News Update :
Powered by Blogger.

தெய்வீக குரலுக்கு ஆண்டு 50 – கே.ஜே. யேசுதாஸ் சாதனை(video)

Penulis : karthik on Monday, 14 November 2011 | 21:40

Monday, 14 November 2011


கர்நாடக இசை மேதையும் பிரபல பின்னணிப் பாடகருமான, கே.ஜே. யேசுதாஸ் திரைத்துறையில் பாடகராக அறிமுகமாகி 50 ஆண்டுகாலத்தை நிறைவு செய்துள்ளார். திரைப்படத்துறையில் இது மிகப்பெரிய சாதனையாக போற்றப்படுகிறது.

எப்போதெல்லாம் நல்ல இசை கேட்கிறோமோ அந்த நிமிடங்களில் மனம் நனைந்து கரைந்து உருகும் அதிசய அனுபவத்தைப் பெறுகிறோம். மொழிகளுக்கும் எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது இசை மட்டுமே. எதிரியே பாடினாலும் நின்று கேட்க வைக்கும் அபார சக்தி இசைக்கு மட்டுமே சொந்தம். அந்நிய மொழிக்கு சொந்தக்காரராக இருந்தாலும் தெய்வீக குரலுடைய கே.ஜே. யேசுதாஸ் பாடிய பாடல்கள் அனைத்து பாடல்களுமே கேட்கக் கேட்க திகட்டாதவை.

50 ஆண்டுகள் சாதனை

கேஜே.யேசுதாஸ் ஒரு பாடகராக அறிமுகமாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தனது 50 ஆண்டுகால கலை வாழ்க்கையில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி. பெங்காலி, ஒரியா, குஜராத்தி, துலு, மராத்தி, ஆங்கிலம், ரஷ்யன் உள்ளிட்ட 14 மொழிகளில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை புரிந்துள்ளார்.

விருதுக்கு விருது

தெய்வீகப் பாடகர் எனப் போற்றப்படும் யேசுதாசுக்கு கலை மற்றும் கலாசாரத்தில் தன்னிகரற்ற பங்களிப்புகளிப்பிற்காக பத்மஸ்ரீ, பத்மபூஷண் மத்திய அரசின் விருது பெற்றுள்ளார். திரைத்துறையில் சிறந்த பாடல்களை பாடியதற்காக 7 முறை தேசிய விருதும் 17 முறை மாநில விருதும் பெற்றுள்ளார்.

இவரது புகழினை பரப்பும் வகையில் இவரது இளையமகன் விஜய் யேசுதாஸ் புகழ்பெற்ற பின்னணி பாடகராக உருவெடுத்துள்ளார்.

முதல் திரைப்பட பாடல்







தமிழில் முதல் திரைப்பட பாடல்






comments | | Read More...

'தனியாக போட்டியிட்டிருந்தால் தேமுதிகவுக்கு 'சிங்கிள்' சீட் கூட கிடைத்திருக்காது'

 
 
சட்டசபைத்தேர்தலிலும் அத்தனை கட்சிகளும் தனியாக போட்டியிட்டிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், தேமுதிகவுக்கு ஒருசீட் கூட கிடைத்திருக்காது. ஆனால் எங்களுக்கு 6 சீட் கிடைத்திருக்கும் என்று பேசியுள்ளார் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.
 
சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
 
அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், பாரதீய ஜனதா கட்சி வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதன் பயணம் தமிழகத்தில் 5 ஆண்டிற்கு ஆளும் கட்சியாக வேண்டும். இது முடியுமா? முடியாதா? நடக்குமா, நடக்காதா? என்று எண்ணிக் கொண்டிருக்க கூடாது.
 
இந்த உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித் தனியாக நின்றதால் மூன்று கட்சிகள் லாபம் அடைந்திருக்கிறது. ஒன்று அ.தி.மு.க.,, இரணடாவது ம.தி.மு.க., மூன்றாவது பாரதீயஜனதா.
 
தமிழகத்தில் பா.ம.க. பிளவுபட்டுள்ளது. அக்கட்சி முக்கிய பிரமுகர்கள் என்னை சந்தித்திருக்கிறார்கள். அரசியலில் எதுவும் நடக்கலாம்.
 
உள்ளாட்சி தேர்தலை போல அனைத்து கட்சிகளும் சட்டமன்ற தேர்தலையும் சந்தித்திருக்க வேண்டும். அப்படி தனித்தனியாக போட்டியிட்டிருந்தால் தே.மு.தி.க.வுக்கு ஒரு இடம் கூட கிடைத்திருக்காது. பா.ஜ.க பெற்ற ஓட்டு விகிதத்தை பார்த்தால் ஆறு இடம் கிடைத்திருக்கும்.
 
இந்த நிலை மேலும் வளரும், பாஜக ஆளுங்கட்சியாக மாறும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.



comments | | Read More...

வியாழக்கிழமை முதல் பெட்ரோல் விலை குறைகிறது

 
 


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை நிலவரத் துக்கு ஏற்ப இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒரு தடவை பெட்ரோல் விலையை இந்திய எண்ணை நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அதன்படி கடந்த 3-ந் தேதி பெட்ரோல் விலை ரூ.1.80 உயர்த்தப்பட்டது.

இந்த விலை உயர்வுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. கடந்த ஓராண்டில் பெட்ரோல் விலை சுமார் ரூ.10 உயர்ந்து விட்டது. சென்னையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.63-க்கு விற்றது. தற்போது அது ரூ.73 ஆக உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலையைத் தொடர்ந்து டீசல், சமையல் கியாஸ், விலையும் உயரலாம் என்று கூறப்பட்டதால் மக்களிடம் அதிருப்தி அதிகரித்தது. இந்த நிலையில் கச்சா எண்ணை விலை குறைந்தது. கடந்த மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணை 125 டாலராக இருந்தது.

தற்போது அது 115 டாலர் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. கச்சா எண்ணை விலை குறைவால் பெட்ரோல் விலையை குறைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுத்திரிகரிப்பு வரி உள்பட எல்லா செலவினங்களும் குறைந்துள்ளதால், எண்ணை நிறுவனங்கள், பெட்ரோல் விலையை குறைக்க சம்மதித்துள்ளன.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1 வரை குறைக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் லிட்ட ருக்கு ரூ.2 வரை குறைக்க எண்ணை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. எண்ணை நிறுவனங் களின் ஆலோசனை கூட்டம் இன்று அல்லது நாளை நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் விலை குறைப்பு முடிவு எடுக்கப்படும்.

நாளை இரவு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 17-ந் தேதி முதல் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வரும். 2010-ம் ஆண்டு ஜுன் மாதத்துக்கு பிறகு பெட்ரோல் விலை குறைய இருப்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற கூட்டம் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

இந்த கூட்டத்தில் பெட்ரோல் விலை உயர்வு பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதற்கு முன்னதாக பெட்ரோல் விலையை குறைத்து எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக பெட்ரோல் விலை குறைப்பு மூலம் கூட்டணி கட்சியான திரிணாமூல் காங்கிரசின் மிரட்டலை புறக்கணிக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.

 


comments | | Read More...

' 3 '. பட பாடலை சுட்டுப் போட்டவருக்கு நன்றி ! : தனுஷ்(பாடல் இணைக்கப்பட்டுள்ளது )

 
 


தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் படம் ' 3 '. இப்படத்திற்கு அனிருத் என்ற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்து வருகிறார். டிசம்பர் மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் , ஜனவரி மாதம் படத்தினையும் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ' WHY THIS கொலவெறி கொலவெறிடி? ' என்ற பாடல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. படக்குழு எப்படி அந்த பாடல் அதற்குள் வெளியானது என்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்பாடல் ROUGH CUT எனப்படும் முழுமை பெறாத நிலையில் தான் வெளியாகியுள்ளது. பாடல் வரிகள் அனைத்துமே இளைஞர்களை கவர்ந்துள்ளது.

இதனால் ஓரிரு நாட்களில் ' WHY THIS கொலவெறி கொலவெறிடி?' முழுமையான பாடலை மட்டும் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். ROUGH CUT முறை பாடலே வரவேற்பை பெற்று இருப்பதால், முழுவடிவம் அடங்கிய பாடலும் வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

இது குறித்து தனுஷ் தனது டிவிட்டர் இணையத்தில் " ' 3 ' படத்தின் ஒரு பாடல் புதன்கிழமை வெளியாகிறது. இணையத்தில் வெளியாகி இருக்கும் ' WHY THIS கொலவெறி கொலவெறி டி? ' பாடல் ஒரிஜினல் பாடலோடு ஒப்பிடும் போது வெறும் 2% மட்டுமே. யார் அப்பாடலை வெளியிட்டார்களோ.. அவர்களுக்கு நன்றி... நாங்களே கூட இவ்வளவு விளம்பரப்படுத்தி இருக்க மாட்டோம்.." என்று தெரிவித்துள்ளார்.

'மயக்கம் என்ன' படத்தில் சில பாடல்களை எழுதிய தனுஷ், '3' படத்தின் அனைத்து பாடல்களையும் தனுஷ் எழுதி இருக்கிறார்.







comments | | Read More...

இன்றைய முக்கிய செய்திகள்

 
லஞ்சத்தை அனுமதிக்காதீர்கள்: கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெ., பேச்சு

  லஞ்சத்தை அனுமதிக்காதீர்கள்: கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெ., பேச்சு
மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் லஞ்சம் பெறுவதோ முறைகேடுகளோ இருக்கக்கூடாது என்று மாவட்ட கலெக்டர்களுக்கு

திருவாரூரில் ரூ.35 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை  திருவாரூரில் ரூ.35 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை
திருவாரூர் அருகே எரவாஞ்சேரி பகுதியில் நகை - அடகுக் கடையில் ரூ. 35

தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவர் ஞானதேசிகன்  தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவர் ஞானதேசிகன்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாநிலங்களவை உறுப்பினர் பி.எஸ்.ஞானதேசிகன் (62) நியமிக்கப்பட்டுள்ளார்.
பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவரை கொன்ற மனைவி கைது  பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவரை கொன்ற மனைவி கைது
குடித்துவிட்டு பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கணவரின் தலையில் கருங்கல்லைப்போட்டு கொலை செய்த
 இன்று நேருவின் 122-வது பிறந்ததினம்
நமது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 122-வது பிறந்ததினம் இன்று நாடு
 ஏ.டி.ஜி.பியை மிரட்டிய முன்னாள் பிரதமர்
தன் மகன் மீதான வழக்கினை விசாரிக்க கூடாது என முன்னாள் பிரதமர், லோக்ஆயுக்தா
 கலாமுக்கு அவமதிப்பு - மன்னிப்பு கேட்டது அமெரிக்கா
அமெரிக்க விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் அமெரிக்க அதிகாரிகள் வெடிகுண்டு
 இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
 சீனாவில் தினமும் 10 ஆயிரம் விவாகரத்து வழக்கு
உலக அளவில் பொருளாதார வளர்ச்சியை எட்டும் வகையில் சீனா முன்னேறிக் கொண்டிருந்தாலும், சீனர்களில்
 சீன நிலக்கரி சுரங்க விபத்து: பலி 34 ஆக உயர்வு
சீன நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
 அமேசான் காடு உலக அதிசயமாகிறது
இயற்கையாக உருவான அதிசயங்கள் பற்றிய பட்டியலை சுவிட்சர்லாந்தில் உள்ள `புதிய 7 அதிசயங்கள்
இரண்டாவது டெஸ்ட் இன்று தொடங்கியது

 second test was started  இரண்டாவது டெஸ்ட் இன்று தொடங்கியது
இந்தியா,மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்
 உசைன் போல்டுக்கு சிறந்த தடகள வீரர் விருது
இந்த ஆண்டுக்கான சிறந்த தடகள வீரருக்கான‌ விருது ஜமைக்காவைச் சேர்ந்த மின்னல் வேக
 இனிதே நடந்தது கிரிகெட் வீரர் அஸ்வின் திருமணம்
கிரிகெட் வீரர் அஸ்வினின் திருமணம் நேற்று 13ம் தேதி சனிக்கிழமை சென்னையில் நடந்தது.
 மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 1,743 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்
வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பின் அடிப்டையில் 1,743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்
விண்டோஸ் 7 ட்யூனிங்  windows 7 tunning  விண்டோஸ் 7 ட்யூனிங்
நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி யிலிருந்து, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறியுள்ளீர் களா!
கூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages கூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages  கூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages
பேஸ்புக் தளத்திற்கு மாற்றாக களமிறங்கியுள்ள கூகிள் ப்ளஸ் தளம் புதுப்புது வசதிகளாக அறிமுகப்படுத்தி
 பாரதிராஜா படத்திலிருந்து பார்த்திபன் விலகல்!
"பொம்மலாட்டம்" படத்திற்கு பிறகு வெள்ளித்திரையை விட்டு, சின்னத்திரையில் "தெக்கத்திச் சீமையிலே" சீரியலை இயக்கி
 சச்சின் போட்டோவுடன், பூனம்பாண்டே ஆபாச போஸ்!
பிரபல மாடல் அழகியான பூனம் பாண்டே இந்திய கிரிக்கெட் அணி உலககோப்பையை வென்றதும்
 முதல்வர் ஜெயலலிதவாக நடிக்கிறார் ஜெயசித்ரா
வனயுத்தம் என்ற திரைப் படத்தில் முதல்வர் ஜெயலலிதாவக நடிகை ஜெயச்சித்ரா நடிக்கிறார்.
 ஏழு வேடத்தில் விக்ரம்
தெய்வத் திருமகள் படத்தை தொடர்ந்து, விக்ரம் நடிக்கும் புதிய‌ படம், ராஜபாட்டை. மாபியா கும்பலை
 ரஜினி, அமிர் இணையும் விளம்பரப் படம்
ரஜினி, அமிர் இருவரும் அரசு தயாரிக்கும் விளம்பரத் திரைப்படத்தில் நடிக்கின்றனர்.
--
    

www.tamilkurinji.com

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger