News Update :
Powered by Blogger.

நடராஜன் கைது செய்யப்பட்டது ஏன்?

Penulis : karthik on Sunday, 19 February 2012 | 08:51

Sunday, 19 February 2012

 
 
 
நில அபகரிப்பு மற்றும் மிரட்டல் தொடர்பாக நடராஜன் கைது செய்யப்பட்டார் என்று தஞ்சாவூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 
நேற்று இரவு தனது பெசன்ட் நகர் வீட்டில் வைத்து தஞ்சாவூர் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார் நடராஜன். அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் தஞ்சாவூர் போலீஸார் ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.
 
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
 
தஞ்சை அருகே விளார் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தஞ்சாவூர் மாவட்டம் விளார் பஞ்சாயத்திற்கு உட்பட்ட விளார் கிராமத்தில் உள்ள தனது தகப்பனார் செங்கமலத்தின் பெயரில் இருந்த 20 ஏக்கர் புஞ்சை நிலத்தில் சுமார் 15 ஆயிரம் சதுரஅடி இடத்தை சட்ட விரோதமாக எம்.நடராஜன், சிலருடன் சேர்ந்து அதில் இருந்த மரங்கள் மற்றும் வேலிகளை சேதப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்து இருந்தார்.
 
இதுகுறித்து கேட்டபோது தன்னை அச்சுறுத்தி மிரட்டினார் என்று கூறியிருந்தார். அதன்பேரில் தஞ்சை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை போலீசாரால் எம்.நடராஜன் சென்னையில் இருந்தபோது சென்னை மாநகர காவல்துறையினர் உதவியுடன் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



comments | | Read More...

சென்னையில் கல்லூரி மாணவி கொலை!! ஒருதலைக்காதல் விபரீதம்!

 

சென்னையில் ஒருதலைக்காதல் விவகாரத்தால் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனாம்பேட்டை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் வசித்து வந்தவர் சங்கீதா (19). இவர் காயிதே மில்லத் கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வந்த மணிகண்டன் என்பவர் சங்கீதாவை ஒருதலையாக காதலித்து வந்தார்.

ஆனால் மணிகண்டனின் காதலை சங்கீதா ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டு அருகே சங்கீதா சென்று கொண்டிருந்த போது மணிகண்டன் அவரை வழிமறித்து பேசினார். என்னை தவிர வேறு யாரும் உன்னை திருமணம் செய்தால் நான் சும்மாவிட மாட்டேன் என மிரட்டினார். ஆனால் சங்கீதா இதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் நடந்து சென்று கொண்டே இருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தினார். இதில் உடலின் பல்வேறு இடங்களில் கத்திக் குத்து விழுந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் சங்கீதாவின் உயிர் பிரிந்தது.

கூட்டத்தை பார்த்ததும் மணிகண்டன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அங்கிருந்தவர்கள் அவரை விரட்டிச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் தேனாம்பேட்டை போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீசாரிடம் மணி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
சங்கீதாவை பார்த்ததுமே எனக்கு பிடித்துவிட்டது. அவரது முதல் பார்வையிலேயே காதல் வயப்பட்டேன். சங்கீதா எல்லோரிடமும் கலகலப்பாக பேசுவார். அவரது இந்த சுபாவம், அவர் மீதான காதலை மேலும் அதிகரித்தது.
2 ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் காதலை வெளிப்படுத்தினேன். முதலில் தயங்கிய சங்கீதா, பின்னர் காதலை ஏற்றுக் கொண்டார். நேரிலும் போனிலும் அடிக்கடி பேசுவோம்.
கல்லூரியில் சேர்ந்த பிறகு என்னுடன் பேசுவதை படிப்படியாக குறைத்துவிட்டார். கடந்த 14-ம் தேதி காதலர் தினத்தன்று அவருடன் பேச முயன்றும் முடியவில்லை.
பள்ளி மாணவியாக இருந்தபோது காதலித்தவள், கல்லூரிக்கு சென்றதும் காதலிக்க மறுக்கிறாளே என்று ஆத்திரம் வந்தது. என்னை காதலிக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைத்தேன்.
அதனால் கத்தியுடன் அவரது வீட்டுக்கு சென்றேன். காதலை ஏற்றுக் கொண்டால் விட்டு விடுவது, மறுத்தால் கொன்று விடுவது என்ற முடிவுடன் காத்திருந்தேன். வேலையில் இருந்து வந்த சங்கீதாவிடம் பேச முயன்றேன். என்னை மறந்துவிடு என அவர் கூறியதால் கத்தியால் குத்திக் கொலை செய்தேன். இவ்வாறு மணி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
comments | | Read More...

தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டை குறைக்க நடவடிக்கை: சென்னையில் மேலும் ஒரு மணி நேரம் மின்வெட்டு

 

தமிழ்நாட்டில் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஒரு நாளுக்கு சுமார் 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது ஒரு நாளுக்கு 7 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது. இதனால் தினமும் 4500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை நிலவுகிறது. மின் பற்றாக்குறை காரணமாக தமிழ்நாடு முழுவதும் மின் வெட்டு அமல் படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களில் அதிகபட்சமாக 8 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. தொழிற்சாலைகளில் 20 சதவீதம் மின் வெட்டு கடைபிடிக்கப்படுகிறது. புதிய மின் திட்டங்களை உரிய காலத்தில் தொடங்காததும், ஏற்கனவே உள்ள மின் உற்பத்தி நிலையங்களை சீராக முறைப்படி பராமரிக்காததும், நிதி நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் மின் வாரியம், பணம் செலவழித்து மற்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவு மின்சாரத்தை வாங்க இயலாமல் இருப்பதும் தான் மின் தட்டுப்பாட்டுக்கு முக்கியகாரணமாகும்.

இந்த குறைகளை தீர்த்து 2013-ம் ஆண்டுக்குள் தமிழ் நாட்டை மின்உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்ற முதல்- அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் உள்ள 8 மணி நேர மின்வெட்டு மக்களிடம் கடும் அவதியை ஏற்படுத்தி உள்ளது.

தொழிற் சாலைகளிலும் திட்ட மிட்டப்படி உற்பத்தியை நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து உயர்அதிகாரிகளை நேற்று அழைத்து ஆலோசனை நடத்திய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மின்தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்த வழி முறைகளை அறிக்கையாக தயாரித்து அளிக்குமாறு அறிவுறுத்தினார். அதன்படி பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மின்வாரிய அதிகாரிகள் தயாரித்தனர்.

இந்த அறிக்கையை தமிழக அரசிடம் இன்று மின் வாரிய அதிகாரிகள் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில், சென்னை மற்றும் பெரிய தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு அளவை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் மிச்சமாகும் கணிசமான மெகாவாட் மின்சாரத்தை மற்ற மாவட்டங்களுக்கு வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்று தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தமிழ் நாட்டில் அமலில் உள்ள மின்வெட்டில் மாற்றங்கள் வர உள்ளது. சென்னையில் தற்போது ஒவ்வொரு பகுதி வாரியாக தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. இனி இந்த மின்வெட்டு 2 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது.

சென்னை நகருக்கு தினமும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. கூடுதலாக ஒரு மணி நேரம் மின் வெட்டை சென்னையில் அமல்படுத்தும் பட்சத்தில் தினமும் 300 மெகாவாட் மின்சாரம் மிச்சமாக வாரியத்துக்கு கிடைக்கும்.

சென்னையில் மின்சாரத்தை மிச்சப்படுத்துவது போன்று தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை தினம் அறிவித்து, மின்சாரத்தை மிச்சப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது தொழிற்சாலைகளுக்கு 20 சதவீத மின்வெட்டு உள்ளது.

இந்த மின்வெட்டு 40 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது. மேலும் பெரிய தொழிற்சாலைகளுக்கு 2 நாட்கள் மின்சார விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் 700 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும்.

சென்னையில் மிச்சமாக கிடைக்கும் 300 மெகாவாட், தொழிற்சாலை விடுமுறையால் மிச்சமாக கிடைக்கும் 700 மெகா வாட்மூலம் மின்சார வாரியத்துக்கு தினமும் சுமார் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இந்த மின்சாரத்தை சென்னை தவிர்த்த மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக மாவட்டங்களில் உள்ள மின்வெட்டு நேரம் கணிசமாக குறையும். தற்போது சென்னை தவிர தமிழ்நாடு முழுவதும் 8 மணி நேர மின்வெட்டு உள்ளது. இந்த மின்வெட்டு 5 மணி நேரமாக குறையும். இது தமிழக மக்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும்.

இதற்கிடையே வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவது பற்றியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது மின்வாரியம் சுமார் 7 ஆயிரம் கோடி கடனில் உள்ளது. இந்த நிலையில் வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கினால், நிதிநிலைமை மேலும் மோசம் அடையலாம் என்று கருதப்படுகிறது.

வெளிச்சதையில் ஒரு யூனிட் மின்சாரம் நேரத்துக்கு தகுந்தபடி ரூ.6 முதல் ரூ.16 வரை பணம் கொடுத்து வாங்கப்படுகிறது. இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் மின்சாரம் மக்கள் நலன் கருதி, யூனிட் ஒன்றுக்கு 80 பைசாவுக்கு தான் கொடுக்கப்படுகிறது. எனவே மின் கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே இந்த சிக்கலுக்கு தீர்வு காணமுடியும் என்று சொல்கிறார்கள்.

இந்த சிக்கலையும் மீறி வெளிச்சந்தைகளில் மின்சாரம் வாங்குவது பற்றி தமிழக அரசு இன்று முடிவு எடுக்க உள்ளது. வெளிச்சந் தைகளில் கூடுதல் மின்சாரம் வாங்கும் பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு கால அளவை மேலும் குறைக்க முடியும். மற்ற மாவட்டங்களில் உள்ள தனியார் மின் உற்பத்தியாளர்களிடமும் மின்சாரம் வாங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அப்படி மின்சாரம் வாங்கினால் 400 மெகாவாட் மின்சாரம் தினமும் கூடுதலாக கிடைக்கும். அதுபோல மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக தினமும் 100 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. இவற்றை வைத்து சமாளித்து விட்டால், வரும் மே மாதம் முதல் காற்றாலை மூலம் ஓரளவு மின்சாரம் கிடைக்க தொடங்கி விடும்.

மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தினமும் 2500 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதை வைத்து கோடையில் ஏற்படும் மின்தட்டுப்பாட்டை சமாளிக்கலாம் என்று மின் வாரிய அதிகாரிகள் கருதுகிறார்கள்.

இதற்கிடையே மின் வெட்டை அமல்படுத்துவதில் பயங்கர குளறுபடிகள் நடப்பதாக மக்கள் குற்றச்சாட்டுகிறார்கள். எந்தெந்த நேரங்களில் மின்சாரம் வராது என்பதை தெள்ளத் தெளிவாக கூறி விட்டால், அதற்கு ஏற்ப, தங்கள் அன்றாட பணிகளை செய்து கொள்ள வசதியாக இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள். எனவே மாவட்டங்களுக்கு மின்வெட்டு நேரம் குறைப்பு அறிவிப்பு வெளியிடப்படும் போது, எந்தெந்த நேரத்தில் மின்சாரம் இருக்காது என்ற விவரம் தெளிவாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் அனைத்து தரப்பினருக்கும் வேறுபாடியின்றி மின்வெட்டை அமல்படுத்தவும் தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மின் வெட்டு குறைப்பு நாளை மறுநாள் (20-ந் தேதி திங்கட்கிழமை) முதல் நடை முறைக்கு வரும் என்று மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
comments | | Read More...

விபத்தில் சிக்கித் தவித்த திமுகவினருக்குக் கை கொடுத்த வைகோ!

 

சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த திமுகவினரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை தர உதவியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.வைகோவின் இந்த மனிதாபிமானச் செயல் திமுகவினரை நெகிழ வைத்துள்ளது.கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பெரியப்பட்டு கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச்செயலாளர் அர்ஜூனன்(45). இன்று காலை அவர் மணிகண்டன்(30) என்ற திமுக பிரமுகருடன் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு கடலூர்-சிதம்பரம் சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக சென்ற கார் இருவர் மீதும் மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புதுச்சேரி அரியாங்குப்பத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் பெரியப்பட்டு வழியாக சென்று கொண்டிருந்தார். சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை பார்த்ததும் வைகோ காரை நிறுத்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

உடனடியாக பின்னால் வந்த கட்சி நிர்வாகி காரில் அவர்களை ஏற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அந்த கார் புறப்பட்ட பின்னரே வைகோ தனது காரில் பயணத்தை தொடர்ந்தார்.

அத்தோடு, அரியாங்குப்பம் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வைகோ, தனது செல்போன் மூலம் காயமடைந்த திமுகவினரின் நிலை குறித்து அவர்களைத் தொடர்பு கேட்டார். அவர்கள் வைகோவின் உதவி குறித்து மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

comments | | Read More...

துரோகம் செய்யும் ரம்யா நம்பீசன் !!

 
 
கேரளாவில் பரபரப்பாகப் பேசப்படும் டிராஃபிக் படத்தின் உரிமையை ராதிகா சரத்குமார் வாங்கி அதில் முக்கிய பாத்திரத்தில் சரத்குமாரே நடிக்கிறார்.


அதில் கணவனுக்கு துரோகம் செய்யும் கேரக்டராக மலையாளத்தில் நடித்து ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியயும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ரம்யா நம்பீசன் மலையாளத்தில் நடித்த அதே கேரக்டரில் தமிழில் நடிக்கவிருக்கிறார்.

இதே நேரத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் பிரித்விராஜ் நடித்தால் நன்றாக இருக்குமே என்று ராதிகா அணுக ஸாரி மேடம், கைவசம் நான் ஹீரோவா நடிக்கிற ஒரு இந்திப்படமும் ,ஆறு மலையாளப் படங்களும் இருக்குது.

என்னால 2012 முழுக்கவே கால்ஷீட் கொடுக்க முடியாது என்று ஒரேயடியாக உதட்டைப்பிதுக்கி விட்டாராம் பிருத்விராஜ். ராவணனுக்கு அப்புறம் தமிழ்ல இவ்வளவு பெரிய கேப் விட்டிருக்க கூடாதுதான். நடுவுல எதிர்பாராம வந்த இந்திப்படத்தால ஒரு தமிழ்ப்படம் கூட பண்ண முடியாம போச்சி என்று லைட்டாக வருந்தவே செய்கிறார் வருத்விராஜ்.
comments | | Read More...

காதலனை தாக்கி காதலியை கற்பழிக்க முயற்சி!

       
 


கோவில்பட்டி அருகே நள்ளிரவில் காதலனை தாக்கி, காதலியை கடத்தி கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி, புதுரோடு ராஜேந்திரன் மகள்
சுபாஸ்ரீ,26. எம்.சி.ஏ., முடித்துள்ளார்.
இவரும், இதேபகுதி நாராயணசாமி மகன் பி.இ.,பட்டதாரி காளிராஜூம், 27, சில ஆண்டாக காதலித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணியளவில் இவர்கள் பைக்கில் வீட்டிலிருந்து புறப்பட்டனர்.

நள்ளிரவு 11 மணியளவில், கோவில்பட்டி - தூத்துக்குடி ரோட்டில், திட்டங்குளம் அடுத்த கருங்காலிப்பட்டி ஓடை அருகே சென்றபோது, மர்ம நபர்கள் இருவர், இவர்களை வழிமறித்தனர். காளிராஜை தாக்கிய அவர்கள், சுபாஸ்ரீயை கடத்தினர். உடனடியாக மெயின்ரோட்டிற்கு ஓடிவந்த காளிராஜ், அங்கு வந்த பஸ்சை வழிமறித்து நடந்த சம்பவத்தை கூறினார்.
இதையடுத்து, பஸ் பயணிகள் காட்டுப்பகுதியில் விரட்டிச்சென்று ஒரு வாலிபரை பிடித்து, சுபாஸ்ரீயை மீட்டனர். விசாரணையில், பிடிபட்டவர் கோவில்பட்டி, சிதம்பராபுரம் சங்கரமூர்த்தி மகன் கண்ணன், 21, எனத்தெரியவந்தது. அவரை நாலாட்டின்புத்தூர் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய இவரது நண்பர் செல்வக்குமாரை, தேடி வருகின்றனர்.
comments | | Read More...

அஜீத்தின் பில்லா 2 படம் இணையத்தில் - அதிர்ச்சியில் அஜீத்

 


அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தை சக்ரி டொலட்டி இயக்குகிறார். காந்த ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கி கிட்டத்தட்ட ஆறுமாதங்களாகியும் இந்த படத்தின் போஸ்டர்களை மட்டுமே வெளியிட்டிருந்தது படக்குழு.

ஷூட்டிங் ஸ்பாட், ஹீரோயின் போட்டோ ஷூட் போன்றவையெல்லாம் ரகசியமாகவே வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று பில்லா படத்தின் சில படங்கள் இண்டர்நெட்டில் வெளியாகின. படத்தை பார்த்த ரசிகர்கள் எப்போதும் போல படக்குழு தான் வெளியிட்டிருப்பார்கள் என அவற்றை பகிர்ந்தும், மொபைல்களிலும் ஏற்றிக் கொண்டனர்.
படங்களை இண்டர்நெட்டில் பார்த்த படக்குழுவினரே அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் தங்கள் தரப்பில் யாரும் இந்த படங்களை வெளியிடவில்லை எனவும் வேறு யாரோ தான் இதை செய்திருப்பார்கள் எனவும் கூறுகின்றனர்.
இதை கேள்விப்பட்ட அஜீத், சக்ரி டொலட்டி உட்பட படக்குழுவினர் அனைவரும் அப்சட் ஆகிவிட்டார்களாம்.
comments | | Read More...

தனது காதலன் யார் என்பதை விரைவில் அறிவிப்பார் த்ரிஷா…..

 

தமிழ், இந்தி, தெலுங்கு என பிஸியாக நடித்துக்கொண்டிருந்த த்ரிஷா சமீபகாலமாக படங்களை குறைத்துக்கொண்டார். தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிக்கிறார். இந்நிலையில் அவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்துவருகிறார்கள். யார் மாப்பிள்ளை என்பதை விரைவில் அறிவிக்க உள்ளனர். தற்போது பொள்ளாச்சியில் நடக்கும் 'தம்மு' என்ற தெலுங்கு பட ஷூட்டிங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்து வருகிறார்.

ஷூட்டிங்கில் த்ரிஷா அளித்த பேட்டியில்,''நடிகைகள் நட்பாக இருக்க முடியும். நான் மிகவும் பாசமாக இருப்பவள். சிலருடன்தான் நட்பாக பழகுகிறேன். நட்பு என்பது இருபக்கமும் கூர்மையான கத்தி போன்றது. இதனால் எப்போதுமே அளவுடன் பழகுவேன். என்னைப்பற்றி நிறைய வதந்திகள் வருகிறது. சில நேரம் அதைக்கண்டு சிரிப்புதான் வரும். தெலுங்கு நடிகர் ராணாவுடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது.

என்னுடைய திருமணத்துக்கு ரொம்பநாள் இல்லை. என் காதலனை விரைவில் அறிவிப்பேன். உண்மையாக இருப்பதில்தான் எனக்கு நம்பிக்கை அதிகம். நடிப்பை பொறுத்தவரையில் 2 அல்லது 3 பெரிய ஹீரோக்களுடன் நடித்து வருகிறேன். எத்தனை நாட்கள்தான்

comments | | Read More...

22 Feb ஜூனியர் விகடன் டவுன்லோட் செய்ய

 
 

இந்த வார ஜூனியர் விகடன் தரவிறக்க


22-2-2012 ஜூனியர் விகடன்


comments | | Read More...

இந்த வாரம் திரைக்கு வருகின்றன 5 படங்கள்

 


இந்த வெள்ளிக்கிழமையும் கோலிவுட் ரொம்ப பிஸி. காரணம் 5 புதிய படங்கள் திரையைத் தொடுகின்றன.

போனவாரம் 6 படங்கள் வெளியாகின. ஒவ்வொன்றும் ஒரு விதமான படம். இதில் தோணிக்கு நல்ல பெயர்.

இந்தவாரம் முப்பொழுதும் உன் கற்பனைகள், காதலில் சொதப்புவது எப்படி?, உடும்பன், காட்டுப்புலி மற்றும் அம்புலி என 5 படங்கள்.

இவற்றில் முப்பொழுதும் உன் கற்பனைகள் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அதர்வா-அமலா பால் நடித்துள்ள இந்தப் படம் ஒரு வித்தியாசமான த்ரில்லர் என்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, எல்ரெட் குமார் தயாரித்து இயக்கியுள்ளார்.

காதலில் சொதப்புவது எப்படி படம் தமிழ் – தெலுங்கில் வெளியாகிறது. நடிகர் சித்தார்த் இந்தப் படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இதிலும் ஹீரோயின் அமலா பால்தான்.

சில நெருக்கடிகளைத் தாண்டி உடும்பன் படம் வெளியாகிறது. உடும்பை வைத்து படம் எடுத்திருக்கிறார்கள். அர்ஜூன் நடிப்பில் வரும் காட்டுப் புலியும் ஆக்ஷன் த்ரில்லர்தான். அம்புலி ஒரு 3 டி படம். மனோஜ் நைட் ஷியாமளனின் வில்லேஜ் மாதிரி.

இவற்றோடு, கவுதம் மேனனின் ஏக் தீவானா தா (விண்ணைத் தாண்டி வருவாயா)வும் வெளியாகிறது. சென்னையில் மட்டும் 11 அரங்குகளில் இந்தப் படம் ரிலீஸ்!

ஆங்கிலப்படம் தி வுமன் இன் பிளாக், ரவி தேஜாவின் தெலுங்குப் படம் நிப்பு போன்றவையும் இன்றுதான் ரிலீஸ்.
comments | | Read More...

தெலுங்கு நடிகருடன் காதலா? மறுக்கும் திரிஷா

 


தெலுங்கு நடிகர் ராணாவை திரிஷா காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாயின.இதற்கு பதில் அளித்து திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-

நான் நடிகையாக இருப்பதால் என்னை பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. ராணாவை நான் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் வதந்தி பரப்பியுள்ளனர். ராணாவும் நானும் நண்பர்கள். வேறு எந்த தொடர்பும் எங்களுக்குள் இல்லை.

திருமணத்தை பற்றி நான் சிந்திக்கவில்லை என்று கூற மாட்டேன். முதலில் எனக்கு மாப்பிள்ளையாக வருவதற்கு தகுதியானவரை நான் சந்திக்க வேண்டும். இதுவரை அப்படிப்பட்ட நபரை நான் சந்திக்கவில்லை. இப்போது நான் தனிமையில் சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு நிறைய தோழிகள் உள்ளனர்.

சினிமாவில் இரு நடிகைகள் நண்பர்களாக இருப்பது கடினம் என்று சொல்வதை நான் ஏற்கமாட்டேன். நானும் பழைய நடிகை ராதா மகளும் தற்போது நெருங்கிய தோழிகளாக இருக்கிறோம். என்னுடன் பள்ளி காலத்தில் பழகிய தோழிகளுடனும் தற்போது நெருக்கமான நட்பு வைத்துள்ளேன்.

இவ்வாறு திரிஷா கூறினார்.
comments | | Read More...

இன்டர்நெட்டில் ‘பிட்’ பட ரேஞ்சுக்கு பரவும் பில்லா 2 ஸ்டில்கள்!

 

இணையதளங்களில் கடந்த சில தினங்களாகவே பில்லா-2 பட ஸ்டில்களைப் பார்க்க முடிகிறது.ஆனால் இவை முறையாக வெளியானவை அல்ல. படத்தில் விபச்சார விடுதியில் நடக்கும் ஒரு காட்சியை அப்படியே லீக் செய்திருக்கிறார்கள் இணையத்தில்.

ஆணுக்கு பெண் வேடம் போட்டு படுக்கையில் கிடத்தி வைத்திருப்பது போல ஒரு காட்சி. படுகவர்ச்சியான ஒரு பெண்ணுடன் அஜீத் இருப்பது போன்ற காட்சி என கிட்டத்தட்ட பிட்டு பட ரேஞ்சுக்கு அந்தக் காட்சிகள் உள்ளன.

இதனைப் பார்த்து அஜீத் ரசிகர்கள் படு காட்டமாகிவிட்டனர். உண்மையிலேயே இவை பில்லா ஸ்டில்கள்தானா… இவை உண்மையென்றால் படம் எப்படியிருக்குமோ என பயமாக உள்ளதே என ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் அளவுக்கு நிலைமையை உருவாக்கிவிட்டன இந்த ஸ்டில்கள்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டுள்ளார்.

இந்த ஸ்டில்களை நாங்கள் வெளியிடவே இல்லை. யாரோ இணையதளத்தில் லீக் செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

comments | | Read More...

அல்லு அர்ஜூன்,ஸ்ருத்ஹாசன் ஜோடியை இயக்குகிறார் செல்வராகவன்.

 

செல்வராகவன் முதன் முறையாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அல்லு அர்ஜுனை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. னால் இப்படம் சிறிது நாட்களில் கைவிடப்பட்டது.

ஆர்யா,அனுஷ்கா நடிக்க 'இரண்டாம் உலகம்' படத்தினை இயக்கி வருகிறார் செல்வராகவன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு நடத்துவதற்காக, பிரேசில் நாட்டிற்கு சென்று படப்பிடிப்பு இடங்களை பார்வையிட்டு திரும்பி இருக்கிறார் செல்வராகவன்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

'இரண்டம் உலகம்' படத்தினை முடித்த உடன் இப்படத்தினை துவங்க இருக்கிறார் செல்வராகவன். படத்தின் நாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கும் முதல் நேரடி தமிழ் படமாக இப்படம் உருவாக இருக்கிறது.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger