News Update :
Powered by Blogger.

தபால் நிலையங்களில் சோலார் விளக்குகள் விற்பனை: தமிழகம் முழுவதும் விரைவில் கிடைக்கும்

Penulis : karthik on Friday, 13 April 2012 | 23:54

Friday, 13 April 2012




தபால் பரிமாற்ற சேவை, � ��ணப் பரிமாற்றம் மற்றும் சிறு சேமிப்பு உள்ளிட்ட சேவைகளை அளித்து வந்த தபால்துறை பொதுமக்களின் நலனைக் கருதியும், வருவாயை பெருக்கவும் மேலும் சில அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகிறது. தபால் நிலையங்களில் ஏற்கனவே தங்க நாணயம் விற்பனை, ரெயில் டிக்கெட் முன்பதிவு, மின்கட்டணம் செலுத்தும் வசதி, கைக்கடிகார விற்பனை, மினி குளிர் சாதனப்பெட்டி விற்பனை ஆகியவை நடந்து வருகிறது.

தபால்துறை தற்போது பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமாக பயன்படக்கூடிய நவீன சோலார் விளக்குகள் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் ஏற்படும் தொடர் மின்வெட்டால் இந்த திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நாள் முழுவதும் சூரிய ஒளியில் சார்ஜ் செய்து இரவ� �� முழுவதும் இந்த விளக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். தனியார் நிறுவனத்துடன் கூட்டாக இந்த திட்டத்தை தபால்துறை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 3 வகையான சோலார் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில் டி.லைட் எஸ் 250 என்ற மாடல் விலை ரூ.1,699 ஆகும். இது சி.எல்.எப். பல்புகளை காட்டிலும் அதிக வெளிச்சம் கொண் டது. 50 ஆயிரம் மணி நேரம் எரியும். 12 மாதம் உத்தரவாதம் உள்ளது. இதில் செல்போனையும் 1.3 வாட் திறன் கொண்ட சோலார் தகடையும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். டி.லைட் எஸ் 10 மாடல� � விளக்கு ரூ.549 ஆகும். இது உறுதியான பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது எளிதில் உடையாது. டி.லைட் எஸ் 1 மாடல் விளக்கின் விலை ரூ.399 ஆகும். இதற்கு 6 மாதம் உத்தரவாதம் உள்ளது. இந்த சோலார் விளக்கு கள் தற்போது வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு தலைமை தபால் நிலையங்கள், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், திருப்போரூர் கருங்குழி, உத்திரமேரூர், பெரிய காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, லத்தேரி, ஒடுகத்தூர், அணை� ��்கட்டு, கனியம்பாடி, சத்துவாச்சாரி ஆகிய துணை தபால் நிலையங்கள் என 19 தபால் நிலையங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய தபால் நிலையங்க ளிலும் இத்திட்டத்தை விரிவுப்படுத்துவதற்கான முயற்சியை தபால் துறை எடுத்து வருகிறது. இந்த தகவலை சென்னை தலைமை அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



comments | | Read More...

தமிழ் ஈழத்துக்காக பொதுவாக்கெடுப்பு நடத்துங்கள் - ஐநாவுக்கு வைகோ கோரிக்கை




தமிழீழம் அமைய ஐ.நா.சபை சார்பில் பொது வாக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினா� ��்.

உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய 'பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்' நூல் வெளியீட்டு விழா தியாகராய நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நூலினை வெளியிட, தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் மு.பாலசுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார்.

விழாவில் வைகோ பேசுகையில், "இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுதங்களை வழங்கியது. இந்த வஞ்சக சூழ்ச்சியால்தான் விடுதலைப் புலிகள் போரில் தோற்றனர்.

இப்போது இலங்கையின் கிழக்கு மாகாணங்களில் சிங்களர்கள் குடியேற்றம் விரைவாக நடைபெறுகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்களைக் கொன்று விட்டதாக இலங்கை அரசு கருதலாம். ஆனால் ஈழத் தமிழர்கள் பின்னால் 7 கோடி தமிழர்கள் இருக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கைப் பிரச்னைக்கு தமிழீழம் ஒன்றுதான் தீர்வாக இருக்க முடியும். ஐ.நா.சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி பொது வாக்கெடுப்பு எடுத்து தமிழீழம் அமைக்காவிட்டால் மீண்டும் விடுதலைப் புலிகள் ஆயுதம் தாங்கிப் போராடுவார்கள்.

பொது வாக்கெடுப்பா, ஆயுதமா என்பதை வரலாறே தீர்மானிக்க முடியும். ஆயுதம் தாங்கிப் போராடுவதைத் தவறு என்று யாரும் சொல்ல முடியாது. தவறு என்றால் எல்லா நாடுகளும் தங்கள் ஆயுதங் களை பசிபிக் கடலில்தான் கொட்ட வேண்டும். எந்த நாடாவது அப்படிச் செய்ய முன் வருமா?

பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஆயுதம் வாங்குவதற்குத்தான் எல்லா நாடுகளும் நிதி அதிகம் ஒதுக்குதின்றன என்பதை மறந்து விடக் கூடாது. எனவே ஆயுதம் எடுப்பதில் தவறு இல்லை.

பழ.நெடுமாறன் எழுதியுள்ள இந்த நூல் ஈழத் தமிழர்களின் அடுத்த கட்டத்துக்கான ஆயுத சாலையாகப் பயன்படும்," என்றார் வைகோ.

பழ.நெடுமாறன் பேசுகையில், "பிரபாகரன் புகழ் பாடுவதற்காக இந்த நூலை எழுதவில்லை. அதை அவர் விரும்பவும் மாட்டார். ஈழத் தமிழர்களின் தியாகத்தையும் வீரத்தையும் இளைய தலைமுறை தெர ிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் எழுதியுள்ளேன். பிரிட்டிஷார் ஆட்சியில் தமிழர்கள் கூலிகளாகத்தான் பார்க்கப்பட்டனர்.

இந்தப் பார்வை சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்தது. விடுதலைப் புலிகளுடைய எழுச்சிக்குப் பின்னரே இந்தப் பார்வை மாறியது.

வீரம் நிறைந்தவர்களாக இப்போது தமிழர்கள் பார்க்கப்படுகின்றனர்," என்றார் அவர்.

விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, தமிழ்த் தேசிய பொதுவுடைமை கட்சித் தலைவர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்பட பலர் பேசினர்.

விழாவில் பழ.நெடுமாறனுக்கு ம.தி.மு.க. சார்பில் தங்கப் பேனா பரிசளிக்கப்பட்டது.



comments | | Read More...

இலங்கை அருகே புதிய புவிதட்டு உருவாகிறது!




இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடபகுதியின் மேற்கு கரையில் நேற்று முன்தினம் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக� �டர் அளவில் 8.9 என்ற அளவில் அது பதிவானது.

இதனால் இந்தியா, உள்ளிட்ட பல நாடுகளில் பூமி குலுங்கியது. இதனால் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தினால் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் மாலை 6.30 மணியளவில் சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டது.

கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் சுனாமி பேரலைகள் உருவாகி ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகினர்.

   
ஆனால் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது புவி சிறு தட்டுகளில் அதிர்வு ஏற்பட்டது. இருந்த போதும் சுனாமி பேரலைகள் தோன்றவி� ��்லை. இதற்கு புவிதட்டுகளில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதே காரணம் என இங்கிலாந்து புவியியல் நிபுணர் ரொகர் மியூசன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட பெரும்பாலான நில நடுக்கங்களால் நிலைமை மாற்றம் அடைந்துள்ளது. இதனால்தான் சுனாமி ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

புவி 12 தட்டுகளால் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது புதிதாக 13-வது புவிதட்டு ஒன்று உருவாகி வருவதாக இலங்கையின் சிங்கள புவியியல் துறை பேராசிரியர் கபில தஹாநாயக்க தெரிவித்துள்ளார். இது இலங்கை அருகே உருவாகி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா- ஆஸ்திரேலியாவின் புவித்தட்டில் இலங்கை உள்ளது. அதே நேரத்தில் உலகில் அதிக நிலநடுக்கம் உருவாகின்ற ஜப்பான் பசிபிக் புவிதட்டின் மீது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




comments | | Read More...

'டேம் 999' படத்துக்கு விருது




முல்லைப் பெரியாறு அணை உடைவது போன்று தயாரிக்கப்பட்ட 'டேம் 999' படத்துக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது. இப்படம் கடந்த வருடம் ரிலீசானது. கேரளாவை சேர்ந்த சோகன் ராய் இயக்கினார். இப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை உடைந்து வெள்ளம் ஊருக்கு வருவது போன்றும் நிறைய பேர் நீரில் மூழ்கி பலியாவது போன்றும் காட்ச� �கள் இருந்ததால் எதிர்ப்புகள் கிளம்பின.

இதையடுத்து தமிழகத்தில் 'டேம் 999' படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆஸ்க� �ர் விருதுக்கு 'டேம் 999' படம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் விருது கிடைக்கவில்லை.

தற்போது குளோபல் மியூசிக் கவுரவ விருது (ஜி.எம்.ஏ.) இப்படத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த பின்னணி இசை மற்றும் ஒலி அமைப்புக்காக இவ்விருது வழங்கப்பட்டு உள்ளது.



comments | | Read More...

உனக்கு ராணா- எனக்கு தேவா மோதிக் கொள்ளும் நடிகைகள்?




trisha,prabhudeva,trisha party,trisha sexy,trisha hotபூரி-கிழங்கு, பொங்கல்-வடை என்று கல் தோன்றி சட்டி தோன்றா காலத்திலிருந்தே காம்பினேஷன் கூட்டு அமைப்பதில் கில்லாடிகள்தான் நாம். பொங்கல்-கிழங்கு, பூரி-வடை என்று யோசித்து � ��ாருங்களேன். ஞை என்று வயிற்றில் பூச்சி பறக்கும்.

ஆனால் சினிமா காதலுக்கு இதெல்லாம் பெரிய விஷயமேயில்லை. இன்று அது. நாளை எது என்று போடுகிற கூட்டணி அவையெல்லாம். இதில் லேட்டஸ்ட் கலவரம் எது?

பிரபுதேவா பார்ட்டிக்கு த்ரிஷா போனதுதான். இதற்குள்ளிருக்கும் அரசியலை கவனிங்க சார் என்று அதிரடி கிளப்புகிறார்கள் வெட்ட� ��பேச்சு வேதாந்திகள். அவர்களது கால்குலேஷனைதான் கொஞ்சம் அவசரப்படாமல் படியுங்களேன்.

த்ரிஷாவின் காதலராக கிசுகிசுக்கப்படுகிறார் பிரபல தெலுங்கு ஹீரோ ராணா. ஒரு நாள் இருவரும் சந்திக்கவில்லை என்றாலும் பிளைட் பிடித்து சென்னைக்கு வந்துவிடுகிறாராம். ஆனால் இதையெல்லாம் பிரண்ட்ஷிப்புதான் என்று பூசி மெழுகிக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. இந்த ரா� ��ாவோடுதான் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம் நயன்தாரா.

என் ஆளை நீ வளைச்சு போட்டா, உன் ஆளு என் கையில் என்று சொல்லும் விதத்தில்தான் பிரபுதேவா பார்ட்டிக்கு த்ரிஷா போனதாக கொளுத்திப் போடுகிறது இந்த வம்பு மடம். (எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க)

ஆனாலும் பிரபுதேவா-த்ரிஷா காம்பினேஷன் ஞையின்னு பீத ி கிளப்புற மாதிரிதான் இருக்கு.


http://girls-tamil-actress.blogspot.com


comments | | Read More...

பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?




womens likes,men
அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்களை புரிந்து கொள்வது என்பது ஆண்களுக்கு சற்று குழப்பமாகவே உள்ளது.

எந்த நேரத்தில் என்ன நினைக்கிறார்கள் � ��ன்று பல ஆண்களுக்கு தெரியவில்லை. பெண்களை புரிந்து கொண்டவன் அவர்களின் கலாப காதலன் ஆகிறான். ஆண்களில் எந்த வகையான ஆண்களை பிடிக்கும் என்பது ஓரு சின்ன ஆய்வின் மூலம் தெரிந்துள்ளது அதைப்பற்றி இப்போது பார்ப்போம்.

பெண்களுக்கு பொதுவாக மிகவும் பிடிக்கும் ஆண்கள் யார் என்று தெரியுமா நகைச்சுவை உணர்வோடு உலா வரும் ஆண்களைத்தான். பெண்களுக்கு எப்ப� ��ும் டுகடு சிடுசிடுவேன்று இருக்கும் ஆண்களை பிடிக்கவே பிடிக்காது.

ஆனால் அவர்களை சந்தோஷத்தில் முழ்கடிக்கும் வகையில் குறும்பும் நகைச்சுவையும் செய்யும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கும். அந்நகைச்சுவை உணர்வோடு காதலனோ அல்லது கணவரோ அமைந்து விட்டால் அவர்களின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

அவர்கள் உங்கள் மீது வைக்கும் காதலுக்கும் அளவு இல்லை. அதற்க்காக 24 மணி நேரமும் காமெடி செய்தாலும் பிடிக்காது மற்றும் முக்கியமான முடிவு எடுக்கும் சமயத்தில் நகைச்சுவையாக இருந்தாலும் பிடிக்காது. வாழ்க்கையில் சின்னஞ்சிறு சண்டையும் வேண்டும், ஊடலும் வேண்டும்.

இவ்வகையான ஆண்களை கணவனாக அடைந்த சில பெண்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது : நான் மிகவும் பாக் கியசாலி என்று நினைக்கிறேன். அவரை நான் மிகவும் காதலிக்கிறேன்.

நான் அலுவலகத்திலிருந்து மிகவும் கோபத்துடனோ அல்லது சோர்வுடனோ வந்தால், அவர் அவரது நகைச்சுவை உணர்வின் மூலம் என்னை சிரிக்க வைத்துவிடுவார்.

அந்த சமயம் நான் என் கவலைகளையும் மற்றும் களைப்பையும் மறந்து விடுகிறேன். எனக்கு ஒவ்வொரு நாளும் மிகவும் மக� �ழ்ச்சிகரமான நாளகவே செல்கிறது. என்கின்றனர்.என்ன ஆண்களே நீங்கள் எப்படி?


http://girls-tamil-actress.blogspot.com


comments | | Read More...

அதிக வரி செலுத்தியவர்களில் ஷாருக், சல்மான் முன்னிலை




கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் (2011-12) பாலிவுட் நடிகர்கள் பலர் அதிக அளவில் வருமான வ� ��ி செலுத்தியுள்ளனர். இவர்களில் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகிய இருவரும் தலா ரூ.15 கோடி வரி செலுத்தி முன்னிலையில் உள்ளனர்.

ஷாருக் கான் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 20 சதவீதம் குறைவாக வரி கட்டி இருக்கிறார். அதே சமயத்தில் சல்மான் கான் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதல் வரி செலுத்தியுள்ளார். கடந்த ஆண்டு 2 படங்களில் நடித்த ஷாருக் ஒவ்வொரு படத்துக்கும் ரூ.30 கோடி முதல் ரூ.35 கோடி வரை சம்பளம் வாங்கினார்.

2011-12ல் நடிகர் அமிதாப் பச்சன் ரூ.7 கோடி வரி செலுத்தி இருக்கிறார். எனினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 சதவீதம் வரி குறைவாகவே கட்டி இருக்கிறார். அமிதாப் பச்சன் வருமானத்தின் பெரும் பகுதி கோன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சி மூலமாகவே அவருக்கு கிடைத்தது. நடிகர் சைப் அலிகான் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் இந்த ஆண்டு தலா ரூ.7 கோடி வரி செலுத்தி உள்ளனர்.



comments | | Read More...

காமராஜரின் திட்டங்களை அரசியலாக்கி விவாதிக்க வேண்டாம்: சரத்குமார்




காமராஜர் போன்ற தலைவர்களின் திட்டங்களை அரசியலாக்காதீர்கள் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்க� �மார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து நேற்று சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில், 'தொழில், கல்வி, வேளாண்மை என அனைத்துத் துறைகளிலும் காமராஜர் படைத்த சாதனைகளை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.  ஏழைக் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு வர வைப்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார ்.அவரது ஆட்சியில் 27 ஆயிரம் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது. இத்திட்டம் வெற்றிபெற பிச்சை எடுக்கவும் தயார் என காமராஜர் கூறினார்' என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும், 'காமராஜரின் இந்தத் திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. 2006-ல் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்ற காமராஜர் நூற்றாண்டு விழாவில், காமராஜரின் நற்பண்புகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார். மதிய உணவுத் திட்டத்துடன் சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். தொடங்கினார். காமராஜர், எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்� �ளின் திட்டங்களை அரசியலாக்கி விவாதிக்க வேண்டாம்' எனவும் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



comments | | Read More...

இந்தியாவின் மின் உற்பத்தி 2 லட்சம் மெகாவாட்டை தாண்டியது: மத்திய மின்துறை அமைச்சகம்




ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் 660 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய மின் நிலையம் இன்று செயல்படத்தொடங்கியது . இத்துடன், இந்தியாவின் மொத்த மின் உற்பத்தி திறன் 2 லட்சத்து 287 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது என்று மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவற்றில், 1,32,013 மெகா வாட், அனல் மின்சாரம் ஆகும். 38,991 மெகா வாட், நீர் மின்சாரம் ஆகும். 4,780 மெகா வாட், அணு மின்சாரம் ஆகும். இதனால் தமிழகத்திற்கு மத்திய தொகுப்பிலிருந்து அதிக அளவில் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த இரண்டாண்டுகளாக நிலவி வரும் மின்பற்றாக்குறை இன்று வரை தீர்ந்தபாடில்லை. தமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து தற்போது 100 மெகா வாட் மின்சாரம் பகலிலும், 750 மெகா வாட் மின்சாரம் இரவிலும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையை போக்க கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதை தொடர்ந்து பகலில் 200 மெகா வாட் மின்சாரம் வழங்க மத்திய மின்சாரத்துறை அமைச்சர் சதீஷ்குமார் ஷிண்டேயிடம் வலியுறுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் நாராய� �சாமி முன்னதாக கூறியிருந்தார்.

கூடங்குளம் உள்ள அணு உலைகள் முழுமையாக உற்பத்தி தொடங்கும் போது, தமிழகத்திற்கு 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். காற்றாலை மின்சாரத்தின் மூலமும் மின்சாரம் பெற வழிவ கை செய்யப்பட்டு வருகிறது.



comments | | Read More...

2ஜி வழக்கில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் பெரும் தவறுகள்: நீதிபதி கடும் கண்டனம்




2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் மனுக்களை பூர்த்தி செய்வதில் பெரும் பிழைகளை செய்து வருகின்றனர். நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இது போன்ற தந்திரங்களை கையாள்வதற்கு நீதிபதி இன்று கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த வழக்கில் இதுவரை 410 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 200 மனுக்களில் பெரும் தவறுகள் இருந்ததாக இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தெரிவித்தார்.

மேலும் நீதிபதி கூறும்போது சினியுக் பிலிம் பிரைவேட் லிமிடெட் டைரக்டர் கரீம் மொரானி தற்போது ஜாமீனில் உள்ளதாகவும், மேலும் அவர் சமர்பித்துள்ள மனுவில் ஐ.பி.எல். விளையாட்ட� �� போட்டியை காணும் வகையில் தனக்கு ஏப்ரல் 16 முதல் 19 வரை நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கூறியிருந்ததாகவும், இது போன்ற தந்திரங்கள் கையாள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறினார்.

இருந்தபோதிலும், மொரானிக்கு ஏப்ரல் 16 முதல் 19 வரை கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

இந்திய எம்.பிக்களின் இலங்கை பயணம் கைவிடப்படுமா?




அதிமுக தனது பிரதிநிதியை வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டதால், இலங்கை செல்லவுள்ள இந்திய எம்.பிக்கள் குழுவின் பயணம் ரத்து செய்யப்படலாம் அல்லது தள்ளிப் போடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இலங்கை செல்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய எம்.பிக்கள் குழுவைப் பார்த்தால்,அதில் இலங்கைத் தமிழர்கள் பால் தீவிரமான பற்றோ அல்லது ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து ரத்தக் கண்ணீர் விடும் அளவோ அல்லது உண்மையான மறு சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு குறித்து அக்கறை காட்டுவோரை விரல் விட்டு எண்ணி விடலாம்.

காரணம், அந்தக் குழுவில் மதிமுகவிலிருந்து யாரும் இல்லை, இந்திய கம்யூனிஸ்ட் கட� ��சியிலிருந்து யாரும் இல்லை, விடுதலைச் சிறுத்தைகள் இல்லை.

மாறாக ஈழத் தமிழர்களுக்காக பெரிய அளவில் எதுவும் செய்து விடாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐந்து பேரைச் சேர்த்துள்ளனர். தமிழகத்திலிருந்து ஈழத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை உள்ளவர்களை அதில் சேர்க்கவில்லை. மாறாக வட இந்தியாவைச் சேர்ந்த எம்.பிக்களை அதிகம் இண ைத்துள்ளனர். இவர்களுக்கு ஈழப் பிரச்சினை என்ன என்று கூட முழுமையாகத் தெரியாது.

சுஷ்மா சுவராஜ் போன்ற மூத்த தலைவர்களுக்கே கூட சமீபகாலத்தில்தான் இந்தப் பிரச்சினை குறித்து அரை குறையாக தெரிந்தது. இப்படி இருக்கையில், திருமாவளவன், மதிமுக, சிபிஐ போன்றவர்களை சேர்க்காமல் போனதற்கு ராஜபக்சே அரசு கொடுத்த நெருக்குதல்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தக் குழுவிலிருந்து தற்போது அதிமுகவும் கூட விலகி விட்டது. இதனால் மத்திய அரசு குழப்பமடைந்துள்ளது. தற்போது இலங்கையைப் பொறுத்தவரை இந்தியா வேண்டாத விருந்தாளியாக மாறி விட்டது. இந்த நிலையில் குழப்பமான சூழ்நிலையில் எம்.பிக்கள் குழுவை அனுப்புவது குறித� ��து மத்திய அரசும் கூட யோசனையில் இருப்பதாக தெரிகிறது.

இந்தக் குழுவில் முன்பு வெங்கையா நாயுடு இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவருக்கு ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஓரளவுக்குத் தெரியும். அதேபோல பாஜகவைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட் டது. இவர் சேர்க்கப்பட்டிருந்தால் தைரியமாக நாலு வார்த்தையாவது ராஜபக்சேவிடம் பேச வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் இவர்களை மத்திய அரசு சேர்க்கவில்லை.

மாறாக, எம்.கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், மாணிக்க தாகூர் என சம்பந்தமில்லாதவர்களை சேர்த்துள்ளனர். இதில் மாணிக்க தாகூர் ராகுல் காந்தி கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இதிலும் கோஷ்டி இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் கடைப்பிடித்துள்ளதோ என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஈழத் தமிழர்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்ற அளவில்தான் தற்போதைய உறுப்பினர்கள் பலரும் உள்ளனர். இப்படி ஒரு குழுவை எதற்காக, எந்த நோக்கத்திற்காக மத்திய அரசு இலங்கைக்கு அனுப்பவுள்ளது என்பதும் புரியவில்லை.



comments | | Read More...

இந்தியாவில் நேரடி முதலீடு செய்ய பாகிஸ்தான் நிறுவனங்களுக்கு அனுமதி




கார்கில் போருக்கு பின் இந்தியா- பாகிஸ்தான் இடையே பொருளாதாரத்தில் எவ்வித ஒத்துழைப்பும் இல்லாமல் இருந்தது. இந்� ��ிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.

இந்திய பொருளாதாரச் சந்தை தொடர்ந்து வளர்ந்து வரும் இந்த சூழ்நிலையில், கடந்த வெள்ளியன்று பாகிஸ்தான் நிறுவனங்கள் இந்திய சந்தையில் கால் பதிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி யுள்ளது. பாகிஸ்தான் அமைச்சர் மத்தூம் அமின் பாஹிம் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் நிறுவனங்கள் இந்திய சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் இதற்கு தேவையான அலுவலக பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். ஆசிய கண்டத்தில� �� உள்ள நாடுகளின பொருளாதாரா வளர்ச்சிக் குறியீட்டில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

'விஜய் கீதம் (Vijay Anthem)' (வீடியோ)










comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger