வில்லிவாக்கம், செப். 28-
சென்னை அயனாவரம் கோபாலபிள்ளை நகரைச் சேர்ந்தவர் அன்வர்பாஷா (வயது29). இவர் அண்ணா நகரில் ஒரு கால்சென்டரில் வேலை பார்த்து வந்தார். இவர், தன்னுடன் பணிபுரிந்த பீமா(24) என்ற பெண்ணை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் 2010-ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது பெண்ணின் வீட்டார் 10 பவுன் நகையும், பணமும் வரதட்சணையாக கொடுத்தனர். சில மாதங்கள் கழித்à ��ு கூடுதலாக வரதட்சணை கேட்டு, பீமாவை அன்வர் பாஷா கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். ஆனால், இருவரும் முறைப்படி விவாகரத்து செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் அயனாவரத்தைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணை அன்வர் பாஷா காதலித்தார். இவரை திருமணம் செய்து கொள்வதற்காக தனது பெயரை மன்மதன் விஜய் என்று மாற்றிக்கொண்டார். கடந்த 10-ந்தேத�® ¿ ரம்யாவும், மன்மதன் விஜய் என்ற அன்வர்பாஷாவும் திருப்பதி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த விஷயத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிந்து கொண்ட பீமா, அயனாவரம் போலீசில் புகார் செய்தார். தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி ஒதுக்கி வைத்து விட்டு, தனது கணவர் அன்வர்பாஷா இன்னொரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்று தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். புகார் மனுவில் பீமா குறிப்பிட்டு இருப்பது உண்மைதான் என்று விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அன்வர் பாஷாவை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தார்.
Post a Comment