News Update :
Powered by Blogger.

செக்ஸ் ரோபோ – விற்பனைக்குத் தயார்!

Penulis : karthik on Monday 7 November 2011 | 23:56

Monday 7 November 2011

அமெரிக்காவை சேர்ந்த டக்ளஸ் ஹைன்ஸ் ஒரு செக்ஸ் ரோபோவை உருவாக்கி இருக்கிறார். இந்த ரோபோவுக்கு ராக்கி என்று பெயர் சூட்டி இருக்கிறார். இது 5 அடி 6 அங்குலம் உயரம் உள்ளது. சிலிகானை கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ரோபோ பேசவும் செய்யும். இந்த ரோபோவை இங்கிலாந்து நாட்டுக்கு விற்பனை செய்ய எண்ணியுள்ளார் இவர்.

ஸ்காட் மெக்லீன் என்னும் அமெரிக்கரும் செக்ஸ் ரோபோ தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் செக்ஸ் ரோபோட் தயாரிப்பதை அறிந்ததும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பலர் இவரை தொடர்பு கொண்டு தங்களுக்கு வேண்டும் என்று கேட்டனர். அவர்களுக்காகசெக்ஸ் ரோபோட்டுக்களை உருவாக்கி வருகிறார் இவர்.

ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், ரஷியா, தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்தும் செக்ஸ் ரோபோ வேண்டும் என்று கேட்டு அவரிடம் ஆர்டர்கள் குவிந்தன. சிலர் எங்களுக்கு ஏஞ்சலீனா ஜோலி போல பமீலா ஆன்டர்சன் போல மைக்கேல் ஜாக்சன் போல ரோபோட்டுக்கள் வேண்டும் என்று கேட்டனர். பிரபலங்களின் அனுமதி இல்லாமல் அவர்களை போன்ற மாடல்களை செய்து தர முடியாது என்று கூறி விட்டாராம் அவர்.

comments | | Read More...

கலாநிதி மாறன் குடும்பத்தோடு பின்லாந்து போனதின் மர்மம் என்ன?

 
 
 
குடும்பத்தோடு சன் டிவி குழும தலைவர் கலாநிதி மாறன் திடீரென பின்லாந்து கிளம்பிப் போய் விட்டார். சிபிஐ விசாரணை வளையத்தின் கீழ் உள்ள நிலையில் அவர் குடும்பத்தோடு பின்லாந்து போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏர்செல் நிறுவனம் சிவசங்கரன் வசம் இருந்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திடம் அதை விற்று விடுமாறு கலாநிதி மாறனும், அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த கலாநிதியின் தம்பி தயாநிதி மாறனும் நிர்ப்பந்தித்ததாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், ஏர் செல் நிறுவனத்திற்கு 2ஜி உரிமங்களை வழங்காமல் தயாநிதி மாறன் இழுத்தடித்தார் என்பதும் சிபிஐ வைத்துள்ள குற்றச்சாட்டு. வேறு வழியில்லாமல் மலேசிய நிறுவனத்திடம் ஏர்செல்லை சிவசங்கரன் விற்ற பின்னர் படு வேகமாக அந்த நிறுவனத்திற்கு 2ஜி உரிமங்களை தயாநிதி மாறன் வழங்கினார். இதற்குப் பிரதியுபகாரமாக மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்டர் நிறுவனத்தில் ரூ. 629 கோடி அளவுக்கு முதலீடுகளைச் செய்தது.
 
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதையடுத்து தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா சதெய்தார். இந்த வழக்கில் தயாநிதி மாறன், ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நிறுவனம், மேக்சிஸ் நிறுவனம் ஆகியவற்றின் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கலாநிதி மாறனும் குற்றம் சாட்டப்பட்டோரில் ஒருவர் ஆவார்.
 
இந்த வழக்கை படு தாமதமாக தாக்கல் செய்த சிபிஐ இன்னும் தாமதமாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் குடும்பத்தினரின் வீடுகள், அலுவலங்கள், சன் டிவி அலுவலகம் ஆகியவற்றில் ரெய்டுகளை நடத்தியது. இந்த நிலையில், கலாநிதி மாறன் தனது மனைவி காவேரி, மகள் காவியா ஆகியோருடன் திடீரென பின்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். தனி விமானத்தில் சென்ற இவர்கள் தங்களுடன் பெருமளவில் லக்கேஜ்களையும் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
 
நேற்று அதிகாலையில் இந்த விமானம் சென்னையை விட்டுக் கிளம்பியுள்ளது. துபாய் போய் அங்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டு அங்கிருந்து பின்லாந்து போயுள்ளது.
 
திடீரென கலாநிதி மாறன் பின்லாந்து கிளம்பிப் போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை வளையத்தின் கீழ் உள்ள நிலையில், இன்னும் விசாரணைக்கு அழைக்கப்படாமல் உள்ள நிலையில் அவர் குடும்பத்தோடு பின்லாந்து போயிருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
அவர் சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதால் வெளிநாடு போவதாக இருந்தால் சிபிஐயிடம் அனுமதி வாங்கிய பின்னர்தான் செல்ல முடியும். ஆனால் அவர் அனுமதி பெற்றாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
 
விசாரணையிலிருந்து தப்புவதற்காகவே கலாநிதி மாறன் வெளிநாடு போய் விட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. எப்படி ஐபிஎல் ஊழல் விவகாரத்தில் விசாரணைக்கு வராமல் லண்டனில் உட்கார்ந்தபடி லலித் மோடி டேக்கா கொடுத்துக் கொண்டிருக்கிறாரோ அதேபோல கலாநிதி மாறனும் செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
 
மேலும் பின்லாந்து நாட்டுடன் இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான எந்த ஒப்பந்தமும் இல்லை. எனவே ஒருவேளை பின்லாந்தில் கலாநிதி மாறன் தங்கி விட்டால் அவரை அங்கிருந்து கொண்டு வருவது மத்திய அரசுக்குப் பெரும் சவாலானதாக இருக்கும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
கலாநிதி மாறன் ஓய்வுக்காக போயிருக்கிறாரா அல்லது ஒரேயடியாக அங்கு போய் விட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.



comments | | Read More...

பிரபாகரன் மீது ஆணையாக ....: பதவியேற்பு விழாவில் பரபரப்பு

 
 
 
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பின் போது கடவுள் மீது ஆணையாக என்றும், தங்களின் குலதெய்வத்தின் மீதோ அல்லது விரும்பிய தெய்வத்தின் பெயரிலோ, அல்லது தாங்கள் சார்துள்ள அரசியல் கட்சியின் தலைவரின் பெயரிலோ சத்தியம் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்.
 
பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் உளமார என்று உறுதி கூறி பதவி ஏற்ப்பார்கள். ஆனால் நாம் இதுவரையிலும் கேட்காத ஒரு தலைவரின் பெயரில், அதாவது நம் நாட்டிலேயே இல்லாத, அரசியல் கட்சி நடத்தாத ஒரு இராணுவ அமைப்பை நடத்தி வந்த விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரனின் பெயரில் பதவி ஏற்றுள்ளார். யார் இவர் என்று பார்ப்போம்.
 
 
பழனி நகராட்சியின் 1வது வார்டு அ.தி.மு.க கிளைக் கழக செயலாளராகவும், பழனி நகர எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவராகவும் இருப்பவர் சோலை கேசவன். இவருக்கு வயது 55. தீவிர அ.தி.மு.க கட்சிக்காரரான இவர், பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தின் அருகில் பத்திரம் எழுதி வருகிறார்.
 
 
கடந்த 2001 உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க சார்பில் பழனி நகராட்சி 1வது வார்டு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2006 தேர்தலில் அதே வார்டில் போட்டியிட்டு தோற்றுப்போனார். இந்த முறை அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனதால், சுயேச்சையாக போட்டியிட்டு அ.தி.மு.க வேட்பாளரை காட்டிலும், 120 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
 
 
கடந்த 25ம் தேதி நகர மன்ற உறுப்பினராக பதவி பிரமானம் எடுக்கும் போது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் வளர்த்து உருவாக்கப்பட்ட, உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரான தம்பி பிரபாகரன் அவர்களின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக நான், எனக்கு வாக்களித்த மக்களுக்கும், இந்த நாட்டுக்கும், நாட்டின் இறையாண்மைக்கும் கடமை தவறாமல் பணியாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன் என்று பிராமானம் எடுத்துள்ளார்.
 
 
உங்களுக்கு எப்படி பிரபாகரன் மீது இவ்வளவு பற்றுதல் என்று சோலை கேசவனிடம் கேட்டோம்..?
 
 
1980-86 ஆண்டுகளில், ஈழ விடுதளைப்போர் துவங்கிய காலகட்டங்களில், தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான் பிரபாகரனை வளர்த்தார். பிரபாகரனின் தாய் எம்.ஜி.ஆர்... தந்தை இந்திராகாந்தி. இவர்களின் வளர்ப்பால் தான் அந்த இயக்கம் நம் தமிழினத்துக்கு விடுதலையும், தனி நாடும் என்னுடைய வாழ்நாளிலேயே வாங்கி கொடுக்கும் என்று நம்பியிருருந்தேன்.
 
 
ஆனால், சோனியா என்ற ஒருவரால் என்னைப் போன்ற கோடான கோடி தமிழ் மக்களின் கணவும், விருப்பமும் நாசமாய் போனது. எப்படி போனாலும் பிரபாகரனின் விடுதலை வேட்கை ஒருக்காலும் தோற்காது. அது நம் இனத்துக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும், எம்.ஜி.ஆர் அவர்களின் எந்த திட்டமும் தோற்றது கிடையாது. அவரால் வளர்க்கப்பட்ட, வழிகாட்டப்பட்ட யாரும் தோற்கவும் மாட்டார்கள்.
 
 
இன்றில்லை... நாளை நிச்சயம் தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு... பிரபாகரன் அதை செய்து முடிப்பார். அவரது விடுதலை வேட்கை பலம் மிகுந்தது. அந்த விடுதலை வேட்கையை நானும் நம்புகிறேன், அதனால் தான் நான் பிரபாகரனின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக பதவி ஏற்றுக்கொண்டேன் என்று கூறுகிறார்.
 
 
உங்களைப்போலவே உலகத்தமிழர்கள் பலரும் நம்புகிறார்கள்.



comments | | Read More...

சிவாஜி பேரன் கல்யாணம்- திரையுலகம் வாழ்த்து

 
 
 
நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த் திருமணம் சென்னையில் இன்று நடந்தது. அதில் திரையுலகினர் பலர் திரளாக கலந்து கொண்டு வாழ்த்தினர்.
 
துஷ்யந்த்தும் முன்பு நடிகராக இருந்தவர்தான். மச்சி, சக்சஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது சிவாஜி பிலிம்ஸ் நிறுவனப் பொறுப்பில் இருக்கிறார்.
 
துஷ்யந்த்துக்கும் சென்னையைச் சேர்ந்த அபிராமிக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்களின் திருமணம் இன்று மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
 
திருமணத்தில் திரையுலகினர் பலர் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
 
முன்னதாக நேற்று நடந்த திருமண வரவேற்பில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு துஷ்யந்த், அபிராமியை வாழ்த்தினார். அப்போது சசிகலாவும் உடன் இருந்தார்.



comments | | Read More...

வேலாயுதம், 7ம் அறிவு எது பெஸ்ட்?

 
 
இம்முறை தீபாவளியை தித்திப்பாக கொண்டாட வெளிவந்துள்ள இரு பிரமாண்ட திரைப்படங்கள், விஜயின் 'வேலாயுதம்', சூர்யாவின் '7ம் ஆறிவு'.
தீபாவளிக்கு முதல் நாளே, இந்தியா, மலேசியா சிங்கப்பூர், மாத்திரமல்லாது ஐரோப்பிய நாடுகளில் பலவற்றிலும் படத்தின் பிரிமியர் ஷோ காண்பிக்கப்பட்டதால், இதுவரை படம் பார்த்த ரசிகர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற சில ஹாட் விமர்சனங்கள் இவை!
ரோபோ சத்தியா (மாத்தி யோசி பேஸ்புக்) பக்கத்திலிருந்து...
சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடித்த 'ஏழாம் அறிவு' பற்றி

16வது நூற்றாண்டிலிருந்து ஆரம்பமாகும் படம், ஆச்சரியத்தக்க காட்சி அமைப்புடனும், போதிதர்மனின் வாழ்க்கை பற்றிய கதையுடனும் நகர்கிறது. முதல் பாதியின் இரண்டாவது பகுதி முழுவதும் கொஞ்சம் தொய்வு! பொருந்தாத பாடல்களும், சுமாரான காதல் காட்சிகளும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால் இடைவேளைக்கு 30 நிமிடம் முதல் தொடங்கும் ஸ்கிரீன் பிளே, கிளைமேக்ஸ் காட்சி வரை போட்டு தாக்குகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இந்த ஆராய்ச்சி முயற்சிக்காக சல்யூட் அடிக்கலாம். இது சூர்யாவின் படமல்ல. சூர்யாவின் பக்கபலம், கடின உழைப்புடன் உருவாகியுள்ள பக்கா முருகதாஸின் திரைப்படம். ஸ்ருதி ஹாசனிடமிருந்து இவ்வளவு அழகான பெர்மோஃபன்ஸ் எதிர்பார்த்திருக்க முடியாது.

ஹரிஸ் ஜெயராஸ் இசையில் இன்னும் என்ன தோழா, மற்றும் யெம்மா யெம்மா பாடல்கள் மாத்திரம், ஸ்கோர் பண்ணுகிறது. பின்னணி இசை, ஏ.ஆர்.ரஹ்மானிடம் கொடுத்திருந்தால் போட்டுத்தாக்கியிருப்பார்.

எல்லாரையும் விட கிங் என்றால் அது டோங் லீ தான். ஹிப்னோத்திக் மண்டையனாக ஒவ்வொரு காட்சியிலும் தூள் கிளப்புகிறார். எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது, நல்ல சினிமாவை விரும்புவர்களுக்கு இப்படம் பிடிக்கும். தமிழனுக்கு பெருமை சேர்க்கும் படமாக அமையும்!

ஆனால் படத்தின் பிரிமியர் ஷோ பார்த்த மலேசிய ரசிகர்கள் சிலரிடமிருந்து படத்திற்கு எதிர்மறையான காமெண்டுக்கள் குவிகின்றன. படம் 'மொக்கை',முருகதாஸின் படமா என நம்பவே முடியவில்லை, கிளைமேக்ஸ் காட்சியில் ஹரிஸின் பின்னணி இசை சொதப்பல் என்கிறார்கள்.
ஒருவேளை அனைத்து தரப்பினரையும் கவரும் காமர்ஷியல் ஹிட்டாக இருக்கவில்லை என்பதும் வெற்றியின் காரணியை தீர்மானிக்கும் போல.

மறுபக்கம் விஜயின் வேலாயுதத்துக்கு சல்யூட் காமெண்ட் அடித்து தொடக்கி வைத்திருக்கிறார் ஜெயம் ரவி.

தனது டுவிட்டர் பக்கத்தில், 'ஹாட்ஸ் ஆஃப் விஜய் னா.. இதுவரை வெளிவந்ததில் விஜயின் பெஸ்ட் பெர்மோஃபென்ஸ், வேலாயுதம் + விஜய் : வெற்றி தான் என அனல் பறக்க' டுவிட் அடித்திருக்கிறார்.

காமெடியும், கிளைமேக்ஸ் காட்சியும் அசத்தல் என்கிறார்கள் மேலும் சில விஜய் ரசிகர்கள்!

ஆக இம்முறை தீபாவளி, தமிழ் திரை ரசிகர்களுக்கு நல்ல விருந்து தான். ஆனால் இந்த ரேஸில் அதிக வசூலை குவிக்க போவது எது?, தீர்மானிக்க போவது நீங்கள் தான் என்பதால் பதிலையும் உங்களிடமே விட்டு விடுகிறோம். இரு படங்களையும் பார்த்துவிட்டீர்கள் என்றால் உங்கள் கருத்துக்களையும் காமெண்டுக்களில் தெரிவியுங்களேன்!
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger