News Update :
Powered by Blogger.

வைரஸ் பாதிப்பால் இன்டர்நெட் பார்ப்பதில் தடை ஏற்பட வாய்ப்பு

Penulis : karthik on Sunday 8 July 2012 | 23:18

Sunday 8 July 2012


இந்தியாவில் டிஎன்எஸ் சேஞ்சர் வைரஸ் பாதித்த ஆயிரக்கணக்கான கம்ப்யூ ட்டர்களில், இன்று முதல் இன்டர்நெட் பார்ப்பதில் தடை ஏற்படலாம் என இணையதள பாதுகாப்பு நிறுவனம் மெக்அபி தெரிவித்துள்ளது. டிஎன்எஸ் சேஞ்சர் வைரஸ் என்பது மால்வேர் என அழைக்கப்படும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் புரோக்ராம். இந்த புரோக்ராம், ப� ��ரும்பாலும் ஆபாச வெப்சைட்கள் மூலமாகத்தான் பரப்பப்படுகின்றன. இந்த சாப்ட்வேரை 
பயன்படுத்தினால்தான் வீடியோ காட்சிகளை பார்க்க முடியும் என தெரிவிக்கப்படும். இதை இன்ஸ்டால் செய்யும்போது, நமது கம்ப்யூட்டர்களின் டிஎன்எஸ் (டொமைன் நேம் சிஸ்டம்) மாற்றியமைக்கப்படுகிறது.

இதன்பின், நாம் ஒரு வெப்சைட் முகவரியை டைப் செய்தால், அது மற்ற போலி வெப்சைட்டுக� �ுக்கு செல்லும். இதனால் நாம் விரும்பும் வெப்சைட்களை பார்க்க முடியாது. முறைகேடான வழியில் விளம்பர வருவாயை தேடி கொள்வதற்காக இதுபோன்ற மால்வேர்களை சில நிறுவனங்கள் உருவாக்கி இன்டர்நெட் மூலமாக பரப்புகின்றன. இதன்மூலம், அந்த நிறுவனத்தின் விளம்பரதாரர் வெட்சைட்களை மட்டுமே நாம் பார்� ��்க முடியும். ஈஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த ரோவ் டிஜிட்டல் என்ற நிறுவனம், இது போன்ற டிஎன்எஸ் சேஞ்சர் வைரஸை முன்பு பரப்பி 14 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது.

டி.என்.எஸ் சேஞ்சர் வைரஸ் சம்பந்தப்பட்ட சர்வர்களை அமெரிக்காவின் எப்.பி.ஐ இன்று மூடுகிறது. இதனால், வைரஸ் பாதிக்கும் கம்ப்யூட்டர்களில் இன்று முதல் இன்டர்நெட் பார்ப்பதில� �� தடை ஏற்படும் என இணையதள பாதுகாப்பு நிறுவனம் மெக்அபியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தற்போது உலகம் முழுவதும் 3 லட்சம் கம்ப்யூட்டர்களில் டி.என்.எஸ் சேஞ்சர் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 50 ஆயிரம் கம்ப்யூட்டர்களில் டிஎன்எஸ் சேஞ்சர் வைரஸ் பாதிப்பு உள்ளதாக 'இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இவற்றில் பாதி கம்ப்யூட்டர்களில் வைரஸ் பாதிப்பு நீக்கப்பட்டு விட்டன.  மீதமுள்ள கம்ப்யூட்டர்களை கண்டறியும் பணியில் அந்த குழு ஈடுபட்டுள்ளது. அந்த கம்ப்யூட்டர்களில் மட்டும் இன்டர்நெட் பார்ப்பதில் இன்று முதல் தடை ஏற்படலாம்.


comments | | Read More...

விஜயை காதலிப்பாரா ஸ்ருதி?


கௌதம் மேனன் விஜயை வைத்து எடுக்கும் யோஹான்: அத்தியாயம் ஒன்று படத்தில் ஸ்ருதி ஹாசனை நாயகியாக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கௌதம் மேனன் விஜய் இணையும் படம் யோஹான்: அத்தியாயம் ஒன்று. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கமல் மகள் ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்க அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது.

இந்தி படங்களில் கவனம் செலுத்த மும்பையில் குடியேறியுள்ள ஸ்ருதியை கௌதம் மேனன் தமிழகத்திற்கு அழைத்து வர முயற்சி செய்து வருகிறார். விஜய் ஏ.ஆர். முருகதாஸின் துப்பாக்கி படத்தில் பிசியாக இருக்கிறார். அந்த படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போன்று கௌதம் மேனன் ஜீவா, சமந்தாவை வைத்து நீ தானே என் பொன் வசந்தம் படத்தை எடுத்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் முடிந்த பிறகு ஆகஸ்ட் மாதத்தில் யோஹான் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.


comments | | Read More...

ராஜபக்சே சொல்லித்தான் தமிழர்களைக் கொன்று குவித்தோம்.. சிங்கள தளபதி 'பகீர்' பேச்சு!


ராஜபக்சேதான் எந்தவித சர்வதேச நெருக்கடி வந்தாலும் அதற்குப் பயப்படாதீர்கள். தொடர்ந்து தாக்குதல் நடத்தி தமிழர் களைக் கொன்று குவியுங்கள் என்று உத்தரவிட்டார். அவரது ஊக்குவிப்பால்தான் எங்களால் தமிழர்களைக் கொல்ல முடிந்தது என்று பச்சையாகவே பேசி சிங்களத்தின் இன அழிப்பை உறுதி செய்துள்ளார் இலங்கை ராணுவ தளபதியான ஜெகத் ஜெயசூரியா.

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்கால் என்ற மிகச் சிறிய பகுதிக்குள் சிக்கிக் கொண்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொத்து வெடிகுண்டுகளை வீசிக் கொடூரமாகக் கொன்று குவித்தது சிங்கள ராணுவம்.

இந்த நிலையில் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து விடாமல் நடத்துமாறும், தமிழர்களைக் கொல்லுமாறும் ராஜபக்சேதான் உத்தரவிட்டதாக இலங்கை ராணுவ தளபதி ஜெயசூர்யா பகிரங்கமாகவே கூற ியுள்ளார்.

குருநாகல் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜெயசூரியா கொக்கரித்துப் பேசியதாவது...

கடந்த 2009ம் ஆண்டு இலங்கையின் வடக்குப்பகுதியில் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடு� �ளின் உதவியோடு போர் நடத்தினோம். கடைசியாக முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் நடத்துவதா? வேண்டாமா? என்று தோன்றியது.

ஏனென்றால் அந்த பகுதியில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் வசித்து வந்தனர். அங்கு குண்டு போட்டால் ஒருவர் கூட மிஞ்ச மாட்டார்கள் என்று நினைத்தோம். மேலும் இறுதிக்கட்ட போரை நடத்தக் கூடாது என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின.

இதையடுத்து அதிபர் ராஜபக்சேவிடம் ஆலோசனை நடத்தினோம். அப்போது அவர் எக்காரணம் கொண்டும் போரை நிறுத்த வேண்டாம் என்றும், சர்வதேச மிரட்டல்களுக்கு அடி பணியாமல் தொடர்ந்து திட ்டமிட்டபடி தாக்குதல் நடத்துங்கள் என்று என்னிடம் தொலைபேசியில் உத்தரவிட்டார். அவர் கொடுத்த தைரியத்தில்தான் போரை வெற்றிகரமாக நடத்த முடிந்தது.

மேலும் போர்க்காலத்தில் அவர்தான் எங்களுக்கு பலமாக இருந்தார். அவர் மட்டும் மனிதாபிமான அடிப்படையில் இரக்கம் காட்டியிருந்தால் நம்மால் இறுதிக்கட்டப் போரில் வென்றிருக்க முடியாது. இறுதிக்கட்டப் போரில் நாம் வெல்ல உறுதுணையாக இருந்த நாடுகளையும், அவர்கள் செய்த உதவிகளையும் மறக்கவே முடியாது என்று பேசியுள்ளார்.

ராஜபக்சே மனிதாபிமானம் இன்றி நடந்தார், தமிழர்களைக் கொத்துக் கொத்தாக கொல்ல உத்தரவிட்டார், ஊக்குவிப்பு செய்தார் என்று பச்சையாக, பகிரங்கமாக கூறியுள்ளார் ஜெயசூர்யா.

இருந்தாலும் இதுகுறித்தும் சர்வதேச சமுதாயம் எதையும் கண்டுகொள்ளாது என்றே தோன்றுகிறது.


comments | | Read More...

2011-ஆம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகள்


மும்பையைச் சேர்ந்த சினிமா இதழான பிலிம்பேர் ஆண்டுதோறும் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களுக்கு விருது வழங்கி வருகிற� �ு.

2011-ம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகள் நேற்று இரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் அறிவிக்கப்பட்டது. தமிழில் சிறந்த நடிகராக தனுஷ் (படம்: ஆடுகளம்) தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு நடிகை தீபிகா படுகோன் விருது வழங்கினார்.

தமிழில் சிறந்த நடிகைக்கான விருதை அஞ்சலி (படம்: எங்கேயும் எப்போதும்) பெற்றார்.

மற்ற விருதுகள் விவரம் வருமாறு:-

சிறந்த படம்: ஆடுகளம்.

சிறந்த இயக்குனர்: வெற்றிமாறன் (ஆடுகளம்).

சிறந்த துணை நடிகர்: அஜ்மல் (கோ).

சிறந்த துணை நடிகை: அனன்யா (எங்கேயும் எப்போதும்).

சிறந்த இசை அமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் (ஆடுகளம்).

சிறந்த பாடகர்: ஆலப்ராஜு (கோ படத்தில் என்னமோ ஏதோ பாடல்).

சிறந்த பாடகி: சின்மயி (வாகை சூடவா படத்தில் சரசர பாடல்).

சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து (சரசர பாடல்).

சிறந்த புதுமுக நடிகைக்கான விருது ஸ்ருதி ஹாசனுக்கு வழங்கப்பட்டது. அவரது தந்தை நடிகர் கமலஹாசன் விருது வழங்கி மகளை விழா மேடையில் வாழ்த்தினார்.

தெலுங்கு

தெலுங்கில் சிறந்த படம்: டோகுடு.

சிறந்த நடிகர்: மகேஷ்பாபு, (படம்: டோகுடு).

சிறந்த நடிகை: நயன்தாரா (ஸ்ரீராமராஜ்ஜியம்).

சிறந்த இசையமைப்பாளர்: எஸ்.எஸ். தமன் (டோகுடு).

சிறந்த பாடகர்: ராகுல் நம்பியார் (டோகுடு படத்தில் 'குருவாரம் மார்ச் ஒகட்டி' பா டல்).

சிறந்த பாடகி: ஸ்ரேயா கோசல் (ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் 'ஜெகதன்னதா' பாடல்).

மலையாளம்

மலையாளத்தில் சிறந்த படம்: டிராபிக்.

சிறந்த நடிகர்: சலிம்குமார் (படம்: ஆதாமின்ட் மகன் அபு).

சிறந்த நடிகை: காவ்யா மாதவன் (கத்தம்மா).

சிறந்த இயக்குனர்: பிலெஸ்சி (பரணயம்).

சிறந்த பாடகர்: விஜய் ஜேசுதாஸ்.

சிறந்த பாடகி: ஸ்ரேயா கோசல்.

கன்னடம்

கன்னடத்தில் சிறந்த படம்: ஒலவே மந்த்ரா.

சிறந்த இயக்குனர்: ஜெயதீர்த்தா (ஒலவே மந்த்ரா).

சிறந்த நடிகர்: புனீத்ராஜ் குமார் (குடுகாரு).

சிறந்த நடிகை: ரம்யா (சஞ்சு வெட்ஸ் கீதா).

சிறந்த பாடகர்: சேதன்.

சிறந்த பாடகி: ஸ்ரேயா கோசல்.

விருது வழங்கும் விழாவில் நடிகர்கள் கமலஹாசன், கார்த்தி, விக்ரம், நடிகைகள் குஷ்பு, திரிஷா, ரம்யா, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரிச்சா கங்கோபாத்யாய், பூர்ணா ஆகியோரது நடன நிகழ்ச்சிகளும் நடந்தது.


comments | | Read More...

விஜய் ஜோடியாக நடிக்கவில்லை: ஸ்ருதிஹாசன்


விஜய்யை வைத்து கவுதம் இயக்கும் புதிய படம் யோஹன் அத்தியாயம் ஒன்று. இதில் விஜய் ஜோடியாக நடிக்க ஸ்ருதி� �ாசனை ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் பரவியது. பவன் கல்யாணுடன் ஸ்ருதி தெலுங்கில் நடித்த கப்பார்சிங் படம் வெற்றிகரமாக ஓடியது. எனவே ஸ்ருதியை கவுதம் யோஹன் படத்துக்கு தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து ஸ்ருதியிடம் கேட்டபோது மறுத்தார். யோஹன் படத்தில் விஜய்யுடன் நடிப்பதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. அப்படத்தில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை என்றார். தன் கைவசம் நிறைய படங்கள் இருப்பதாகவும் கூறினார்.

கவுதம்மேனனும் ஸ்ருதியை தேர்வு செய்ததாக வெளியான செய்திகள் வெறும் வதந்திதான் என்றார். யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிப்பதற்காக ஸ்ருதியிடம் பேசவில்லை. கதாநாயகி தேர்வை இன்னும் தொடங்கவில்லை. இங்கிலாந்தில் பெரும் பகுதி காட்சிகள் படமாக உள்ளது. ஹாலிவுட் நட� ��கர்களும் இதில் நடிக்க உள்ளனர் என்றார்.


comments | | Read More...

'நித்தியானந்தா ஆசிரமத்தில் சாப்பாட்டில் எதையோ கலந்து பக்தர்களை மயக்குகிறார்கள்'


நித்தியானந்தாவுக்குத் தைரியம் இருந்தால் உண்மை கண்டறியும் சோதனை, மருத்துவப் பரிசோதனைகளுக்கு அவர் முன்வர வேண்டும். நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் தங்குவோருக்கு சாப்பாட்டில் எதையோ கலந்து மயக்க நிலையிலேயே வைத்திருக்கிறார்கள் என்று லெனின் கருப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.

நித்தியானந்தாவின் முன்னாள் ஆதரவாளராக இருந்த லெனின் கருப்பன், ஆர்த்திராவுடன் இணைந்து நித்தியானந்தா குறித்த பரபரப்பு வீடியோ காட்சிகளை வெளியிட்டு அம்பலப்படுத்தியவர� � ஆவார். நேற்று இவர் பெங்களூரில் ஸ்பந்தனா அமைப்பின் பொதுச் செயலாளர் வீணாவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது லெனின் கருப்பன் பேசியதாவது...

நித்தியானந்தாவையும், அவரது செயல்ககளையும் எதிர்த்தேன் என்ற ஒரே காரணத்திற்காக என் மீது உ.பி, தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் மொத்தம் 13 வழக்குகளைப் போட்டுள்ளனர். மேலும் எனக்கு நித்தியானந்தாவிடமிருந்து கொலை மிரட்டலும் தொடர்ந்தபடி உள்ளது. இதுதொடர்பாக நான் தமிழக காவல்துறையில் புகாரும் கொடுத்துள்ளேன்.

நித்தியானந்தா - ரஞ்சிதா இடம் பெற்ற வீடியோ காட்சிகள் உண்மையானவை என்று அமெரிக்காவைச் சேர்ந்த தடயவியல் ஆய்வகம் தெள்ளத் தெளிவாக அறிக்கை கொடுத்துள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த போபத்லால் சல்வா என்பவர் அங்கு தொடர்ந்த வழக்கில், நித்தியானந்தா பவுண்டேஷனுக்கு எதிராக அமெரிக்க கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அது ஒரு மோசடி நிறு� ��னம் என்றும் அது அறிவித்துள்ளது.

தொண்டு நிறுவனம் என்ற பெயரில் நித்தியானந்தாவின் சகோதரர்கள் பலகோடி அளவுக்கு பஞ்சலோக சிலைகளை ஏற்றுமதி செய்து மோசடி புரிந்துள்ளனர்.
என்னை கி றிஸ்தவர் என்று பொய்யான பிரசாரத்தை நித்தியானந்தா தரப்பு பரப்புகிறது. ஆனால் நான் ஒரு இந்து, கிறிஸ்தவர் அல்ல.

நித்தியானந்தா ஆசிரமத்தைத் தேடிப் போகும் பக்தர்களை மூளைச் சலவை செய்து தங்கள் பக்கம் திருப்பி விடுகின்றனர். நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு ஆயிரக்கணக்கான பேர் பல கோடி பணத்தை தானமாக கொடுத்துள்ளனர். ஆசிரமத்தில் எதையாவது காட்டி பக்தர்களை அங்கிருந்து போக வி டாமல் செய்து விடுகிறார் நித்தியானந்தா.

நித்தியானந்தாவை அம்பலப்படுத்தவும், அந்த ஆசிரமத்தில் நடக்கும் அக்கிரமச் செயல்களை வெளிக் கொண்டு வரவும் எனக்கே பெரும் மன மாற்றம் தேவைப்பட்டது. இதற்காக நான் 17 நாட்களுக்� ��ு அங்கு கொடுக்கப்பட்ட உணவை சாப்பிடவில்லை. இதனால்தான் என்னால் ஒரு நிலையான மன நிலைக்கு வர முடிந்தது. எனவே உணவிலேயே அவர்கள் எதையோ கலந்து ஒருவகையான அடிமை நிலையில் அங்குள்ளவர்களை வைத்திருக்கிறார்கள். உணவுடன் எதையோ கலந்து மயக்க நிலைக்குக் கொண்டு போய் விடுகின்றனர்.

மருத்துவுப் பரிசோதனைக்கு வருமாறு நித்தியானந்தாவுக்கு கர்நாடக சிஐடி போலீஸ் பலமுறை சம்மன் அனுப்பி விட்டது. ஆனால் வர மறுக்கிறார் நித்தியானந்தா. ஏன் இந்த சோதனைகளுக்கு அவர் தயங்க வேண்டும். தைரியம் இருந்தால் அவர் உண்மை கண்டறியும் சோதனை உள்ளிட்ட மருத்துவ சோதனை களுக்கு வர வேண்டும் என்றார் அவர்.


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger