News Update :
Powered by Blogger.

பிரபல நடிகைகளின் பெயரில்ஆபாச சிடி: 3 பேர் கைது

Penulis : karthik on Thursday, 26 January 2012 | 20:58

Thursday, 26 January 2012

திருச்சியில் பிரபல நடிகைகளின் பெயரில் ஆபாச சிடி தயாரித்த 3 பேரை
போலீசார் கைது செய்தனர்.
திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில்
தனிப்படை போலீசார் திருச்சி மாநகரில் உள்ள சிடி விற்பனை கடைகளில்
வழக்கம் போல் சோதனைநடத்தினர். அப்போதுதிருச்சி கீழக்கொண்டையம்பேட்டை
பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆபாச சிடிக்கள் தயாரிக்கப்படுவதாக
அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
For free News videos
உடனே அவர்கள் அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது
பிரபல நடிகைகளின் பெயரில் ஆபாச சிடிக்கள் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து ஆபாச சிடி தயாரித்த நாசர்(26), நூருல் அமீன் (24), பஷீர் (24)
ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அந்த வீட்டில் இருந்த ஆபாச சிடி தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட
கம்ப்யூட்டர், டிவி மற்றும் சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன்மதிப்பு சுமார் ரூ. 6லட்சம் என கூறப்படுகின்றது.
Tags: பறிமுதல்
Other articles
comments | | Read More...

பதவி பறிக்கப்பட்டதால் மதுரை அதிமுக பிரமுகர் சென்னை வந்து தற்கொலை

கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்தும், தனது உழைப்பைப் புறக்கணிக்கும்
வகையில் கட்சிப் பதவியை நிர்வாகிகள் பறித்ததால் வேதனை அடைந்த, மதுரை
மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கிராமத்தைச் சேர்ந்த அதிமுக
பிரமுகர், சென்னைக்கு வந்து எம்ஜிஆர் சமாதியில் தீக்குளித்துத் தற்கொலை
செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாதரையைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவர் அந்த ஊர் கிளைக் கழக செயலாளராக
இருந்து வந்தார். சமீபத்தில்இவரை பதவியிலிருந்து நீக்கி விட்டனர். இதனால்
மன வேதனை அடைந்தார் நாகேந்திரன்.
இந்த நிலையில் சென்னைக்கு வந்தார் நாகேந்திரன். இன்று காலை ஆறரை
மணியளவில்எம்ஜிஆர் சமாதிக்கு வந்தார். அப்போதுதான் நுழைவாயில்
திறக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்ற அவர்சமாதியை சுற்றிப் பார்த்தார்.
பின்னர்புல் தரையில் அமர்ந்தார்.
சிறிது நேரம் கழித்து பையில் இருந்த கேனை எடுத்தார். அதில் இருந்த
மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். வலி தாங்க
முடியாமல்அலறினார். பின்னர் எம்ஜிஆர் வாழ்க என்று கோஷம் போட்டபடியே
அங்கும் இங்கும் ஓடினார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த பாதுகாவலர் வஜ்ஜிரம் தண்ணீரை ஊற்றி தீயை
அணைத்தார். பின்னர் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல்
கொடுத்தார்.
போலீஸார் நாகேந்திரனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு
சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் நாகேந்திரன்.
நாகேந்திரன் வைத்திருந்த பையில் சில மனுக்கள் இருந்தன. தன்னைப் பற்றிய
விவரத்தையும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் மாவட்ட
நிர்வாகிகள் குறித்தும் அவர் ஏகப்பட்ட புகார்களை எழுதி வைத்திருந்தார்.
உசிலம்பட்டியில் பலரை கட்சியில் இணைத்துள்ளாராம் நாகேந்திரன். ஆனஆல்
அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்படவில்லை. மாவட்ட முக்கிய
நிர்வாகிகளிடம் கேட்டபோது சரியாக பதில் கூறவில்லை என்றும் கட்சிக்காக
இத்தனை ஆண்டுகள் உழைத்தும் பயனில்லையே என்ற மனவருத்தத்தில்
தீக்குளித்தாகவும் போலீசாரிடம் நாகேந்திரன் கூறியதாக தெரிகிறது.
இந்த சம்பவம் சென்னையில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags: தற்கொலை , சென்னை , suicide
comments | | Read More...

எப்போதும் தண்ணியுடன் இருப்பேன்! – ஓவியா

எப்போதும் தண்ணியுடன் இருப்பதுதான் என் அழகின் ரகசியம், என்று நடிகை
ஓவியா கூறியுள்ளார். களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு
அறிமுகமானவர் நடிகை ஓவியா. முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம்
ரசிகர்களை கட்டிப்போட்ட ஓவியாவுக்கு அடுத்தடுத்த படங்கள் அமையவில்லை
என்றுதான் சொல்ல வேண்டும்.
கமல்ஹாசனின் மன்மதன் அம்பு படத்தில் சிறு கேரக்டரில் மட்டுமே வந்தார்.
தற்போது மெரினா படத்தில் நடித்து வரும் ஓவியா தனது அழகு ரசிகயம் பற்றி
பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.
தினமும் தேன் சாப்பிடுவேன். கேரளத்து மலைத் தக்காளியை முகத்துல
பூசிப்பேன். இந்த இரண்டு விஷயத்தையும் தவறாமல் செய்வேன். தண்ணீர் அதிகம்
குடிப்பேன். எப்போதும் ஹேண்ட் பேக்கில் தண்ணீர் பாட்டில் இருந்துகொண்டே
இருக்கும். அப்படியே முகத்தையும் அடிக்கடிகழுவிக் கொள்வேன். அதுதான்
என்னுடைய அழகின் ரகசியம். தண்ணீரை அதிகமா குடிக்க வேண்டும், முகத்தை
அவ்வப்போது கழுவ வேண்டும். இந்த இரண்டையும்செய்யும்போது கண்டிப்பா
ஓவியாவை நினைத்துக் கொள்ளுங்கள், என்று கூறியிருக்கிறார் ஓவியா.
comments | | Read More...

ப்ளூ பிலிம் நடிகர்கள் கட்டாயம்காண்டம் அணிய வேண்டும் - அமெரிக்காவில் புதிய சட்டம்

அமெரிக்காவில் நீலப்படங்களை தயாரிக்க சட்டப்பூர்வமாக
அனுமதிக்கப்படுகிறது. இந்த படங்களில் நடிக்கும் நடிகர்- நடிகைகள் தங்களை
நீலப்படம் நடிகர்கள் என்று சொல்லி கொள்வதற்கு வெட்கப்படுவது கூட இல்லை.
இதனால் நீலப்படம் தயாரிக்கப்படும் நாடுகளில் அமெரிக்கா முன்னணியில்
உள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்படும்நீலப்படங்களில் 90 சதவீதம்
லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் தான் தயாரிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நீலப்படத்தில் நடித்த ஒரு நடிகருக்கு எய்ட்ஸ் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்தபடங்களில் நடிப்பவர்களுக்கு கடும்
அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நிர்வாகமும் இது பற்றி கவலை கொள்ள
ஆரம்பித்தது. எனவே இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார்கள்.
நீலப்படங்களில்நடிப்பவர்களுக்கு இதுவரை எந்த கட்டுப்பாடும் விதிக்காமல்
இருந்தனர்.
எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்க இப்போது அனைத்து நடிகர்களும் கட்டாயம் ஆணுறை
அணிய வேண்டும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் நிர்வாகம் சட்டம் கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டத்தில் நகர மேயர் கையெழுத்திட்டுள்ளார். புதிய சட்டத்துக்கு
நீலப்பட தொழில் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். புதிய
சட்டத்தால் இந்த தொழிலில் உள்ள அனைவரும் வேறு நகருக்கு இடம்பெயர வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால் எஸ்ட்ஸ்
விழிப்புணர்வு இயக்கங்கள் புதிய சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.
comments | | Read More...

படகு மூலம் தனியாக உலகத்தை சுற்றிய 16 வயது பெண்

படகு மூலம் உலகத்தை தனியாக சுற்றி 16 வயது பெண் சாதனை படைத்துள்ளார்.
நெதர்லாந்தை சேர்ந்த 16 வயது பெண் லாரா டெக்கர். அப்பா டிக் டெக்கர்,
நெதர்லாந்துக்காரர். அம்மா பாப்ஸ் முல்லர் ஜெர்மனியைசேர்ந்தவர். இருவரும்
கடல் பயணத்தில் ஆர்வம் கொண்டவர்கள். காதலித்து திருமணம் செய்தவர்கள் 7
ஆண்டு தொடர் கடல் பயணம் மேற்கொண்டிருந்த நேரத்தில், நியூசிலாந்தின்
வான்கரே துறைமுகத்தின் அருகே படகில் பிறந்தவர்தான் சாரா.
'கடலில்' பிறந்தவர் என்பதாலோ, என்னவோ சிறு வயதில் இருந்தே கடல், கப்பல்
பயணம் மீது சாராவுக்கு அதிக ஆர்வம். அப்பா, அம்மா அடிக்கடி கடல் பயணம்
சென்றதால், 4 வயது வரை பெரும்பாலான நேரத்தை கடலிலேயே கழித்தார் சாரா.
நீச்சல், படகு பயணத்தில் 6 வயதுக்குள்ளாகவே கை தேர்ந்தவரானார்.
நெதர்லாந்தை ஒட்டியுள்ள வாடன் கடல், வடகடல் பகுதிகளில் படகில் தனியாக
சுற்றுலா சென்று வருவது அவருக்கு பொழுதுபோக்கு போல ஆனது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜெசிகா வாட்சன் தனியாக படகு பயணம் மேற்கொண்ட இளம்
வீராங்கனை என்ற சாதனையை 2010-ல் படைத்திருந்தார். 17 வயதில் அவர் இந்த
சாதனையை படைத்தார்.
இந்த சாதனையை முறியடிப்பதாக சாரா டெக்கர் கடந்த ஆண்டு அறிவித்தார்.
பெற்றோர் டைவர்ஸ் பெற்றவர்கள் என்பது, அவரது சாதனைக்கு முட்டுக்கட்டையாக
அமைந்தது. தந்தை, தாய் இருவரது கண்காணிப்பில் இருப்பவர் என்பதால், அவரது
15-வது வயது வரை சாதனை பயணம் மேற்கொள்ள கூடாது என நெதர்லாந்து அரசு தடை
விதித்தது.
எனவே, அரசின் நடவடிக்கைக்கு எதிராக நெதர்லாந்து குழந்தைகள் நல மையத்தின்
உதவியுடன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.அதில் வெற்றி பெற்ற அவர்
'கப்பி' என்று பெயரிடப்பட்ட 38 அடி நீள பாய்மர படகில் கடந்த 2010-ம்
ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி ஐரோப்பாவின் மேற்கு பகுதியில் இபேரியன்
தீபகற்பத்தில் உள்ள ஜிப்ரால்டர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டார்
சாரா. அட்லான்டிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா வழியாக 5,600
நாட்டிகல் மைல் (10,400 கி.மீ.) தூரம் பயணித்த அவர் கரீபியன்
தீவுக்கூட்டங்களில் ஒன்றான செயின்ட் மார்ட்டின் தீவில் உள்ள சிம்சன்
துறைமுகத்துக்கு நேற்று வந்தடைந்தார்.
அப்பா, அம்மா, உறவினர்கள், நண்பர்கள் உள்பட ஏராளமானவர்கள் திரண்டு வந்து
அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
comments | | Read More...

நண்பன் எந்திரனை வசூலில் முந்தி விட்டதாக வரும் செய்திகளில் உண்மையில்லை - பிரபல இணையத்தளம் தெரிவிப்பு

நண்பன் படம் எந்திரன் வசூலை மிஞ்சிவிட்டதாக இணயதளங்களில் வெளியீடு கொண்டு
இருக்கிறார்கள் அது தவறு என்று box office உண்மையான கணக்கை
வெளியுட்டுள்ளது.
எந்திரன் oneweek collection = 69 crores . only tamil.
நண்பன் Oneweek collection = 20 crores. only tamil.
எந்திரன் படம் தமிழகத்தில் மட்டும் 1000 திரையரங்குகளுக்கு மேல்
வெளியானது. நண்பன் படம் 600 அரங்குகளில் வெளியாகியுள்ளது. உலகமெங்கும்
எந்திரனுக்கு 3000அரங்குகளில் ரிலீசானது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி
மொழி திரையரங்க வெளியீட்டின் மூலம் மட்டுமே எந்திரனுக்கு ரூ 375 கோடி
கிடைத்தது. ஆனால் நண்பன் தமிழில் மட்டுமே வெளியாகியுள்ளது.
எந்திரன், நண்பன் இரண்டும் ஒரே இயக்குனர், பட வெற்றிக்கு ஷங்கர் என்ற
திறமையான இயக்குநரின் கைவண்ணத்துக்கு கிடைத்த பெருமை. அதுமட்டுமல்ல,
இந்தக் கதை அப்படி. இதே படத்தை ஒஸ்தி மாதிரி கூட பண்ணியிருக்க முடியும்.
ஆனால் இயக்குநரின் ஆளுமை மிக்க இயக்கமே இந்தப் படத்தை தூக்கி
நிறுத்தியது. விஜய் மட்டுமல்லாமல், சத்யராஜ், சத்யன், ஜீவா, ஸ்ரீகாந்த்
என பெரும் நட்சத்திரக் கூட்டம் இந்தப் படத்தில் பணியாற்றியிருந்தது
முக்கிய காரணம்.
ஆக எது எப்படியோ கோடிகளை தொட்டுவிட்ட எந்திரன், நண்பன்.,இதெல்லாம்
யாருக்கு இதில் நடித்த நடிகர்கள், இயக்குனர் மற்றும் தயாரிப்பாலர்களுக்கு
மட்டும்தான் நிச்சயமாக நமக்கு அல்ல.
comments | | Read More...

அணு உலை அணு உலைன்னு கடுபேத்துராங்க மை லார்ட்..!

அணு உலை அமைப்பது பாதுகாப்பானதாஇல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் செல்ல
வேண்டாம். இந்தியாவில் அணு உலை அமைப்பது பாதுகாப்பானதா என்பதை மட்டும்
நாம் பார்ப்போம். நமது நாடு ஊழல்நிறைந்த நாடு என்பதை நான் சொல்லித்தான்
தெரியவேண்டியது இல்லை .
உதாரணமாக போபாலில் நச்சு வாயு கசிந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த கோரச்
சம்பவம் நிகழ்ந்து 25 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னமும் கூட இந்த கோர
நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காத கொடுமை
நீடிக்கிறது.
மத்தியப்பிரதேச தலைநகரான போபாலில் பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு
ஆலையிலிருந்து விஷ வாயுவான மிதைல் ஐசோ சயனைட் எனும் வாயு கசிந்தது.
இதில், சுமார் 15 ஆயிரத்து 274 பேர் மடிந்தனர். விஷவாயுவை சுவாசித்ததால்
5 லட்சத்து 74 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதனால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இன்னமும் கூட உடல்
ஊனமுற்றவர்களாக பிறக்கின்றனர்.
யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சனை இந்தியா வுக்கு
அழைத்து வந்து விசாரணை நடத்தப்படவில்லை. இதற்கு மத்திய அரசும்,
மத்தியப்பிரதேச அரசுமே காரணம் என்று தன்னார் வத் தொண்டு அமைப்புகள்
குற்றம் சாட்டுகின்றன.
விஷவாயு கசிந்த ஆலையிலிருந்து இன்னமும் கூட நச்சுப் பொருட்கள்முழுமை யாக
அகற்றப்படாத நிலை உள்ளது. 67 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த
ஆலையில் இன்னமும் கூட நச்சுப் பொருட் கள் உள்ளன. அதுமட்டுமல்ல உலகின் மிக
மோசமான தொழிற்சாலை விபத்துகளில் ஒன்றாக கருதப்படும் போபால் விஷவாயு கசிவு
தொடர்பாக, இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.
விச வாயு கசிவுக்கு ஆளான யூனியன் கார்பைடு ஆலையை டவ் நிறுவனம் வாங்கி
நடத்தி கொண்டுதான் இருக்கின்றது. நம்மால் என்ன செய்ய முடிந்தது. அல்லது
நமது ஆட்சியாளர்கள் தான்என்ன செய்தார்கள். இந்த விபத்தால்
பாதிக்கப்பட்டது எந்த அரசியல் தலைவரும் அல்ல எல்லோரும் அப்பாவி மக்கள்
தான். அப்பாவி மக்கள் பாதிக்க பட்டால்அதர்க்காக இந்த நாட்டில் யார் கவலை
பட போகின்றார்கள். அவர்கள் ஆடு மாடு போன்றவர்கள் கேக்க நாதியற்றவர்களாய்
கோடிகணக்கில்இருகின்றார்கள் என்று இந்த ஆட்சியாளர்கள்
நினைத்துவிட்டார்கள்.
நடந்த ஒரு விபத்திற்கே இருபத்திஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது
இன்னும் முடிவு தெரிய வில்லை. இந்த லட்சணத்தில் அணு உலை அமைக்க சர்வதேச
ஒப்பந்தமாம். கடுபேத்துராங்க மைலார்ட்.
தானே புயல் தாக்கியதால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் கண்டு நிவரனபநிகளை
முடிக்கிவிடவே நமது முதல்வருக்கு நேரம் இல்லை. கருணாநிதி பாதிக்க பட்ட
மக்களை காண போகின்றார் என்ற அறிவிப்பு வந்ததும். அவர் மக்களை சந்தித்து
நல்ல பெயர் எடுத்து விடுவாரோ என்ற நல்ல எண்ணத்தில் அவசர அவசரமாக
ஹெலிகாப்டரில் பறந்து வந்து கடமைக்கு சிலரை ஒரு திருமண மண்டபத்திற்கு
வரவைத்து பார்த்து விட்டு கிளம்பிவிட்டார். புயல் தாகி இருபத்தி ஐந்து
நாட்கள் ஆகியும்இன்னும் முழுமையாக மின்சாரம் தரப்படவில்லை.
இந்த லட்சணத்தில் அணு உலை விபத்து ஏற்பட்டால் என்ன ஆகும். நீங்களே
சிந்தித்து பாருங்கள்.முதல்வர் எங்கே விபத்துனடந்த பகுதிக்கு சென்றால்
கதிர்வீச்சு நம்மையும் பாத்திது விடும் என்று பயந்து போயஸ்
தோட்டத்தில்அமர்ந்து கொண்டு அறிக்கை கொடுப்பார். இந்த விபத்துக்கு
முழுக்க முழுக்க மத்திய அரசும் கருணாநிதியும் தான் காரணம். பாதிக்க பட்ட
மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒரு ஐந்து லட்சம்கோடி நிதி உடனே மத்திய அரசு
வழங்க வேண்டும் என்ற வகையில் அந்த அறிக்கை இருக்கும். நமது
ஆட்சியாளர்களின் லட்சணம் இதுதான் இவர்களை நம்பி எப்படி நாம் அணு உலை
அமைக்க முடியும். இங்கு அனைத்து துறைகளிலும் ஊழல்நிறைந்ததாகவே உள்ளது.
இந்தியாவில் அரசு நிறுவனங்களில் அடிமட்டத்தில் இருந்து ஆட்சியாளர்கள் வரை
யாரும் இதற்கு விதிவிலக்கு இல்லை. இந்தியாவில் எல்லோருக்கும் ஒரு விலை
உண்டு. உச்சநீதிமன்றமே அரசு அலுவலகத்தில் ஒவொரு பணிக்கும் எவ்வளவு லஞ்சம்
என்பதை அரசே அறிவித்து விட்டால் மக்கள் சிரமம் இல்லாமல் அந்த தொகையை
செலுத்திவிட ஏதுவாக இருக்கும் என்று நய்யாண்டி செய்யும் அளவில் நமது
ஆட்சியாளர்களும் அரசு ஊழியர்களும் இருக்கின்றனர்.
அணு உலை அமைப்பதற்கு முன்னாள் ஊழலற்ற இந்தியாவை உருவாக்குங்கள் பிறகு அணு
உலைகளை உருவாக்கலாம்.
comments | | Read More...

ஆஸ்கார் விருதுக்கு போட்டியிடும் சினிமாபடங்கள் அறிவிப்பு

உலக அளவில் சிறந்த சினிமா படங்கள் , நடிகர் , நடிகைகள் , டைரக்டர்கள்
மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உயரிய " ஆஸ்கார் விருது "
வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஹாலிவுட்டில் அடுத்த மாதம்
(பிப்ரவரி) 26- ந்தேதி நடக்கிறது.
இந்த விருதுகளை மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் நிறுவனம்
வழங்குகிறது. இந்த நிலையில் ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இடம் பெறும்
படங்கள் , நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த
பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ள சினிமாபடத்துக்கான பட்டியலில்
வார்ஹார்ஸ் , தி ஆர்டிஸ்ட் , மணிபால் , டிசன்டன்ட்ஸ் , ட்ரீ ஆப்லைட் ,
மிட்நைட் இன்பாரீஸ் , தி ஹெல்ப் , " ஹீகோ ", எக்ஸ்ட்ரீம்லி லவுடு ஆகிய 9
படங்கள் உள்ளன.
சிறந்த நடிகர் தேர்வு பட்டியலில் டேமியன் பிசிர் , ஜார்ஜ் குலூனி , ஜீன்
துஜார்டின் , காரி ஓல்டுமேன் , பிராட் பிட் ஆகியோரும் , சிறந்த நடிகை
தேர்வுபட்டியலில் கிளன் குளோஸ் , வயோலாடேவிஸ் , ரூனி மாரா , மெரில்
வ்ட்ரீப் , மிச்சேலி வில்லியம்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சிறந்த இயக்குனருக்கான பட்டியலில் மைக்கேல் ஹஷானாவிசியஸ் , அலெக்சாண்டர்
பேய்னி , மார்டின் ஸ்கேள்சஸ் , வுடிஆலன் , டெரன்ஸ் மாலிக் ஆகியோர்
உள்ளனர். ஒரிஜினல் திரைக்கதை பட்டியலில் தி ஆர்டிஸ்ட் , பிரைட் மெய்ட்ஸ்
, மிட்நைட் இன்பாரீல் , மார்ஜின் , கால் , எ செபரேசன் ஆகிய படங்களும் ,
வேறு படங்களை தழுவியதிரைக்கதை பட்டியலில் தி டிசன்டன்ட்ஸ் , ஹீகோ , தி
இட்ஸ் ஆப் மார்ச் , மணிபால் , டிங்கர் டெய்லர் சோல்ஜர் ஸ்பை ஆகிய
படங்களும் இடம் பெற்றுள்ளன.
சிறந்த துணை நடிகர் பட்டியலில் கென்னெத் பிரானா , ஜோனாஹில் , நிக் நாலட்
, கிறிஸ்டோபர் பிளம்மர் , மாஸ் வன்சிடோவும் , துணை நடிகை பட்டியலில்
பிரனீஷ் ஸஜோ , ஜெசிகா காஸ்டெய்ன் , மெலிசாமெக்கார்தி , ஜானெட் மெக்டீர் ,
ஆக்டா வியா ஸ்பென்சர் ஆகியோரும் உள்ளனர். ஆஸ்கார் விருதுக்கு
பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் " ஹீகோ " என்ற படம் 11 விருதுக்கு
பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தை டைரக்டர் மார்டின் , ஸ்கோர்செசே இயக்கி உள்ளார். இதற்கு அடுத்த
படியாக ஒதி ஆர்டிஸ்ட் " என்ற படம் 10 விருதுக்கு
பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பிரான்ஸ் இயக்குனர் மைக்கேல்
ஹஷானாவிசியஸ் டைரக்ட்செய்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை உடைவது போன்று எடுக்கப்பட்ட " டேம் 999" என்ற படம்
ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் போட்டியில் பங்கேற்க
அப்படம் தேர்வாகவில்லை. இதனால் அந்த படக்குழுவினருக்கு ஏமாற்றம்
ஏற்பட்டுள்ளது.
comments | | Read More...

சசிகலா ஆதரவாளர்களின் ரகசியசெல்போன் பேச்சு: உளவுத்துறை திணறல்!

சசிகலா ஆதரவு அமைச்சர்கள் , உயர்அதிகாரிகள் , கட்சி நிர்வாகிகள் பலர்
தங்களது வழக்கமான செல்போன் எண்களை விட்டு விட்டு புதிய ரகசிய எண்களை
வைத்து தங்களுக்குள் செய்திளைப் பரிமாறிக் கொள்கிறார்களாம். இதனால்
அவர்களின் மூவ் குறித்துத் தெரியாமல் உளவுப் பிரிவு போலீஸார் திணறி
வருகின்றனராம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா சமீபத்தில்போயஸ்
கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் அவரால் பரிந்துரைக்கப்பட்ட
அமைச்சர்கள் , ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை முதல்வர் ஜெயலலிதா
மாற்றம் செய்வார் என பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் சசிகலா , ராணவன் , திவாகர் , மகாதேவன் , எம். நடராஜன் , பவனிவேல் ,
ராமச்டந்திரன் ஆகியோரது தீவிர விசுவாசிகளாக வலம் வந்த அமைச்சர்கள் பலர்
இன்றும் அமைச்சரவையில் இருக்கத் தான் செய்கின்றனர்.
அவர்கள் அனைவரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன. இந்த
நிலையில் அவர்கள் தங்கள் உறவினர்களின் பெயர்களில் புதியசெல்போன் எண்களை
வாங்கியுள்ளனராம். இதன் மூலமாகத்தான் தங்களுக்குள் பேசிக்
கொள்கின்றனராம்.
ஆறு மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது கதையாக , மாலை நேரங்களில் தங்களது
அதிகாரப்பூர்வ பணிகளை நிறுத்தி விட்டு , ரகசிய ஆலோசனைகளில் மூழ்கி
விடுகிறார்களாம்.
குறிப்பாக கொங்கு மண்டலத்தில் உள்ள பலரும் இந்த ரகசிய ஆலோசனையில்
ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. யார் எந்த செல் எண்ணை
பயன்படுத்துகினறனர்என்ற தகவல் தெரியாததால் உளவுத்துறையினர் தகவல்
சேகரிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
சசிகலாவுடன் தொடர்புடையவர்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் உளவுத்துறை
அலசி ஆராயந்து வருவது குறித்து அறிந்து வைத்துள்ள பலரும் மாவட்ட அளவில்
உள்ள உளவுத்துறை அதிகாரிகளை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து தங்களது
அதி முக்கிய தகவலகள் போயஸ் கார்டன் வரை செல்லாமல் பார்த்துக்
கொண்டார்களாம்.
இது குறித்து முதலில் உளவுத்துறை தலைமை விசாரணை நடத்தினால் பல அதிர்ச்சி
தகவல்கள் கிடைக்கும் என்கிறனர்.
comments | | Read More...

பணம் கேட்டால் அடி கொடுங்கள்: ராமதாஸ் பேச்சால் பா.ம.க.,வினர் அதிர்ச்சி

தேர்தல் செலவுக்கும், ஓட்டு போடவும் பணம் கேட்டால், கன்னத்தில் பளார் அடி கொடுங்கள்,'' என, ஓசூரில் நடந்த பா.ம.க., நிர்வாகிகள் கூட்டத்தில் ராமதாஸ் பேசியதால், பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ம.க., பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், ஓசூர் தாயப்பா தோட்டத்தில் நடந்தது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: கடந்த 1996ம் ஆண்டு, பா.ம.க., சரியான நோக்கத்துக்காக இலக்கு நிர்ணயித்து செயல்பட்டது. அதன் பின், அதிக எம்.எல்.ஏ., "சீட்'களுக்கு ஆசைப்பட்டு, திராவிட கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்தோம். அதனால், மக்கள் இரண்டு தேர்தல்களில், பா.ம.க., வுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர். 15 ஆண்டுக்கு முன் தனித்துப் போட்டியிட்டபோது, நான்கு எம்.எல்.ஏ., "சீட்' பிடித்தோம். கடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து, மூன்று எம்.எல்.ஏ., "சீட்'களைத் தான் பிடித்துள்ளோம். அ.தி.மு.க.,வுடன் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து, ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. கூட்டணி அமைத்து, நாம் பெற்ற பயன் இது தான். அதனால், பா.ம.க.,வை மக்கள் கேலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.


பா.ம.க.,வை தோற்கடிக்க, தேர்தலுக்கு தேர்தல் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர், எழுதப்படாத மறைமுக கூட்டணி அமைக்கின்றனர். அவர்கள், பா.ம.க., தயவால் வெற்றி பெறுகின்றனர். அதனால், வரும் தேர்தல்களில் கூட்டணியை நம்பாமல் மக்களைநம்புவோம். பா.ம.க.,வை விட உயர்ந்த கொள்கை, கோட்பாடு உள்ள கட்சிகள் எதுவும் இல்லை. திராவிட கட்சிகள் இலவசங்களைக் கொடுத்து மக்களை பிச்சைக்காரர்களாக்கி விட்டனர். தேர்தல் செலவு என்பது, ஊழல் புரிவதற்கான ஒரு முதலீடு தான். அதனால், தேர்தலில் ஓட்டு போடவும், தேர்தல் செலவுக்கு பணம் கேட்போரின் கன்னத்தில் பளார் அடி கொடுக்க வேண்டும். தமிழகத்தில் திராவிட கட்சிகளை அகற்றுவதே, பா.ம.க., வின் முதல் வேலை. இவ்வாறு ராமதாஸ் பேசினார். இந்த பேச்சு, பா.ம.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

comments | | Read More...

தவறை உணர்பவர்கள் வாழ்க்கையில் தவறே செய்யமாட்டார்கள்: கருணாநிதி


இன்று கிடைத்திருக்கிற தோல்வி, எங்களுக்கு அல்ல. உங்களுக்குத் தான். நீங்கள் வரவழைத்துக் கொண்ட தோல்வி. பஸ்சில் ஏறும் போதும், கடையில் பொருட்கள் வாங்கும் போதும், தோல்வியின் கனம் உங்களுக்குத் தெரியும். எனவே, தோற்றது கழகம் அல்ல. தோற்றது வாக்காளர்கள்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் தி.மு.க., சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: நாம் ஆட்சியை இழந்தாலும், மக்கள் நம் பக்கம் தான் இருக்கின்றனர். அவர்கள் என்னை மட்டுமல்ல, என் தலைமையிலான கழகத்தையும் கைவிட மாட்டார்கள். தமிழ் மொழிக்காக உயிர் நீத்தவர்களுக்கு, வீர வணக்கம் செலுத்த இக்கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தி ஆதிக்கம் வேண்டாம் என்பது, தி.மு.க.,வின் கொள்கை மட்டும் என்று சொல்ல மாட்டேன். இதே கோரிக்கைக்காக, யார் போராடினாலும் கைகோர்த்து நிற்போம். மொழிப் போருக்காக கட்சி வேறுபாடின்றி, ஒட்டுமொத்த தமிழகமும் கொதிக்குமானால், தி.மு.க.,வும் உறுதுணையாக இருக்கும்.


எல்லா மாநில மொழிகளையும், ஆட்சி மொழியாக்க வேண்டும். தமிழ் மொழிக்கு வேறு மொழி ஈடில்லை. எனவே, தமிழ் மொழியை முதன் மொழியாக, ஆட்சியில் உட்கார வைக்க வேண்டும். நான், 14 வயதில் ஆரம்பித்த போராட்டம், இன்னமும் முடிந்துவிடவில்லை. இந்தியை கட்டாய மொழியாக கொண்டு வந்த ராஜாஜி தான், பெரியார், அண்ணா முழக்கத்தைக் கேட்ட பிறகு, இந்தி தமிழகத்திற்கு ஆகாது என, இந்திக்கு எதிராக மாறினார். திராவிடன் என்ற சொல், பெரியார், அண்ணா ஆகியோர் திணித்த சொல் எனக் கூறுவர். இந்திய தேசியகீதத்தை கேட்டுப் பார்க்கட்டும். அதில் வரும் திராவிடம் எங்கிருந்து வந்தது. அதை ஏற்றுக்கொண்டு மரியாதை செய்பவர்கள், திராவிட என்ற சொல் இல்லை என, ஏன் சொல்கின்றனர். இதை சொல்பவர்கள் பைத்தியமா? அல்லது அதை கேட்பவர்கள் பைத்தியமா? என எண்ணிப் பார்க்க வேண்டும்.


திராவிடம் என்பது கலாசாரம், இனம், இனத்தின் பண்பாடுகள். ஆரியருக்கு முன்பே இந்தியாவில் வாழ்ந்தவர்கள். பள்ளி வரலாற்று புத்தகங்களிலும், இச்செய்தி உள்ளது. திராவிட இயக்கம், தி.மு.க., என்று அழைப்பது, பெரியார், அண்ணா கண்டுபிடித்த வார்த்தை அல்ல. நம் முப்பாட்டன் வாழ்ந்த இனத்தைக் குறிக்கும் பெயர். நாம் அதை மறந்து விடக் கூடாது. திராவிடர் எனக் கூறி திராவிடர்களை ஏமாற்றுபவர்களிடம், தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேர்தலுக்கு முன் இல்லாத எழுச்சி, தற்போது எப்படி வந்தது? அடிபட்டால் தான் தெரியும் என, நீங்கள் சொல்லாமல் சொல்வது எனக்குப் புரிகிறது. இன்று கிடைத்திருக்கிற தோல்வி, எங்களுக்கு அல்ல. உங்களுக்குத் தான். நீங்கள் வரவழைத்துக் கொண்ட தோல்வி. பஸ்சில் ஏறும் போதும், கடையில் பொருட்கள் வாங்கும் போதும், தோல்வியின் கனம் உங்களுக்குத் தெரியும். எனவே, தோற்றது கழகம் அல்ல. தோற்றது வாக்காளர்கள். தவறு செய்துவிட்டதை உணர்பவர்கள், வாழ்க்கையில் தவறே செய்ய மாட்டார்கள். அந்தப் பாடத்தை கற்றுக் கொண்ட நீங்கள், எதிர்காலத்தில் இப்போது செய்த தவறை மனதில் வைத்து, உங்களையும் காப்பாற்றுவதோடு, தமிழர்களை திராவிடர்களாக, பகுத்தறிவாதிகளாக, உடன்பிறப்புகளாக வளர்த்தெடுக்க வேண்டும். அழைத்தாலும், அடித்தாலும், காஞ்சி மக்களை மறக்க மாட்டேன். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger