News Update :
Powered by Blogger.

ராஜஸ்தான் நர்ஸ் பன்வாரி தேவியின் வாட்ச், கம்மலை மகன் அடையாளம் காட்டினார்

Penulis : karthik on Monday, 9 January 2012 | 20:57

Monday, 9 January 2012

ராஜஸ்தான் மாநிலத்தில் காணாமல் போன நர்ஸ் பன்வாரிதேவியின் வாட்ச் மற்றும்
கம்மல், ஜோத்பூர் அருகே உள்ள கால்வாய் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தில் காணாமல் போன நர்ஸ் பன்வாரிதேவியின் வழக்கை சிபிஐ
விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மகிபால்,
எம்எல்ஏ மால்கன்சிங், பன்வாரியின் கணவர் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 9
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பன்வாரியை கொன்று அவரது பிணத்தைஎரித்து விட்டதாக கூலிப்படையைச்
சேர்ந்தவர்கள் வாக்குமூலம் தந்துள்ளனர். ஜோத்பூர் அருகே ராஜீவ்காந்தி
கால்வாயில் பன்வாரிதேவியின் வாட்ச் மற்றும் நகைகளை வீசியதாககூலிப்படையைச்
சேர்ந்த கைலாஷ் ஜாக்கர் என்பவன் கூறினான். இதன் அடிப்படையில் மத்திய தடய
அறிவியல் ஆய்வக குழுவினருடன் சிபிஐ அதிகாரிகள் கால்வாயில் தேடுதல் பணியை
தொடங்கினர்.
இதில் பன்வாரிதேவியை கொலை செய்யபயன்படுத்திய ஆயுதங்கள், அவர்
அணிந்திருந்த கைக்கடிகாரம் மற்றும் காதணிகள் கிடைத்தன. கைக்கடிகாரம்
மற்றும் காதணிகள் பன்வாரி தேவிக்கு சொந்தமானது என்பதை அவரது மகன் சாஹில்
நேற்று உறுதி செய்தார். கால்வாய் அருகே பன்வாரி தேவி எரிக்கப்பட்டதாக
கூறப்பட்ட இடத்திலிருந்து சாம்பலை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சாம்பல் டெல்லியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
comments | | Read More...

பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பாலிடெக்னிக்
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான (முதல், 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு)
டிப்ளமோ தேர்வுகளை தொழில்நுட்பக்கல்வித்துறை கடந்த அக்டோபர் மாதம்
நடத்தியது. இந்த தேர்வுகளின் முடிவுகள் கீழ்க்கண்ட இணையதளத்தில் நேற்று
வெளியிடப்பட்டன.
http://www.tndte.com
http://www.intradote.tn.nic.in
மறுமதிப்பீடு செய்வதற்கு விடைத்தாள் நகல் பெறுவதற்கு வருகிற 20-ந்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தொழில்நுட்பக்கல்வித்துறை தேர்வு
வாரியம் அறிவித்துள்ளது.
comments | | Read More...

பொருளாதாரத்தை சீரிகுலைக்க பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் கள்ளநோட்டு வினியோகம்

இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள
நோட்டுகள் நாடுமுழுவதும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் மத்திய அரசு அமைப்பு ஒன்று கடந்த 2
நாட்களாக நாடு முழுவதும் சோதனை நடத்தியது. இதில் மேற்கு வங்க மாநிலம்
மால்டாவில் கள்ள நோட்டு கூட்டத்தின் தலைவன் மாணிக்ஷேக்கும், அவனது
நெருங்கிய கூட்டாளி மார்ஷலும் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.27,000
கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் மாணிக்ஷேக் ஆட்கள் கள்ள நோட்டுகளுடன் இந்தியா முழுவதும் பரவி
இருப்பது தெரியவந்தது. இந்நிலையில்சென்னையை அடுத்து உள்ள பள்ளிக்கரணையில்
கள்ள நோட்டு கும்பல்ஒன்று பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல்
கிடைத்தது.
இதையடுத்து புலனாய்வுப் பிரிவினர் நேற்று அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது பள்ளி்க்கரணை எஸ்களத்தூர் லேபர் காலனியில் உள்ள தனியார்
நிறுவனத்தில் தொழிலாளர்கள் போர்வையில் இருந்த அபிபுல் ரகுமான், அப்துல்
முத்தலிக், பிரசாந்த மண்டல் ஆகிய 3 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்த
கட்டு, கட்டான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில்
அவர்கள் கடந்த 2 மாதத்திற்கு முன்பு தான் மேற்கு வங்கத்தில் இருந்து
சென்னைக்கு வந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டனர் என்பது தெரிய
வந்தது.
இதே போன்று டெல்லியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட பகதூர் யாதவ்
என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஹைதராபாத்தில் மேற்கு வங்கத்தைச்
சேர்ந்த சயிப் உல்ஹக், அன்வர், உமால் ஷேக், அக்ரம் ஆகிய 4 பேர்
பிடிபட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2மாதத்தில் மட்டும் ரூ.27
லட்சம் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது தெரிய வந்தது.
கள்ள நோட்டு கும்பல்குறித்த திடுக்கிடும் தகவல்கள் வருமாறு,
கள்ள நோட்டு கும்பல்இந்தியா முழுவதும் நெட்வொர்க் அமைத்து செயல்பட்டு
வந்துள்ளது. பாகிஸ்தானி்ல் அச்சடிக்கப்பட்ட ரூ.1000, ரூ.500 மற்றும்
ரூ.100 கள்ளநோட்டுகளை விமானத்தில் எடுத்து வந்து மேற்கு வங்க எல்லையில்
வீசிவிட்டு சென்றுள்ளனர். அதை மார்ஷலும் அவனது கூட்டாளிகளும் சேர்ந்து
பொறுக்கி எடுத்து வந்து நாடு முழுவதும் உள்ள தங்கள் ஏஜெண்டுகளுக்கு
அனுப்பி வைத்துள்ளனர். மேற்கு வங்கத்தில் வேலையில்லாத இளைஞர்களைத் தேர்வு
செய்து அவர்களை கட்டிடத் தொழிலாளர்கள் போன்று நடித்து இந்தகள்ள நோட்டுகளை
புழக்கத்தில் விடச் செய்துள்ளனர்.
மேலும் உள்ளூர் தரகர்கள் மூலம் பெரிய சந்தைகள், மதுக் கடைகள் ஆகிய
இடங்களில் கள்ள நோட்டுகளை நல்ல நோட்டுகளாக மாற்றியுள்ளனர். அந்த
ஏஜெண்டுகள் தங்கள் கமிஷனை எடுத்துக் கொண்டு மீதத்தை அன்த கும்வல்
தலைவனின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். ஒரு நல்ல நோட்டுக்கு3 ரூ.500
கள்ள நோட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதுவும் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க ஒவ்வொரு முறையும் வங்கிக்
கணக்கில் ரூ.49,000 மட்டுமே செலுத்தப்பட்டு வந்துள்ளது. அந்த கும்பல்
கடந்த மாதத்தில் மட்டும் கோடிக்கணக்கான கள்ள நோட்டுகளை புழக்கத்தில்
விட்டுள்ளனர்.
இந்த கும்பல் தீவிரவாத அமைப்புகளின் பிரதிநிதியாக செயல்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதே அவர்களின் நோக்கம். மேலும்
உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதும் அவர்களின்
திட்டம்.
இந்நிலையில் கள்ள நோட்டு விவகாரம் குறித்த அனைத்து ஆவணங்களையும் தேசிய
புலனாய்வுத் துறை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். மேலும் வங்கியில் நடந்த
பணபரிமாற்றம் குறித்த விவரங்களும் பெறப்பட்டுள்ளன. அந்த கும்பலின்
வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
Tags: கள்ள நோட்டு , fake currency , தீவிரவாதிகள் , terrorists
comments | | Read More...

வேலூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 20 மாணவர்கள் படுகாயம்

வேலூர்: வேலூர் அருகே பள்ளி வேன் கவிழந்து விபத்துக்குள்ளனாதில் 20
மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்து உள்ளது மேட்டு வெட்டங்குளம்.
இங்குதனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த
பள்ளியில் சுமார் 1200 மாணவர்கள் படித்து வருகின்றனர். சுற்றுப்புற
கிராமங்களில் உள்ள மாணவர்கள் பள்ளி வேன் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.
வழக்கம் போல் இன்றுகாலை அரக்கோணம்-ஓச்சேரி சாலை பகுதியில் இருந்து
மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக டிரைவர் வேனை
சாலையோரத்தில் திருப்புகையில் சற்றும் எதிர்பாராத விதமாக வேன்
சாலையோரபள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்த மாணவர்கள் பயத்தில்
அலறினர்.
உடனே அப்பகுதி மக்கள் ஓடி வந்து மாணவர்களை மீட்டனர்.இதில் படுகாயமடைந்த
20 மாணவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனையில்
சேர்த்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் பள்ளியின்
முன்பும்,அரக்கோணம் அரசு மருத்துவமனை முன்பும் குவிந்தனர். இதனால்
அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags: vellore , வேலூர் , விபத்து , accident
comments | | Read More...

திரிணாமுல் காங்கிரஸ்-காங்கிரஸ்கூட்டணி உடையுமா?

மேற்குவங்கத்தில் ஆட்சி செய்துவரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ,
மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான கூட்டணியி்ல்
பிளவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
மேற்குவங்காளத்தில் ஆட்சியில் இருந்த இடதுசாரிகளை நீக்கிவிட்டு , ஆட்சியை
பிடித்தவர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பெனர்ஜி.அதற்காக
காங்கிரசுடன் கூட்டணி அமைத்து அமோக வெற்றிப் பெற்றார். இந்த நிலையில்
தற்போது 2 கட்சிகள் இடையிலான கூட்டணியில் பிளவு ஏற்பட தொடங்கியுள்ளது.
இதன் முன்னோடியாக மத்திய அரசு கொண்டு வந்த லோக்பால் மசோதா , சில்லரை
வர்த்தகத்தில் அன்னிய முதலீடு , பெட்ரோல் விலையேற்றம் உட்பட பலவற்றில்
மமதாவுக்கு மாற்று கருத்து தெரிவித்து வருகிறார்.
மேலும் மேற்குவங்காளத்தில் உள்ள இந்திராபவனின் பெயரை மாற்ற மாநில அரசு
தீர்மானித்துள்ளதால் , காங்கிரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் மீதான அதிருப்தியை தெரிவிக்கும் வகையி்ல் ,
இன்று திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணி தரப்பில் கண்டன பேரணி நடத்தி
உள்ளனர். இதற்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள்
சிலர் கலந்து கொள்ள உள்ள மமதா அனுப்பி வைத்துள்ளார்.
முன்னதாக மமதா பெனர்ஜி பேட்டி ஒன்றில் கூறியதாவது ,
இடதுசாரிகளுடன் இணைந்து செயலாற்ற விரும்பினால் காங்கிரஸ் பிரிந்து
செல்லலாம். நாங்கள் தனியாக கூட செயல்படுவோம் , என்றார்.
வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட மம்தா பானர்ஜி
விரும்புவதாகத் தெரிகிறது. இதற்காகவே காங்கிரஸை கழற்றிவிடும்
திட்டத்துடன் மத்திய அரசை எதிர்த்து வருகிறார் என்கிறார்கள்.
comments | | Read More...

சிம்ரன் வேடத்தில் ஐஸ்வர்யாராய்

விஜயகாந்த் , சிம்ரன் ஜோடியாக நடித்து 2002-ல் வெளியான படம் " ரமணா "
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கினார். இப்படம் தமிழக மெங்கும் வெற்றிகரமாக ஓடி
வசூலை வாரி குவித்தது. கஜினி மூலம் முருகதாஸ் இந்தி யில்
பிரபலமாகியுள்ளதால் அவர் இயக்கிய முந்தைய படங்களின் சி.டி.க்களை இந்தி
நடிகர்கள் வாங்கி பார்த்து வருகின்றனர்.
அதில் ரமணா படம் ஷாருக்கானை கவர்ந்தது. அதை இந்தியில் ரீமேக் செய்து
நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியிலும் ஏ.ஆர். முருகதாசே
இயக்குகிறார். இதில் சிம்ரன் வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யாராயைஒப்பந்தம்
செய்துள்ளனர்.
பிரசவத்துக்கு பிறகு ஐஸ்வர்யாராய் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. ரமணா படம் ஏற்கனவே தெலுங்கிலும்
வெளியாகியுள்ளது. அங்கு சிம்ரன் வேடத்தில் ஜோதிகா நடித்தார்.
comments | | Read More...

பிஸினஸ் மேனாக போவது யார்? சூர்யாவா ! கார்த்தியா !!

தெலுங்கில் மகேஷ்பாபு , பூரி ஜெகநாத் இணைந்து செய்த படம் ' போக்கிரி '.
தெலுங்கில் வசூல் மழையில் நனைந்ததால் இப்படம் தமிழில் விஜய் நடிப்பில்
வெளியாகி இங்கும் வரவேற்பை பெற்றது.
தற்போது மகேஷ்பாபு , பூரி ஜெகநாத் இணைந்து இருக்கும் படம் ' தி
பிஸினஸ்மேன் '. இப்படம் தெலுங்கு திரையுலகில் பெரும் எதிர்ப்பார்ப்பில்
இருக்கிறது.காஜல் அகர்வால் நாயகியாக நடித்து இருக்கிறார். தமன்
இசையமைத்து இருக்கிறார்.
கடைசியாக மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ' தோக்குடு ' படம் தமிழ்நாட்டில்
வெளியாகி இதுவரைஎந்த ஒரு தெலுங்கு படமும் செய்யாத வகையில் வசூல் சாதனை
படைத்தது.
' தி பிஸினஸ்மேன் ' படத்தின் மொத்த உரிமையையும் கைப்பற்றி இருக்கிறது
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம். படத்தின் வெளியீட்டுஉரிமையை மட்டுமல்லாமல்
படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார்கள்.
' தி பிஸினஸ்மேன் ' படம் வெற்றி பெற்றால் தமிழ் ரீமேக்கில் மகேஷ்பாபு
வேடத்தில் சூர்யாவா அல்லது கார்த்தியா என்பது படத்தின் வெற்றியை பொருத்து
இருக்கிறது.
comments | | Read More...

அட்டகாசமான புதிய எல்ஜி 3டி நோட்புக்குகள்!

எல்ஜி நிறுவனம் 3 புதிய 3டி கணினிகளைக் களமிறக்கவிருக்கிறது. அதில்
இரண்டு 3டி நோட்புக்குகளான எல்ஜி பி535 மற்றும் எல்ஜி எ540 ஆகியவை வரும்
சிஇஎஸ் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.
எல்ஜி பி535 நோட்புக்கின் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் இது 15.6 இன்ச்
கொண்டு ஒரு 3டி நோட்புக் ஆகும். இதன் டிஸ்ப்ளே எல்இடி பேக்லைட் வசதியைக்
கொண்டுள்ளது. இந்த நோட்புக் மற்ற போட்டி நோட்புக்குகளை விட 24%
மெல்லியதாக இருக்கிறது. இதனுடைய எடை 2.2 கிலோவாகும். இதன் கஸ்டம் 3டி
1366 X 768 ஆகும்.
இதில் ஐ3 அல்லது ஐ5 அல்லது ஐ7 போன்ற ப்ராசஸர்களில் ஏதாவது ஒன்றைப்
பயன்படுத்த முடியும். க்ராபிக்ஸ் வேலைகளுக்காக இந்த நோட்புக்கில் இன்டல்
எச்டி 3000 க்ராபிக்ஸும் உள்ளது. அதுபோல் என்விடியா ஜிஇபோர்ஸ் 1ஜிபி
ஜிபியு அல்லது 2ஜிபி ஜிபியு இருக்கும்.
மேலும் இந்த நோட்புக் 1டிபி சேமிப்பு வசதியை வழங்குகிறது. அதுபோல் இதில்
ஒரு டிவிடி பர்னரும் அடங்கும். மேலும் வைபைமற்றும் ப்ளூடூத் 3.0 வசதியும்
உள்ளன. அடுத்த்தாக எல்ஜி எ540 நோட்புக்கும் ஒரு அல்டிமேட் 3டி நோட்புக்
ஆகும். இது க்வாட்கோர் ப்ராசஸரைக் கொண்டுள்ளது.
இதன் க்ளாசஸ் ப்ரீ 3டி டிஸ்ப்ளே 15.6 இன்ச் அளவைக் கொண்டுள்ளது. இதில்
உள்ள ப்ரி இன்ஸ்டால்டு 3டி எடிட்டிங் சாப்ட்வேர் மூலம் இதில்
வீடியோக்களையும் அதுபோல் வீடியோ கேம்களையும் சுகமாக அனுபவிக்கலாம்.
அடுத்ததாக ஒரு 4.1 சேனல் 3டி சவுண்ட் தொழில் நுட்பமும் இந்த
நோட்புக்கிற்குவலு சேர்க்கிறது.
இதில் உள்ள 3டி டூவல் வெப்காம் மூலம் வீடியோ கான்பரன்சிங் மற்றும்
அழைப்புகளை மிகச் சிறப்பாகச் செய்ய முடியும். மேலும் ஏராளமான வீடியோ
கான்பரன்சிங் அப்ளிகேசன்கள் உள்ளன. அதுபோல் சாப்ட்வேர் அப்ளிகேசன்களான
எல்ஜி 3டி ஸ்பேஸ் , ஆர்க் சாப்ட் ஷோபிஸ் 3டி மற்றும் டிடிடி ட்ரைடெப் 3டி
அப்ளிகேசன் ஆகியவையும் இந்த நோட்புக்கில் உள்ளன.
இறுதியாக எல்ஜி வி300 ஒரு ஆல் இன் ஒன் கணினி ஆகும். இது 3டி வசதியுடன்
வருகிறது. இது ஐபிஎஸ்டிஸ்ப்ளேயுடன் வருகிறது. அதுபோல் இதன் வியூவிங்
கோணம் 178 டிகிரி ஆகும். இதில் உள்ள டிரிபிள் கேமரா சிஸ்டம் மல்டி டச்
வசதியை அளிக்கிறது. இதன் முழ எச்டி எப்பிஆர திறை 23 இன்ச் அளவு கொண்டு
முழுமையான 3டி வசதியை வழங்குகிறது.
மேலே சொல்லப்பட்ட இந்த 3 டிவைஸ்களும் இந்த ஆண்டின் முதல் காலாண்டில்
வருகின்றன. இதில் 3டி வசதிகள் இருந்தாலும்2டி வசதிகளையும் இந்த
கணினிகள்கொண்டிருக்கும். இவற்றின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
comments | | Read More...

காவிரி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலி

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி கதவணை திடீரென
திறக்கப்பட்டதால் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 9 பேர் தண்ணீரில்
அடித்து செல்லப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே காவிரி ஆற்றில் ஓடப்பள்ளி கதவணை
அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேக்கப்படும் தண்ணீரின் மூலம் மின்உற்பத்தி
செய்யப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் குறைவாக வருவதால் தண்ணீரை தேக்கி மின்
உற்பத்திக்காக திறந்துவிடுவார்கள். சுற்று வட்டார பகுதி மக்கள் மின்
திட்ட பணிகளை பார்க்க அவ்வப்போது வந்து செல்வார்கள்.
ஈரோடு ரயில்வே காலனியை சேர்ந்த சார்லி ஸ்மித் (40) இவரது மனைவி டேபோரா
(38), மகள்கள் நிகிதா (21),சானா (19) மற்றும் இவர்களது உறவினர்கள்
அரேபியாவைச் சேர்ந்த டேவிட்பாஸோ (48), இவரது மனைவி கி£டியோபாஸோ (38)
இவர்களது மகள் கேன்டிஸ்பென் (10), ராகின் (3) மற்றும் கிளாடின் (26)
ஆகியோர் ஓடப்பள்ளி கதவணை மின்திட்ட பகுதியை சுற்றி பார்க்க நேற்று
வந்தனர். அப்போது கதவணை மூடப்பட்டு இருந்தது. இதனால், ஆற்றில் குறைவாகவே
தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அவர்கள் 9 பேரும் ஆற்றில் இறங்கி
தண்ணீர் குறைவாக செல்லும் பகுதிக்கு சென்று புகைப்படம் எடுத்துக்
கொண்டிருந்தனர்.
மதியம் 2 மணியளவில் கதவணையின் 18 கதவுகளும் திடீரென திறக்கப்பட்டது.
கதவணை வழியாக தண்ணீர் வேகமாக வெளியேறியது. தண்ணீர் வருவதைப் பார்த்ததும்
அவர்கள் மேடான பகுதிக்குச் செல்ல முயன்றனர். ஆனால், அதற்குள் அவர்களை
தண்ணீர் அடித்துச் சென்றது. அவர்களுடைய அலறல் சத்தத்தைக் கேட்டதும் கரைப்
பகுதியில் இருந்த மீனவர்கள், ஆற்றில் குதித்து நீரில் அடித்துச் சென்ற
டபரா, ராகின் மற்றும் கேன்டிஸ்மேன் ஆகியோரை காப்பாற்றினர். ஆனால், சிறுமி
கேன்டிஸ்பென் கரைக்கு வந்தவுடன் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தாள். மற்ற
6 பேரையும் தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டது.
தண்ணீர் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.
அவர்கள் தண்ணீரில்மூழ்கி இறந்திருக் கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த துயர சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டர்
சண்முகம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன், ஆர்.டி.ஓ.க்கள்
சுகுமார்(ஈரோடு), கவிதா (நாமக்கல்), ஈரோடு மாநகராட்சி மேயர்
மல்லிகாபரமசிவம் ஆகியோர் காவிரி ஆற்றங்கரைக்கு விரைந்தனர். கதவணைக்கு
வந்த கலெக்டர்கள் சண்முகம், குமரகுருபரன், ஆகியோர் கதவணையில் உள்ள 18
மதகுகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு தண்ணீர் திறந்துவிடுவதை
நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.
அதன்படி அணையின் அனைத்து மதகுகளும் அடைக்கப்பட்டது. ஆனாலும் மேட்டூர்
அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருந்ததால், கதவணையில்
அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. எனவே உடனடியாக மேட்டூர் அணையில்
இருந்தும் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டது.
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 6 பேரின் உடல்களை மீட்கும் பணியை
முடுக்கிவிட்டனர். இந்த பணியில்அந்தப்பகுதியை சேர்ந்த 30 மீனவர்கள்
ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்து தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட 6
பேரின் உடலையும் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
comments | | Read More...

விழுப்புரத்தில் பயணிகள் ரயில் மீது இன்ஜின்கள் மோதல்

விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மயிலாடுதுறை -
விழுப்புரம் பயணிகள் ரயில் மீது இன்று அதிகாலை டீசல் இன்ஜின்கள்
பயங்கரமாக மோதின. ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம்
ஏற்படவில்லை.
மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்துக்கு பயணிகள் ரயில்
இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்றிரவு 9.15 மணிக்கு விழுப்புரம் ரயில்
நிலைய 6-வது பிளாட்பாரத்தில் வந்து சேர்ந்தது. பயணிகள் அனைவரும் இறங்கி
சென்ற பிறகு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் அதே இடத்துக்கு
கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருந்தது. இன்று காலை மீண்டும் மயிலாடுதுறைக்கு
செல்ல இருந்தது.
நள்ளிரவு 1.10 மணியளவில் ஒன்றாக இணைக்கப்பட்ட 2 ரயில் இன்ஜின்கள், டீசல்
நிரப்பிக்கொண்டு அதே பிளாட்பாரத்தில் வந்துள்ளது. இன்ஜினை டிரைவர்
எத்திராஜ் ஓட்டி வந்துள்ளார். எதிர்பாராதவிதமாக மயிலாடுதுறை -விழுப்புரம்
பயணிகள் ரயிலின் கடைசி பெட்டி மீது இன்ஜின் பயங்கரமாக மோதியது. அப்போது
குண்டு வெடித்தது போல சத்தம் கேட்டதால் ரயில் நிலையத்தில் இருந்தவர்கள்
அதிர்ச்சி அடைந்தனர்.
இன்ஜின் மோதியதில் பயணிகள் ரயிலின் கடைசி பெட்டி உடைந்து உருக்குலைந்தது.
இன்ஜின் முகப்பு பகுதியும் சேதமடைந்தது.தடம் புரண்ட பெட்டி,
பிளாட்பாரத்தின் மீது ஏறி நின்றது. ரயில் பெட்டிகளுக்கு தண்ணீர்
பிடிக்கும் குழாய்கள் உடைந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது. பயணிகள் ரயில்
அதிகாலை 5.40 மணிக்குதான் மயிலாடுதுறைக்கு புறப்படும் என்பதால் பயணிகள்
யாரும் அதில் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் விழுப்புரம் ரயில்வே அதிகாரிகள், தொழில்நுட்ப பிரிவு
அதிகாரிகள்,ஊழியர்கள், ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர்
விரைந்து வந்தனர். ரயிலில் யாராவது இருக்கிறார்களா என்று சோதனை செய்தனர்.
மீட்பு பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு, விடிய விடிய நடந்தது. சேதமடைந்த
பெட்டியை மட்டும் கழற்றிவிட்டு மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில்
அதிகாலை 5.40 மணிக்கு வழக்கம்போல் புறப்பட்டு சென்றது. விபத்து குறித்து
டீசல் இன்ஜின் டிரைவர்எத்திராஜ் உள்ளிட்ட சிலரிடம் உயர் அதிகாரிகள்
விசாரித்து வருகின்றனர்.
விபத்துக்கு யார் காரணம்?
விபத்துக்கு டீசல் இன்ஜின் டிரைவர்தான் காரணம் என்று உயர் அதிகாரிகள்
குற்றம்சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதை கடைநிலை ஊழியர்கள்
மறுக்கின்றனர். அவர்கள் கூறுகையில், 'ரயிலோ, இன்ஜினோ எந்த தண்டவாளத்தில்
செல்ல வேண்டும் என்று பாயின்ட் கொடுத்து அனுமதிப்பது உயர்
அதிகாரிகள்தான். அவர்கள் கொடுக்கும் உத்தரவுப்படிதான் இன்ஜினை டிரைவர்
இயக்க வேண்டும். மயிலாடுதுறை பயணிகள் ரயில் 6-வது பிளாட்பாரத்தில்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதே தடத்தில் டீசல் இன்ஜின்களை
இயக்க அனுமதித்தது யார்? டிரைவர் மீது குற்றம்சாட்டிவிட்டு உயர்
அதிகாரிகள் தப்பிக்க முயற்சிக்கின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி
தவறு செய்தவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
comments | | Read More...

கனிமொழி தூதுவரிடம் அழகிரி போனில் பாடிய ஆவேச கீதம்!



தி.மு.க.வுக்குள் தற்போது இருப்பது புயலுக்கு முந்திய அமைதி என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள். புயல் டில்லியில் மையம் கொண்டுள்ளது. அது எந்த நேரமும் தெற்கு நோக்கி நகர்ந்து வந்து, சென்னையில் கோபாலபுரத்தைத் தாக்கலாம். அப்போது 'சோ' வென கண்ணீர் மழை பொழியும்.

டில்லியில் மையம் கொண்டுள்ள புயல் கனிமொழி!

கனிமொழியின் சமீபத்திய சென்னை விஜயங்கள் அவரிடம் ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவருடன் பேசியவர்கள் சொல்கிறார்கள். அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சென்னையில் கொண்டாடப்பட்ட போது, டில்லியில் இருந்து கிரீன் சிக்னல் கொடுத்ததே அவர்தான் என்றும் சொல்கிறார்கள்.

கட்சி ரீதியான பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்பது 1970-களில் இருந்தே தி.மு.க.-வில் அதிகாரத்தை கன்பர்ம் செய்யும் ஒரு சடங்கு. அண்ணாவுக்கு கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கருணாநிதிக்கும் எக்ஸ்டென்ட் பண்ணப்பட்டது. அதன்பின் ஸ்டாலினுக்கும் நீடிக்கப்பட்டது. விடுவாரா அஞ்சா நெஞ்சர்? அவரது ஆட்கள் மதுரையை தடல்புடல் படுத்தினார்கள்.

இப்போது கனிமொழி பிறந்த நாளுக்கு, பெரிய அளவில் கொண்டாட்டம் தொடங்கியிருக்கிறது.

இதற்கான ஏற்பாடுகள் சென்னையில் செய்யப்பட்டபோது, கனிமொழிக்கு தகவல் சொல்லப்பட்டது. அவருக்கு அதில் லேசான தயக்கம் இருந்தது. ஆனால், ராசாத்தி அம்மாளுக்கு ஆட்சேபணை ஏதும் இருக்கவில்லை. அதன்பின் கனிமொழியும் சம்மதிக்கவே ஏற்பாடுகள முழு வேகத்தில் நடந்தன. ராசாத்தி அம்மாள் நேரில் கலந்துகொண்டு மைக் பிடித்து பேசுவது என்ற யோசனை வந்தபோது, அதற்கு கனிமொழியின் கிரீன் சிக்னல் கிடைத்தது!

கோபாலபுரத்தில் இதையெல்லாம் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், தடுக்க முடியாதபடி அவர்களது விஷயம் ஒன்று, வசமாக இவர்களிடம் மாட்டிக் கொண்டிருந்தது! அதைத்தான் ராசாத்தி அம்மாள் பிறந்தநாள் விழாவில் தனது பேச்சில் குறிப்பிட்டார். (விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)

இப்போது, இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் கட்சியில் கனிமொழியின் முக்கியத்துவம் உறுதி செய்யப்பட்டு விட்டது. 2ஜி-ஸ்பெக்ட்ரம் வழக்கு கோபாலபுரத்துக்கு 'நல்லபடியாக' முடியும்வரை ராசாத்தி அம்மாள்-கனிமொழி செய்யும் எந்தக் காரியத்தையும் அவர்கள் தடுக்கப் போவதில்லை என்பது இவர்களுக்கு நன்றாகவே புரிந்து விட்டது.

அதையடுத்து தற்போது சி.ஐ.டி. காலனியில் இருந்து அழுத்தம்மேல் அழுத்தமாக வரத் தொடங்கி விட்டது என்கிறார்கள் உள்வீட்டு விஷயம் அறிந்தவர்கள்.

ஸ்டாலினுக்கு கட்சியின் நெம்பர்-2 இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அழகிரி கட்சியின் தென்மண்டலப் பொறுப்பாளராகவும், மத்திய அமைச்சராகவும் உள்ளார். குறைந்தபட்சம் அழகிரியின் அளவுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்கிறது சி.ஐ.டி. காலனி பிரஷர்.

ஏற்கனவே எம்.பி.-யாக உள்ள கனிமொழிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வாங்கிக் கொடுங்கள். கட்சி மட்டத்தில் ஓய்வெடுக்கும் வயதில் உள்ள யாராவது ஒரு தலையை அகற்றிவிட்டு, அந்தப் பதவியை கனிமொழிக்கு கொடுங்கள் என்ற தடாலடி கோரிக்கை வந்து விழுந்திருக்கிறது என்கிறார் கட்சியின் சீனியர் எம்.பி. ஒருவர். இந்த விவகாரத்தில், ஸ்டாலினை விட, அழகிரிதான் அதிகம் அதிர்ந்து போயிருக்கிறார் என்றும் கூறுகிறார் அவர்.

சமீபத்தின் தம்மை போனில் தொடர்புகொண்ட தி.மு.க. எம்.பி. ஒருவரிடம் "ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது, ஜாமீனில் வெளியே வந்துள்ள கனிமொழிக்கு அமைச்சரவையில் இடம் கேட்பது எமக்கே அவமானமான விஷயமல்லவா? கேட்டாலும் அவர்கள் (காங்கிரஸ் மேலிடம்) கொடுக்கப் போவதில்லை. அதன்பின் நாம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு டில்லியில் அரசியல் செய்வது? சென்னையில் இருப்பவர்கள் சென்னையிலேயே இருந்து விடுவார்கள். டில்லியில் இருக்க வேண்டியவர்கள் நாமல்லவா?" என்று ஆவேசப் பட்டிருக்கிறார்.

"சரி. அமைச்சர் பதவி கேட்கிறோம். அவர்கள் தரமாட்டேன் என்று சொல்லி விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அடுத்து என்ன? மத்திய அரசுக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் வாங்குங்கள் என்று அவர்கள் (கனிமொழி-ராசாத்தி அம்மாள்) பிரஷர் கொடுப்பார்கள். ஆதரவை வாபஸ் வாங்கினால், அமைச்சரவையில் நாங்கள் இல்லை. ஒருவேளை ஆட்சியே கவிழ்ந்தால், மீண்டும் எம்.பி.யாக நீங்களும் வரமுடியாது, நானும் வரமுடியாது. ஊரில் இருந்து விவசாயம் செய்ய வேண்டியதுதான்" என்றும் பொரிந்தாராம் அவர்.

போனில் தொடர்பு கொண்ட எம்.பி. "ஆமால்ல.. நீங்க சொல்றது சரிதான்" என்று கம்மென்று போனை வைத்துவிட்டார்.

இதை எமக்கு கூறிய தி.மு.க. எம்.பி., "இந்த உரையாடலில் அழகிரிக்கு தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது தெரியுமா?" என்று கேட்டு கண்ணடித்தார்!

"என்னங்க அது?"

"அழகிரியை தொடர்பு கொண்ட எம்.பி.யே கனிமொழி தரப்பின் தூதுவராக அழகிரியுடன் பேச உத்தரவிடப்பட்ட ஆள்தான் என்பது அழகிரிக்கு தெரியாது. கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று அழகிரியை கன்வின்ஸ் பண்ணி, அவரது ஆதரவை பெறுவதற்காக இந்த எம்.பி.யை அழகிரியுடன் பேசுமாறு சொல்லி போன் பண்ண வைத்திருந்தார்கள். பாவம் அந்தாளு.. போனை எடுத்ததுமே அழகிரி பொரிந்து தள்ளிவிட்டார். இவர் "ஆமாங்க.. ரொம்ப சரிங்க.."  என்பதற்குமேல் எதுவும் பேச முடியாமல் போனை வைத்துவிட்டார்"

"அப்படியானால் இந்த எம்.பி.க்கு சி.ஐ.டி. காலனியில் செம டோஸ் விழுந்திருக்க வேண்டுமே" என்று நாம் கேட்டதற்கு, எம்முடன் பேசிய தி.மு.க. எம்.பி. பதில் சொல்லவில்லை.

அட, இதுதாங்க கட்சிக் கட்டுப்பாடு!


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger