News Update :
Powered by Blogger.

சசிகலாவை ஜெயலலிதா வெளியேற்றியதற்கு "அஷ்டமத்து சனி" காரணம்?

Penulis : karthik on Thursday, 12 April 2012 | 23:26

Thursday, 12 April 2012




தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவை ஜோதிடப் பரிகாரத்துக்காகவே போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றியதாக தகவல்கள் கூற� �கின்றன.

அன்று நடந்தது...

போயஸ் தோட்டத்திலிருந்து சசிகலாவை திடீரென வெளியேற்றியிருந்தார் ஜெயலலிதா. அத்துடன் மட்டுமின்றி சசிகலா உட்பட ஒட்டுமொத்த மன்னார்குடி கேங்கையே அதிமுகவில் இருந்து வெளியேற்றினார்.

இத்துடன் ஓய்ந்துபோய்விடவில்லை போயஸ் புயல். ராவணன், திவாகரன், எம். நடராஜன், மிடாஸ் மோகன் என மன்னார்குடி கேங்கின் சுற்றமும் நட்பும் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றன. இதேபோல் பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகிவந்த சசிகலாவும்கூட 'போயஸ் தோட்ட" வழக்க� ��ிஞர்களின் கஸ்டடியில் வைத்தே நீதிமன்றத்தில் பதில் சொல்ல வைக்கப்பட்டார்.

இந்நிலையில் திடீரென சசிகலா ஒரு அறிக்கையை வெளியிட அவரது அக்கா ஜெயலலிதாவும் ஏற்றுக் கொள்ள பொட்டி படுக்கையோடு போயஸ் கார்டனில் சசிகலா ஐக்கியமாகிவிட்டார்.

தொடக்கம் முதலே இது டிராமாதான் என்று அடித்துச் சொல்லப்பட்டு வந்த நிலையில் ஜோதிடர்கள் கிசுகிசுக்கும் தகவல் இதனை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

அஷ்டமத்து சனி?

அதாவது கடந்த டிசம்பர் மாதம் சசிகலாவுக்கு அஷ்டமத்து சனி. இதன் தாக்கம் மிகக் கொடுமையானது என்பதற்காக அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச் சனி என்று ஜோதிடர்கள் வருணிப்பது உண்டு. அப்படிப்பட்ட பாதிப்புக்குள்ளாவோரின் அருகில் இருப்போருக்கும் அஷ்டமத்து சனியின் பாதிப்� �ு அதிகம் இருக்கும் என்கிறது ஜோதிடம்.

இதனால் அஷ்டமத்து சனி ஆட்டிப்படைத்து வரும் சசிகலாவை சட்டென போயஸ் தோட்டத்திலிருந்து விலக்கிவைத்துவிட்டாலே அது பரிகாரம் செய்தது போல ஆகிவிடும் என்று அட்வைஸ் சொல்லப்பட அரங்கேறியது போயஸ் தோட்ட டிராமா என்கின்றனர்.

கட்சிக்கும் சேர்த்தே பரிகாரம்

அதே நேரத்தில்ன் சசிகலாவின் தலையீடு மற்றும் நடவடிக்கைகளால் தமக்கு ஆதாயம் என்கிற நிலையில் அதை அனுமதித்தாலும் சசிகலாவின் பெயரில் அவரது சுற்றமும் நட்பும் ஆடிய ஆட்டத்தை ஜெயலலிதா அவ்வளவாக ரசிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. அஷ்டமத்து சனி பரிகாரத்தின் பேரில் அ திமுகவை ஆட்டிப் படைத்த அத்தனை கிரகங்களையும் அள்ளி சிறையில் போட்டு கட்சிக்கும் திருஷ்டிப் பரிகாரம் செய்துவிட்டார் என்கிறது அதிமுக வட்டாரம்.

வக்கிர குரு

இதனிடையே சிம்மராசிக்காரரான ஜெயலலிதாவுக்கு மே 17-ந் தேதி முதல் ஜெயலலிதாவுக்கு 10-ல் குரு வக்ரம் அடைவதால் சில இடையூறுகளுக்கு வாய்ப்புகள் உண்டு என்றும் கூறப்படுகிறது. இதுக்கு என்ன பரிகாரம் செய்யப் போகிறார்களோ? எத்தனை தலைகள் உருளப்போகின்றனவோ?



comments | | Read More...

இலங்கை கடல் எல்லையில் இந்தியாவின் ஆளில்லா உளவு விமானப்படை




இந்தியா-இலங்கை கடற்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில், புதிய ஆளில்லா உளவு விமானப் படையை இந்தியா ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் நிறுவியுள்ளது. இந்த விமானப் படையில் முதல் கட்டமாக 3 ஆளில்லா விமானங்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும். கடல் பகுதியை மிகத் துல்லியமாக படம்பிடித்துத் தரும் திறன் கொண்டதாக இந்த விமானங்கள் உள்ளன.

இலங்கையில் சீனத் தலையீடுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையிலேயே, இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெர ிகிறது. மேலும் சமீபத்தில் ஜெனீவாவில் நடந்த ஐ.நா.வின் மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மனித உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தது.

அவ்விவகாரத்தில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்தன. ஆனால் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த இலங்கை, இந்தியாவுக்கு மறைமுக எச்சரிக்கைகளை விடுத்து வந்தது. இந்திய அரசின் தற்போதைய நடவடிக்கைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.



comments | | Read More...

சத்துணவுத் திட்டம் கொண்டு வந்தது காமராஜரா, எம்.ஜி.ஆரா?: சட்டசபையில் விவாதம்




தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற சமூக நலம், சத்துணவு மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கையின்போது சத்துணவுத் திட்டம் கொண்டு வந்தது காமராஜரா, எம்.ஜி.ஆரா என்பது பற்றி காரசார விவாதம் நடந்தது.

தேமுதிக உறுப்பினர் கே.தமிழழகன் பேசும்போது வறுமையினால் படிக்காமல் இருந்த குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காக காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார் என்றார்.

அமைச்சர் பா.வளர்மதி அதற்கு பதிலளித்து பேசிய போது, தனியார் உதவியுடன் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே காமராஜர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. எம்.ஜ� �.ஆர். ஆட்சிக் காலத்தில்தான் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டது என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் என்.ஆர். ரங்கராஜன், காமராஜர் ஆட்சிக் காலத்திலேயே சுமார் 28 ஆயிரம் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும், அந்தத் திட்டத்தைதான் எம்.ஜி.ஆர். விரிவுபடுத்தியதாகவும் கூறினார்.

இம்முறை அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஆர். வைத்திலிங்கம், பா.வளர்மதி ஆகியோர், � �காமராஜரின் மதிய உணவுத் திட்டத்துக்கும், எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அமெரிக்காவில் இருந்த வந்த கோதுமை, பால் பவுடர் ஆகியவற்றைக் கொண்டு ஒரு சில இடங்களில் மட்டுமே காமராஜர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பே நீதிக்கட்சி ஆட்சியில் சென்னை மாநகரில் சில பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது' என்றனர்.

உடனே சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. கோபிநாத், 'மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியவர் காமராஜர். அதனை விரிவுபடுத்தியவர் எம்.ஜி.ஆர்.' என்றார்.

இறுதியில் பேரவைத் தலைவர் டி.ஜெயகுமார், 'எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தைப் பின்பற்றி மற்ற மாநிலங்களிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துமாறு உச்ச நீதிமன்ற� �் அறிவுறுத்தியுள்ளது. எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டத்துக்கு ஈடு இணையான திட்டம் எதுவும் இல்லை' என்று முதல்வர் ஜெயலலிதா 2011 ஆகஸ்டில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசியதை அவைக் குறிப்ப� �லிருந்து படித்துக் காட்டி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.



comments | | Read More...

இன்று முதல் விஜய்யின் துப்பாக்கி ஆக்‌ஷனில்!




நடிகர் விஜய்யின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத� �தில் காஜல் அகர்வாலுடன் விஜய் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள்(First Look) நாளை வெளியிடப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் ரசிகர்களால் எழுதி இசையமைக்கப்பட்ட "இளையதளபதி விஜய்" ஆல்பத� ��தை நடிகர் விஜய் வெளியிட்டார். ஆல்பத்தை வெளியிட்டு பேசிய விஜய் " துப்பாக்கி படத்தின் First Look போஸ்டர்கள் சித்திரைத் திருநாளன்று(இன்று) வெளியிடப்படும� ��. படம் நன்றாக வந்துள்ளது" என்றும் கூறியுள்ளார்.


தொடர்ந்து பேசிய விஜய் " நடந்து கொண்டிருக்கும் 10-வது, 12-வது வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடத்தை பிடிப்பவர்களுடன் ஒரு நாள் முழுக்க மகிழ்ச்சியாக கொண்டாடப்போகிறேன்" என்று அறிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி என்றாலும் நன்றாக படிக்கும் மாணவர்கள் இதை நினைத்துக் கொண்டே தேர்வில் கவனம் செலுத்தாமல் போய்விடுவார்களோ என்ற அச்சம் பெற்றவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.நடிகர் விஜய் இந்த அறிவிப்பை தேர்வு முடிந்ததும் அறிவித்திருக்கலா� ��் என்பது மக்களின் கருத்து.

படத்தின் இயக்குனர் முருகதாஸும் சென்னையில் தான் உள்ளார். கே.கே நகரில் தெருவிளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டிருப்பதை பார்த்த முருகதாஸ் அதை போட்டோ எடுத்து தனது ட்விட்டர் அக்கவுண்டில் பதிவு செய்துள்ளார்.



comments | | Read More...

இந்தியா வல்லரசு நாடாக மாணவர்கள் தனித்திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்: அப்துல் கலாம் பேச்சு



width="200"



சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் 13-வது பட்டமளிப்பு விழா கல்லூரி தலைவர் லியோ முத்து தலைமையில் நடைபெற்றது. முதன்மை திட்ட அலுவலர் சீதாராமன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கலந்து கொண்டு 865 (688 பொறியியல் பட்டதாரிகள் 177 முது நிலைப்பட்டதாரிகள்) மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது கூறிதாவது:-

இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இதுவரை 12 மில்லியன் இளைஞர்களை சந்தித்துள்ளேன். பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் தங்களது தனித்திறனை வளர்த்து கொள்ள வேண்டும். விடா முயற்சி மற்றும் கடின பயிற்சி மூல� �் தனிப்பட்ட ஆளுமை திறனை வளர்த்து கொள்ள வேண்டும். இதனால் இந்தியா 2020-ல் வல்லரசாகும்.

அனைவருக்கும் தரமான தண்ணீர், மின்சாரம் சம பங்களிப்போடு வழங்கப்பட வேண்டும். விவசாயம், தொழில்துறை மற்றும் சேவை துறை ஒருங்கே வளர்ச்சி அடைய வேண்டும். சமுதாயம் மற்றும் பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும்.

நாட்டில் திறமையான அறிஞர்கள், விஞ்ஞானிக ள், முதலீட்டாளர்கள் சேரும் இடமாக இருக்க வேண்டும். அனைவருக்கும் சிறப்பான சுகாதார வசதி கிடைக்க வேண்டும். நாட்டில் ஊழல் இல்லாத நிர்வாகம் இருக்க வேண்டும். வறுமை, கல்வி அறிவு இன்மை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

வளமான ஆரோக்கியமான பயங்கரவாதம் இல்லாத அமைதியான நாடாக இருக்க வேண்டும். வாழ்வதற்கும் சிறந்த இடமாகவும் இருக்க வ ேண்டும். இதன் மூலம் இந்தியா வல்லரசாகும். உலக அளவில் இப்போது தொழில் நுட்பத்தில் புதிய போக்கு பெருகி வருகிறது. 21-ம் நூற்றாண்டில் புதிய பரிமாணமாக அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் ஒன்றாக செல்கிறது.நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாணவ- மாணவிகள் திறம்பட செயலாற்றி தனித்திறமை களை வளர்க்க வேண்டும்.

இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

விழாவில் முதன்மை நிர்� �ாக அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து, முதன்மை நிதி அதிகாரி ஷர்மிளா ராஜா, கல்லூரி செயலாளர் வாசு, இயக்குனர் ராஜமாணிக்கம், முதன்மை வளர்ச்சி அதிகாரி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.






http://actors-hot.blogspot.com

comments | | Read More...

இளம்பெண் மீது கொலை வெறி தாக்குதல்:

This summary is not available. Please click here to view the post.
comments | | Read More...

நடிகர் நம்பியார் மனைவி மறைவு - முதல்வர் ஜெயலலிதா இரங்கல்




பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் மனைவி ருக்மணி இன்று மரணமடைந்தார்.

அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியா ரின் மனைவி ருக்மணி நம்பியார் (82). இவர் கடந்த 15 நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்� �ை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8.30 மணிக்கு ருக்மணி இறந்தார்.

அவரது உடல் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்கு நள்ளிரவு 12 மணிக்கு கொண்டு வரப்பட்டது.

நம்பியார் -ருக்மணி தம்பதியருக்கு 2 மகன், ஒரு மகள். மூத்த மகன் சுகுமாரன் நம்பியார் மாரடைப்பால் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். இவர் பா.ஜ.வில் முக்கிய தலைவர்களில் ஒருவராக � ��ருந்தார். மற்றொரு மகன் மோகன் நம்பியார் தொழிலதிபராக உள்ளார். மகள் சினேகா சென்னையில் வசித்து வருகிறார். ருக்மணியின் இறுதிச் சடங்கு, பெசன்ட் நகர் மயானத்தில் இன்று மாலை 4 மணி அளவில் நடக்கும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

ருக்மணி மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

பழம் பெரும் திரைப்பட நடிகர் மறைந்த எம்.என். நம்பியார் மனைவி ருக்மணி நம்பியார் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இரவ� �� இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

ருக்மணி நம்பியாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



comments | | Read More...

தமிழீழத்தில் சிங்களத்தைக் கட்டாயப் பாடமாக்குகிறது இலங்கை அரசு!




வடக்கு தமிழீழத்தில் சிங்களத்தைக் கட்டாயப் பாடமாகக்கத் திட்டமிட்டுள்ளதாம் இலங்கை அரசு. மும்மொழிக் கொள்கை என் ற திட்டத்தைக் காரணம் காட்டி தமிழர் தாயகத்தை சிங்களமயமாக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.

மும்மொழிக் கொள்கை என்ற திட்டத்தை சிங்கள அரசு அமல்படுத்தி வருகிறது. அதன்படி சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளை அனைத்து இடங்களிலும் அமல்படுத்துவதாக அது கூறுகிறது. ஆனால் சிங்களத்தை தமிழர் தாயகத்தில் நுழைக்கும் முயற்சியே இது என்று தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தமிழர் பகுதிகளில் தற்போது கல்வித் திட்டத்தில் சிங்களத்தையும் கட்டாயப் பாடமாக்குகிறது சிங்கள அரசு.

தமிழர்களை அவர்களது நாட்டிலேயே அகதிகளைப் போல வாழ வைத்துள்ள இலங்கை அரசு, தமிழர்களின் பகுதிகளில் புத்தர்சிலைகளை அமைத்து பௌத்தமயமாக்கலையும், தமிழர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளில் ராணுவ முகாம்கள் அமைத்து ராணுவமயமாக்கலையும் செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமிழ் மாணவர்களுக்கு சிங்களத்தை கற்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி சிங்களமயமாக்கலையும் தீவிரப்படுத்தியுள்ளதால் தமிழர்கள் பெரும் குமுறலில் உள்ளனர்.



comments | | Read More...

'இளைய தளபதி' போய் 'தலைவரா'ன விஜய்!




தனக்காக ரசிகர்கள் உருவாக்கிய 'விஜய் கீதம் (Vijay Anthem)' என்ற இசை ஆல்பத்தை நேற்று வெளியிட்டு வாழ்த்தினார் நடிகர் விஜய்.

விஜய்யின் ஆன்லைன் ரசிகர்கள் பத்துப் பேர் இணைந்து இந்தப் பாடல் தொகுப்பை உருவாக்கினர்.

விஜய் ரசிகர்கள் அவரைப் போற்றிப் பாடும் பாடல்கள் இவை. வரிக்கு வரி அவரை தலைவர் என்று புகழ்ந்து பாடலை உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து பாடலை வெளியிட்டுள்ள சரிகமபதநீ நிறுவனத்தின் ராஜா கூறுகையில், " இந்தியாவிலேயே ரசிகர்கள் இசையமைத்து உருவாக்கியுள்ள ஆல்பம் இதுவே," என்றார்.

நடிகர் விஜய் கூறுகையில், "வணிக நோக்கமில்லாமல் ரசிகர்கள் உருவாக்கியுள்ள பாடல்கள் இவை. என்னிடம் வந்து, இந்தப் பாடல்களை வெளியிட வேண்டும் என அனுமதி கேட்டனர். பாடல்கள் நன்றாக இருந்ததால், வெளியிட ஒப்புக் கொண்டேன். இதனை உருவாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் வாழ்த்துகள்," � �ன்றார்.



comments | | Read More...

ஐபிஎல் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் 'த்ரில்' வெற்றி




ஐபிஎல் போட்டித் தொடரின் 13-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டோனி தலைம ையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

சென்னை அணி இதுவரை தான் ஆடிய 3 ஆட்டங்களில் 1 வெற்றியும், 2 தோல்வியும் பெற்றுள்ளது. பெங்களூர் அணி இதுவரை தான் ஆடிய இரண்டு ஆட்டங்களில் 1 வெற்றியும், 1 தோல்வியும் பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கின.

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்லும் மயங்க் அகர்வாலும் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மயங்க் அகர்வால் 26 பந்துகளில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரையடுத்து கெய்லுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

அகர்வால் இருந்தவரை அமைதி காத்த கெய்ல், கோலி வந்தபிறகு அதிரடிக்கு மாறினார். கோலியும் அதிரடி காட்டினார்.

சென்னை அணியினர் வீசிய பந்துகளை வாணவேடிக்கை காட்டிய கெய்ல் 35 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து வந்த டிவில்லியர்ஸ் 4 ரன்களிலும், சௌரப் திவாரி 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் நிலைத்து நின்ற கோலி அரைசதம் அடித்து அசத்தினார். இவர் 57 ரன்கள் எடுத்தி� �ுந்த போது பொலிஞ்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது.

கடைசி ஓவரில் பொலிஞ்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமின்றி கடைசி ஓவரில் ரன் அவுட் முறையிலும் ஒரு விக்கெட் விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐபிஎல் சீஸன் 5 தொடரில் இதுவரை 12 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இது 13-வது ஆட்டம் ஆகும். இந்த 13 ஆட்டங்களில் முதல் முறையாக 200 ரன்களைக் கடந்துள்ள அணி என்ற பெருமையை பெங்களூர் அணி பெற்றுள்ளது.

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு சென்னை அணி தனடது பேட்டிங்கை துவக்கியுள்ளது.

முரளி விஜயும் டு பிளிசிஸ்ஸும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

முரளி விஜய் 11 ரன்கள் எடுத்திருந்த போது முரளிதரன் பந்து வீச்சில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா 14 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து டு பிளிசிஸ் உடன் டோனி ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய பிளிசிஸ் அரை சதம் கடந்து அசத்தினார். இவர் 71 ரன்கள்  எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். தோனி 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவர்களையடுத்து பிராவோவும் அல்பி மோர்கெலும் ஜோடி சேர்ந்தனர். 19 -வது ஓவரை எதிர் கொண்ட மோர்கெல் 6 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகள் உள்பட 28 ரன்கள் குவித்தார். இதனால் சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் எடுத்தது. இந்த ஓவரை விராத் கோலி வீசினார்.

கடைசி 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. இந்த ஓவரை வினய் குமார் வீசினார். 19.2 வது பந்தில் மோர்கெல் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 28 ரன்கள் அடங்கும்.
19.3 வது பந்து நோபாலாக அமைய, அந்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் பிராவோ. அடுத்த பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். 19.4-வது பந்தில் ரன் ஏதும் கிடைக்கவில்லை. 19.5- வது பந்தில் ஒரு ரன் எடுத்தார் பிராவோ.

கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அந்த பந்தை ரவீந்திர ஜடேஜா எதிர் கொண்டார். அந்த பந்தில் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

இதனால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்றது.

இந்த சீஸனில் 200 ரன்களை தாண்டிய இரண்டாவது அணி என்ற பெருமையும், 205 ரன்களை சேஸ் செய்த முதல் அணி என்ற பெருமையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆட்டத்தின் மூலம் கிடைத்தத� ��.

இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி 11 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் விளாசியது. சென்னை அணி 11 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள் விளாசியது.  இந்த 15-வது பவுண்டரிதான் சென்னை அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தது என்றால் அது மிகையில்லை.



comments | | Read More...

சிவாஜி, சந்திரமுகி, தெய்வதிருமகள், வேலாயுதம்... தமிழ் புத்தாண்டு சிறப்புத் திரைப்படங்கள்!




சித்திரைத் திருநாள் - தமிழ் புத்தாண்டுக்கு தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு புதிய படங்களை ஒள� ��பரப்புகின்றன.

கலைஞர் டிவி சித்திரை திருநாள் சிறப்புப் படம் என்ற பெயரில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி - த பாஸ் படத்தை ஒளிபரப்புகிறது.

சன் டிவிக்கு இது 19வது ஆண்டு என்பதால் சிறப்புத் திரைப்படமாக விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படத்தை ஒளிபரப்புகிறது. மாலை 6 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா ஹிட் படம் சந்திரமுகி ஒளிபரப்பாகிறது. சூர்யா நடித்த அயன் படமும் இந்த சேனலில் ஒளிபரப்பாகிறது.

ஜெயா டிவி தன் பங்குக்கு, விஜய் நடித்த வேலாயுதம் படத்தை ஒளிபரப்புகிறது. இந்தப் படம் கடந்த தீபாவளிக்கு வெளியானது.

ராஜ் டிவியில் ராவணன், தெனாலி, அடிமைப்பெண் போன்ற படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. விஜ� �் டிவியில் முருகதாஸ் தயாரிப்பில் உருவான எங்கேயும் எப்போதும் படம் ஒளிபரப்பாகிறது.

இந்த சேனல்களின் சினிமா யுத்தத்தைச் சமாளிக்க மற்ற சேனல்களும் தங்களால் முடிந்த அளவு போட்டி போட்டுக் கொண்டு படங்களை ஒளிபரப்ப தயாராகின்றன.



comments | | Read More...

உனக்கு ராணா- எனக்கு தேவா மோதிக் கொள்ளும் நடிகைகள்?

 
 
trisha,prabhudeva,trisha party,trisha sexy,trisha hotபூரி-கிழங்கு, பொங்கல்-வடை என்று கல் தோன்றி சட்டி தோன்றா காலத்திலிருந்தே காம்பினேஷன் கூட்டு அமைப்பதில் கில்லாடிகள்தான் நாம். பொங்கல்-கிழங்கு, பூரி-வடை என்று யோசித்து பாருங்களேன். ஞை என்று வயிற்றில் பூச்சி பறக்கும்.
 
ஆனால் சினிமா காதலுக்கு இதெல்லாம் பெரிய விஷயமேயில்லை. இன்று அது. நாளை எது என்று போடுகிற கூட்டணி அவையெல்லாம். இதில் லேட்டஸ்ட் கலவரம் எது?
 
பிரபுதேவா பார்ட்டிக்கு த்ரிஷா போனதுதான். இதற்குள்ளிருக்கும் அரசியலை கவனிங்க சார் என்று அதிரடி கிளப்புகிறார்கள் வெட்டிபேச்சு வேதாந்திகள். அவர்களது கால்குலேஷனைதான் கொஞ்சம் அவசரப்படாமல் படியுங்களேன்.
 
த்ரிஷாவின் காதலராக கிசுகிசுக்கப்படுகிறார் பிரபல தெலுங்கு ஹீரோ ராணா. ஒரு நாள் இருவரும் சந்திக்கவில்லை என்றாலும் பிளைட் பிடித்து சென்னைக்கு வந்துவிடுகிறாராம். ஆனால் இதையெல்லாம் பிரண்ட்ஷிப்புதான் என்று பூசி மெழுகிக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. இந்த ராணாவோடுதான் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம் நயன்தாரா.
 
என் ஆளை நீ வளைச்சு போட்டா, உன் ஆளு என் கையில் என்று சொல்லும் விதத்தில்தான் பிரபுதேவா பார்ட்டிக்கு த்ரிஷா போனதாக கொளுத்திப் போடுகிறது இந்த வம்பு மடம். (எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க)
 
ஆனாலும் பிரபுதேவா-த்ரிஷா காம்பினேஷன் ஞையின்னு பீதி கிளப்புற மாதிரிதான் இருக்கு.
comments | | Read More...

2012-04-11



சென்னையில் இன்று மதியம் 2.14 மணிக்கு நிலநடுக்கம் சென்னையில் இன்று மதியம் 2.14 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்க� �் சென்னையிலுள்ள 
 இன்று மதியம் இந்திய நேரப்படி 2 மணி அளவில் திடீரென இந்தோனேஷியாவில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அள� ��ில் 8.7 என்று கணக்கிடப்பட்டுள்ள இந்த நில அதிர்வு கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட 8வது பெரி� 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++அதிரடி அண்ணாசாமிகள்!எண� �� ஒன்பதுஒன்பதாம் எண் செவ்வாய்க்கு உரியது. 9,18, 27ஆம் தேதியில் பிறந்தவர்கள் அனைவருக்கும் உரிய அதிர்ஷ்ட எண் ஒன்பதேயாகும். இந்த எண்ணிற்கு உரியவர்கள் அதி 
இந்தோனேஷியாவில் சுனாமி அலை தாக்கியது - சென்னையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு இந்தோனேஷியாவில் இன்று மதியம் சுமத்ரா தீவை மையம் கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  
இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் ந� 


More than a Blog Aggregator

by Starjan ( ஸ்டார்ஜன் )
இன்று மதியம் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை படித்ததும் மனம் என்னவோ போலானது. மிகுந்த வேதனையடைந்தே 


http://naamnanbargal.blogspot.com

comments | | Read More...

2012-04-11



ஆண்ட்டி வைரஸ் தயாரிப்பில் ஈடுபடும் நார்டன் நிறுவனம், அண்மையில் இந்தியாவில் இணையப் பயன்பாடு குறித்த ஆய்வு ஒன்றை நடத்தி, அதில் கண்டறிந்� � முடிவுகளை வெளியிட்டுள்ளது. அவை:1. இந்தியாவில் சராசரி� 
புனே வாரியர்ஸ் அணி கேப்டன் கங்குலி, வீரர்கள் பங்கேற்ற ஆலோசனை க� ��ட்டம் (மீட்டிங்) ஒன்றரை மணி நேரம் நடந்ததாம்."டுவென்டி-20' போட்டிகளைப் பொறுத்தவரையில், 20 ஓவர்கள் பவுலிங் செய்யவே ஒன்றரை மணி நேரம் � 
கிருஷ்ணகிரி அருகே 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் - இருவர் பலி பெங்களூர் பைபாஸ் சாலை தற்போது 4 வழிப்பாதையாக உள்ளது. இந்த ரோட்டில் வரும் 
விடுமுறை விட ஆரம்பித்துவிட்டார்கள். குட்டி குழந்தைகள் இனி வீட்டில் சும்மா இருக்கமாட்டார்கள்.விதவிதமாக சுவரில் படங்களை வரைந்துவைப்பார்கள்.அவர்கள் சுவரில் விதவிதமாக படங்களை வரையாமல் கணி 


http://naamnanbargal.blogspot.com

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger