News Update :
Home » » நிதின் கட்காரி தொடர்ந்து 2 வது முறையாக பாரதீய ஜனதா தலைவர் ஆகிறார்

நிதின் கட்காரி தொடர்ந்து 2 வது முறையாக பாரதீய ஜனதா தலைவர் ஆகிறார்

Penulis : karthik on Friday, 28 September 2012 | 21:05

நிதின் கட்காரி தொடர்ந்து 2 வது முறையாக பாரதீய ஜனதா தலைவர் ஆகிறார் நிதின் கட்காரி தொடர்ந்து 2 வது முறையாக பாரதீய ஜனதா தலைவர் ஆகிறார்

சூரஜ்கண்ட்,செப்.29-


கடந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து இரண்டு முறையாக தோல்வி கண்டது. அதைத் தொடர்ந்து மராட்டிய மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவராக இருந்து வந்த நிதின் கட்காரி, ஆர்.ஆர்.எஸ். அமைப்பின் தீவிர ஆதரவுடன் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு வந்தார்.

அவரது தலைமையில் கட்சி கோவா, பீகார், பஞ்சாப் மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பா.ஜனதா வெற்றி கண்டது. அதே நேரத்தில் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தது. உத்தரகாண்ட் மாநிலத்திலும் ஆட்சியைப் பறிகொடுத்தது. கர்நாடகத்தில் பாரதீய ஜனதா கட்சிக்குள் உட்பூசல்கள் தொடர்கின்றன.

இந்நிலையில் நிதின் கட்காரியின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் முடிகிறது. அவரது தலைமையில் கட்சியின் நிலை மேம்பட்டுள்ளதாக கட்சிக்குள் கருத்து நிலவுகிறது. இருப்பினும் அவர் கட்சியில் செய்ய எண்ணியுள்ள பணிகள் இன்னும் முடிவு அடையவில்லை என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது வரவுள்ள குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநில சட்டசபை தேர்தல், பாராளுமன்றத்தேர்தல் ஆகியவற்றை கà ��்சி நிதின் கட்காரி தலைமையில்தான் சந்திக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது.

இந்நிலையில், அரியானா மாநிலம், சூரஜ்கண்டில் கட்சியின் இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் நடந்து வந்தது. நேற்று இந்தக் கூட்டத்தின் முடிவில், ஒருவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக தலைவர் பதவி வகிக்க ஏற்றவகையில் முறைப்படி சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்டத்திருத்த தீர்மானத்தை கட்சியின் முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் கொண்டு வந்தார். அதை மற்றொரு முன்னாள் தலைவர�® �ன வெங்கையா நாயுடு வழிமொழிந்தார். அதைத் தொடர்ந்து சட்டத்திருத்தம் நிறைவேறியது.

இதன்மூலம் நிதின் கட்காரி தொடர்ந்து இரண்டாவது முறையாக கட்சி தலைவர் பதவியை வகிக்க இருந்த தடை அகன்று விட்டது.  

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger