News Update :
Powered by Blogger.

காட்டு காட்டு காட்டுனு காட்றார். " : உதயநிதி

Penulis : karthik on Saturday 29 October 2011 | 04:55

Saturday 29 October 2011

 
 
 
சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் 'ஏழாம் அறிவு'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருக்கிறார்.
 
படம் வெளிவந்த நாள் முதல் இதுவரை அரங்கம் நிறைந்த காட்சிகளாக இருந்து வருகிறது. இப்படத்தின் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் இணையத்தில் " தமிழ்நாட்டில் ரஜினி சார் நடித்த 'எந்திரன்' படத்தின் வசூல் சாதனையை 'ஏழாம் அறிவு' படம் முறியடித்து விட்டது. தமிழ்நாடு முழுவதும் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் சாருக்கும் சூர்யாவிற்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
மதுரை ஏரியாவில் 2 நாட்கள் கலெக்ஷனாக 2.30 கோடியும், கோயம்புத்தூர் ஏரியா 2.15 கோடியும் வசூல் செய்து உள்ளது. போதிதர்மன் காட்டு காட்டு காட்டுனு காட்றார். " என்று தெரிவித்துள்ளார்.
 
'ஏழாம் அறிவு' படத்தினை பார்த்துவிட்டு கமல் பாராட்டி இருக்கிறார். ரஜினியும் இப்படத்தினை பார்த்து விட்டு ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சூர்யா இருவரையும் பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

பாதை விலகிய ஹஸாரே!- டீம் அன்னாவிலிருந்து விலகியவர் விமர்சனம்

 
 
 
அன்னா ஹசாரே தன் குறிக்கோளிலிருந்து விலகிச் சென்று கொண்டிருப்பதாக அவரது குழுவிலிருந்து சமீபத்தில் விலகிய ராஜிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
 
வலுவான ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம், போராட்டம் என பரபரப்பு கிளப்பியவர் அன்னா ஹசாரே. இவரது குழுவுக்கு டீம் அன்னா என்று பெயரிட்டுள்ளனர்.
 
ஆரம்பத்தில் பெரிய அளவில் பொதுமக்களால் பாராட்டப்பட்ட இந்த ஹஸாரே மற்றும் அவரது குழுவுக்கு இப்போது பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தக் குழுவில் உள்ள பலரும் அதிகார முறைகேடுகளில் பல்வேறு தருணங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
 
தங்களைப் பற்றி வெளிவரும் தகவல்கள், விமர்சனங்களால் நிதானமிழந்து பேச ஆரம்பித்துள்ளது டீம் அன்னா. அரசியல்வாதிகளையே மிஞ்சும் அளவுக்கு இந்த டீம் அன்னா அரசியல் செய்யவும் ஆரம்பித்துள்ளது.
 
குறிப்பாக அரவிந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி இருவரும் அன்னாவின் நோக்கத்தைக் களங்கப்படுத்தி வருவதாகவும், இவர்களை டீம் அன்னாவிலிருந்து விலக்க வேண்டும் என்றும் அன்னா ஆதரவாளர்களே கோர ஆரம்பித்துள்ளனர்.
 
இதற்கிடையே, ஹஸாரே காங்கிரசுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது அவரது குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துவிட்டது. இதனால் அவரது குழுவிலிருந்து ராஜேந்தர் சிங் மற்றும் ராஜகோபால் ஆகிய இரு முக்கிய உறுப்பினர்கள் விலகிவிட்டனர்.
 
அர்விந்த் கேஜ்ரிவால்தான் அன்னாவை இயக்குவதாக இவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
 
இவர்களில் அன்னா ஹஸாரேவுக்கு ராஜேந்தர் சிங் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், "ஊழலுக்கு எதிராகப் புறப்பட்ட அன்னா ஹஸாரேயும் அவர் குழுவினரும் கடைசியில் ஒரு ஊழல்வாதியைத்தான் ஹிஸார் தொகுதியில் வெற்றி பெறச் செய்துள்ளனர்.
 
ஹிசார் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை ஹசாரே ஆதரிக்க முடிவு செய்த நேரத்தில், நான் அப்போது கென்யாவில் இருந்தேன். அந்த நேரத்தில், நான் இங்கு இருந்திருந்தால் ஹசாரேவை தடுத்திருப்பேன்
 
ஊழல் ஒழிப்பிற்காக துவங்கிய ஹசாரே துவக்கிய குழு, ஊழலில் திளைத்துவரும் வேட்பாளரை ஆதரித்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஹிசார் இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டதன் மூலம், தாங்களும் அரசியல்வாதிகள் என்பதை ஹசாரே குழு சொல்லாமல் சொல்லி வருகிறது.
 
இதன் மூலம் தன் குறிக்கோளிலிருந்து விலகிப் போயுள்ளார் அன்னா ஹஸாரே.
 
இவரது குழுவில், அரசியல்வாதிகள் மத்தியில் காணப்படும் வேற்றுமைகளை விட அதிகளவில் வேற்றுமைகள் உள்ளன.
 
அதேபோல், அன்னா குழுவில் இடம்பெற்றுள்ள அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் கிரண் பேடிவின் செயல்பாடுகள் மூர்க்கத்தனமாக உள்ளன. இவர்களால் ஊழல் ஒழிப்பு இயக்கத்துக்கே அவமானம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
 
குழுவைக் கலைத்துவிடுங்கள் - உறுப்பினர் கடிதம்:
 
இதற்கிடையே, தற்போது உள்ள கூட்டுக்குழுவை கலைத்து, அதிக உறுப்பினர்கள் இடம்பெறும் வகையிலான புதிய குழுவை அமைக்குமாறு, அந்தக் குழுவில் உள்ள உறுப்பினர் குமார் விஸ்வாஸ், அன்னா ஹசாரேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
ஊழலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அண்ணா ஹசாரே எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபடுபவர்களிடம் இருந்து வரும் தாக்குதல்களை அண்ணா ஹசாரே குழுவினர் எதிர்கொள்ளும் முறை கவலை அளிப்பதாக உள்ளது என அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
தங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நேரத்தை செலவிடுவதன் மூலம் ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கான நேரத்தை ஹசாரே குழு இழந்துவருகிறது என விஸ்வாஸ் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 
சந்தோஷ் ஹெக்டே பங்கேற்கவில்லை:
 
நாளை காஜியாபாத்தில், அன்னா குழுவின் கூட்டுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. மவுன விரதம் மேற்கொண்டிருப்பதனால், தன்னால் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று அன்னா ஹசாரே அறிவித்துள்ள நிலையில், குழுவின் மூத்த உறுப்பினரான சந்தோஷ் ஹெக்டேவும் இந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
 
அவரிடம் குமார் விஸ்வாஸின் கடிதம் குறித்துக் கூறியபோது, 'வெரி குட், நல்ல யோசனை' என்று கூறினார்.
 
ஹஸாரே வராததால் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டுக்குழு கூட்டத்தில், அன்னா குழுவினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், பிரசாந்த் பூஷன் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
 
இரண்டு குழுக்கள்:
 
இந்த விவாதத்துக்குப்பின் அண்ணா ஹசாரேவின் உயர்நிலைக் குழு விரிவுபடுத்தப்படக்கூடும் அல்லது மாற்றி அமைக்கப்படக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதுகுறித்து அண்ணா ஹசாரேவின் அதிகாரப்பூர்வ வலைப்பூ பதிவர் ராஜூ பருலேகர் கூறுகையில், உயர்நிலைக் குழுவில் இடம்பெற்றுள்ள சில உறுப்பினர்கள் சுயநலத்துடன் செயல்படுவதால் எழுந்துள்ள நிலைமையை சமாளிக்க உயர்நிலைக் குழு விரிவுபடுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.
 
புதிய கட்டமைப்பின்படி, குழு இரண்டாகப் பிரிக்கப்படும் என்றும் ஒரு குழு முக்கிய முடிவுகளை எடுக்கும் என்றும் தெரிகிறது.



comments | | Read More...

ஆச்சிக்கு ஒன்றும் இல்லை ஆறுதல் தரும் தகவல்கள்

 
 
 
ஆச்சி மனோரமாவுக்கு அடிபட்டிருக்கிறது என்றால் சினிமா இன்டஸ்ட்ரி கொஞ்சம் ஷேக் ஆகதான் செய்யும். காலையில் வந்த செய்தி ஆச்சியின் அருமை பெருமை அறிந்த பலருக்கும் பேரதிர்ச்சி. பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயம் என்று செய்தி தாள்கள் அலறின. என்னதான் ஆனது மனோரமாவுக்கு?
 
பயப்படும்படியாக எதுவும் இல்லையாம். அவர் வழுக்கி விழுந்தது இப்போதல்ல. ஒரு மாதத்திற்கு முன்புதான். அப்போது நெற்றியில் லேசாக ரத்தம் கட்டியிருந்ததாம். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே முதலுதவி செய்து கொண்டாராம் அவர். சில தினங்களுக்கு முன் அடிபட்ட அதே இடத்தில் லேசாக வலி ஏற்பட, மருத்துவமனைக்கு சென்றாராம். மனோரமாவின் பேரன் ராஜராஜன் ஒரு மருத்துவர் என்பதால் அவரேதான் ஆச்சிக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
 
முன்பு காயம் ஏற்பட்ட இடத்தில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதற்கான சிகிச்சையில்தான் இருக்கிறார் அவர். இதற்கிடையில் அவரை பார்க்க வரும் பார்வையாளர்கள் சகட்டுமேனிக்கு உள்ளே வந்ததால் மனோரமாவுக்கு இன்பெக்ஷன் ஏற்பட்டு ஜுரம் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
 
இதன் காரணமாக அவரை சந்திக்க வருகிற அத்தனை பேரையும் மருத்துவமனை வாசலிலேயே தடுத்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் உறவினர்கள்.



comments | | Read More...

நடிகையின் 5 தங்கைகளுக்கு வலைவீசும் டைரக்டர்கள்!

 
 
 
நடிகை ஒருவரின் 5 தங்கைகளுக்கு தமிழ் சினிமா டைரக்டர்கள் வலை வீசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நடிகையோ இந்த பொழப்பு என்னோட போகட்டும்; அவங்களாவது படித்து பெரிய அதிகாரி ஆகணும் என்று கூறி நடிப்பு உலகத்துக்கு வர தடை போட்டு விட்டாராம். ஆறு பெண்ணை பெற்றால் அரசனும் ஆண்டி என்றொரு பழமொழி உண்டு. அப்படி 5 தங்கைகளுடன் பிறந்திருக்கிறார் நடிகை பூர்ணா. ஆனால் அவரது குடும்பம் இப்போது மிக மகிழ்ச்சியாக காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் பூர்ணாதான்.
 
படித்துக் கொண்டிருந்த போதே ஸ்கூல் டிராமாவில் நடித்த பூர்ணாவை பார்த்த சினிமாக்காரர்கள் அப்படியே அள்ளிக் கொண்டு வந்தார்கள். தனது 5 தங்கைகளுக்காகவும் உழைக்க வேண்டும் என்று முடிவெடுத்த பூர்ணா படிப்பை விட்டுவிட்டு படத்தில் நடிக்க ஆரம்பித்தார். படங்கள் எதுவும் வெற்றி பெறாவிட்டாலும், எப்படியோ போராடி சொந்த ஊரில் பெரிய பங்களா கட்டிவிட்டார். இப்போது தனது தங்கைகளுடன் அந்த வீட்டில் சந்தோஷமாக இருக்கும் பூர்ணாவுக்கு ஒரே ஒரு கவலைதானாம். தங்கைகளையும் சிலர் நடிக்க அழைப்பது பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறாராம் அம்மணி. வாய்ப்புகளுடன் தேடி வந்த டைரக்டர்களிடம், இந்த பொழப்பு என்னோட போகட்டும்; அவர்களாவது படித்து பெரிய பெரிய அதிகாரி ஆகணும். அவர்களை விட்டுடுங்களேன் என்று கெஞ்சாத குறையாக அனுப்பி வைக்கிறாராம்.



comments | | Read More...

சீரியலில் நடிக்கும் இளம் ஹீரோவின் மனைவி!

 
 
 
இளம் ஹீரோவின் மனைவி ஒருவர் சின்னத்திரை சீரியலில் நடிக்கிறார். நடிகர் விக்ராந்தின் மனைவி மானஸா. இவர் தெலுங்கில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒருசில மலையாள படங்களிலும் நடித்திருக்கும் மானஸா, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. நடிகர் விக்ராந்தை திருமணம் செய்த பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்த மானஸாவுக்கு, இப்போது சின்னத்திரை வாய்ப்பு வந்துள்ளது. டைரக்டர் விக்ரமாதித்தன் இயக்கும் புதிய டி.வி தொடர் ஒன்றில் மானஸா நடித்து வருகிறார்.
 
தமிழில் முதல் பிரவேசம் சின்னத்திரையில் அமைந்திருப்பதில் எந்த வருத்தமும் இல்லை என்று கூறியிருக்கும் மானஸா, கணவர் மற்றும் குடும்பத்தினரின் சம்மதத்துடன் மீண்டும் நடிக்க வந்திருப்பதாக கூறுகிறார்.



comments | | Read More...

ஜீவாவுடன் ஜோடி சேரக்கூடாது: ரிச்சாவுக்கு சிம்பு தடை

 
 
நடிகர் ஜீவாவுக்கும் சிம்புவுக்கும் இடையிலான மோதல் இன்னும் முற்றிவிட்டது. இதன் விளைவாக, தனக்கு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடிக்கும் ரிச்சா, ஜீவாவுடன் நடிகக் கூடாது என தடை விதித்துள்ளார் சிம்பு.
 
'கோ' படத்தில் நடிக்க முதலில் சிம்புவுக்குதான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கதையில் சிம்புவின் தலையீடு இருந்ததால், அந்த வாய்ப்பை ஜீவாவுக்குக் கொடுத்தார் கேவி ஆனந்த்.
 
கோ சூப்பர் ஹிட் ஆனதால் அதில் ஏன் நடிக்கவில்லை என சிம்புமேல் பலரும் ஆதங்கப்பட்டனர். இந்த நிலையில் சிம்பு என் நண்பன் இல்லை என்று ஜீவா அறிவித்தது அவர்களின் மோதலை தீவிரமாக்கியது.
 
தற்போது ஜீவாவுடன் நடிகை ரிச்சா ஜோடி சேருவதை சிம்பு தடுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
தெலுங்கில் ரிச்சா முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் தனுஷுடன் "மயக்கம் என்ன", சிம்புவுடன் "ஒஸ்தி" படங்களில் நடித்து வருகிறார்.
 
சமீபத்தில் இயக்குனர் அகமது, தனது புதுப்படத்தில் ஜீவா ஜோடியாக நடிக்க ரிச்சாவை போனில் தொடர்பு கொண்டு பேசினாராம். இவர் ஏற்கனவே ஜெய் நாயகனாக நடித்த 'வாமணன்' படத்தை இயக்கியவர்.
 
ஜீவா ஜோடி என்பதால் முதலில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் ரிச்சா. எத்தனை நாள் கால்ஷீட் தருவேன் என்பதை பிறகு சொல்கிறேன் என்றும் உறுதியாக சொன்னாரம்.
 
அதை நம்பி பட வேலைகளை இயக்குநர் அகமது தொடங்கிய நிலையில், திடீரென அகமதுவுக்கு போன் செய்த ரிச்சா, ஜீவா ஜோடியாக நடிக்க முடியாது என கூறிவிட்டாராம். முதலில் சந்தோஷமாக கால்ஷீட் தருவதாக கூறிய ரிச்சா திடீரென மனம் மாறிய காரணம் புரியாமல் இயக்குனர் குழம்பி போனார்.
 
இப்போது ஒஸ்தி படப்பிடிப்பில் சிம்புவுடன் நடித்துக்கொண்டு இருக்கிறார் ரிச்சா. சிம்புதான் ஜீவாவுடன் நடிக்க வேண்டாம் என ரிச்சாவைத் தடுத்ததாக பரபரப்பாக பேசப்படுகிறது.
 
ஜீவா படத்துக்குப் பதில் வேறு வாய்ப்பு தருவதாகவும் சிம்பு உறுதியளித்துள்ளாராம். எனவே ரிச்சா ஜீவாவை உதறியதாகச் சொல்கிறார்கள்.



comments | | Read More...

நடிகை அஞ்சலிக்கு மிரட்டல்: நடிகர் கரண் கண்டனம்

 
 
நடிகர் கரண்-அஞ்சலி ஜோடியாக நடித்த படம் தம்பி வெட்டோத்தி சுந்தரம். இப்படத்துக்கு குமரி மாவட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்குள்ள தமிழ் நாடு லயன் பால் அசோசியேஷன் அமைப்பு படத்தின் தயாரிப்பாளர் செந்தில்குமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கலெக்டர் அலுவலகம் எதிரில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
 
இது குறித்து கரண் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
 
குமரி மாவட்டம் கேரள எல்லையில் வாழ்ந்த தம்பி வெட்டோத்தி சுந்தரம் வாழ்க்கையை படமாக்கி உள்ளோம். நான் வெட்டோத்தி சுந்தரமாக நடித்துள்ளேன். இதன் படப்பிடிப்பிலேயே சிலர் கலாட்டா செய்தனர். அஞ்சலியை தாக்க முயற்சி நடந்தது. இந்த படம் குமரி மாவட்டங்களின் பெருமையை சொல்லும். எவ்வித அவதூறான காட்சிகளும் இல்லை. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர்.
 
வருகிற 10-ந்தேதி படத்தை வெளியிட உள்ளோம். இந்த நிலையில் இப்படத்தை எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது போராட்டம் நடத்துவது என சிலர் ஈடுபட்டு உள்ளனர். எங்களை மிரட்டுகிறார்கள். படத்தில் யாரையும் புண் படுத்தவில்லை. திட்ட மிட்டபடி படம் வெளியாகும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
டைரக்டர் வடிவுடையான் கூறும்போது குமரி மக்களையும் மண்ணையும் அடையாளப்படுத்தும் படமாக இருக்கும் தவறுதலாக எந்த காட்சியும் இல்லை என்றார்



comments | | Read More...

அது சிக்ஸ் பேக் இல்ல, சிங்கிள் பேக் - விஜய் கலகலப்பு

 
 
 
அண்ணாமலை படத்தில் ரஜினியின் கேரக்டர் என்ன? பால்காரர்! இவரைப்போலவே வேலாயுதம் படத்திலும் விஜய் பால்காரர்தான். ஆனால் ஒரு காட்சியில் கூட அவர் பால் கேனையோ, பசு மாட்டையோ டச் பண்ணவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்திருக்குமோ, இல்லையோ? ஆனால் பிரஸ்மீட்டில் நிருபர் ஒருவருக்கு ஒரே ஃபீலிங்.
 
இதை ஒரு கேள்வியாக கேட்டேவிட்டார். சார் படத்துல நீங்க பால்காரர்தானே? ஆனால் ஒரு சீன்ல கூட உங்களை அப்படி காட்டலையே? இந்த கேள்வியை கேட்டு முடித்தவுடன் அடக்க முடியாமல் சிரித்தேவிட்டார் விஜய். இடம் கிரீன் பார்க் .ஓட்டல். நேரம் மாலை சுமார் ஏழு மணி. இந்த இடத்தில் பத்திரிகையாளர்களை அவர் மீட் பண்ண வந்ததே, 7 ஆம் அறிவு இறங்கி வேலாயுதத்திற்கு ஏறுமுகம் என்ற செய்தி பரவியதால்தான்.
 
வந்ததிலிருந்தே உற்சாகம் குறையவில்லை அவரிடம். முகத்தில் வழியும் வழக்கமான சோகத்திற்கும் விடை கொடுத்திருந்தார். சார் படத்தில் சிக்ஸ் பேக்ஸ் வச்சு நடிச்சிருந்தீங்க. அந்த அனுபவத்தை சொல்லுங்க என்ற கேள்விக்கு, அட போங்கங்க. அது சிக்ஸ் பேக்கெல்லாம் இல்ல. சிங்கிள் பேக்தான் என்றார் அதே பொல்லாத சிரிப்புடன்.
 
ஒரே மாதிரி நடிக்கிறார் என்ற இன்னொரு கேள்விக்கு மட்டும் சற்று விரிவாகவே பேச ஆரம்பித்தார் விஜய். இப்போ லேட்டஸ்ட்டா வந்த காவலன் படத்தில் என் வழக்கமான பாணியை முற்றிலும் விட்டுட்டுதான் நடிச்சேன். அதில் எனக்கு பஞ்ச் டயலாக்கே கிடையாது. டைரக்டர் என்ன சொல்றாரோ, அதை அப்படியே செய்திருந்தேன். ஆக்ஷன் படங்கள் செய்யும் போது சில விஷயங்கள் அதற்காக தேவைப்படும். ஒரு ஆக்ஷன் படத்தில் அண்டர் கரண்ட் இருந்தால் அந்த படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாதுன்னு எங்கப்பா அடிக்கடி சொல்வார். வேலாயுதம் படத்திலும் அதுதான் நடந்திருக்கிறது என்றார் விஜய்.
 

 


comments | | Read More...

3 பேரையும் தூக்கில் போடுமாறு தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது: ராமதாஸ்

 
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதில் தமிழக அரசின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரும் அளித்த கருணை மனுக்கள் குடியரசு தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.
 
3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு தமிழக அரசு தரப்பில் உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா தாக்கல் செய்த பதில் மனுவில், 3 பேரின் தூக்கு தண்டனையும் ரத்து செய்வது குறித்த எல்லா கேள்விகளுக்கும், 'கருத்து கூற விரும்பவில்லை' என்றே பதிலளித்துள்ளது.
 
மேலும், தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிய மூவரும் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. அதன்மூலம் 3 பேரையும் தூக்கில் போடுமாறு தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது தெரிகிறது. தமிழக அரசின் இந்த முடிவு ஏமாற்றமும் வருத்தமும் அளிக்கிறது.
 
குடியரசு தலைவர் 3 பேரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்த போது, அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு, நான் உட்பட பல அரசியல் தலைவர்கள் கேட்டு கொண்டோம். அதை ஏற்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர், தற்போது, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அதற்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்.
 
இதன்மூலம் மக்களின் எழுச்சியை அடக்கவே சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது என தெளிவாக தெரிகிறது. மரணத்தின் விளிம்பில் சிக்கி தவிக்கும் 3 தமிழர்களை காப்பாற்ற முதல்வருக்கு அக்கறை இல்லாதது தெரியவந்துள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படாமல், மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் அதில் உறுதியாக இருக்க வேண்டும்.
 
அப்படி 3 பேரின் உயிரையும் காப்பாற்றினால், தமிழக மக்கள் முதல்வரை வைத்து கொண்டாடுவர். இல்லாவிட்டால் தமிழக மக்கள் நலனில் அக்கறை இல்லாத முதல்வர் என்பது தெளிவாகிவிடும்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger