நடிகர் ரிச்சர்ட் திருமண நிச்சயதார்த்தம்: அஜீத்,ஷாலினி பங்கேற்பு நடிகர் ரிச்சர்ட் திருமண நிச்சயதார்த்தம்: அஜீத்,ஷாலினி பங்கேற்பு
நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட். இவர் கிரிவலம், நாளை, யுகா, வைரம், தமிழகம், பெண் சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.
தற்போது ஏன் இப்படி மயக்கினாய், ரெண்டாவது படம், கூத்து போன்ற படங்களில் நடித்து வருகிறார். ரிச்சர்ட்டுக்கும் கவிஞர் கண்ணதாசனின் பேத்தி சத்திய லட்சுமிக்கும் திருமணம் முடிவாகியுள்ளது.
சத்தியலட்சுமி பொன்மாலை பொழுது என்ற படத்தின் தயாரிப்பாளர் ஆவார். ரிச்சர்ட் சத்தியலட்சுமி திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. காலை 10.30 மணி முதல் பகல் 1 மணிவரை நிச்சயதார்த்த சடங்குகள் நடந்தன.
இதில் நடிகர் அஜீத் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனவ்ஷ்காவுடன் கலந்து கொண்டார். அஜீத் பட்டு வேட்டி சட்டையும் ஷால ினி பட்டுப்புடவையும் அணிந்து இருந்தனர். மேலும் மணமகள், மணமகன் பெற்றோர், உறவினர்களும் கலந்து கொண்டார்கள். திருமணத்தை வருகிற ஜனவரி மாதம் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
Post a Comment