Wednesday, 2 October 2013
காலனி ஆட்சியின் போது விஷவாயு செலுத்தி இந்தியர்களை கொல்ல நினைத்த விண்ஸ்டன் சர்ச்சில்: திடுக்கிடும் தகவல் Churchil wanted kill Indians using M Gas
Tamil NewsYesterday, 05:30
லண்டன், அக்.3-
இந்தியாவில் பிரிட்டிஷாரின் காலனி ஆட்சி நடைபெற்ற போது அதை எதிர்த்து போராடிய வட இந்திய மாலைவாழ் மக்களை இங்கிலாந்து முன்னாள் பிரதமர் விண்ஸ்டன் சர்ச்சில் விஷவாயு செலுத்தி கொல்ல நினைத்த திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அப்போது ஆட்சியை கவனித்து வந்த உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதிய விண்ஸ்டன் சர்ச்சில், வடமேற்கு இந்தியாவில் வாழும் பழங்குடியினர் நமது ஆட்சிக்கு எதிராக மிகவும் வேகத்தோடு போராடி வருகிறார்கள்.
அவர்களால் நமக்கு தொல்லையாகி விட்டது. விஷவாயுவை செலுத்தி அவர்களை அழித்துவிட வேண்டும் என்று குறிப்பிட்டதாக பிரபல வரலாற்று நாவலாசிரியர் கைல்ஸ் மில்டன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் வெளியுறவு துறை செயலாளராக சர்ச்சில் பதவி வகித்த போது 1918ம் ஆண்டு இவ்வகையிலான 50 ஆயிரம் விஷவாயு குண்டுகளை பிரிட்டிஷ் விமானப் படையினர் ரஷ்யாவின் போல்ஷெவிக்ஸ் பகுதியில் செம்படை ராணுவ முகாம்களின் மீது வீசியதாகவும் மில்டன் குறிப்பிடுகிறார்.
இங்கிலாந்தின் பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்னரே சர்ச்சைக்குரிய இந்த கடிதத்தை சர்ச்சில் எழுதியதாக குறிப்பிடும் மில்டன், பிரிட்டைனின் சிறப்புக்குரிய தலைவராக அறியப்படும் விண்ஸ்டன் சர்ச்சில் தொடர்பாக இதுபோன்ற தகவல்களை நீங்கள் வெளியிடுவதால் அவரது இமேஜூக்கு பாதகம் ஏற்படாதா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் விண்ஸ்டன் சர்ச்சில் பெரிய பிரிட்டைன் தலைவர் தான். ஆனால் அவரது நடத்தையின் மற்றொரு பக்கமும் உள்ளது.
பெரிய அளவில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதை அவர் ஆதரித்து வந்தது உண்மை என்று கூறினார்.
...
Show commentsOpen link