News Update :
Powered by Blogger.

பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்திக்க அனுமதி வேண்டும்:இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழு புதிய கோரிக்கை

Penulis : karthik on Sunday, 15 April 2012 | 23:42

Sunday, 15 April 2012




இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது, இலட்சக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். போரின் போதும், போருக்கு பிறகும் ஈழத் தமிழர்களிடம் ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடந்தன. இதில் அவர்களது வாழ்வாதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.

முகாம்களில் அடைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். போர் முடிந்ததும் ஈழத்தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான உரிமைகள் பெற்றுத் தருவோம் என்று கூறிய மத்திய காங்கிரஸ் அரசு தற்போது மவுனமாக உள்ளது.

இந்தியா உள்பட பல நாடுகளிடம் உதவி பெறும் இலங்கை அரசு அதை தமிழர் பகுதியில் சிங்கள மயமாக்கலுக்கே பயன்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால், இலங்கையில் நடந்து வரும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி ஆய்வு செய்ய முடிவு செய்தது.

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 16 எம்.பி.க்கள் இந்த குழுவுக்காக தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் இருந்து அ.தி. மு.க. சார்பில் ரபிபெர்னாட், தி.மு.க. சார்பில் இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்க� ��் தாகூர், கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் எம்.பி.க்கள் குழு பயணம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்று புகார்கள் எழுந்தன. இதையடுத்து இலங்கை செல்லும் குழுவில் இருந்து அ.தி. மு.க. விலகியது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ராஜபக்சேயுடன் எம்.பி.க்கள் விருந்து சாப்பிட மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருடன் எந்த விவாதத்துக்கும் ஏற்பாடு செய்யாததால் அ.தி.மு.க. குழுவில் இடம் பெறாது என்று கூறியிருந்தார்.

தற்போது தி.மு.க.வும் எம்.பி.க்கள் குழுவில் இருந்து விலகிவிட்டது. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் முதன்மையாக உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் விலகிவிட்ட நிலையில், அந்த குழுவில் 14 எம்.பி.க்களே உள்ளனர்.

இவர்கள் இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு இலங்கை செல்கிறார்கள். அவர்களிடம் நேற்று மத்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் பயணத் திட்டம் பற்றிய நிகழ்ச்சி நிரல்களை விளக்கி கூறினார்.

எம்.பி.க்கள் குழுவினர் ராஜபக்சே, பசில் ராஜபக்சே, பிரீஸ், ரணில் விக்கிரமசிங்கே பிள்ளையான் உள்பட சிலரை சந்தித்து பேசுவது பற்றி தெரிவிக்கப்பட்டது. 21-ந் தேதி ராஜபக்சேயுடன் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பற்றியும் கூட்டத்தில் கூறப்பட்டது. இதற்கு எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

தி.மு.க., அ.தி.மு.க. விலகிவிட்ட நிலையில், ராஜபக்சேயுடன் சிற்றுண்டி சாப்பிடும் வி� ��ுந்து நிகழ்ச்சியை மாற்றவேண்டும் என்று குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கூறினார்கள்.

ராஜபக்சேயுடன் 21-ந் தேதி காலை சாப்பிடுவதற்கு பதில் 20-ந் தேதி மாலை அவரை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுபோல 18-ந் தேதி இலங்கை ரெயில்வே திட்டப்பணிகளை பார்வையிட பயணத் திட்டத்தில் நிகழ்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்ச ியை ரத்து செய்து விட்டு மாணிக்கன் தோட்ட முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை சந்தித்துபேச அனுமதிக்க வேண்டும் என்றும் எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்.

பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் இதுபற்றி கூறுகையில், இலங்கையில் இந்தியா உதவியுடன் நடக்கும் சீரமைப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை பார்வையிடுவது முக்கியம் அல்ல. முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை சந்திப்பதே முக்கியம். அதற்காக வற்புறுத்தியுள்ளோம் என்றார்.

எம்.பி.க்கள் குழு நாளை முதல் 4 நாட்கள் இலங்கையில் பல்வேறு இடங்களுக்கு செல்லவுள்ளனர். நாளை (17-ந் தேதி) காலை இலங்கை வெளியுறவு மந்திரி பிரீஸ், பொருளாதார வளர்ச்சி மந்திரி பசி� ��் ராஜபக்சேயை சந்தித்து பேசுகிறார்கள்.

பசில் ராஜபக்சேயுடன் பேசி முடித்த பிறகு இந்திய எம்.பி.க்கள் இலங்கை பாராளுமன்றத்துக்கு செல்ல உள்ளனர். அங்கு அவர்களுக்கு சபாநாயகர் சாமல் ராஜபக்சே மதிய விருந்து கொடுக்கிறார்.

நாளை பிற்பகல் முதல் மாலை வரை தமிழ் தேசிய கூட்டணி பிரதிநிதிகளை எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து பேசுகிறார்கள். இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகிகளையும் எம்.பி.க்கள் சந்தித்து பேச உள்ளனர்.

நாளை மறுநாள் (புதன்) காலை இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு கொழும்பில் உள்ள இந்திய தூதர் அசோக் கே.காந்தா காலை விருந்து கொடுக்கிறார். பிறகு எம்.பி.க்கள் இலங்கை வடக்கு பகுதிக்கு செல்கிறார்கள். அங்கு ஈழத்தமிழ் எம்.பி.க்களை சந்தித்து பேசுகிறார்கள். மனித உரிமை சங்கத் தினரையும் சந்திக்கிறார்கள்.

அன்றிரவு யாழ்ப்பாணத்தில் தங்குகிறார்கள். 19-ந் தேதி காங்கேசன் துறைமுகம் சென்று சீரமைப்பு பணிகளை பார்வையிடுகிறார்கள். அன்று எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கேயை சந்தித்து பேசுகிறார்கள்.

20-ந் தேதி இலங்கை கிழக்கு பகுதிகளை பார்வையிடுகிறார்கள். அங்கு மாகாண முதல்-மந்திரி பிள்ளையானை சந்தித்து பேசுகிறார்கள். 21-ந் தேதி சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சேயை சந்தித்து விட்டு எம்.பி.க்கள் குழு இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளது.

இந்திய எம்.பி.க்கள் குழுவினர், போர் குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் ராஜபக்சேயின் தம்பி கோதபயாவை சந்தித்து பேசமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் ஈழத் தமிழர்க� ��் முகாம்களை பார்வையிட எம்.பி.க்கள் குழு விடுத்துள்ள கோரிக்கை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். எம்.பி.க்களின் கோரிக்கை ஏற்கப்படுமா? என்பது இன்று மாலை தெரிய வரும்.



comments | | Read More...

இருக்கிற தமிழர்களாவது அச்சமின்றி வாழ வழி செய்யுங்கள் -இல.கணேசன்




இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்து விட்டது சிங்கள அரசு. எனவே இலங்கையில் தற்போது மிச்சமிருக்கிற தமிழர்களையும் அச்சமின்றி, நிம்மதியாக, சம உரிமைகளுடன் வாழ வழி செய்யும் விதத்தில் இலங்கைக்குப் போகிற இந்திய எம்.பிக்கள் குழு செயல்பட வேண்டும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

ராமநாதபுரம் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கை அரசு ஒரு இனத்தையே அழித்து விட்டது. இந்த நிலையில் இலங்கையில் மீதமிருக்கும் தமிழர்கள் அச்சமில்லாமலும், நிம்மதியாகவும் வாழ வழிசெய்யப்பட வேண்டும். மேலும் அவர்களு க்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்.

இலங்கைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்தியக் குழு செல்கிறது. இந்த குழு இலங்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை பாஜக ஏற்கனவே தெரிவித்துள்ளது என்றார் இல.கணேசன்.



comments | | Read More...

பிரதீபாபாட்டீல்க்கு பங்களா கட்ட ஆங்கிலேயர் கால கட்டிடங்கள் இடிப்பு




ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், வருகிற ஜூலை மாதம் ஓய்வு பெறுகிறார். ஓய்வுக்கு பின்பு, ஜனாதிபதிகள் அரசு அளிக்கும் இல்லத்தில் தங்கி கடைசி காலத்தை கழிப்பது மரபாக உள்ளது. இதற்காக டெல்லியிலோ அல்லது அவர்களது சொந்த மாநிலத்திலோ அரசு செலவில் வீடு கட்டி கொடுக்கப்படும். 

பிரதீபா பாட்டீல் சொந்த மாநிலத்திலேயே வசிக்க விரும்பியதால், மராட்டிய மாநிலம் புனேயில் வீடு கட்டி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ராணுவத்துக்கு சொந்தம ான 5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் ராணுவ அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிக செலவில் புதிய பங்களா கட்டப்பட உள்ளதால், எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், எதிர்ப்பையும் கண்டனத்தையும் பொருட்படுத்தாமல், கட்டுமான பணியை அரசு தொடங்க உள்ளது.

நிலம் எடுக்கப்பட்டதிலோ, அல்லது பங்களா கட்டப்படுவதிலோ மரபு எதுவும் மீறப்படவில்லை, என்றும் மத்திய அரசும், ஜனாதிபதி மாளிகையும் விளக்கம் அளித்துள்ளது. 

பிரதீபா பாட்டீலுக்காக கட்டப்பட உள்ள ஓய்வுகால பங்களா, அங்கு எற்கனவே உள்ள பிரிட்டிஷ் காலத்து 2 பங்களாக்களை இடித்து தள்ளிவிட்டுதான் அமைக்கப்பட இருக்கிறது. இதுவரை எந்த ஜ� ��ாதிபதிக்கும் டெல்லிக்கு வெளியே ஓய்வுகால பங்களா கொடுக்கப்படவில்லை என்ற மரபு இருந்தாலும், முந்தைய ஜனாதிபதிகள் அதை விரும்பியதும் இல்லை. 

முதல் ஜனாதிபதியான ராஜேந்திரபிரசாத், பதவிக்காலம் முடிந்த பின்பு சொந்த மாநிலமான பீகாரில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு திரும்பினார். அடுத்து ஜனாதிபதிகள் டாக்டர் ராதாகிர� ��ஷ்ணன், வி.வி. கிரி, சஞ்சீவ் ரெட்டி, ஆகியோர் பதவிக்காலம் முடிந்த உடன் சொந்த ஊருக்குச் சென்று பூர்வ� ��க வீட்டில்தான் வாழ்ந்தனர்.

ஆர்.வெங்கட்ராமன், சென்னையில் சிறிது காலம் தங்கி இருந்தார். கடைசி காலத்தில்தான் டெல்லியில் அரசு பங்களாவில் வசித்தார். ஜெயில்சிங், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் ஆகியோர் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறியதும், டெல்லியில் உள்ள அரசு பங்காளவுக்கு சென்றனர்.  < o:p>

பிரதீபா பாட்டீலுக்கு முன்பு ஜனாதிபதி பதவி வகித்த அப்துல்கலாமும் டெல்லி அரசு பங்களாவில்தான் தங்கியுள்ளார். தற்போது பிரதீபா பாட்டீலுக்குதான் முதல் முறையாக டெல்லிக்கு வெளியே அரசு செலவில் பங்களா கட்டப்படுகிறது.

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே, பிரதீபாபாட்டிலுக்கு எதிராக சர்ச்சைகள் கிளம்பின. பதவி ஓய்வு பெறும் போதும் அவருக்கு எதிராக சர்ச்சைகள் கிளம்பி இருக்கிறது.



comments | | Read More...

முருகதாஸ் ‘குட்டி மணிரத்னம்’- புகழும் விஜய்!




மும்பையில் நடக்கும் துப்பாக்கி பட ஷூட்டிங்கிற்காக மும்பை செல்வதற்கு முன் விஜய் தன் மகனுடன் சென்னையில் நடக்கும் ஐ.பி.எ� �் கிரிக்கெட் போட்டியை வி.ஐ.பி கேபினில் உட்கார்ந்து பார்க்காமல் ரசிகர்களுடன் ஒருவராய் பார்த்தாராம்.

தற்போது மும்பையில் துப்பாக்கி பட ஷூட்டிங்கில் இருக்கும் விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை புகழ்ந்து பேசியுள்ளார். இது பற்றி பேசிய விஜய் " முருகதாஸ் அமைதியானவர் அதே சமய� ��் கூர்மையான்வரும் கூட. அவரது எளிமை என்னை கவர்ந்துவிட்டது. நான் அவரை 'குட்டிமணிரத்னம்' என அழைக்கலாம் என்று நினைக்கிறேன்.


நான் சில கமெர்ஷியல் படங்கள் தான் நடித்திருக்கிறேன். இந்த படமும் அதைப் போலத் தான். இந்த படத்தின் வெற்றி இயக்குனரையே சேரும். ஒரு நிமிடத்திற்குக் கூட முக்கியத்துவம் அளிப்பவர் தான் முருகதாஸ்" என்று கூறியிருக்கிறார்.

பின்பு படத்தின் ஹீரோயின் காஜல் அகர்வாலை பற்றி பேசிய விஜய் "தமிழ் தெரியவில்லை இவ்வளவு தான் நடிக்க முடியும் என்று கூறாமல், கஷ்டப்பட்டு வசனத்தை புரிந்து கொண்டு சரியான முகபாவத்துடன் தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார் காஜல் அகர்வால். கடின உழைப்புடைய நடிகை காஜல் அகர்வால்" என்று கூறினார்.

மேலும் "துப்பாக்கி என் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். நான் நடித்த கடைசி சில படங்களில் இருந்து மாறுபட்ட படம் இது என்பதால் தனிப்பட்ட முறையில் இந்த படம் எனக்கு மி க முக்கியமான படம். படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறேன்" என்று கூறினார்.



comments | | Read More...

இன்னும் ஏன் ஜெ.ஜெயலலிதா.. ஏன் ச.ஜெயலலிதா இல்லை?: கருணாநிதி




முதல்வர் ஜெயலலிதா சொன்ன சொல்லை நிறைவேற்றக்கூடியவர் இல்லை. பெண்களை உயர்த்தக்கூடிய வகையில் ஒரு முறை அவர் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் மட்டும் இல்லை, உலகில் உள்ள அனைவரும் தாயார் பெயரைத்தான் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகப் பயன்படுத்த வேண்டும் என்றார். இதை ஜெயலலிதா கடைப்பிடித்தாரா என்றால் இல்லை. ஜெயலலிதாவின் தாயார் பெயர் சந்தியா. அதைப் பயன்படுத்தாமல் இப்போதும் அவர் தந்த� �யின் பெயரான ஜெயராமன் என்பதிலிருந்து ஜெ. என்பதைத்தான் எடுத்துப் பயன்படுத்தி வருகிறார். இதுபோல அவர் சொன்ன பல திட்டங்களை நிறைவேற்றியதில்லை என்றார் திமுக தலைவர் கருணாநிதி.

தமிழ் மொழியை காக்கும் இலக்கம் திமுக என்று சென்னை பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

மின் கட்டணம், பால் விலை, பஸ் கட்டணம் உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்ற� � திமுக சார்பில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. சென்னை மைலாப்பூர் மாங்கொல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:

நடந்த இடைத் தேர்தல்களில் திமுக வெற்றி வாகை சூடவில்லை. தோல்வியைத்தான் சந்தித்தது. அடிக்க அடிக்க பந்து எழுவதுபோல், தோற்க தோற்கத்தான் திமுகவுக்கு விறுவிறுப்பும், சுறுசுறுப்பும் வரும் என்பதற்கு இந்த கூட்டம் ஒரு சான்று.

நேற்று தந்தை பெரியார் பற்றிய ஒரு படம் பார்த்தேன். தமிழ் இனத்தின் எழுச்சிக்கு பாடுபட்டவர் அவர். சாதி, மத, ஆண்டவன் பெயரால் அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ் மக்களை விழிப்படையச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் பெரியார் பாடுபட்டார். நீ மண் அல்ல, மனிதன் என்று சுயமரியாதையை சுட்டிக்காட்டியவர் பெரியார். அதற்காகத்தான் அவர் ஈரோட்டில் இருந்து வைக்கம் வந்தார்.

சூத்திர பட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று பெரியார் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து நிறைவேற்றுவது நாம் காட்டும் மரியாதை, உரிமை ஆகும். அதற்காக பாடுபட வேண்டும்.

நமக்குள்ள கலை, பண்பாடு, மொழி ஆகியவற்றை காப்பாற்ற பாடுபடுகிறோம். நாம் மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன் என உணர வேண்டும்.

திமுக என்ற பெயரை நாம் ஏன் கொண்டு வந்தோம். முதலில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் என்று கூறினார்கள். பெரியார், அண்ணா, பாரதிதாசன் ஆகியோர் சிந்தித்து திராவிட என்ற சொல்லை இயக்கத்துடன் இணைத்தனர். இன்று உறுதியான மனப்பான்மையுடன் திமுககாரன் என்ற எண்ணத்துடன் நெஞ்சை நிமிர்த்தி நடக்க முடிகிறது. இதற்குக் காரணம் பெரியார், அண்ணா ஊட்டிய உணர்வு. தமிழ் மொழியை யார் அழிக்க முற்பட்டாலும் அதற்கு வழிவிடாமல் காக்கும் பாசறை திமுக.

முதல்வர் ஜெயலலிதா சொன்ன சொல்லை நிறைவேற்றக்கூடியவர் இல்லை. பெண்களை உயர்த்தக்கூடிய வகையில் ஒரு முறை அவர் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் மட்டும் இல்லை, உலகில் உள்ள அனை� ��ரும் தாயார் பெயரைத்தான் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகப் பயன்படுத்த வேண்டும் என்றார். இதை ஜெயலலிதா கடைப்பிடித்தாரா என்றால் இல்லை. ஜெயலலிதாவின் தாயார் பெயர் சந்தியா. அதைப் பயன்படுத்தாமல் இப்போதும் அவர் தந்தையின் பெயரான ஜெயராமன் என்பதிலிருந்து ஜெ. என்பதைத்தான் எடுத்துப் பயன்படுத்தி வருகிறார். இதுபோல அவர் சொன்ன பல திட்டங்களை நிறைவேற்றியதில்லை.

தமிழ்மீது பாசம் உள்ளதுபோல ஜெயலலிதா காட்டிக் கொள்கிறார். தமிழிக்குச் செம்மொழி எனும் தகுதியைப் பெற்றுக்கொடுத்த என்னைப் பார்த்து, தமிழுக்கு என்ன செய்தாய் என்று கேட்கி� ��ார்.

அதுவும், கல்லக்குடி கொண்டு வந்த கருணாநிதியை பார்த்து கேட்கிறார். நீங்கள் விழிப்போடு இதை கவனிக்க வேண்டும். திமுக நடத்திய மாநாடு, கூட்டங்களில் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. உலகத்தில் 5, 6 மொழிகள் தான் செம்மொழி தகுதி பெற்றது. அந்த தகுதி தமிழ் மொழிக்கும் உண்டு என்று போராடியவர்களில் நானும் ஒருவன்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இதை நான் விளக்கிக் கூறினேன். அவரும், எனக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அரசு மூலம் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என� �று அறிவித்தார். 100 ஆண்டு தமிழறிஞர்கள் போராடியதன் பலன் திமுக முயற்சிக்கு கிடைத்தது.

ஆனால், தற்போதை ஆட்சியாளர்கள் செம்மொழி என்ற பெயரே கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, தமிழுக்கு பாடுபடுவதாக தம்பட்டம் அடிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள செம்மொழி மையத்தை இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தெருவில் தூக்கி போட்டார்கள். செம்மொழிப் பூங்கா மாற்றப்பட்டுள்ளது. செம்மொழி ஆய்வகமாக இருந்த பாரதிதாசன் நூலகம் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை.

அண்மையில் தமிழ்த்தாய் விருது வழங்கு நிகழ்ச்சி என்று ஒன்றை நடத்தியுள்ளனர். அது தமிழ்த்தாயை அவமானப்படுத்தும் விழாவாகத்தான் நடந்துள்ளது. தமிழைப் பற்றிக் கவலைப்படாதவர்களுக்குத்தான் அங்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழுக்காக பாடுபட்டவர்கள் போராடியவர்� �ள் தியாகம் செய்தவர்களுக்கு விருது வழங்கப்படவில்லை.

தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக இப்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ்த்தாய் விருது வழங்கும் விழாவில் பேசிய ஜெயலலிதா, ""சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தி� ��ம் என்று முன்பு ஏற்றுக்கொண்டிருந்தவர் தானே கருணாநிதி'' என்று கூறியுள்ளார். அதை நானும் ஆமோதிக்கிறேன். சூரியன் கிழக்கில் தோன்றி, மேற்கில் மறைகிறது என்று முன்பு நம்பி வந்தோம். பின்னர் கலில ியோ, கோபர்நிக்கஸ் உள்பட பல விஞ்ஞானிகள், பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்று கூறிய பிறகு அதை நாம் மாற்றிக் கொள்ளவில்லையா, அதைப்போலத்தான் இதுவும்.

மறைமலையடிகள், பாரதிதாசன், மு.வரதராசன் போன்ற தமிழறிஞர்கள் ஆய்ந்து தை முதல் நாள ்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறிய பிறகு அதை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இதில் தவறு ஒன்றுமில்லை.

விருது வழங்கும் விழாவில், தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாள் என்பதற்குப் பல்வேறு ஆதாரங்கள் இருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வாழ� ��வியல் களஞ்சியம் வெளியிடப்பட்டுள்ளது. இது ஜெயலலிதா புரவலராக இருந்து வெளியிடப்பட்ட ஒன்றாகும். இதில் மழைக்கும், வேளாண் பெருக்கத்துக்கும் காரணமான சூரியனை வழிபடும் நாள், தை முதல் நாள் என்ற ு கூறப்பட்டுள்ளது.

இதைப்போல தேவநேயப்பாவாணரால் தொகுக்கப்பட்ட சொற்பிறப்பியல் பேரகராதியில் தை என்பதற்கு, தமிழ் ஆண்டின் தொடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்� �ாண்டு என்பதற்குப் பல ஆதாரங்கள் இலக்கியங்களில் இருக்கின்றன.

தமிழ் அறிஞர்கள் எடுத்துச் சொன்ன உண்மையை ஏற்றுக் கொண்ட பிறகு தை முதல் நாளைத்தான் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து சட்டமாக்கினேன். ஆனால், இவர்கள் அதை ஒழித்துக் கட்டிவிட்� �ு விழா கொண்டாடுகிறார்கள். நாளை நாங்கள் ஆட்சிக்கு வராவிட்டாலும், திராவிட உணர்வு கொண்டவர்கள் ஆட்சிக்கு வரும்போது தை முதல் நாள்தான் மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்கப்படும் என்றார் கருணாநிதி.




comments | | Read More...

ஏழைகளுக்கான கல்வி சட்டம் சாத்தியம் இல்லை: கபில் சிபல்




இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவ- மாணவிகளுக்கு இட ஒதுக்கீடு வழ� ��்க வேண்டும். இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த வியாழக்கிழமை தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தை அமுல் படுத்துவதற்காக மத்திய அரசும்மாநில அரசுகளும் இணைந்து ரூ. 2.3 லட்சம் கோடி செலவிடுகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் கபில் சிபல் தனியார் செய்தி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போதுஇது சாத்தியமில்லை எனவும்இதுபோன்ற செயல்கள் தனியார் பள்ளிகளின் மீது விதிக்கப்படும் சுமை என்றும் தெரிவித்தார்.

மேலும் தனியார் பள்ளிகள் அனைத்து மாணவர்களையும் வெற்றி பெற செய்வற்கு இச்சட்டம் தடையாக இருக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அனைவருக்கும் இலவச கல்வி அளிக்கப்படும். இச்சட்டத்தின்படி முதல் 8-ம் வகுப்புவரை இலவசமாக கல்வி பயில வசதி செய்து தரப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

கபில் சிபல் சொல்வதன் பொருள் என்ன 

ஏழைகள் கல்வி கற்க லாயக்கு இல்லாதவர்கள் என்று தானே..! அவர்கள் படித்தால் ...? ஏழை என்பவன் ஒரு வேளை சோற்றுக்கு கஷ்டப்படுபவன் தான் ஏழை அவனுக்கு கல்வி அறிவு கொடுத்தால் தான் எப்படி, எல்லாம் அதிகார வர்க்கத்தால் அடக்கியாளப்படுகிறோம், தான் எப்படி எல்லாம் ஏமாற்றப்பட்டோம் எபதை அறிந்து கொள்வான் அப்போது கேள்வி கேட்பான் என்பத� ��லா....?

ஏழைக்கு கல்வி கொடுத்தால் தனியார் பள்ளிகளில் அனைத்து மாணவர்களையும் வெற்றி பெற செய்ய முடியாதாம்...அட...கொய்யால இவரு என்ன தனியார் பள்ளிகளின் முதலாளியா ...! வெற்றி பெற வைக்க வேண்டியது தனியார் பள்ளிகளின் கடமை..அதை அவர்கள் பார்த்து கொள்வார்கள்...அப்படி அனைத்து மாணவர்களையும் வெற்றி பெற வைக்க முடியவில்லை என்றால் அது அந்த ப ள்ளிகளின் மதிப்பை தான் குறைக்கும் என்பதால் அவர்கள் நிச்சயம் முடிந்தவரை தரமான கல்வியை கொடுப்பதற்கு தான் நினைப்பார்கள்.(அரசு பள்ளிகள் என்றால் பரவாயில்லை கேட்பதற்கு யார் இருக்கா....). எனவே வெற்றி சதவீதம் பற்றிய கவலை கபில் சிபல் க்கு தேவை இல்லாதது.

முன்பு அரசு எத்தனை தவறுகள் செய்திருக்கிறது ! எத்ததனை மாபெரும் ஊழல்கள் செய்திருக்கிறது என்பது இன்றுவரை சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளை தவிர பொதுமக்களுக்கு ஒரு சில தவறுகளை தவிர தெரியாதவைகள், தெரியாமல் போனவைகள் எத்தனை எத்தனை என்பது கபில் சிபல் போன்றவர்களுக்கு தான் தெரியும்...! ஏன் அன்றைய ஊழல்கள் தெரியாமல் போனது.....த� �ரிந்த்த ஊழல்களும் ஏன் பெரிதுபடுத்த முடியாமல் போனது...! காரணம் அன்றைய காலக்கட்டங்களில் இந்தியாவில் கல்வியறி பெற்றவர்களின் சதவீதம் குறைவு! அதிகாரவர்க்கம் செய்யும் தவறுகள் அவர்களை சென்று சேரவில்லை சேர்ந்தாலும் அதை புரிந்து கொள்ளும் விவரம் அவர்களிடம் இல்லை, அப்படியே புரிந்து கொண்டாலும் அவர்களின் வறுமை அவர்களை அதிகார வர்க்கத்தின் முன் கூனி முறுக்கி நடக்கத்தான் ச� ��ய்ததே தவிர கேள்விகேட்க்கும் மனநிலையில் அவர்கள் இல்லை....!

படித்தவர்கள் கேட்கலாம் என்றால் அவர்கள் அரசு அதிகாரிகளாகவும் அரசில் அங்கம் வைப்பவர்கலாகும் இருந்தனர், அதனால் தான் இவர்களை போன்றவர்கள் இன்று இந்த்த அளவுக்கு செல்வாக்கோடு இருக்க முடிந்தது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் இந்தியாவில் கல்வி அறிவு பெற்றவர்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பது � �வர்களை போன்ற அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்களையும் வசதிபடத்த்வர்களின் வயிற்றிலும் புளியை கரைக்க தொடங்கியுள்ளது.... இன்று கல்வியறிவின் வளர்ச்சியாலும், தகவல் தொழில்நுற்பத்தின்  அபரிமிதமான வளர்ச்சியாலும் இவர்கள் செய்யும் தகிடுதத்த வேலைகள் எல்லாம் உடனுக்குடன் மக்களை சென்று சேர்க்கிறது ( தமிழ் நாட்டை பொறுத்தவரை ஊழல்கள், தவறுகள் உடனுக்குடன் மக்களை சென்று சேர்வத� �ல் ஊழலின் ஊற்றுக்கண் நமது தமிழ் ஈனத்தலைவர் கலைஞர் அவர்கள் இலவச டிவி கொடுத்ததன் மூலம் முக்கிய பங்குவகிகிறார். அவர் தேர்தலில் படுத்தொல்வி அடைவதற்கு இந்த இலவச டிவிக்கள் பெரும்பங்கு வகித்ததை மறுக்க முடியாது) உடனுக்குடன் சேர்வதன் விளைவு படித்தவன் கேள்வி கேட்கிறான் படிக்காதவன் கன்னத்தில் அடிக்கிறான். என்றும் இளைஞர் அண்ணன் ராகுல்லிடமே நேருக்கு நேராக  கேள்விக்கேட ்க்கும் துணிச்சல் வந்து விட்டது என்றால் எப்படி சும்மா இருப்பது. இப்படியே போனால் வருங்காலத்தில் தங்களின் வாரிசுகளால் மலம் அள்ளத்தான் முடியுமோ ....! அல்லது அதுக்கும் வழியில்லாமல் போயகுமோ ...என்ற பயத்தின் விளைவில் சிந்தித்ததால் வந்த திட்டம் தான்(தந்திரம்) தான் ஏழைகளுக்கு கல்வியறிவு கொடுக்க இயலாது என்பது. கல்வியறிவு கொடுத்தால் ஏழையால் தங்கள் இடத்திற்கும் பதவிக்கும் � ��ரமுடியும் அவனால் தங்கள் இடத்திற்கும்  பதவிக்கும் ஆபத்து என்பதை தாமதமாக புரிந்து கொண்டதனை விளைவே கபில் சிபலின் இந்த பேச்சு என்பதில் சிறிதும் ஐயம் இல்லை....!!







comments | | Read More...

சமைத்து, விருந்து போட்டு சாப்பிட்ட தட்டுக்களையும் கழுவி வைத்த அஜீத்!




அஜீத் குமார் பில்லா 2 குழுவினருக்கு தனது கையாலேயே சமைத்து விருந்து வைத்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் விருந்தில் � �யன்படுத்திய பாத்திரங்களை தானே கழுவி வைத்துள்ளார்.

தல அஜீத் குமார் நன்றாக சமைப்பார் அதுவும் பிரியாணி ஸ்பெஷலிஸ்ட் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில் பில்லா 2 படக்குழுவினருக்கு அவர் விருந்து வைத்துள்ளார். அதில் தன் கையாலேயே சமைத்த கோழிக்கறி, மீனவறுவல் என்று பல ஐட்டங்களை பரிமாறி அசத்தி விட்டாராம். படக்குழுவினர் நன்கு சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டனர்.

ஆனால் தல விருந்தில் பயன்படுத்திய பாத்திரங்களை தானே கழுவி வைத்துள்ளார். மறுநாள் ஷூட்டிங்கிற்கு வந்த குழுவினர் இது குறித்து கேள்விப்ட்டு ஆடிப்போய்விட்டனராம்.

இது குறித்து இயக்குனர் ஆர்.டி. ராஜேசகர் கூறுகையில்,

அஜீத்தின் இந்த செயலைப் பாத்து ஆடிப்போய்விட்டோம். அவரது எளிமையும், கருணை உள்ளமும் எங்களை கவர்ந்துவிட்டது. ஷூட்டிங்கிற்கு வந்தால் அவர் அனைவருக்கு வணக்கம் கூறிவிட்டு த ான் தனது இடத்திற்கே செல்வார் என்றார்.




comments | | Read More...

வாரம் ரூ. 15,000 சம்பளத்துக்கு பெண்களை வைத்து விபச்சாரம் செய்த நடிகை




விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தெலுங்கு நடிகை தாரா, விபச்சாரத்தில் ஈடுபடுவற்காக பெண்களுக்கு வாரம் ரூ. 15,000 வரை சம்பளம் கொடுத்து ஒரு கம்பெனி போல தனது விபச்சார தொழிலை நடத்தி வந்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

மிகப் பெரிய அளவில் தனது விபச்சாரத் தொழிலை தாரா நேர்த்தியாகவும், பிரமாண்டமான அளவிலும் நடத்தி வந்துள்ளார். அவரது விபச்சாரத் தொழிலுக்கு அரசியல்வாதிகள், காவல்துறையினர் என சகல தரப்பினரும் உறுதுணையாக இருந்து ஓஹோவென தொழில் நடக்க உதவியுள்ளனர்.

மார்ச் 31ம் தேதி கைது செய்யப்பட்ட தாரா குறித்து தற்போது பல பரபரப்புத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவது, விஐபிக்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளிடம் பெண்களை அனுப்பிவைப்பது அவர்களுடன் நெருக்கமாக இருக்கும்போது ரகசிய கேமரா மூலம் படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்கள� �ல் தாரா ஈடுபட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் பிரபலமான ஒரு தெலுங்கு நடிகரும், தாராவின் வலையில் சிக்கி வீழ்ந்தார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதை விட சுவாரஸ்யமாக, அந்த நடிகரின் மனைவிதான், தாராவை அணுகி தனது கணவரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் பரபரப்பாக கூறப்படுகிறது.

அந்த நடிகருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி மோதல் மூண்டுள்ளதாம். இதனால் தன்னை எங்கே கணவர் விவாகரத்து செய்து விடுவாரோ என்று பயந்துள்ளார் மனைவி. இதையடுத்து தாராவை அண� ��கிய அவர், தனது கணவர் வேறு பெண் பக்கம் திரும்பி விடாதவாறு பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாராம். இதையடுத்து தாரா அந்த நடிகருக்கு காதல் வலை வீசி தனது பக்கம் திருப்பி விட்டாராம்.

தாராவிடம் பெரும் சந்தோஷத்தைக் கண்ட அந்த நடிகரும், தாராவைத் தவிர வேறு யார் பக்கமும் திரும்பாமல் இருந்து வந்தார். மேலும் தாராவை பெரிய நடிகையாக்குவதாகவும் உறுதியளித்து வந்தாராம்.

அத்தோடு நில்லாமல், தனது நண்பர்கள், திரையுலகினர் சிலருக்கும் தாராவை அறிமுகப்� �டுத்தி அவர்களுக்கும் சந்தோஷம் காட்டியுள்ளார் அந்த நடிகர்.

இந்த நிலையில் தாராவின் விபச்சார நெட்வொர்க் குறித்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வறுமை, ஏழ்மையில் வாடும் அழகான பெண்களாகப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்த� �ள்ளார் தாரா. அவர்களுக்குப் பணத்தாசை காட்டியும், சொகுசாக வாழலாம் என்று ஆசை காட்டியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். அந்தப் பெண்கள் தன்னை விட்டு போய் விடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு வாரத்திற்கு ரூ. 15,000 வரை சம்பளம் போல கொடுத்து வந்துள்ளார்.

தாராவின் இந்த நாசத் தொழிலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் ஹனீப், வியாபாரி ஜெயந்த், பிரிமீளா என்பவர் ஆகியோரே. இதில் ஜெயந்த்தின் பங்களாவைத்தான் தனது விபச்சார விடுதியாக தாரா பயன்படுத்தி வந்துள்ளார்.

இங்குதான் அரசியல் பிரமுகர்கள் முதல் காவல்துறையினர், தொழிலதிபர்கள், சினிமாத் துறையினர் என பலரையும் இழுத்து வந்து தொழிலை நடத்தியுள்ளார்.

தனது தொழிலுக்குப் பாதுகாப்பாக, முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பயன்படுத்தியுள்ளார். தாராவிடம் விழுந்த ஒரு காங்கிரஸ் தலைவ� �் மூலம்தான் ரெட்டியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் தாரா என்கிறார்கள்.

தாராவுடன் தொடர்புடைய அத்தனை பேரையும் பிடித்து விசாரிக்க போலீஸார் தீர்மானித்துள்ளனராம். குறிப்பாக அந்த நடிகரையும் பிடிக்கவுள்ளதாக கூறப்படுவதால் ஆந்திர திரையுலகம் பரபரப்பாகி கிடக்கிறது.



comments | | Read More...

உதயகுமார் மீது கொலை முயற்சி வழக்கு!




கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது.

இடிந்தகரையை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மனைவி சகாய பெக்லின்ஏஜிடின். இவர் விஜயாபதி பஞ்சாயத்து தலைவி. இடிந்தகரையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இவர்களது நடவடிக்கையில் கடந்த சில தினங்களாக மாற்றம் ஏற்பட்டதாக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.< /o:p>

இந்நிலையில் நேற்று முன்தினம் இடிந்தகரை ஊராட்சியில் கூட்டம் நடைபெறுவதாக கூறி கவுன்சிலர்களிடம் கையெழுத்து வாங்கினர். அப்போது கவுன்சிலர் ஒருவர் உண்ணாவிரத பந்தலில் இருந்தார். அணு உலைக்கு எதிரான செயலில் நான் ஈடுபட மாட்டேன் என்று தீர்மானத்தில் கையெழுத்திட ம றுத்தார்.

இந்நிலையில் நேற்று சகாயராஜ், அவரது அண்ணன் ஸ்டாலின், மைத்துனர் இன்னாசி ஆகியோர� �� இடிந்தகரைக்கு சென்று அங்கு தண்ணீர் திறக்கும் ஊழியர்களிடம் சாவியை பறித்துக் கொண்டு சென்றனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த இடிந்தகரை மக்கள் சகாயராஜை தேடினர். அப்போது அவர் எதிரே காரில் வந்துக் கொண்டிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த இடிந்தகரை மக்கள் சுமார் 20 பேர் காரை வழிமறித்து அவர்களை தாக்கினர். இதில் சகாயராஜ், அவரது அண்ணன் ஸ்டாலின், இன்னாசி ஆகியோர் காயம் அடைந்தனர். இதுகுறித்து ஸ்டாலின், சகாயராஜ் ஆகியோர் கூடங்குளம் போலீசில் தனிதனியாக புகார் அளித்தனர்.

அதில் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி எங்களை உதயகுமார் தலைமையிலான கும்பல் வழிமறித்து கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் போரட்டக்குழு ஓருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன், ஜேசுராஜன், இனிகோ, மில்டன், வெனிஷ், சங்கீத் உள்பட சிலருக்கு தொடர்பு உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்த உதயகுமார் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தசம்பவம் இடிந்தகரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



comments | | Read More...

தனுஷை கழட்டி விட்ட ஐஸ்வர்யா




கொலைவெறி புகழ் 3 படத்தையடுத்து, புதிய படத்தை இயக்கும் பணிகளில் மும்முரமாக உள்ளார் ஐஸ்வர்யா.

இந்தப் படம் முழுக்க முழுக்க கலகலப்பான காதல் நகைச்சுவைப் படமாக அமையும் எனத் தெரிகிறது.

ரஜினிகாந்தின் முதல் மகள் ஐஸ்வர்யா தனுஷ் தனது முதல் படம் 3 ஐ சமீபத்தில் வெளியிட்டார்.

தனுஷின் ஒரே மாதிரி பாத்திரத் தேர்வு மற்றும் நெகடிவான விமர்சனங்கள் காரணமாக படம் சுமாராகத்தான் போவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், அடுத்த படத்தை எடுக்க தயாராகிவிட்டார் ஐஸ்வர்யா. ஆனால் இந்த புதிய படத்தில் தனுஷ் நடிக்கவில்லை.

"எனது அடுத்த படத்தை எடுக்க நான் காத்திருக்க விரும்பவில்லை. சும்மாவே உட்கார்ந்திருக்க எனக்குப் பிடிக்கவில்லை. பணியாற்றுவது எனக்குப் பிடித்துள்ளது. என் தாயாரும் மாமியாரும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதால், இயக்குநராகப் பணியாற்றுவது சுலபமாக உள்ளது," என்கிறார் ஐஸ்வர்யா.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger