26 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்து சிக்கிய கிரிக்கெட் வீரர் தற்கொலை!
Penulis : karthik on Tuesday, 15 November 2011 | 23:30
22 ஆண்டுகளை நிறைவு செய்த சச்சின் (வீடியோ)
போதி தர்மரும், நாராயண் குருக்களும்… -யாரை யார் சுட்டது?
அவங்களை பார்த்து இவங்களா? இல்ல, இவங்களை பார்த்து அவங்களா? என்று குழம்ப போவது ரசிகன்தான். இப்படி ரசிகர்களை குழப்பப் போகிற படம் செப்டம்பர் 19. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து சில ஆல்பங்களை இயக்கியிருக்கும் பரத் பாலாவின் அடுத்த படம்தான் இந்த செப்டம்பர் 19. (செம்மொழியான தமிழ் மொழியாம் ஆல்பமும் அண்ணாத்தே கைவண்ணம்தான்) தென்னக மொழிகள் எல்லாவற்றிலும் இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார் பரத் பாலா.
சரி. முதல் வரிக்கு வருவோம். இந்த படத்தின் கதையிலும் போதி தர்மர் போல ஒரு கேரக்டர் வருகிறது. இதில் நடிக்கதான் முதலில் கமல்ஹாசனை அணுகியிருந்தாராம் இந்த பரத் பாலா. கேரளாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரின் எழுத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தில் முதலில் நடிக்க சம்மதித்த கமல், ஆங்காங்கே சில திருத்தங்களை கூற, முதல் திருத்தமாக கமலையே தூக்கிவிட்டார்கள் படத்திலிருந்து.
இப்போது அஜய் தேவ்கான் நடிப்பில் இந்த படத்தை தொடர திட்டமிட்டிருக்கிறார்கள். இவருடன் அசினும் நடிக்கிறார். இந்த கதையின் 'நாட்'டைதான் அரைகுறையாக சுட்டு முருகதாஸ் 7 ஆம் அறிவை உருவாக்கிவிட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது கோடம்பாக்கத்தில். இந்த படத்தில் சூர்யாவுக்கு போதி தர்மர் வேடம். செப்டம்பர் 19 ல் அஜய் தேவ்கானுக்கு நாராயண் குருக்கள் வேடமாம்.
இந்தியாவின் மிக சிறந்த திரைக்கதை ஆசிரியரான எம்.டி.வாசுதேவ நாயரின் இந்த படைப்புக்கு தமிழில் வசனம் எழுதவிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். இப்படம் வெளிவந்த பின் குறையில்லாத 7 ஆம் அறிவை பார்த்த திருப்தி ரசிகர்களுக்கு ஏற்படுமோ என்னவோ?
தம்பி வெட்டோத்தி சுந்தரம்-திரை விமர்சனம்
டைட்டில் போட துவங்கியதுமே படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களையும் அறிமுகப்படுத்த ஆரம்பிக்கிறார் டைரக்டர் வடிவுடையான். 'அதோ, டி- ரோவுல நீல சட்டையுடன் உட்கார்ந்திருக்கிறாரே, அவர்தான் அந்தணன்' என்று அறிமுகப்படுத்துவாரோ என்கிற அளவுக்கு அச்சம் வருகிறது. நல்லவேளையாக எடுத்த எடுப்பிலேயே அரிவாள், ரத்தம், வெடிகுண்டு என்று கதைக்குள் போய்விடுகிறார் மனுஷன். அந்த வகையில் நன்றி தோழா…
போலீசும் குற்றவாளிகளும் சேர்ந்து கொண்டு உயிர் பலியாட்டம் நடத்துகிற அந்த முதல் பத்து நிமிடங்கள் முடிந்ததுமே ஜிவ்வென்ற பனிக்காற்றுடன் ஆரம்பிக்கிறது காதல் எபிசோட். அஞ்சலியின் கதை பேசும் கண்களும், கரணின் ரவைப் பல் சிரிப்புமாக அலாதியான நிமிடங்கள்தான் அது. பஸ்சில் டிக்கெட்டுக்கு பணம் எடுக்கும் கரண் தனது ஸ்பெஷல் ஒரு ரூபாய் நாணயத்தை தவறவிட, அது கரெக்டாக அஞ்சலியின் ஜாக்கெட்டுக்குள் தஞ்சம் புகுகிறது. அது போதாதா காதல் பற்றிக் கொள்ள? ஒரு கட்டத்தில் இந்த அஞ்சலி யாருடைய மகள் என்பதை காட்டுகிறார்கள். நமக்கு ஜிவ்வென்கிறது. தேன் கூட்டுக்குள் கையை விட்ட கரணும், அதுவரை தேனாகவே வழிந்த அஞ்சலியும் என்னவானார்கள்? விறுவிறுப்பான இரண்டாம் பாதி.
வெற்றிலைச்சாறை வேட்டியெல்லாம் துடைத்த மாதிரி ஆங்காங்கே ரத்தக் கறையுடன் நகர்கிறது படம். முடிவில் 'உன்னை ராணி மாதிரி பார்த்துக்கிறேன்' என்று வாக்குறுதி கொடுத்த கரண் என்ன முடிவெடுத்தார் என்பதுதான் கண்ணீர் வரவழைக்கும் க்ளைமாக்ஸ்.
கரணின் கேரியரில் இது முக்கியமான படம். எவ்வளவு திணித்தாலும் சுமக்கிற அளவுக்கு தோள் பலமும் கொண்டவராச்சே! பல காட்சிகளில் அநாயசம் தெரிகிறது. அதிலும் சிலுவையிடம் பேச வருகிற அந்த காட்சியில் அவரது சாதுர்யமான டயலாக்கும், யதார்த்தமான பாடி லாங்குவேஜும் அருமை. தன்னையறியாமல் தவறுக்கு பிள்ளையார் சுழி போடும் அந்த லாரி சேசிங் காட்சிக்கு தியேட்டரே ஸ்பீடா மீட்டராகிறது. அவ்வப்போது எம்ஜிஆர் மாதிரி இமிடேட் பண்ணுவதுதான் பொருந்தலேங்க பிரதர்.
அஞ்சலியின் ரசிகர் மன்ற எண்ணிக்கை இந்த படத்திற்கு பிறகு இன்னும் கூடலாம். 'ஹோய்… அந்த குட்டி சுவத்துல உட்காருவதை விட்டுட்டு என்னை லவ் பண்ணலாம்ல' என்று ஒரு மின்னலை வீசிவிட்டு எஸ்கேப் ஆகிற அழகுக்கு பஞ்சுமிட்டாயாக உருகுவான் ஒவ்வொரு ரசிகனும். நடிக்கவும் நிறைய ஹோப் தருகிறார்கள் இவருக்கு. கூடவே ஒட்டி திரிந்த அந்த தோழி (யாருங்க அது, தனியா ஒரு படமே கொடுக்கலாம் போலிருக்கு) அவரது அப்பாவாலேயே வெட்டிக் கொல்லப்படுவதை கண்டு பொங்குகிறாரே, அந்த கோழிமுட்டை கண்களில் அப்படியொரு கொள்ளிக்கட்டை அனல்.
அப்புறம் நமது கவனத்தை ஈர்ப்பது இருவர். ஒருவர் படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ். இன்னொருவர் 'சித்தப்பு' சரவணன். பருத்தி வீரனுக்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படி ஒரு படம் இது. உடம்பெல்லாம் கவரிங் நகையோடு பில்டப் கொடுப்பது ஒருபுறம் இருக்கட்டும். காமெடி அநாயசமாக வருகிறது இவருக்கு. இனிமேலாவது ஒரு கை பார்க்கலாமே தலைவா?
சிலுவை(யை) என்ற மிகப்பெரிய கேரக்டரை சுமந்திருக்கிறார் தயாரிப்பாளர் ஜே.எஸ். அந்த வட்டாரத்துக்கேயுரிய கோபத்தையும், கூர்மையையும் அப்படியொரு வேகத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார் மனுஷன். ஏதோ வில்லன் என்பதற்காகவே இவரை கத்தி வீச வைக்காமல், காரண காரியத்தோடு உலவ விட்டிருக்கிறார் டைரக்டரும். இந்த புதிய வில்லனுக்கு இனிமேல் நிறைய படங்கள் கிடைக்கலாம்.
ஒரு அழுத்தமான படத்தில் வசனத்தின் வேலை அபாரமானது. அதை உணர்ந்து முழங்கியிருக்கிறார் பா.ராகவன். படித்தவனுக்கு வேலை கிடைக்கலைன்னா இந்த சமுதாயம் பாழாப் போயிடும் என்று அனல் கக்குகிற அவரது பேனா, ரொமான்ஸ் காட்சிகளில் ஐஸ்கிரீமை வழிய விடுகிற அழகையும் சொல்லியாக வேண்டும்!
இசை- வித்யாசாகர். இப்படி ஒரு டைட்டிலை பார்த்து எத்தனை நாளாச்சு? ஆனால் இந்த ஆவலை ஓரளவுதான் நிறைவேற்றியிருக்கிறார் வித்யா. பச்…
அரசு வேலைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் இந்நாளில் அது கிடைக்காமல் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்பதே அபத்தம். அந்த வகையில் அவர் சரவண சுப்பையா அல்ல, 'சறுக்குன' சுப்பையா!
ஒளிப்பதிவாளர், எடிட்டர் என்று அவரவர் வேலையை கச்சிதமாக முடித்திருக்கிறார்கள். அடங்காத ரவுடிகளை கூட போட்டுத்தள்ளுகிற ஒரே ஆயுதம் காதல்தான்! அதை 'வடிவம்' தப்பாமல் சொல்லியிருக்கிறார் வடிவுடையான்.
தம்பி 'ஹிட்'டோத்தி சுந்தரம்!
‘வின்டர்’ வந்தாச்சு- ‘மார்னிங் ஷோ’வுக்கு முயற்சிக்கலாமே!
எதுக்கும் ஒரு கால நேரம் வேண்டாமா என்பார்கள். செக்ஸ் உறவுகளுக்கும் கூட கால நேரம் பார்ப்பவர்கள் உண்டு. சிலருக்கு அதுகுறித்தெல்லாம் கவலையில்லாமல் இருக்கும். எப்போது தோன்றுகிறதோ அப்போது தேவை என்ற மன நிலையில் இருப்பவர்கள் அவர்கள்.
அது ஒருபுறம் இருக்கட்டு்ம். அருமையான 'வின்டர்' நேரத்தில் அதிகாலையில் எழுந்து உறவுக்கு தயாராவது போல ஒரு அருமையான விஷயம் இல்லை என்கிறார்கள் செக்ஸாலஜிஸ்ட்டுகள். மிக மிக ரம்மியமான அனுபவமாக இது இருக்கும் என்பது அவர்களின் கூற்று.
வின்டர் எனப்படும் குளிர்காலம்தான் செக்ஸ் உறவுகளுக்கு சரியான காலம் என்கிறார்கள் இவர்கள். அதுவும் காலையிலேயே செக்ஸ் உறவை மேற்கொள்வது மிக மிக சிறப்பான ரொமான்டிக் விஷயம் என்றும் இவர்கள் தெரிவிக்கிறார்கள்.
உங்களுக்குள் உறைந்து கிடக்கும் ரொமான்ஸ் மனோ பாவத்தையு அகழ்ந்தெடுத்து அருமையான அனுபவத்தைக் கொடுக்கிறதாம் இந்த குளிர்கால உறவுகள். மேலும் எப்போதும் ஒரே மாதிரியான சூழலிலேயே உறுவு கொண்டு போரடித்துப் போயிருப்பவர்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்பது அவர்களின் கருத்து.
அடுத்த நாள் அதிகாலையில் நடக்கப் போகும் ஆட்டத்துக்காக இரவெல்லாம் கற்பனை செய்து, குதூகலிப்புடன் தூங்கப் போய்,அலாரம் வைத்து அதிகாலையில் எழுந்து உறவுக்குள் நுழைவது நிச்சயம் சிலிர்ப்பான ஒன்றுதான்.
குளிர்காலம் என்றில்லாமல், பிற சமயங்களிலும் கூட அதிகாலை செக்ஸ் உறவு என்பது மனதுக்கும், உடலுக்கும் மிகவும் புத்துணர்ச்சியை அளிக்கும் என்பது செக்ஸாலஜிஸ்ட்டுகளின் கருத்தாகும். அதிகாலையில் நமது மனமும், உடலும் புத்துணர்வுடன் இருக்கும், புதுப் பொலிவுடன் இருக்கும். சிந்தனை தெளிவாக இருக்கும். இந்த சமயத்தில் உறவு கொள்ளும்போது இருவருக்குமே அது இனிமையைக் கூடுதலாக கொடுக்குமாம்.
மேலும் நல்லதொரு தூக்கத்திற்குப் பின்னர் உடல் புதுத் தெம்புடன் இருக்கும் என்பதால் அதிகாலை உறவின் சுகமே அலாதியானது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
அதிகாலையில் உறவு கொள்வதை விட இன்னும் சிறப்பான விஷயம், போர்வைக்குள் இருவரும் செய்யும் முன்விளையாட்டுகள்தான். இந்த முன்விளையாட்டுக்கள் அதிகாலை உறவுக்கு மேலும் வலு சேர்க்கிறதாம்.இரவு நேரங்களில் இருப்பதை அதிகாலையில்தான் இந்த முன்விளையாட்டுக்களுக்கு கூடுதல் 'கிக்' கிடைக்கிறதாம்.
சின்னச் சின்ன தொடுதல்கள், உரசல்களுடன் அதிகாலை விளையாட்டில் இறங்கும்போது அந்த இன்ப உணர்வுகள் நாள் முழுமைக்கும் உங்களை வேகமாக வழி நடத்திச் செல்ல உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதிகாலையில்தான் பிரம்மன் தனது படைப்புத் தொழிலை மேற்கொள்கிறான் என்பது இந்து மதத்தில் உள்ள ஒரு நம்பிக்கை. அதற்கும், அதிகாலை உறவுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், அதிகாலை உறவுகளுக்கும், மற்ற நேரத்து உறவுகளுக்கும் நிச்சயம் பெரிய வித்தியாசம் உண்டு என்பது செக்ஸ் துறை நிபுணர்களின் கருத்தாகும்.
என்னதான் இன்ஸ்டன்ட் காபி சுவையாக இருந்தாலும் பில்டர் காபி போல வராது இல்லையா, அது போல இதை நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
கல்பாக்கம் அணு மின் நிலையமும் வேண்டாம்.. அடுத்த பிரச்சனையை கிளப்பும் பாமக!
போதி தர்மரும், நாராயண் குருக்களும்... -யாரை யார் சுட்டது?
புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்து கண்டுபிடிப்பு
தமிழகம் முழுவதும் இனி டீச்சர்களுக்கு 'எஸ்.எம்.எஸ். அட்டென்டன்ஸ்'!
சிம்பிளா பதிவுத் திருமணம்! டாப்ஸி அதிரடி முடிவு!!
இன்றைய முக்கிய செய்திகள்
தி.மு.க எம்.பியும் நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். | |
நில அபகரிப்பு புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் போலீசார் |
இன்று பதவி ஏற்கிறார் ஞானதேசிகன் | |
தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவர் ஞானதேசிகன் இன்று பதவி ஏற்றுக்கொள்கிறார். தமிழக காங்கிரஸ் |
கூடங்குளம்-2-ம் கட்ட ஆய்வு தொடங்கியது | |
கூடங்குளம் அணுஉலை குறித்த மக்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் |
உ.பி.யை 4 மாநிலங்களாகப் பிரிக்க மாயாவதி கோரிக்கை | |
உத்திரபிரதேசத்தை நான்கு மாநிலங்களாக பிரிக்க முதலமைச்சர் மாயாவதி முடிவு செய்துள்ளார். |
அக்னி - 4 சோதனை வெற்றி | |
அணு குண்டுகளை 3 ஆயிரம் கி.மீட்டர் தூரம் வரை சுமந்து சென்று தாக்கும் |
புற்றுநோய்க்கு புதிய மருந்து | |
லட்சக்கணக்கான மனிதர்களுக்கு எமனாக இருப்பது புற்றுநோய் தான். இந்த நோய்க்கு அமெரிக்க விஞ்ஞானிகள் |
இந்தியாவுக்கு யுரேனியம் தர ஆஸ்திரேலியா முடிவு | |
இந்தியாவுக்கு யுரேனியத்தை ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது. அணு ஆயுத பரவல் தடை |
தினம் 5 பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்து இருந்த கடாபி | |
லிபியா அதிபர் கடாபி செக்ஸ் வெறியராக இருந்தார். அவர் ஆட்சியில் இருந்தபோது தினம் |
`சென்செக்ஸ்' 236 புள்ளிகள் வீழ்ச்சி | |
நாட்டின் பங்கு வர்த்தகம் தொடர்ந்து நான்காவது தினமாக செவ்வாய்க்கிழமை அன்றும் மந்தமாக இருந்தது. |
பெட்ரோல் விலை குறைப்பு | |
பெட்ரோல் விலை 2 ரூபாய் 35 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. |
தங்கம் விலை மீண்டும் சரிவு | |
தங்கம் விலை மீண்டும் இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு |
டிக்ளெர் செய்தது இந்தியா | |
இந்தியா,மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் |
இந்திய பந்துவீச்சில் சிதறியது மேற்க்கு இந்தியத் தீவுகள் | |
இந்தியா,மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் |
ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது | |
பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய்க்கு, மும்பை செவன் |
www.tamilkurinji.com
Followers
Popular Posts
-
போக்குவரத்து, இல்லாத மலைகள் சூழ்ந்த கிராமங்களில் உள்ள பொம்பிள பிள்ளைங்க நான்கைந்து மைல்கள் நடந்து போய் படிப்பது என்பது அவ்வளவாக கடைப்பிடி...
-
இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர் வீரரான ...
-
தட்டார்மடம் அருகே திருமணமான 35 நாளில் கணவரே தன்னுடைய மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்தாக நாடகமாடியது அம்பலமானத...
-
ராணுவ வீரரை கடத்தி அவரிடம் பலவந்தமாக உடலுறவில் ஈடுபட்ட 2 பெண்கள் ஆண் கற்பழிப்பு ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த 1...
-
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியே பெரும் பரபரப்பாகிக் கிடக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுடன்...
-
நடிகை வித்யாபாலனின் கவர்ச்சி வீடியோ ஒன்று You Tube இல் வெளியாகியுள்ளது. இவரைப் புகைப்படம் எடுக்கச் சென்ற புகைப்படக்காரர்கள் இவரை எவ்வாறு...
-
சென்னை மாநகரில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் சென்னை...
-
தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம் சென்னையில் தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் வந்தாலும் வந்தது எடுப்பார் கை ப...
-
சமீப கால தமிழ் திரைப்படங்களில் மோசமான காம வெறிக்காட்சிகள் இடம்பெறுகின்றன. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி படமான மகதீரா இங்கு ...
-
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஸ்ரீராமலு நகரை சேர்ந்தவர் லட்சுமி (40). இவரது கணவர் தேவேந்திரன். ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவர்களுக்கு திவ...