கியாஸ் சிலிண்டர் கட்டுப்பாட்டுக்கு 93 சதவீத மக்கள் கடும் எதிர்ப்பு: கருத்து கணிப்பில் தகவல் கியாஸ் சிலிண்டர் கட்டுப்பாட்டுக்கு 93 சதவீத மக்கள் கடும் எதிர்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்
புதுடெல்லி, செப்.28-
மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை பற்றி தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஆமதாபாத், லக்னோ ஆகிய 6 நகரங்களில் வசிப்பவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
சமையல் கியாஸ் சிலிண்டர் கட்டுப்பாட்டை ஏற்கிறீர்களா என்ற கேள்விக்கு 93 சதவீதம் பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அது போல டீசல் விலை உயர்வை 87 சதவீதம் பேர் எதிர்த்தனர்.
நாட்டில் இப்போது எந்த பிரச்சினை கவலை தருவதாக உள்ளது என்ற கேள்விக்கு 57 சதவீதம் பேர் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தை குறிப்பிட்டனர். நிலக்கரி சுரங்க ஊழலுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கே காரணம் என்று 66 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் காங்கிரஸ் கட்சியினர் அதிக லாபம் அடைந்துள்ளதாக 49 சதவீதம் பேர் கூறுயுள்ளனர். கூட்டணி கட்சிகளால் மத்திய அரசு கவிழும் என்று 14 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசில் இருந்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலகி இருப்பது சரியான நடவடிக்கை என்று 67 சதவீதம் பேர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மத்திய அரசை பாதிக்கும் விஷயமாக விலைவாசி உயர்வு இருப்பதாக 51 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.
சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீடு நாட்டில் உள்ள சிறு வியாபாரிகளை அழித்து விடும் என்று 53 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளால் பிரதமரால் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க இயலாது என்று 67 சதவீத மக்கள் கருத்து தெரி வித்துள்ளனர்.
Post a Comment