News Update :
Powered by Blogger.

தமிழ்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்

Penulis : karthik on Wednesday, 9 November 2011 | 23:28

Wednesday, 9 November 2011



வெறிச்சோடியது தி.நகர்  வெறிச்சோடியது தி.நகர்
முழு கடைஅடைப்பு காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது தி.நகர். கடந்த 31ஆம் தேதி அரசு சில

மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கத்தை எதிர்த்து - தி.மு.க. ஆர்ப்பாட்டம்  மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கத்தை எதிர்த்து - தி.மு.க. ஆர்ப்பாட்டம்
13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 15-ந்

விக்கிரவாண்டியில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக 9 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக புறப்படும்  விக்கிரவாண்டியில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக 9 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக புறப்படும்
விக்கிரவாண்டி பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக 9 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக
தமிழகத்தில் 23 ஐ.பி.எஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்   தமிழகத்தில் 23 ஐ.பி.எஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
தமிழகத்தில் 23 ஐ.பி.எஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்க்கான உத்தரவை இன்று தமிழக
நியூமராலஜி பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு இங்கே    	       

நியூமராலஜி பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு இங்கே

நியூமராலஜி பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு இங்கே
 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
மிசோரம் மாநிலத்தில் பக்த்வாங் என்ற கிராமத்தில் சியோனா ஷானா (67) என்பவர் வசித்து
 ஆள்மாறாட்ட புகாரில் சிக்கிய புதுச்சேரி கல்வி அமைச்சர் ராஜினாமா?
ஆள்மாறாட்ட புகாரில் சிக்கிய புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் இன்று ராஜினாமா செய்யப்போவதாக
 பெட்ரோல் விலையை குறைக்க முடியாது: மன்மோகன் சிங்
கடந்த வாரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்த்தியதைக் குறைக்க முடியாது, என
 கனிமொழி ஜாமீன் மனு - சி.பி.ஐ.க்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
கனிமொழி ஜாமீன் மனு மீது டிசம்பர் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு
 துருக்கி நிலநடுக்கதிற்க்கு 4 பேர் பலி
துருக்கியில் ஏற்பட்ட‌ நிலநடுக்கதிற்க்கு 4 பேர் பலியானார்கள். நேற்று 5.7 ரிக்டெர் அளவில் பதிவான
 29 இளம்பெண்களின் பிணங்களை வீட்டில் வைத்திருந்த ரஷ்யர்
கல்லறைகளில் இருந்து 29 இளம்பெண்களின் உடல்களை திருடி, பொம்மைகள் போல அவற்றை அலங்கரித்து
 பதவி விலகினார் பெர்லுஸ்கோனி
இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி பதவி விலகினார். இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில்
--



comments | | Read More...

சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் வைகோ

சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் வைகோ

சங்கரன்கோயில் இடைத்தேர்தலில்  எதிர்கட்சிகள் ஓன்று திரண்டு வைகோ வை வேட்பாளாராக நிறுத்துகிறது .
சங்கரன்கோயில் இடைத்தேர்தலில்  எதிர்கட்சிகள் ஓன்று திரண்டு வைகோ வை வேட்பாளாராக நிறுத்துகிறது .




comments | | Read More...

11-11-11 அன்று ஐஸ்வர்யாவுக்கு இரட்டை குழந்தை பிறக்கும்?

 
 
அபிஷேக்பச்சனை திருமணம் செய்த ஐஸ்வர்யா ராய் தற்போது 9 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதனையடுத்து ஐஸ்வர்யாவுக்கு இரட்டை குழந்தைகள் (ஒரு ஆண், ஒரு பெண்) பிறக்கலாம் என அமிதாப் பச்சனின் குடும்ப ஜோதிடர் ஒருவர் உறுதியாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அன்று காலை(நவம்பர் 11) சரியாக காலை 11 மணி 11 நிமிடம் ஆகும் போது குழந்தைகள் பிறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இரட்டை குழந்தைக்கு அப்பாவாகும் சந்தோஷத்தில் உள்ள அபிஷேக் பச்சன் இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்புகளை முடித்து விட தீவிரம் காட்டுகிறார். பிரசவத்தின் போதும், அதற்கடுத்த தினங்களிலும் ஐஸ்வர்யாராய் மற்றும் குழந்தையுடன் இருக்க திட்டமிட்டுள்ளார் அபிஷேக் பச்சன். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேதியாகக் கருதப்படும் 11-11-11 அன்று அவரது பிரசவம் நடக்க வேண்டும் என ஐஸ்வர்யா ராய் மற்றும் பச்சன் குடும்பம் விரும்புவதால், அதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனையடுத்து ஐஸ்வர்யா ராய்யின் பிரசவத்திற்காக மும்பையிலுள்ள 7 ஸ்டார் மருத்துவமனையில் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.



comments | | Read More...

சன் பிக்சர்ஸுக்கு தடை - தியேட்டர் உரிமையாளர்கள்

 
 
 
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களிடம் பெற்ற அட்வான்ஸ் பணத்தை திருப்பித்தராவிட்டால், இனி அந்த நிறுவனம் தயாரிக்கும் அல்லது வெளியிடும் எந்தப் படத்தையும் திரையிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து இன்று நடந்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட முடிவுகள்:
 
திருப்பித் தரவேண்டிய முன்பணம் என்ற வகையில் சன் பிக்சர்ஸுக்கு இதுவரை திரையரங்குகள் சார்பில் தரப்பட்ட பணம் ரூ 2.60 கோடி திருப்பித்தரப்படவே இல்லை. கடந்த ஆட்சியிலிருந்தே இதனை திருப்பித் தரக் கோரி வருகிறோம். ஆனால் சன் பிக்சர்ஸ் கண்டுகொள்ளவே இல்லை.
 
எனவே இந்தத் தொகையை திருப்பித் தரும்வரை, சன் பிக்சர்ஸ் வெளியிடும் படங்களையோ, தயாரிக்கும் படங்களையோ திரையிடப் போவதில்லை.
 
ஆட்சி மாற்றம் காரணமாக இப்போது புகார் தரவில்லை. கடந்த ஆட்சியின்போதும் திருப்பிக் கேட்டோம். அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
 
திரையரங்குகளில் ஐம்பதுகளில் தினசரி 4 காட்சிகளுக்கு அனுமதித்தார்கள். அன்றைக்கு படங்கள் 3 மணி நேரத்துக்கு மேல் ஓடும் வகையில் வந்தன. ஆனால் இன்றைக்கு 2 மணிநேரப் படங்கள்தான் வருகின்றன. எனவே காட்சிகளை 5 அல்லது 6 ஆக நீட்டிக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
 
திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு உத்தரவிடவேண்டும். நகர்ப்புறங்களில் ரூ 50 என உள்ள கட்டணத்தை, ரூ 80 ஆக உயர்த்த வேண்டும். இப்படி உயர்த்துவதால் எங்களுக்கு மட்டும் ஆதாயமில்லை. அரசு மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் லாபம் கிடைக்கிறது. இதுகுறித்து முதல்வரைச் சந்தித்து முறையிடவிருக்கிறோம்," என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர்.



comments | | Read More...

எழுந்து உட்கார்ந்த பிணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்- தவறான சான்றிதழ் கொடுத்த டாக்டர் சஸ்பெண்ட்

 
 

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முஸாபர்நகர் மாவட்ட மருத்துவமனையின் பிணவறையில், இறந்துவிட்டார் என்று நினைத்தவர் உயிர்த்தெழுந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தவறான இறப்பு சான்றிதழ் வழங்கிய மருத்துவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்தே (17). அவர் விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்தார்.

உடனே முஸாபர்நகர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் பிரதீப் மிட்டல் தெரிவித்தார். இறப்புச் சான்றிதழும் வழங்கினார். இரவு நேரமாகிவிட்டதால் மறுநாள் காலையில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டு ரத்தேயின் உடல் பிண கிடங்கில் வைக்கப்பட்டது. இதற்கிடையே மருத்துவமனைக்கு வந்த போலீசார் சில விவரங்களை சேகரித்தனர். மறுநாள் காலையில் பிரதே பரிசோதனை செய்ய மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வந்தனர்.

அப்போது ரத்தே உயிர்த்தெழுந்தார். இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ரத்தே சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஒருவர் இறந்துவிட்டாரா, இல்லையா என்று கூட பார்க்கத் தெரியாத மருத்துவர் பிரதீப் மிட்டல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

comments | | Read More...

பிப்ரவரியில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்.. வீட்டை சென்னைக்கு மாற்றினார்கள்!

 
 

சென்னை: நயன்தாரா-பிரபுதேவா திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது. இதனால் இருவரும் இப்போது தங்கள் இருப்பிடத்தை ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு மாற்றியுள்ளனர்.

பிரபு தேவா இயக்கத்தில் வந்த வில்லு படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா திருமணம் ஆகாதவர்.

அவரை திருமணம் செய்துகொள்வதற்கு வசதியாக பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். அதன்பிறகு பிரபுதேவா, நயன்தாராவுடன் மும்பையிலும், ஹைதராபாதிலும் மாறி மாறி வசி்த்து வருகிறார்.

சீக்கிரமாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரபுதேவாவிடம், நயன்தாரா வற்புறுத்தி வருகிறார். பிரபுதேவா திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறார். விவாகரத்து ஆகிவிட்டாலும் முன்னாள் மனைவியையும் குழந்தைகளையும் அடிக்கடி பார்த்து வருகிறார். இதனால் பிரபு தேவா – நயன்தாரா இடையே அடிக்கடி சண்டையும், அப்புறம் சமாதானமும் ஏற்பட்டு வருகிறது.

இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இருவரும் வருகிற பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள்.

போட்கிளப் பகுதியில் புதிய வீடு

அதற்கு வசதியாக நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில், வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியுள்ளனர்.

வீட்டுக்கு தேவையான மேசை நாற்காலிகள் மற்றும் அலங்காரப் பொருட்களை நயன்தாரா கடை, கடையாக சென்று வாங்கி வருகிறார். இதனால் சென்னையின் முக்கிய கடைகளில் நயன்தாரா – பிரபுதேவா ஜோடியை அடிக்கடி பார்க்க முடிகிறது.

comments | | Read More...

பிப்ரவரியில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்..

 
 
 
நயன்தாரா-பிரபுதேவா திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது. இதனால் இருவரும் இப்போது தங்கள் இருப்பிடத்தை ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு மாற்றியுள்ளனர்.
 
பிரபு தேவா இயக்கத்தில் வந்த வில்லு படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா திருமணம் ஆகாதவர்.
 
அவரை திருமணம் செய்துகொள்வதற்கு வசதியாக பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். அதன்பிறகு பிரபுதேவா, நயன்தாராவுடன் மும்பையிலும், ஹைதராபாதிலும் மாறி மாறி வசி்த்து வருகிறார்.
 
சீக்கிரமாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரபுதேவாவிடம், நயன்தாரா வற்புறுத்தி வருகிறார். பிரபுதேவா திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறார். விவாகரத்து ஆகிவிட்டாலும் முன்னாள் மனைவியையும் குழந்தைகளையும் அடிக்கடி பார்த்து வருகிறார். இதனால் பிரபு தேவா - நயன்தாரா இடையே அடிக்கடி சண்டையும், அப்புறம் சமாதானமும் ஏற்பட்டு வருகிறது.
 
இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இருவரும் வருகிற பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள்.
 
போட்கிளப் பகுதியில் புதிய வீடு
 
அதற்கு வசதியாக நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில், வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியுள்ளனர்.
 
வீட்டுக்கு தேவையான மேசை நாற்காலிகள் மற்றும் அலங்காரப் பொருட்களை நயன்தாரா கடை, கடையாக சென்று வாங்கி வருகிறார். இதனால் சென்னையின் முக்கிய கடைகளில் நயன்தாரா - பிரபுதேவா ஜோடியை அடிக்கடி பார்க்க முடிகிறது.



comments | | Read More...

தோழிகள் தாலி கட்டி திருமணம்: மணக்கோலத்தில் வந்தவர்களுக்கு அடி, உதை

 
 
 
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த காத்தாயகுண்டா பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் பிரசன்னா (21), ஜீனா (25). ஆரம்பப்பள்ளியில் ஒன்றாக படிப்பை தொடங்கிய இருவரும் 10ம் வகுப்பு வரை ஒன்றாகவே படித்துள்ளனர். பின்னர், படிப்பை நிறுத்திவிட்டு அங்குள்ள பால் டிப்போவில் வேலை செய்து வருகின்றனர்.
 
இருவரும் நெருங்கிய தோழிகள். எப்போதும் இணைபிரியாமல் இருப்பார்களாம். ஒன்றாகவே வேலைக்கு வருவார்கள். ஒன்றாகவே திரும்பி செல்வார்கள். வெளியில் போவதென்றாலும் சேர்ந்தே சென்று வருவார்கள்.
 
 
சமீபத்தில் ஒருநாள், அவர்கள் பேசும்போது, திருமணம் நடந்தால் வேறு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டி இருக்குமே என்று கூறி வருத்தப்பட்டுள்ளனர். வேறொருவரை திருமணம் செய்தால்தானே பிரிய வேண்டும். நாம் இருவருமே திருமணம் செய்துகொள்ளலாமே என்றும் பேசியிருக்கின்றனர்.
 
 
07.11.2011 அன்று காலை இருவரும் வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறினர். திருப்பதியில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றனர். அங்கு மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர், பிரசன்னாவின் கழுத்தில் ஜீனா தாலி கட்டியுள்ளார்.
 
 
புதுமண தம்பதி முதலில் பிரசன்னாவின் வீட்டுக்கு சென்றனர். இருவரும் மாலையும், கழுத்துமாக வீட்டு வாசலில் நிற்பதை பார்த்து பிரசன்னாவின் அப்பா, அம்மா அதிர்ச்சி அடைந்தனர். தகவல் தெரிந்து அக்கம்பக்கத்தினர் திரண்டு வேடிக்கை பார்க்க கூடினர்.
 
 
அவமானமாக கருதிய பெற்றோர், நடு வாசலில் வைத்தே பிரசன்னாவை சரமாரியாக அடித்து, உதைத்தனர். பின்னர் அவரை வீட்டுக்குள் அடைத்தனர். ஜீனாவையும் அடித்து, உதைத்து அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். வீட்டுக்கு வந்த ஜீனாவை அவரது அப்பா, அம்மாவும் அடித்துள்ளனர்.
 
 
உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் இதுபற்றி மாறிமாறி விசாரித்ததால் வேதனை அடைந்த இரு வீட்டாரும் வீட்டை பூட்டிக்கொண்டு, மகள்களையும் அழைத்துக் கொண்டு வெளியூர் சென்றுவிட்டனர். நெருங்கிய பழகிய தோழிகள் திருமணம் செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



comments | | Read More...

கோலிவுட்டை அசத்தும் அஞ்சலி!

 
 
 
கொடுத்த கதாபாத்திரத்தில நிறைவா நடிக்கும் ஹீரோயின் அஞ்சலி என்று, கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. 'அங்காடித் தெரு', 'எங்கேயும் எப்போதும்' படங்களில் நடிப்பில் அசத்திய அஞ்சலிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளாம். அதுமட்டுமின்றி ஏ.ஆர்.முருகதாஸின் முதல் தயாரிப்பான 'எங்கேயும் எப்போதும்' படத்தில் காதலனை அன்பாக மிரட்டும் காதலியாக நடித்த அஞ்சலிக்கு அடுத்த தயாரிப்பிலும் ஹீரோயின் வாய்ப்பை கொடுத்துள்ளாராம் முருகதாஸ். இதைதொடர்ந்து அரவான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வரும் அஞ்சலியை இயக்குனர் வசந்தபாலன் வெகுவாக பாரபட்டியுள்ளாராம்.
 
 
 
 


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger