News Update :
Powered by Blogger.

நடிகர் நடிகை காதல் சண்டை -பகிரங்கமாக டிவியில் ஒளிபரப்பு ! (காணொளி இணைப்பு)

Penulis : karthik on Wednesday, 29 February 2012 | 23:00

Wednesday, 29 February 2012

 
 
நடிகர் நடிகை இருவர் காதல் முறிந்த நிலையில் இருவரும் நேரெதிர் மோதல். திடிரென காதல் நடிகன் மீது கன்னத்தில் அறைந்த காதல் நடிகை.
 
நடிகர் காதலனை நடிகை காதலியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லும் திடிரே ரவுடி இருவர்.
 
இவர்களை நடிகர் நடிகைகள் என ஏற்று கொள்ளும் முட்டாள் மக்கள் கூட்டம் கட்டாயம் பாருங்கோ இந்த கூத்துக்களை !




comments | | Read More...

பாலாவின் படத்தில் நடிக்கிறார் பூஜா

 

நான் கடவுள் படத்தில் கண்ணில்லாத பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்களின் கண்ணீரை விருதாகப் பெற்ற பூஜா, பாலாவின் எரியும் தணல் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

திடீரென பாலாவின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்று நமக்கு ஆச்சரியம் மேலிட்டது. அதனை எவ்வாறு தீர்ப்பது... ஒரே வழிதான் நேரடியாக பூஜாவைக் கேட்டுவிடலாமே என்று அவரை தொலைபேசியில் அழைத்தோம்.

அப்போது,

நான் தற்போது சென்னையில்தான் தங்கியுள்ளேன். பாலா சாரைப் பார்த்து இந்தப் படம் குறித்து பேசினோம், கதை சொன்னார், மிகவும் மிடித்துப்போய்விட்டது. தற்போது ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்திருக்கிறோம்.

பாலா சாருடன் இன்னொரு படம் நடிக்கப் போகிறோம் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகக் கூறியுள்ள பூஜா, படத்தில் உங்கள் கதாபாத்திரம் பற்றி கூறுங்களேன் என்று கேட்டதற்கு மௌனத்தையே பதிலாக அளித்தார்.

இந்த நீண்ட இடைவெளி ஏன் என்று கேட்டதற்கு, நான் கடவுள் படத்தில் நடித்தது மிகப்பெரிய அனுபவம். அதில் நடித்ததைப் பார்த்து என் தந்தை, உன் திரையுலகில் ஒரு லட்சியத்தை நீ அடைந்துவிட்டாய். இனி வாழ்க்கையில் செட்டிலாக வேண்டிய வேலையை பார்க்கலாம் என்று கூறி இலங்கைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அவரது வார்த்தையை தட்ட முடியாமல், பல நல்ல வாய்ப்புகளை நான் மறுக்க வேண்டியதாகிவிட்டது.

ஆனால், பாலா சாருக்கு என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. அவரது அழைப்பு வந்ததுமே ஓகே சொல்லிவிட்டேன் என்கிறார் கண்களில் மகிழ்ச்சியுடன்.
comments | | Read More...

இவங்க பொண்ணுங்களிட்ட அடிவாங்குறது உறுதி!! (வீடியோ இணைப்பு)

 
இவங்களுக்கு வேற வேலை இல்ல, ஒருத்தன் பாடுறான் அதப்பாத்து இதுகளும் தொடங்கீற்றுதுகள்.
 
பொண்ணுங்கதான் வாழ்க்கையாம், அவங்கள மோட்டசைக்கில்ல போய் செட்டாக்கினமாம் அப்ப பாருங்கோவன்.
 
பிகருக்கு பாட்டாம், காதலிலையும் வெறியாம், தாடி வச்ச பசங்களுக்கு அறிவுரையாம்
 
என்னதான் இருந்தாலும் யாழ்ப்பாணத்து இளசுகள் கொஞ்சம் வித்தியசாம் தான்.
comments | | Read More...

விடுதலைப்புலிகளின் கதையை மையமாக கொண்டு இந்தியில் தயாராகிறது ‘ஜப்னா’ படம்!

 

விடுதலைப்புலிகளை பின்புலமாக வைத்து கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தை மணிரத்னம் இயக்கினார். மாதவன் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

இதுபோல் இந்தியில் விடுதலைப்புலிகளை மையப்படுத்தி புதுப்படம் தயாராகிறது. சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமான சண்டை, ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகளின் யுத்த நடவடிக்கைகள் போன்றவை இதில் காட்சிபடுத்தப்படுகின்றன.
இதில் கதாநாயகனாக ஜான் ஆபிரகாம் நடிக்கிறார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். ஜாப்னா என படத்துக்கு பெயரிட்டுள்ளனர்.
போரில் ஒரு விடுதலைப் புலி சந்தித்த நிகழ்வுகள், பட்ட கஷ்டங்கள் போன்றவற்றை திரைக்கதையாக தொகுத்துள்ளனர். இப்படத்தை ஜோசித் சிர்கார் இயக்குகிறார்.
இவர் ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினையை வைத்து 'யாஹன்' என்ற படத்தை எடுத்து வெளியிட்டார். விடுதலைப்புலிகள் பற்றிய 'ஜப்னா' படம் அரசியல் திரில்லர் கதையாக உருவாகிறது என்றார் அவர்.
comments | | Read More...

11 மீனவர்கள் கைது: இலங்கையை தொடர்ந்து தனிழக மீனவர்களை குறிவைக்கும் மாலைதீவு

 
 


நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேரை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரிக்கு தெற்கே, இந்தியப் பெருங்கடலின் நடுவில் அமைந்துள்ள மாலத்தீவுக்கும், இந்தியாவுக்கும் இடைப்பட்ட எல்லைப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 11 மீனவர்களும் இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 11 மீனவர்களும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.



comments | | Read More...

தமிழ்ச் சிறுமி மீது வெள்ளவத்தை பொலிஸாரின் கொடூரம்

 

வீட்டுப் பணிப் பெண்ணாக தான் வேலை செய்த வீட்டில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் வெள்ளவத்தைப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியின் கைகளை இரண்டையும் உயர்த்தி அந்தப் பொலிஸ் நிலையத்தின் மேல் கூரைக் கம்பில் (பராலையில்) கட்டி வைத்து குறித்த சிறுமி மீது வெள்ளவத்தை பொலிஸ் அதிகாரிகள் இருவர் கடுமையாகத் தாக்கிய மனதை உருக்கும் சம்பவம் ஒன்று அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டையடுத்து இது தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை ஒன்றினைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டத்துக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர், கொழும்பு மேலதிக நீதிவான் மஹி விஜயவீர முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி தான் பணி செய்த வீட்டிலிருந்து 190,000 ரூபா பெறுமதியான நகைகளையும் வேறு சில பொருட்களையும் களவாடினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்துக்க அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அங்கு வைத்தே சிறுமி இவ்வாறான கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். 18 வயதைக் கூட அடையா இவர் மலையகத்தைச் சேர்ந்த தமிழ்ச் சிறுமியாவார்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger