News Update :
Powered by Blogger.

தமிழக காங்கிரஸ்க்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டார்

Penulis : karthik on Saturday 12 November 2011 | 02:56

Saturday 12 November 2011

 
 
 
தமிழக காங்கிரஸ் தலைவராக கே.வி.தங்கபாலு, கடந்த 3 1/2 ஆண்டுகளாக பணியாற்றினார். இவர், தலைவராக இருந்தபோது பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை முன்னின்று நடத்தினார்.
 
கடந்த சட்டசபை தேர்தலின்போது, அவரது ஆதரவாளர்களுக்கு மட்டும் சீட்டு கொடுத்ததாக குற்றம் சாட்டினார்கள். இது மட்டுமல்லாமல், அவரது மனைவி ஜெயந்திக்கு மைலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளித்தார்.
 
அப்போது, விண்ணப்பம் சரியான முறையில் பூர்த்தி செய்யவில்லை என்று ஜெயந்தியினுடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்த கே.வி.தங்கபாலு மைலாப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
 
இதை கண்டித்து, உருவபொம்மை எரிப்பு, மறியல் போராட்டம் போன்றவைகள் நடைபெற்றன. மைலாப்பூர் சட்டசபை தேர்தலில் அவர் படுதோல்வி அடைந்தார். இதைத் தொடர்ந்து, கே.வி.தங்கபாலுவை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சோனியாகாந்தி மற்றும் மத்திய மந்திரிகளுக்கு ஏராளமானோர் தந்தி அனுப்பினார்கள்.
 
தங்கபாலுவை பதவியில் இருந்து நீக்கக்கோரி சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தங்கபாலுவுக்கு எதிரான கோஷ்டியினர், அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கக்கோரி சத்தியமூர்த்தி பவனை அடித்து நொறுக்கினார்கள். கே.வி.தங்கபாலுவை தலைவர் பதவியில் இருந்து நீக்கக்கோரி, தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் போராட்டம் வலுத்தது.
 
இதற்கிடையே சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், இவரது ராஜினாமாவை அகில இந்திய தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து, சுமார் 5 மாதங்களாக தமிழக காங்கிரஸ் தலைவராக அவரே தொடர்ந்து நீடித்து வந்தார்.
 
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அவர் எந்த நேரத்திலும் நீக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் நிலவியது. இந்த நிலையில், நேற்று மாலை தங்கபாலுவின் ராஜினாமாவை சோனியாகாந்தி ஏற்றுக் கொண்டு தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஞானதேசிகன் எம்.பி.யை நியமித்தார். புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞானதேசிகன், தற்போது டெல்லி மேல்- சபை உறுப்பினராக உள்ளார்.
 
இதற்கு முன்பும் மேல்-சபை உறுப்பினராகவே பதவி வகித்து வந்தார். இவர், வழக்கறிஞர் ஆவார். சென்னை ஆழ்வார்பேட்டையில் இவரது வீடு உள்ளது. இவரது மனைவி பெயர் திலகவதி. 2 மகன்கள் உள்ளனர். இவர், ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரசை தொடங்கியபோது, செய்தி தொடர்பாளராக பணியாற்றினார். மத்திய மந்திரி ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஞானதேசிகன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
 
என் மீது நம்பிக்கை வைத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பை தந்த சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்திக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் உள்பட அனைவரையும் ஒன்று சேர்த்து, ஒருமுனை படுத்தி, தமிழ்நாட்டில் காங்கிரசை பலப்படுத்த எல்லா முயற்சிகளையும் நிச்சயமாக மேற்கொள்வேன். மத்திய மந்திரி ஜி.கே.வாசன் ஆசி எனக்கு எப்போதும் உண்டு. மற்ற தலைவர்களுடன் எப்போதும் நான் அன்பாக பேசி பழகக்கூடியவன்.
 
ஆகவே, எல்லோரையும் ஒற்றுமையுடன் கொண்டு செல்வேன். அ.தி.மு.க. ஆட்சி பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. ஏனென்றால், நான் இப்போதுதான் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளேன். தமிழக காங்கிரஸ் தலைவராக நான் பதவியேற்றதும் முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதுபற்றி விளக்கமாக கூறுகிறேன்.
 
இவ்வாறு ஞானதேசிகன் எம்.பி. கூறினார்.
 
கே.வி.தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:-
 
தமிழக காங்கிரஸ் தலைவராக ஞானதேசிகன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். அதை நான் வரவேற்கிறேன். அவருக்கு நான் முழு ஒத்துழைப்பு தருவேன். முறைப்படி தலைவர் பதவியை அவரிடம் ஒப்படைப்பேன். சோனியாகாந்தி அறிவிக்கும் எவரையும் தலைவராக ஏற்றுக்கொள்வேன் என்று நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன். சட்டசபை தேர்தல் முடிவையொட்டி, அதற்கு தார்மீக பொறுப்பேற்று எனது. தலைவர் பதவியை ராஜினாமா செய்து, சோனியாகாந்திக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். தற்போது, அந்த கடிதத்தை ஏற்று புதிய தலைவரை சோனியாகாந்தி நியமித்துள்ளார்.
 
தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு தார்மீக பொறுப்பு ஏற்று யாரும் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. நான் மட்டும்தான் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன். நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் தலைவர் பதவியில் இருந்த காலங்களில் பெரிய சவால்கள் பற்றி இப்போது பேச முடியாது.
 
இவ்வாறு கே.வி.தங்கபாலு கூறினார்.



comments | | Read More...

ஜெயலலிதாவை அடித்து உதைத்தீர்களா? : எம்.ஜி.ஆர். உறவினரிடம் குறுக்கு விசாரணை

 
 
எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில் நடிகர் தீபனிடம் செசன்சு கோர்ட்டில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
 
 
எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன். இவரது மனைவி சுதா. கடந்த 2008-ம் ஆண்டு சொத்து பிரச்சினை காரணமாக விஜயன் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
 
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். சுதாவின் சகோதரி பானு, போலீஸ்காரர் கருணாகரன் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
 
சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் இந்த வழக்கின் சாட்சி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக நடிகர் தீபன் சேர்க்கப்பட்டுள்ளார். அவரிடம் பானு தரப்பில் மூத்த வக்கீல் கே.எஸ்.தினகரன் கேள்வி கேட்டு குறுக்கு விசாரணை செய்தார்.
 
 
அதன் விவரம் :
 
 
உங்கள் மீது பானுவின் பணியாளர் ஒருவர் குற்றப்புகார் கொடுத்திருப்பது தெரியுமா?
 
 
சாட்சி சொல்வதை தடுப்பதற்காக புகார் கொடுத்துள்ளார்.
 
 
அடக்கத்துக்காக எம்.ஜி.ஆரின் உடலை வேனில் வைத்துக்கொண்டு சென்றபோது, அதில் உட்கார்ந்திருந்த ஜெயலலிதாவை நீங்கள் இழுத்து, அடித்து உதைத்தீர்களா?
 
 
ஞாபகம் இல்லை.
 
 
அது சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டதாவது ஞாபகத்தில் உள்ளதா?
 
இல்லை.
 
 
விஜயன் கொலை வழக்கை விரைவு கோர்ட்டுக்கு மாற்றக்கோரி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சுதா சந்தித்து பேசியது தெரியுமா?
 
 
தெரியாது.
 
 
-இவ்வாறு விசாரணை நடைபெற்றது.
 
 
சி.பி.சி.ஐ.டி. தரப்பில் சிறப்பு வக்கீல் விஜயராஜ் ஆஜரானார். சுதாவிடம் கேட்க வேண்டிய கேள்வியை தீபனிடம் கேட்டு அவரை எதிர்த்தரப்பு வக்கீல் துன்புறுத்துகிறார் என்று குறிப்பிட்டார். இந்த வழக்கை மற்றொரு தேதிக்கு நீதிபதி பி.தேவதாஸ் தள்ளிவைத்தார்.



comments | | Read More...

பேரறிவாளன், முருகன், சாந்தனை சந்திக்கிறார் ராம்ஜெத்மலானி

 
 
 
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
இவர்களின் தூக்குத்தண்டனையை பிரபல வக்கீல் ராம்ஜெத் மாலனி சென்னை ஐகோர்ட்டில் வாதாடி, தள்ளிவைத்தார்.
 
 
இந்நிலையில், வக்கீல் ராம் ஜெத் மாலனி இன்று (நவம்பர் 12) வேலூர் சிறைக்கு வந்து சந்தித்துப் பேசுகிறார். இவருடன் வைகோவும் வருகிறார்.
 
 
 
 


comments | | Read More...

ஏழாம் அறிவு வசூலில் பாதிப்பா...?

 
 
 
சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் 'ஏழாம் அறிவு'. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார்.
 
'ஏழாம் அறிவு' படம் சொன்ன போதிதர்மன் தமிழர் இல்லை, அவர் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்தார் என்பதற்கு எந்தவித எழுத்துபூர்வ ஆதாரம் இல்லை என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இத்தகைய தகவல்களினால் படத்தின் வசூலில் எந்தவித பாதிப்பும் இல்லை என்கிறார்கள் படக்குழுவினர்.
 
ஏழாம் அறிவு படம் தமிழ்நாட்டில் மட்டும் வெளியான 14 நாட்களில் 45 கோடி வசூல் செய்து இருக்கிறது. உலகம் முழுவதும் ஆன வசூலை பார்த்தால் கண்டிப்பாக படம் வணிக ரீதியான வெற்றி தான் என்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.



comments | | Read More...

'நம்பர் ஒன்'னை இழந்த ரா ஒன்! வெற்றியா தோல்வியா!!?

 
 
 
ரிலீசான முதல் வாரம் வசூலில் நம்பர் ஒன் படமாகத் திகழ்ந்த ஷாரூக்கானின் ரா ஒன், அடுத்தடுத்த நாட்களில் வசூலில் பின்தங்கிவிட்டது.
 
மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்திப் படம் ஷாரூக்கானின் ரா ஒன். அசாதாரண பப்ளிசிட்டி மூலம் பெரிய எதிர்ப்பார்ப்பைக் கிளப்பினர் இந்தப் படத்துக்கு.
 
தீபாவளியன்று இந்தப் படம் உலகம் எங்கும் பிரமாண்டமாக வெளியானது. துவக்கநாளில் மிகப்பெரிய வசூலைக் குவித்த இந்தப் படம், இரண்டாம் நாளே ரூ 30 கோடிக்கும் அதிகமாக ஈட்டியது. 9 நாட்களில் ரூ 200 கோடியைத் தாண்டிவிட்டது ரா ஒன்.
 
ஆனால், இந்தவாரம் படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
அப்படியானால் இந்தப் படம் வெற்றியா தோல்வியா?
 
"வெற்றியுமில்லை, தோல்வியுமில்லை. தயாரிப்பாளர் இப்போதைக்கு தப்பித்துவிட்டார். தனது முதலீட்டின் மீது 30 சதவீதம் வரை லாபம் பார்த்துள்ளார். இன்னும் ஓரிரு வாரங்கள் நல்ல வசூலுடன் ஓடியிருந்தால் இந்தப் படம் ஹிட் லிஸ்டில் சேர்ந்திருக்கும். ஆனால் இந்த வாரம் மொத்தமே ரூ 14 கோடி வசூலித்துள்ளது. பல தியேட்டர்களில் படம் தூக்கப்பட்டு வருகிறது," என்கிறார் பிரபல சினிமா வர்த்தக பார்வையாளர் கோமல் நாதா.
 
பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ் கூறுகையில், "நிச்சயம் ரா ஒன் வெற்றிப் படமே. ஆனால் எதிர்ப்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றிப்படமல்ல. இருந்தாலும் நிகரலாபமாக ரூ 125 கோடியை நெருங்கிவிட்டது," என்றார்.



comments | | Read More...

கேபிள் ஆபரேட்டர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

 
 
 
அனுமதிக்கப்பட்ட தொகையை விட கூடுதல் தொகை வசூலிக்கும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுமதிக்கப்பட்ட தொகையான ரூ. 70ஐ விட அதிகம் வசூலிக்கும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திற்கான அட்வான்ஸ் மற்றும் சந்தா தொகையை விரைவில் செலுத்துமாறும், தாமதமானால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



comments | | Read More...

வெள்ளத்தில் சிக்கினார் நடிகை!

 
 
 
எச்.எம்.டி பிக்சர்ஸ் சார்பில் வி.இராவணன் தயாரிக்கும் படம், 'செங்காடு'. பிரபு சாலமன் உதவியாளர் ரமேஷ் ராமசாமி இயக்குகிறார். அருண் பிரகாஷ்ரூபா, சுரேஷ்நகினா, உத்தம்விமலா, விக்கிபிரியா ஆகிய நான்கு ஜோடிகளுடன் முத்துக்கருப்பன், அன்பழகன், வேணுகோபால், ரகுநாத் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, மணி. இசை, ஜெரோம் புஷ்பராஜ். பாடல்கள், இளையகம்பன். படம் பற்றி நிருபர்களிடம் ரமேஷ் ராமசாமி கூறியதாவது: வழக்கமாக நான்கு நண்பர்கள், தோழிகள் கதை என்றாலே, இப்படித்தான் இருக்கும் என்ற சினிமா பார்முலா எல்லாருக்கும் தெரியும். இதில் அந்த பார்முலாவை உடைத்து, புதிய திரைக்கதை யுக்தியுடன் உருவாக்கியுள்ளேன். சினிமாத்தனம் இல்லாத சினிமா இது. யதார்த்தமாகவும், ஜனரஞ்சகமாகவும் இருக்கும். நான்கு முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்குவது சாத்தியம் இல்லை என்பதால், புதுமுகங்களை தேர்வு செய்து, படப்பிடிப்பு நடத்தினேன். கற்பனைக்கதை என்றாலும், வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றி சொல்லியிருக்கிறேன். காதல் துரோகத்தைக் கூட தாங்கிக்கொள்ள முடியும். நண்பர்கள் செய்யும் துரோகத்தை தாங்கிக்கொள்ளவோ, மறக்கவோ முடியாது என்ற கருத்தை சொல்லும் கதை இது. சமீபத்தில் ஒரத்தநாடு பகுதியிலுள்ள ஆற்றில் அருண் பிரகாஷ், ரூபா நடித்த ஒரு பாடல் காட்சியைப் படமாக்கினேன். அருகிலிருந்த மதகு திறக்கப்பட்டதால், திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ரூபா இழுத்துச் செல்லப்பட்டார். பயந்துபோன நாங்கள், அபயக்குரல் எழுப்பினோம். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடிவந்து காப்பாற்றி கரை சேர்த்தனர்.



comments | | Read More...

பாரதிராஜா இயக்கத்தில் பார்த்தீபனுக்கு பதில் அமீர்

 
 
 
பாரதிராஜா இயக்கத்தில் அமீர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் போட்டோ ஷூட் தேனியில் நேற்று நடந்தது. பாராதி ராஜா தயாரித்து இயக்கும் படம், 'அன்னக்கொடியும் கொடிவீரனும்'. இதில் பாரதிராஜா, ¬ளையராஜா, வைரமுத்து மீண்டும் இணைவதாக இருந்தது. அது தள்ளிப் போயுள்ளதால், ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். 'கோ' கார்த்திகா, இனியா ஹீரோயின்கள். பார்த்திபன், கதையின் நாயகனாக இரண்டு வேடங்களில் நடிப்பதாக இருந்தது. அதற்காக தன்னை பார்த்திபன் தயார்படுத்தி வந்தார். இந்நிலையில் பார்த்திபனுக்குப் பதிலாக அமீர் நடிக்கிறார். அமீரை வைத்து தேனி அருகே நேற்று போட்டோ ஷூட் நடந்தது. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger