Thursday, 5 July 2012
திருமணத்தை அவர் ரகசியமாக வைத்திருந்தார். ஆனால் லைலாகானை திருமணம் செய்தவர் மும்பை குண்டு வெடிப்பில் தேடப்படும் தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி என தெரிய வந்தது. இதனால் லைலாகானிடம் மும்பை தீவிரவாத தடுப்பு பிரி� ��ு போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திடீர் என்று லைலாகானும், அவரது தாய், சகோதரி, வளர்ப்பு தந்தை ஆகியோரும் மாயமாகி விட்டனர். அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று மும்பையில் பரபரப்பு வதந்தி பரவியது. ஆனால் மும்பை போலீசாரால் அதை உறுதிப்படுத்த முடிய வில்லை.
இதற்கிடையே சில வாரங்களுக்கு முன் லைலாகானின் உறவினர் பர்வேஸ் அகமத் தக் என்பவர் ஜம்மு போலீசில் பிடிபட்டார். அவரிடம் போலீசார் லைலாகான் பற்றி விசாரித்தபோது, லைலாகானும் குடும்பத்தினரும் போலி பாஸ்போர்ட்டில் துபாய்க்கு தப்பிச் சென்று விட்டதாகவும் அங்கு அவர்கள் உயிருடன் இருப்பதாகவும் வாக்குமூலம் அளித் திருந்தார். இதை போலீசார் நம்பவில்லை. தொடர்ந்து � �வரிடம் காஷ்மீர் போலீசாரும், மும்பை போலீசாரும் இணைந்து விசாரித்தனர். அப்போது லைலாகான் குடும்பத்தினருடன் கடந்த பிப்ரவரி மாதமே கடத்தப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
நடிகை லைலாகானின் தாயார் சலீனா பட்டீல், இவர் கணவர் நதிர்ஷாபட்டீலை விவகாரத்து செய்து விட்டார். அவர்தான் லைலாகானும், தாய், சகோதரி, வளர்ப்பு தந்தையும் � �ாயமாகி விட்டதாக முதலில் மும்பை போலீசில் புகார் செய்து இருந்தார். அதன் பிறகு போலீசார் விசாரணையில் இறங்கினார்கள். லைலாகான் பற்றி பல்வேறு வதந்திகள் உலா வந்தது. இப்போது லைலாகான், தாயார், சகோதரி, வளர்ப்பு தந்தை ஆகிய 4 பேருடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் மேலும் 2 பேரும் மாயமாகி இருந்தனர். அவர்களும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலையடுத்து மும்பை தீவிரவாத தடுப்பு போலீசார் மீண்டும் விசாரணையில் இறங்கினர். இதில் லைலாகான் குடும்பத்தினருடன் மும்பை புறநகர் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட விவரம் தெரியவந்தது. சொத்து தகராறு காரணமாக அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று மும்பை போலீசார் கருதுகிறார்கள். லைலாகான் கடத்தலில் ஜம்மு போலீசில் பிடிபட்� �� பரவேஷ்தக் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தந்தை நதிர்பட்டீல் போலீசில் சந்தேகம் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து பரவேஷ்தக்குடன் ஆசிப்சேக் என்பவரும் பிடிபட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 6 பேரது உடல்களை எங்கே வீசினார்கள் என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. பிணங்கள் கிடைத்தால்தான் இதில் உறுதி முடிவுக்கு வர முடியும� �� என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே பரவேஷ்தக் பிடிபட்ட ஜம்மு புறநகர் பகுதியில் மராட்டிய மாநில பதிவு எண் கொண்ட கார் சிக்கியது. அந்த காரை பரவேஷ்தக் வாடகைக்கு எடுத்து இருக்கலாம் என்று தெரிகிறது. லைலாகானை திருமணம் செய்தவர் கதி என்ன? என்பது மர்மமாக இருக்கிறது. லைலாகான் கொலை செய்யப்பட்ட தகவல் மும்பை சினிமா வட்டாரத்தில் பெரும் பர� ��ரப்பை ஏற்படுத்தி உள்ளது.