News Update :
Powered by Blogger.

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு லாலுபிரசாத் வரவேற்பு

Penulis : karthik on Saturday, 15 September 2012 | 18:43

Saturday, 15 September 2012

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு லாலுபிரசாத் வரவேற்பு சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு லாலுபிரசாத் வரவேற்பு
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு லாலுபிரசாத் வரவேற்பு

ஷாப்ரா(பீகார்), செப்.16-
 சில்லரை வணிகத்தில் 51 சதவீதம் அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு அதிரடி முடிவு எடுத்து அறிவித்து உள்ளது. இதற்கு பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ராஷ்டீரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலுபிரசாத் யாதவ் மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.  இதுகுறித்து அவர் நிருபர் களிடம் கூறியதாவது:- சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் அடைவார்கள். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நியாயமான விலையை அவர்கள் பெறுவதற்கும் இதனால் நல்லதொரு சூழ்நிலை உருவாகி உள்ளது. தன் மூலம் உலக அளவிலான தரமான பொருட்களை பொது மக்கள் தேர்வு செய்து வாங்கி பயன் அடைவார்கள். சில்லரை வர்த்தக நிறுவனங்கள் � �னைத்தும் குளிரூட்டப்பட்ட கடைகளை அமைத்து நுகர்வோர்கள் நிதானத்துடன் நல்ல தரமான பொருட்களை தேர்வு செய்து வாங்குவதற்கு அரிய வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தரமான மளிகை பொருட்கள், உலக அளவிலான உணவு பொருட்கள், பழங்கள் போன்ற பலவகையான பொருட்கள் இங்கு கிடைக்கும் வகையில் இந்நிறுவனங்கள் அமையும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள அன்னிய நேரடி முதலீடுக்கு எங்களது கட்சி உறுதி� ��ான முழு ஆதரவை தெரிவிக்கும். இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு நாங்கள் எங்களது ஆதரவை மத்திய அரசுக்கு அளிப்போம்.  இவ்வாறு லாலுபிரசாத் யாதவ் கூறினார்.
comments | | Read More...

ஆக்கிரமிப்புகளை அகற்றி வக்பு வாரிய சொத்துக்கள் பாதுகாக்கப்படும்: புதிய தலைவராக பொறுப்பேற்ற தமிழ்மகன் உசேன் பேட்டி

ஆக்கிரமிப்புகளை அகற்றி வக்பு வாரிய சொத்துக்கள் பாதுகாக்கப்படும்: புதிய தலைவராக பொறுப்பேற்ற தமிழ்மகன் உசேன் பேட்டி ஆக்கிரமிப்புகளை அகற்றி வக்பு வாரிய சொத்துக்கள் பாதுகாக்கப்படும்: புதிய தலைவராக பொறுப்பேற்ற தமிழ்மகன் உசேன் பேட்டி
ஆக்கிரமிப்புகளை அகற்றி வக்பு வாரிய சொத்துக்கள் பாதுகாக்கப்படும்: புதிய தலைவராக பொறுப்பேற்ற தமிழ்மகன் உசேன் பேட்டி

சென்னை, செப்.15-

தமிழக வக்பு வாரிய தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். இவர் இன்று சென்னை வக்பு வாரிய அலுவலத்தில் பதவி ஏற்றார். பதவி ஏற்பு நிகழ்ச்சியில், அமைச்சர்கள் முகமது ஜான், வளர்மதி, கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூத், மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆஜர்ஜலீல், இஸ் மாயில் கனி, கவுன்சிலர்கள் அலிகான் பஷீர், இம்தியாஸ் மற்றும் கிதியோன் ராஜ், ராஜசேகரன், எஸ்.எம். பிள்ளை, செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பதவி ஏற்புக்கு பிறகு தமிழ்மகன் உசேன் கூறியதாவது:-

12-வது வக்பு வாரிய தலைவராக என்னை பணியாற்ற உத்தரவிட்ட முதல்-அமைச்சர் ஜெய லலிதாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் 6,800 வக்பு நிறுவனங்கள் உள்ளன. இதை கண்காணிப்பதும், வழி நடத்துவதும், சொத்துக்களை பாதுகாப்பதும் முக்கிய கடமைகளாகும். இந்த பணிகளை செவ்வனே நிறைவேற்றி முதல்-அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும் வகையில் செயல்படுவேன். வாரிய சொத்துக� ��களை மேம் படுத்தி வருமானத்தை அதி கரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஆக்கிரமிப்புகளை அகற்றி சொத்துக்கள் பாதுகாக்கப்படும். இஸ்லாமிய மக்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலை மேம்பட நானும், உறுப்பினர்களும் தேவையான முயற்சிகள் மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
comments | | Read More...

அன்னிய முதலீடு டீசல் விலை உயர்வைக் கண்டித்து பா.ஜ.க. பேரணி: வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் கைது

அன்னிய முதலீடு டீசல் விலை உயர்வைக் கண்டித்து பா.ஜ.க. பேரணி: வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் கைது அன்னிய முதலீடு டீசல் விலை உயர்வைக் கண்டித்து பா.ஜ.க. பேரணி: வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் கைது
அன்னிய முதலீடு டீசல் விலை உயர்வைக் கண்டித்து பா.ஜ.க. பேரணி: வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் கைது

புதுடெல்லி,செப்.15-
 டீசல் விலை உயர்வு மற்றும் மல்டிபிராண்ட் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றைக் கண்டித்து டெல்லியில் இன்று பாரதீய ஜனதா கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து, பாராளுமன்றம் நோக்கி தொண்டர்கள் அணிவகுத்துச் சென்றனர். டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும ் என்ற கோஷத்துடன் சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் வெங்கையா நாயுடு, வி.கே.மல்கோத்ரா, விஜய் கோயல், விஜேந்தர் குப்தா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். முன்னதாக போராட்டக் காரர்களிடையே வெங்கையா நாயுடு பேசுகையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் போன்ற பல்வேறு முறைகேடுகளை திசை திருப்ப விரும்புகிறது. அதனால்தான் டீச� �் விலை உயர்வு முடிவை எடுத்துள்ளது.டீசல் விலை உயர்வை முற்றிலும் வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகள், விவசாயிகளுடன் இருக்க விரும்புகிறார்களா அல்லது அரசுடன் இருக்கப்போகிறார்களா? என்பதை முடிவு செய்ய வேண்டும். டீசல் விலை உயர்வை அரசு வாபஸ் பெறச் செய்ய வேண்டும்.அல்லது அவர்கள் தங்கள் ஆதரவை விலக்கி� ��்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
comments | | Read More...

டீசல் விலை உயர்வு மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ரூ.50 கோடி கூடுதல் செலவு

டீசல் விலை உயர்வு மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ரூ.50 கோடி கூடுதல் செலவு டீசல் விலை உயர்வு மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ரூ.50 கோடி கூடுதல் செலவு
டீசல் விலை உயர்வு மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ரூ.50 கோடி கூடுதல் செலவு

சென்னை, செப். 15-

மத்திய அரசு டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது. இதையடுத்து ஆம்னி பஸ், ஆட்டோக்கள், வாடகை கார்கள், கால் டாக்சி ஆகியவற்றின் கட்டணம் உடனடியாக உயர்ந்தது. ஆம்னி பஸ்களில் ரூ.30 கட்டணம் உயர்த்தப்பட்டது. அரசு போக்குவரத்து கழக பஸ்களில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தமிழ் நாட்டில் 20,000 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து கழகங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது. அரசு போக்குவரத்து கழகத்திற்கு குறைந்த விலையில் டீசல் விற்பனை செய்யப்பட்டாலும் கூட ரூ.500 கோடிக்கு மேல் கூடுதல் செலவு ஏற்படுகிறது.

இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் பெரும் சவாலை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.50 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. டீசல் விலையேற்றத்தால் மாதத்திற்கு ரூ.4 1/2 கோடி இழப்பு ஏற்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மற்ற போக்குவரத்து கழகங்களும் டீசல் விலை உயர்வை எப்படி சமாளிக்க போகிறது என்று தெரியவில்லை அதிகாரிகள் விழி பிதுங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு ஓரளவிற்கு வருவாயை எட்டிப் பார்த்த அரசு போக்கு வரத்து கழகங்கள் மீண்டும் நஷ்டத்திற்கு தள்ளப்படும் நிலை உருவாகி உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
comments | | Read More...

விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா

விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா
விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா

சென்னை, செப். 15-

முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாகப்பட்டினம் மாவட்டம், வாய்மேடு காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த சு.ராஜேந்திரன்10.9.2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது  மாரடைப்பால் காலமானார். தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில், தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த சு.சங்கர் 12.9.2012 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இந� ��த செய்திகளை அறிந்து நான் மிக்க துயரம் அடைந்தேன். ராஜேந்திரன் மற்றும் சங்கர் ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது  குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இருவரின் குடும்பங்களுக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதேபோல், மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டம், துவரிமான் கிராமம் அருகே 9.9.2012 அன்று அரசுப் பேருந்தும் இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த கந்தன் மற்றும் சுவாமிநாதன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், புக்கத்துறை கிராமம் அருகே 10.9.2012 அன்று பழையனூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சுப்பிரமணி மீது சென்� ��ையிலிருந்து மதுரை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த செய்திகளை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த சாலை விபத்துகளில் அகால மரணமடைந்த 3 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், புக்கத்துறை கிராமம், பழையனூர் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் சின்னைய்யன் பலத்த காயமடைந்துள்ளார் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்ட நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.மேலும், அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த கந்தன், சுவாமிநாதன் மற்றும் சுப்பிரமணி ஆகியோரின் குடும்பங்களுக்கு  தலா ஒரு லட்சம்  ரூபாயும், விபத்தில் பலத்த காயமடைந்த சின்னைய்யனுக்கு 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
comments | | Read More...

உத்தரபிரதேசத்தில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி மறுப்பு: அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேசத்தில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி மறுப்பு: அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேசத்தில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி மறுப்பு: அகிலேஷ் யாதவ்
உத்தரபிரதேசத்தில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி மறுப்பு: அகிலேஷ் யாதவ்

லக்னோ, செப்.15-

நாடுமுழுவதும் சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு எதிர்க் கட்சிகள் மட்டுமின்றி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உத்திர பிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது,

சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை சமாஜ்வாதி கட்சி ஆதரிக்கவில்லை. எனவே, உத்தரபிரதேசத்தில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
comments | | Read More...

சென்னை: அமெரிக்க தூதரகம் இன்றும் முற்றுகை

சென்னை: அமெரிக்க தூதரகம் இன்றும் முற்றுகை சென்னை: அமெரிக்க தூதரகம் இன்றும் முற்றுகை
சென்னை: அமெரிக்க தூதரகம் இன்றும் முற்றுகை

சென்னை, செப். 15-

நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் அமெரிக்காவில் திரைப்படம் எடுத்ததை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் உலகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நேற்று மாலை த.மு.மு.க.வினர் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்தினர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப� ��்டது.  

சிலர் தூதரகம் மீது கற்கள் வீசினர். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா படமும், அமெரிக்க கொடியும் எரிக்கப்பட்டன. அலுவலக  கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. போலீஸ் பூத்தும் தாக்கப்பட்டது.  

இதையடுத்து,போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அண்ணாசாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்றுள்ளதால், தூதரகத்திற்கு ஏன் சரியான பாதுகாப்பு அளிக்கப்பபடவில்லை? என்று தமிழக அரசாங்கத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை தவுகித் ஜமாத் அமைப்பினர் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடுவதற்காக ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் பீட்டர்ஸ் சாலையில் தடுத்து நிறத்தினார்கள்.

போராட்டத்தில் பங்கேற்றோர் அமெரிக்க ஜனதிபதி ஒபாமாவின் படத்தை எரித்தனர். அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். சிலர் அமெரிக்க தூதரகம் அருகே செல்ல முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

இந்த சம்பவம் காரணமாக அண்ணா சாலையிலும் அருகிலுள்ள சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் சென்னையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
comments | | Read More...

Early Marriage is Good for You 15 வயதில் திருமணம்

Early Marriage is Good for You
Early Marriage Is Good You

தாத்தா பாட்டி காலத்தில் 15 வயதில் திருமணம் செய்வது சதாரணமான விசயம். அதே நம் அப்பா அம்மா காலத்தில் 21 வயதானாலே பெண் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இன்றைக்கு நன்றாக படித்து கைநிறைய சம்பாதித்தாலும் சரியான பருவத்தில் திருமணம் செய்யாமல் 30 வயதுவரை தள்ளிப்போடுகின்றனர். இது உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நிபுணர்களின் கருத்து.

பருவம் பார்த்து விதை விதைக்க வேண்டும் அப்பொழுதுதான் சரியாக முளைக்கும் என்பது விவசாயத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும்தான் பொருந்தும் என்பது நிபுணர்களின் அறிவுரை. சரியான பருவத்தில் திருமணம் செய்வதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

சீக்கிரம் செட்டில் ஆகுங்க!

இன்றைய இளைய தலைமுறை கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். நல்ல படிப்பு, அதற்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என்று ஒரு லட்சியத்தை மனதில் பதித்துக்கொண்டு அதை சாதித்தும் விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் படிப்புக்கேற்ற வேலை கிடைத்ததும் அதற்கு மேலும் தள்ளிப்போடாமல் தாமதமின்றி திருமணம் செய்து கொள்வது அவசியம். இன்றைய காலத்தில் 15 வயதிற்குள் பால்ய விவாகம் செய்வது சாத்தியமில்லை. ஆனால் இளம் பருவத்தில் அதாவது 21 வயதில் இருந்து 25 வயதிற்குள் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்திற்கு மாற முயற்சிக்கலாம்.

இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் பெற்றோர் நல்ல ஆரோக்கிய மாக இருப்பார்கள். அதனால் பிறக்கப்போகும் தங்கள் பேரன், பேத்திகளை அவர்கள் தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். இதனால் தலையாய பிரச்சினையான குழந்தை வளர்ப்பது கூட தம்பதிகளுக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது.

18 முதல் 25 வயதில் திருமணம் செய்து கொண்ட 8ஆயிரம் இளம் தம்பதியரிடம் மேற்கொண்ட ஆய்வில் குடும்பத்தில் பெற்றோர் - குழந்தைகளிடையேயான உறவுமுறையில் அதிக அளவில் ஒரு ஒட்டுதல் இருந்தது. தலைமுறை இடைவெளிகள் அதிக்கம் இல்லை. இளம் வயது தம்பதியருக்குப் பிறந்த குழந்தைகள் அதிக புத்திசாலிகளாக இருந்தனர். திருமணம் காரணமாக அவர்களின் நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருந்தது. இந்த வயதினருக்கு ஏற்படும் மன அழுத்தம் தடுக்கப்பட்டது.

உளவியல் சிக்கல்கள்

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் 15 வயதிற்குள்ளாகவே, இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். ஹார்மோன்களின் மாற்றத்தினால் உடல் தேவைகள் தொடங்கிவிடும். ஆனால் வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 30, 35 வயதுவரை உடல் தேவையை பூர்த்தி செய்யாமல் இயற்கைக்கு எதிராக வாழ முற்படுவதனால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.

சிசேரியன் பிரசவங்கள்

தாமதமான திருமணம் உடல் ரீதியாக வும், உளவியல் ரீதியாகவும் கூட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கருத்தரிக்க தாமதம். அப்படியே கருத்தரித்தாலும் சுகப்பிரசவம் கேள்விக்குறி என்ற நிலை. காலதாமதமாக திருமணமானவர்களுக்கே அதிகமாக சிசேரியன் பிரசவம் நடக்கிறது.

பாட்டி காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்தவர்கள் அறுவைச் சிகிச்சையை அறிந்த தில்லை. அவர்கள் ஆரோக்கியமான வயதில் திருமணம் செய்து கர்ப்பமடைந்தனர். எளிதாக குழந்தை பெற்றுக் கொண்டனர். அதிகமாக சுகப்பிரசவங்களே நடந்தன. படிப்பு, வேலை, சொந்த காலில் நின்ற பிறகே இல்லறம் என்றெல்லாம் கூறி திருமணத்தை தாமதமாக செய்து கொள்கிறார்கள். இதனால் வயது முதிர்வடையும்போது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கிறது. இடுப்பெலும்பு வளைந்து கொடுக்கும் வயதைத்தாண்டி திருமணம் செய்துகொள்ளும்போது அநேக பெண்களுக்கு சிசேரியன் அவசியமாகி விடுகிறது.

தந்தையாகும் தகுதி

ஆண்கள், தாமதமாக திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால் தவறான பழக்கம் உடையவர்களாகிறார்கள். இயற்கை இச்சைகளை தீர்ப்பதற்காக செக்ஸ் புத்தகம், பலான படங்கள், சுய இன்பம், இணைய தள தேடல் என மாற்று வழிகளில் இன்றைய இளைஞர்கள் பயணப்படும் பின்னணியில், தள்ளிப்போடப்படும் அவர்கள் திருமணம் இருக்கிறது.

இதனால் தற்காலிக உணர்வுத் தேவைகளை முறைகேடாக அணுகப்போய், அதனால் எயிட்ஸ் அதிகரிப்பு, கள்ளக்காதல் போன்ற கலாசார சீரழிவும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அதனால் திருமண சமயத்தில் வீரியம் குறைந்து தந்தையாகும் தகுதியை பலர் இழக்கின்றனர்.

ஆகவே இன்றைய பெற்றோர்களே நீங்கள் தாமதமாக திருமணம் செய்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை உங்களின் குழந்தைகளுக்காவது காலா காலத்தில் திருமணத்தை முடித்து வைத்து சீக்கிரம் பேரன் பேத்தியை பார்த்து செட்டில் ஆகும் வழியைப் பாருங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

comments | | Read More...

டீசல் விலையை குறைக்கக்கோரி 17 ந்தேதி பா.ஜனதா போராட்டம் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

டீசல் விலையை குறைக்கக்கோரி 17 ந்தேதி பா.ஜனதா போராட்டம் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு டீசல் விலையை குறைக்கக்கோரி 17 ந்தேதி பா.ஜனதா போராட்டம் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
டீசல் விலையை குறைக்கக்கோரி 17 ந்தேதி பா.ஜனதா போராட்டம் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை, செப். 15-
  தமிழக பா. ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்தியில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட 2004-ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல், மண்எண்ணை மற்றும் சமையல் எரிவாயுவின் விலையை பல முறை உயர்த்தி உள்ளனர். தற்போது டீசலின் விலையை லிட்டருக்கு ரூ.5-க்கு மேல் உயர்த்தியதோடு, சமையல் எரி வாயுவின் விநியோகத்திலும் கட்டுப்பாடு விதித� ��து ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் தான் சலுகை விலையில் கொடுக்க முடியும் என்று அறிவித்துள்ளார்கள். சர்வதேச அளவில் பெட்ரோல், கச்சா எண்ணெய் விலை இறங்கி வரும் வேளையில் இந்திய அரசாங்கம் டீசல் விலையை உயர்த்தியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. எற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விஷம் போல் ஏறி வருகின்றன. வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் தொகையும் ஆண்டுதோறும� �� பெருகி வருகிறது. இந்நிலையில் மீண்டும் டீசல் விலையை ஏற்றியிருப்பது எரிகிற தீயில் எண்ணை விட்டதற்கு சமமான ஒன்று. இதனால் அத்தியாவசிய பொருளின் விலையும் ஏற உள்ளது. வறியோரின் வாழ்க்கை மேலும் வறண்டு போகும் ஆபத்து உள்ளது. சமையல் எரிவாயு ஆண்டுக்கு 6 சிலிண்டர் சலுகை தான் என்ற விதிமுறை மேலும் நம் பெண்களை வாட்டும் கொடுமையாக அமைந்துள்ளது. இந்நேரத்தில் வாஜ்பாய் பிரதமராக இரு� �்தபோது ஏற்கனவே ஒரு சிலிண்டர் வைத்திருப்போருக்கு இரண்டாவது சிலிண்டரை கொடுத்து பெண்களின் சிரமத்தை குறைத்ததை நன்றியோடு நினைவில் கொள்கிறோம். ஆண்டுதோறும் 12 சிலிண்டராவது கொடுக்க மத்திய அரசை வலியுறுத்துவதுடன் ஏற்றிய டீசல் விலையை குறைக்கவும் வலியுறுத்துகிறோம். இப்பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு சென்று நியாயம் கேட்க பாரதீய ஜனதா கட்சி வருகின்ற 17-ந்தேதியிலிருந்து 24-ந்� ��ேதி வரை தமிழகம் முழுவதும் அறப்போராட்டங்களை நடத்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger