News Update :
Powered by Blogger.

பிரெட்லீயை எதிர்கொண்டு ஆடியது சந்தோஷம்: ஓய்வு பெற்ற பிரெட்லீக்கு சச்சின் புகழாரம்

Penulis : karthik on Sunday, 15 July 2012 | 22:07

Sunday, 15 July 2012





ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இரு தினங்களுக்கு முன்பு அறிவித் தார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிரெட்லீக்கு, இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் தெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
 
இது குறித்து தெண்டுல்கர் டுவிட்டர் இணையதளத்தில் எழுதி இருக்கும் பாராட்டில், `எங்களது வெற்� ��ிகரமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன், உங்கள் வருங்காலம் வளமாக அமையவும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பிரெட்லீ வீசிய பந்துகளை எதிர்கொண்டு ஆடியது சந்தோஷமாக இருந்தது' என்று குறிப்பிட்டுள்ளார். தெண்டுல்கரின் பாராட்டுக்கு பிரெட்லீ பதிலளிக்கையில், `உங்களுக்கு எதிராக பந்து வீசியது எனக்கும் மகிழ்ச்சியை தந்தது. களத்தில் கடும் போட� ��டியை ஏற்படுத்தி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நிச்சயமாக என்னுடைய முழு திறமையும் வெளிக்கொண்டு வர வைத்தீர்கள்' என்று தெரிவித்துள்ளார்.
 
இதேபோல் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ள யுவராஜ்சிங்கும், ப ிரெட்லீயை பாராட்டி இருக்கிறார். `பிரெட்லீயின் பந்து வீச்சு எப்பொழுதும் எனக்கு பிடித்தமானதாகும். அவர் மேட்ச் வின்னர் சாம்பியன். உலகத் தரம் வாய்ந்த வீரர் மட்டுமின்றி, நல்ல நண்பரும் ஆவார். ஒரு நல்ல மனிதர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது வருத்தம் அளிக்கிறது. 2004-ம் ஆண்டில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் பிரெட்லீ மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பந்� ��ு வீச்சு மறக்க முடியாததாகும்' என்று கூறியுள்ளார்.







comments | | Read More...

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: டாக்டர் ராமதாஸ் கண்டனம்




பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
கச்சத்தீவையொட் டிய இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் நேற்று இரவு கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க வந்தால் சுட்டுக் கொன்று விடுவோம் என்று எச்சரித்த சிங்கள கடற்படையினர் திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 

இதனால் அச்சமடைந்த மீனவர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளும் நோக்குடன் அங்கிருந்து புறப்பட்ட போது, அவர்களின் வலைகளை அறுத்து சேதப்படுத்தியதுடன் படகுகளில் இருந்து மீன்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

சிங்களப்படையினரின் இந்த தாக்குதலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மீனவர்கள் மீதான சிங்களப்படையினரின் தாக்குதல் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால் இதற்காக இலங்கை அரசை இந்தியா ஒருமுறை கூட கண்டிக்கவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. 

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிறுத்தா விட்டால், தமிழக காவல் துறையை நிறுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்ததை போன்று, தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க துப்பாக்கி ஏந்திய தமிழக கடலோர பாதுகாப்பு படை கா� �லர்களை அனுப்புவோம் அல்லது மீனவர்களின் பாதுகாப்புக்காக அவர்களுக்கு பயிற்சி அளித்து துப்பாக்கி வழங்குவோம் என்று மத்திய அரசை தமிழக முதல்வர் எச்சரிக்க வேண்டும். அதன்பிறகும் மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், மீனவர்களின் பாதுகாப்புக்காக மேற்கூறிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.








comments | | Read More...

கேரள சிறுமி கற்பழித்து கொலை: மகள் சாவுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்- தந்தை கண்ணீர் பேட்டி




கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் சத்யா (வயது 15) பெரம்பலூர் முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜ்குமார் வீட்டில் தங்கி இருந்த ப� ��து கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. 

இந்த புகாரின்பேரில் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார், உள் பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் விசாரணைக்காக பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட கொலையுண்ட சத்யாவின் தந்தை சந்திரன் நிருபர்களிடம் கூற� ��யதாவது:- 

நான் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு நான்கு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை. எனது மூன்றாவது மகள் சத்யா அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த ஒரு மாதத்திற்கு முன் பீர்மேடு பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகியோர் என்னை சந்தித� ��து தமிழ்நாட்டில் பெரம்பலூரில் முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ.,வை எங்களுக்கு தெரியும். உன் மகளை படிக்க வைக்க நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்றனர். 

இதை நம்பிய நானும் எனது மனைவியும் சத்யாவை பெரம்பலூர் அனுப்ப சம்மதித்தோம். எங்கள் மகள் பலாத்காரம் செய்யப்பட்டு பலிகடா ஆகிவிட்டாள். கடந்� � சில தினங்களாக என்ன செய்வது என்பதை அறியாமல் குழம்பி போய் உள்ளோம். 

கேரளாவுக்கு சென்று எனது மகள் பிரேதத்தை பார்த்த போது தான் உடலில் காயம் இருந்தது தெரிய வந்ததை தொடர்ந்து பீர் மேடு போலீசில் புகார் செய்தோம். போலீசில் எல்லா விபரங்களையும் நாங்கள் சொல்லிவிட்டோம். என் மகளின் சாவுக� ��கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். போலீசார் எங்களுக்கு நீதிகிடைக்கச் செய்வார்கள் என நம்புகிறோம். 

இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.









comments | | Read More...

மலேரியா காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் சாதனை





சுவிட்சர்லாந்தில் பேஸெல் நகரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியின் திட்டத்தலைவரான பிளேய்ஸ் ஜெண்ட்டான் 40 ஆண்டுகால உழைப்புக்கு பின்பு மலேரியா காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததில் வெற்றி கண்டுள்ளார். 

அந்த தடுப்பு மருந்து பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்ப ட்டு இப்போது நம்பிக்கை அளித்து வருகிறது. மலேரியா நோய் வைரசால் ஏற்படுவதில்லை. ஒட்டுண்ணியால் தோன்றுகிறது. ஒட்டுண்ணியால் ஏற்படும் ஒரு நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். 

இதுவும் மருந்து கொடுக்கப்பட்டவரில் நூற்றுக்கு ஐம்பது பேருக்கு பலனிக்கிறது. இந்த ஐம்பது பேர் பலனடைவதே மருத்துவ உலகில் குறிப்ப� ��டத்தக்க சாதனையாகும். 

ஏழு ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் 1 1/2 வயது குழந்தை முதல் ஐந்து வயது சிறுவர் வரை சுமார் 16 ஆயிரம் பேரிடம் இந்த மருந்தைக் கொடுத்து பரிசோதனை செய்து பார்த்ததில் பாதிப் பேருக்கு நோய் தீர்ந்து விட்டது. இருபது வகையான மருந்துகளை கொடுத்து சோதித்தில் இந்த தடுப்பு மருந்து மட்டுமே பாதிப்பேரையாவது சுகப்படுத்தியது. 

இதற்காக பலரும் இருபதாண்டுகளுக்கு மேல் கடுமையான உழைத்துள்ளனர். மலேரியா பாதிக்கப்பட்ட அனைவரும் உயிரிழப்பதைக் காட்டிலும் பாதிப்பேராவது உயிர் பிழைப்பது பெரிய வெற்றிதான். 

இந்த மருந்து நோயைத் தடுக்கிறது என்பது உறுதியான நம்பிக்கையை மருத்துவ ஆராய்ச்சியாளருக்கு அளிக்கின்றது. இதுவே பெரிய சாதனை என்று ஜெனீவா மருந்து ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குனர் பெர்னார்டு பிக்கோல் தெரிவித்தார்.






comments | | Read More...

அடுத்தடுத்து 2 சிறுமிகளைக் கற்பழித்த 12 வயது சிறுவன்!





லண்டனில் 12 வயது சிறு� ��ன் இரண்டு சிறுமிகளைக் கற்பழித்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான். அவனுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது கோர்ட்.
கிரேட்டல் மான்செஸ்ட்ரில் உள்ள ப ோல்டன் என்ற பகுதியில் முதலில் ஒரு சிறுமியைக் கற்பழித்துள்ளான் இச்சிறுவன். அங்குள்ள பார்க்கில் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பலவந்தப்படுத்தி விட்டான்.
அடுத்து அதே பகுதியில் கால்பந்து வ� ��ளையாடப் போனான். அப்போது அங்கு தன்னுடன் விளையாடிய சிறுமியை நைஸாக தனது வீட்டுக்குப் பின்னால் கூட்டிக் கொண்டு சென்று அங்கு கட்டாயப்படுத்தி செக்ஸ் வைத்துக் கொண்டான்.
இரு சிறுமியரும் தங்களுக்கு நேர்ந்த அக்கிரமத்தை பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் போல ீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் சிறுவனைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மார்க் பிரவுன், நீ இரு சிறுமியரின் சம்மதம் பெறாமல் பலவந்தத்தின் மூலம் செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளாய். இதனால் அந்த இரு சிறுமியரும் பெரும் மன வேதனைக்குள்ளாகியுள்ளனர். � ��வர்களது பெற்றோரின் வலி சொல்லில் சொல்ல முடியாதது என்று கூறினார். பின்னர் சிறைத் தண்டனையை அவர் அறிவித்தார்.







comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger