும் அழைக்க வேண்டும் என உதயக்குமார்
வலியுறுத்தி வந்தார். இந்த குழுவினரும் கேரளாவில் இருந்து வந்த பணத்தை
பெற்றுள்ளனர், குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வரும் பணம் ஏழைகளுக்கு
உதவும் விதமாகத்தான் இருக்க வேண்டும். இதனை திரும்ப பெறுவதோ தொழில்
நடத்துவதோ சட்டப்படி குற்றம் ஆகும். ஆனால் வட்டிக்கு விட்டுள்ளனர்
என்பதுதான் கூடுதல் அதிர்ச்சி.
comments | | Read More...

கேரளாவில் தமிழர் மீது வெந்நீர் ஊற்றிக் கொன்றவர்களைக் கைது செய்யாதது ஏன்?- வைகோ

கேரளாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர் வெந்நீர் ஊற்றிக் கொல்லப்பட்ட
விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படாதது ஏன் என்று மதிமுக
பொதுச்செயலாளர் வைகோ கேட்டுள்ளார்.
சேலம் வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தைச் சேர்ந்த
ஐயப்ப பக்தர் சாந்தவேலு கேரளாவில் அங்குள்ள டீக்கடைக்காரர்களால் வெந்நீர்
ஊற்றப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த குற்றச்
செயலில்ஈடுபட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. ஏன் அவர்களைக் கைது
செய்யவில்லை கேரளா.
குற்றம் இழைத்து கொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யுமாறு கேரளாவுக்கு
தமிழக அரசு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும. பலியான சாந்தவேலு
குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண உதவிகளைச் செய்ய வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே கேரளாவுக்கு
சாதகமாக செயல்பட்டு வருகிறது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த செயல்
தேசிய ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றைப் பாதிக்கும்.
தானே புயலால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம் போதாது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் ஏன் நடவடிக்கை
எடுக்கவில்லை.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலத்தை சீர் செய்ய விவசாயிகளுக்கு
ஏக்கருக்கு ரூ. 25,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என்றார் அவர்.
Tags: vaiko , வைகோ , kerala , புயல் , சேலம்
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger