News Update :
Powered by Blogger.

இன்றைய முக்கிய செய்திகள்

Penulis : karthik on Sunday, 25 December 2011 | 23:41

Sunday, 25 December 2011



சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு விபத்து;  22 பேர் பலி சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு விபத்து; 22 பேர் பலி
சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர்.ஒரே
விபசாரவழக்கில் டி.வி. நடிகை கைது விபசாரவழக்கில் டி.வி. நடிகை கைது
கோவை அருகே சொகுசு பங்களாவில் விபசாரம் செய்த டி.வி. நடிகை உள்பட 8
பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்தார் பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்தார்
பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில்
கேரளத்தில் புதிய அணை கூடாது: பிரதமரிடம் ஜெயலலிதா மனு கேரளத்தில் புதிய அணை கூடாது: பிரதமரிடம் ஜெயலலிதா மனு
முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாகப் புதிய அணை கட்டும் முயற்சி எதையும் மேற்கொள்ளக்
பழவேற்காடு படகு விபத்து - ஓட்டுநர் கைது பழவேற்காடு படகு விபத்து - ஓட்டுநர் கைது
சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர். ஒரே
முல்லைப் பெரியாறு விவகாரம் - சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் பேரணி முல்லைப் பெரியாறு விவகாரம் - சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் பேரணி
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக கேரள அரசைக் கண்டித்து மே பதினேழு

கார்த்திகா கால்ஷீட் வேண்டுமா பாரதிராஜாவைப் பாருங்க
அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம் உள்ளிட்ட யதார்த்தமான படங்களை இயக்கி வெற்றி
ஸ்ரேயா - ரீமாவுடன் ஆடிய அனுபவம் சூப்பர் - விக்ரம்
`ராஜபாட்டை படத்தில், ஸ்ரேயா-ரீமாசென் ஆகிய இருவருடனும் சேர்ந்து ஆடிய அனுபவம் சூப்பரானது என்று
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய குத்து ரம்யா
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் நடிகைகளில் முதலிடம் குத்து ரம்யாவுக்குத்தான். தயாரிப்பாளருடன் பிரச்சனை, கால்ஷீட்டில்
ஜனவரியில் பெட்ரோல் விலை உயரும்?
ஜனவரி மாதத் தொடக்கத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் வரை உயரும்
கர்நாடக முன்னாள் முதல்வர் பங்காரப்பா காலமானார்
கர்நாடகா முன்னாள் முதல்வரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான பங்காரப்பா (79) உடல்நலக்குறைவால் காலமானார்.




comments | | Read More...

முன்னாள் கர்நாடகா முதல்வர் பங்காரப்பா மரணம்

முன்னாள் கர்நாடகா முதல்வர் பங்காரப்பா மரணம்

  bangarappa

பெங்களூர்:கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான எஸ்.பங்காரப்பா  (வயது-79) மரணமடைந்தார்.  சிறுநீரகம் தொடர்பான நோயை தொடர்ந்து பெங்களூரில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

1967-ம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு தனது  அரசியல் வாழ்க்கையை துவக்கினார் பங்காரப்பா.   தொடர்ந்து கர்நாடகா விகாஸ்  கட்சி, கர்நாடகா காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளை துவக்கினார். பின்னர்  பா.ஜ. கட்சியிலும் (2003), சமாஜ்வாதி கட்சியிலும், (2005-2009) சேர்ந்து எம்.பி. பதவி வகித்தார். தற்போது முன்னாள் பிரதமர்  தேவகவுடா தலைமையிலான  மதசார்பற்ற ஜனதாதள கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் இருந்து வந்தார்.

comments | | Read More...

கேரளாவுக்கு அறிவுரை வழங்க பிரதமரிடம் ஜெ.கோரிக்கை


Tamil Nadu Chief Minister J. Jayalalithaa receives Prime Minister Manmohan Singh at the Chennai Airport on Sunday. Also seen is Governor K. Rosiah.

சென்னை:புதுடெல்லியிலிருந்து நேற்று சென்னை வந்த பிரதமரிடம் 16 பக்கங்களை  கொண்ட கோரிக்கை மனுவை அளித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பெரியார் அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டும் முயற்சி எதையும் செய்யக்கூடாது என கேரள  அரசுக்கு அறிவுரை கூற கோரிக்கை விடுத்தார்.

நேற்று இரவு சென்னை வந்த பிரதமரை ஜெயலலிதா ஆளுநர் மாளிகையில்  சந்தித்தார்.  சுமார் 40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.  அப்பொழுது  அவர் பல விஷயங்கள் குறித்து பேசிவிட்டு 16 பக்கங்களை கொண்ட கோரிக்கை  மனுவையும் பிரதமரிடம் அளித்தார்.

அம்மனுவில் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ள முக்கிய கோரிக்கைகள் வருமாறு:

உச்ச நீதிமன்றம் 27.2.2006-ல் அளித்த தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு  அணையில் 142 அடி வரை நீரைத் தேக்க கேரள அரசு ஒப்புக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.

புதுப்பிக்கப்பட்ட அணையானது பாதுகாப்பானதாக இருப்பதால், புதிய அணை  கட்டும் எந்த முயற்சியிலும் ஈடுபடக் கூடாது என கேரள அரசுக்கு அறிவுரை  வழங்க வேண்டும்.

மத்திய நீர்வள ஆணையம் பரிந்துரைத்துள்ளபடி, மீதியுள்ள பலப்படுத்தும்  பணிகளுக்கும், வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்கும் கேரள அரசு இடையூறு  ஏதும் செய்யாமல் இருப்பதுடன், அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும்  அறிவுரை கூற வேண்டும்.

இந்த அணைக்காக தமிழகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட இடங்களில் உள்ள  ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றவும் கேரள அரசுக்கு அறிவுறுத்த  வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை மற்றும் குத்தகைக்கு வழங்கிய இடத்தில் அத்துடன்  இணைந்துள்ள கட்டுமானங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய தொழில்  பாதுகாப்பு படையை ஈடுபடுத்த வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் ஆபத்து நேரிட்டால் மேற்கொள்ள வேண்டிய  பணிகளைத் திட்டமிட நிபுணர் குழுவை அமைக்க பிறப்பித்த அறிவிப்பாணையை வாபஸ் பெற வேண்டும்.

மத்திய அரசு முன்வைத்துள்ள தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவில் உள்ள  அம்சங்களை அமல் செய்தால் மாநில அரசுக்கு கூடுதலாக ரூ.1,800 கோடி நிதிச்  சுமை ஏற்படும். இதில் மத்திய அரசு எந்த பங்களிப்பும் தராது.

மேற்படி மசோதாவின் அம்சங்கள் குழப்பத்தை  ஏற்படுத்துவதாகவும், ஏற்க  முடியாததாகவும் உள்ளன. தமிழகத்துக்கு இப்போது அளிக்கப்படும் அரிசி  மற்றும் உணவு தானிய ஒதுக்கீட்டு அளவை தொடர்ந்திட வேண்டும்.  மண்ணெண்ணெய்  ஒதுக்கீடு அளவையும் பழைய நிலை அளவுக்கு உயர்த்திட வேண்டும். மக்களுடன்  நெருங்கிய தொடர்பில் மாநிலங்கள் இருக்கக் கூடிய கூட்டாட்சி முறையில், மக்கள் நலத் திட்டங்களை உருவாக்கும் பொறுப்பை மாநிலங்களிடமே  விட்டுவிடுவதுதான் சிறந்ததாக இருக்கும். எனவே தேசிய உணவுப் பாதுகாப்பு  மசோதா வரம்பில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

தமிழக அரசுக்கு இப்போது 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு  ஏற்பட்டுள்ளதுடன், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையும்  உள்ளது. இதனால் தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகள் பெரிதும்  பாதிக்கப்படுகின்றன. எனவே, மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க முன் வரவேண்டும். மேற்கு வங்க மாநிலத்துக்கு சிறப்பு நிதி அளித்ததுபோல  பின்தங்கிய மாநிலங்களுக்காக அளிக்கப்படும் நிதி அல்லது அடிப்படை  கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக அளிக்கப்படும் சிறப்பு நிதியாக மத்திய அரசு கொடுக்க முன் வரவேண்டும்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் அல்லது விஷமிகள் தாக்குவதை  தேசிய பிரச்னையாகக் கருத வேண்டும் என்று ஏற்கெனவே  வலியுறுத்தியிருக்கிறேன். இந்தியாவுக்கு எதிரான தாக்குதலாக இதைக் கருத  வேண்டும் என குறிப்பிட்டுள்ளேன்.

2012 ஜனவரியில் இலங்கையுடன் பேச்சு நடக்கும்போது, இதுகுறித்து இலங்கை  அரசுடன் இந்திய அரசு கடுமையாகப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பாக் நீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக உள்ள மீன்பிடி உரிமையைப்  பாதுகாக்கவும், மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கவும்  அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

comments | | Read More...

முல்லைப் பெரியாறு அணையும் - மார்ஷல் நேசமணியும்

பேரா டாக்டர் மு. ஆல்பென்ஸ் நதானியேல் எம்.ஏ., பி.ஓ.எல்., பி.எச்டி.,
பயோனியர் குமாரசுவாமிக்கல்லூரி (ஓய்வு), நாகர்கோவில் - 3


சேரநாட்டின் ஒரு பகுதியே திருவிதாங்கூர், திருவிதாங்கூரில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்ட காரணத் தால் நேசமணி திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகளை மீட்க திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை உருவாக்கி தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, பீருமேடு, தேவிகுளம், சித்தூர் ஆகிய 9 பகுதிகளையும் தாய்த் தமிழகத்தோடு இணைக்க வேண்டு மென்று போராடினார். 5.11.1949இல் ம.பொ.சி. தலைமையில் நடைபெற்ற வடஎல்லை மாநாட்டில் நேசமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண் டார். இந்த மாநாட்டில் வடவேங்கடம் முதல் குமரி வரை உள்ள பகுதிகளை இணைத்து தமிழ் மாகாணம் அமைக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. நேசமணி பொறுப்பில் 6.1.1950 வெள்ளியன்று தமிழ்நாடு எல்லை மாநாடு குமரிமுனையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் ம.பொ.சி., பாரதி, கவிமணி தேசிகவி நாயகம் பிள்ளை ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதே காலக் கட்டத்தில் தேவிகுளம், பீருமேடு தமிழர்களை மலையாள அரசு அடக்கி ஒடுக்கியது. 434 தமிழர்களையும் 20 தமிழ் பெண்களையும்; இளைஞர்களையும் ஒரே சிறையில் அடைத்து துன்புறுத் தியது. அவர்கள் அபயக்குரல் கேட்ட தலைவர் நேசமணி, ஜனாப் அப்துல் ரசாக், திரு. சிதம்பரநாதன் ஆகியோர் தேவிகுளம் சென்றனர். அர்கள் 4.7.1954 அன்று மூணாற்றில் வைத்து திருவி தாங்கூர் அரசால் கைது செய்யப் பட்டனர். அங்குள்ள மக்களின் துன்பங்களைப்பற்றி மார்ஷல் நேசமணி குறிப்பிடுகையில் தேவிகுளம், பீருமேடு தாலுகாக்கள் இன்று கண்ணுக்கினிய தோட்டங்களாக மிளிருவதற்கு தமிழன் உழைப்பும் அந்த உழைப்பின் கடுமையால் கொட்டப்பட்ட வியர்வை முத்துக்களுமே காரணமாகும். மனிதன் செல்ல முடியாத இந்த மலைமுகடுகளில் ஏல விவசாயம் வளர்த்த பெருமை முழுதும் தமிழனுக்கே உரியதாகும் என்று பேசினார். அதுமட்டுமல்ல அன்றைய தமிழ் மக்கள் தொகை கணக்கையும் அவர் தந்துள்ளார்.

தாலுகா    தமிழர்கள்    மலையாளிகள்

தோவாளை    42448    698

அகஸ்தீஸ்வரம்    176874    4931

கல்குளம்    205944    36100

விளவங்கோடு    161217    46023

செங்கோட்டை    52432    1677

பீருமேடு    31911    31748

தேவிகுளம்    53394    8282

நெய்யாற்றின்கரை & சித்தூர் :  மக்கள் தொகை கணக்கை மறைத்தனர். மேலும் மலையாளம் தெரிந்த தமிழர்களை மலையாளிகளாக கணக்கில் சேர்த்தனர்.

6.1.1950 தமிழ்நாடு குமரிமுனை எல்லை மாநாடு வரவேற்புரை மார்ஷல் நேசமணி.

முல்லைப் பெரியாறு அணை

நேசமணியின் நாடாளுமன்ற பேச்சில், பூஞ்சாறு மன்னர் பாண்டிய மரபினர். அன்னார் ஒப்பமிடுகின்ற போது மீனாட்சிசுந்தரம் என்றே கையொப்பமிடுவர். மன்னாடியார் என்று அழைக்கப்படுகின்ற நாட்டுப் பிரதானிகளைக் கொண்டு நாட்டு வரி தண்டினான் என்றும் அத்தகைய வரி வசூலிக்கும் பற்றுச்சீட்டில் மதுரை மீனாட்சி துணை என்ற முத்திரை பதிக் கப்பட்டுள்ளதாகக் காணப்படுகிறது. ஆகையால், இந்த, தேவிகுளம், பீருமேடு பகுதிகள் அனைத்தும் பாண்டியனின் இறையாண்மைக்கு உட்பட்டு மதுரை நாயக்கர்களின் அதிகார வரம்புக்குள் 1889 வரையிலும் இருந்தது. எனவே,  மேற்படி பகுதிகள் அனைத்தும் 1889-_க்கு முந்தைய காலம் வரையிலும் திருவிதாங் கூருக்குச் சொந்தமானதாக இருந்த தில்லை என்பதே வரலாறுகள் கூறு கின்ற உண்மை, மாடோன் கே.டி.கெச் பி. தேவன் கம்பெனியாரின் முன் னோர்கள் 1879இல் பூஞ்சாற்று மன்ன ருடன் செய்து கொண்ட முதல் உடன் படிக்கையின் அடிப்படையில் இப்பகுதி கள் அவர்களது அனுபவத்திற்கு வந்துள்ளது என்கிறார் மார்ஷல் நேசமணி.

மேலும் அவர் கூறுகையில், பெரியார் நீர்த்தேக்கத் திட்டத்திற்காக பிரிட்டிஷ் - இந்திய நடுவண் அரசு செயலாளர் திருவிதாங்கூர் மன்னருக்காக ஆவணத் தில் கையொப்பமிட்டுள்ளார். 1889-_இல் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, குத்தகை உரிமையின் கெடுவை நீட்டித்த வேளையில் அது திருவிதாங்கூர் மன்ன ருக்கு சாசனம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதற்கு முன்னால் இப்பகுதி தமிழகத்துடன் இருந்தது என்பது தெரிகிறது. திருவிதாங்கூர் மன்னர் இப்பிரதேசங்களை பூஞ்சாறு மன்னரிட மிருந்து நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் பெற்றிருக்கிறார். இப்பிரதேசங்களுக்கு வந்தபோக மதுரை, மதுரை மாவட்டத்திலுள்ள தேவாரம், கூடலூர், போடிநாயக்கனூர், கம்பம், சிவகிரி போன்ற கணவாய்கள் வழியாக மட்டுமே வந்தடைய முடியும் என் கிறார்.

பெரியாறு நீர்த்தேக்கம்

பெரியார் அணைபற்றி அவர் கூறும்போது, பெரியாறு நீர்த்தேக்கத் திற்கு 13 சதுர மைல்கள் தண்ணீர் கொள்ளளவும் 305 சதுர மைல்கள் தண்ணீர் பிடிப்புப் பகுதியும் உண்டு. இப்பகுதிகள் சென்னை மாநிலத்திற்கு மிகவும் தேவையாகிறது. ஏனெனில் பெரியாறு நீர்த்தேக்கத்தினால் மதுரை மாவட்டத்திலுள்ள 1,90,000 ஏக்கர் நஞ்சை நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கிறது. பெரியாற்றுத் தண்ணீ ரைப் பயன்படுத்தி பெரியகுளம் அருகில் ஒரு நீர்மின் நிலையமும் நிறுவுவதற்கான திட்டத்தை சென்னை அரசு அறிவித்தது. இத்திட்டத்திற்காக பெரியகுளத்தில் ஒரு கால்கோள் விழா ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது என்று 1955 டிசம்பர் 15ஆம் நாள் நேச மணி நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

திருவிதாங்கூர் (கேரளம்) தமிழர் போராட்டம் நடைபெற்ற போது கேரள அரசியல்வாதிகள் ஒன்றாக இணைந்து நின்றனர். ஆனால் தமிழக மக்களிட மிருந்தும் அரசியல்வாதிகளிடமிருந்தும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் நேசமணி 9 தாலுகாக்களுக்காகவும் பெரியாறு அணைக்காகவும் வாதாடியபோது எல்லா கேரள எம்.பி.க்களும் எதிர்த் தனர். ஆனால் தமிழகத்திலிருந்து ஒரு எம்.பி.கூட ஆதரவு காட்டவில்லை.

எல்லைக் கமிஷன் மூவரில் ஒருவ ராக சர்தார் கே.எம். பணிக்கரை இந்திய அரசு நியமித்தது. இவர் ஒரு மலை யாளி, மலையாளிகளுக்கு சாதகமாகவே நடந்தார். மேற்கூறிய காரணங்களினால் தமிழகத்தோடு 5 தமிழ்ப் பகுதிகளே இணைந்தன (தோவாளை, அகஸ்தீஸ் வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை), முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கமும் நம்மைவிட்டு கேர ளாவுக்குச் சென்றது. தமிழன் தன் பூமியில் தாகத்திற்கு தண்ணீர் கேட் கிறான்.

முல்லைப் பெரியாறு தண்ணீர்ப் பிரச்சினை, நெய்யாறு தண்ணீர்ப் பிரச்சினை தீர வேண்டுமானால் தென் எல்லைக் காவலன் நேசமணி கேட்ட ஒன்பது தாலுகாக்களுக்கு உட்பட்ட தேவிகுளம், பீருமேடு, நெய்யாற் றின்கரை, சித்தூர், செங்கோட்டையில் பாதி ஆகிய பகுதிகளைத் தமிழகத் துடன் இணைக்க கட்சி சார்பு நிலை யின்றி எல்லா தமிழர்களும் ஒன்றி ணைந்து போராடி மேலே கூறிய நான்கரை தாலுகாக்களையும் தமிழகத் தோடு இணைத்தால் மட்டுமே தமிழகத்தின் உயிர்ப் பிரச்சினையாகிய தண்ணீர் பிரச்சினை நீங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

comments | | Read More...

தருமி 32

'எனக்கு கேக்க மட்டும்தான் தெரியும்'னு தருமி மாதிரி சொல்லி தப்பிச்சுக்கலாம்னு பாத்தேன். ஆனா மணிப்பால்லேர்ந்து நம்ம சகோதரர் வெங்கிராஜா 'நான் பதில் சொல்லியே ஆகணும்னு' எனக்கு அன்புக்கட்டளை போட்டுட்டாரு. ஆகவே இந்த தொடர் பதிவு. துணிஞ்சு படிங்க. எதுக்கும் ஆடுகால் சதை 'துடுக் துடுக்'னா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது!      1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?       'எம்.பி.உதயசூரியன்' என்ற இந்தப் பெயர்..என் அப்பா விரும்பிக் கேட்டு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எனக்கு சூட்டிய பெயர்! எனக்கான அடையாளத்தை ஈஸியாக  தந்த பெயர் என்பதால்..ரொம்பவே பிடிக்கும்.     2.கடைசியாக அழுதது எப்பொழுது?    'மூவேந்தர்களுக்குப் பிறகு தமிழனின் வீரத்தை தரணிக்கு உணர்த்திய 'மாவீரன்'..சாவேந்தி விட்டான் என்ற சதிச்செய்தி கேட்டபோது!      3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?  பிடிக்கும். ஆனாலும் சட்டி அழகா இருக்கறதைவிட..சமையல்தான் ருசியா இருக்கணும்!      4.பிடித்த மதிய உணவு என்ன?  தலைவாழை இலை போட்டு.. கொழஞ்ச சாதத்துல மணக்கமணக்க கோழிக்கொழம்ப ஊத்தி பிசைஞ்சு சாப்புட்டா..ஸ்ஸ்! என்னது? கடிச்சுக்க வஞ்சிரம் ஃப்ரையா? ஆஹா..  'இலையின் சிரிப்பில் இரை'வனைக் கண்டேன்!      5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?  கெடுப்பார் எவருமில்லை. ஆகவே நாம.. எடுப்பார் கைப்பிள்ளை!     6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?  ரெண்டுமே பிடிக்கும். என்ன..கடலில் அலை பயம். அருவியில் தலை பயம்.     7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?  அது பார்க்கும் ஆளைப்பொறுத்து!     8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?  நேர்ல சொல்றேனே சார்!     9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?  'சரி பாதி..தப்பு பாதி'! நல்லா கேக்கறீங்கப்பா கேள்வி!        10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?  .அம்மா, அப்பா, தங்கச்சிகள்.     11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?  சீச்சீ..கூச்சமா இருக்கு!     12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?  ..................     13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?  'வர்ணமே' கூடாதுங்க! வண்ணம்னு கேட்டா..கறுப்பு!     14.பிடித்த மணம்?  சொக்க வைக்கிற 'சொக்கன் ஊர்' மல்லி!     15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?  நம்ம அந்தணன். காரணம் வேறென்ன..ஹாஹாஹா!  உண்மைத்தமிழன். இயல்பான நடையில் உணர்வுபூர்வமாக எழுதுபவர்.  .  16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?  வெங்கிராஜா எழுதிய 'ட்விட்டரோசை'. இதை சுஜாதா படித்திருந்தால் மூணுவரி பாராட்டு நிச்சயம்.     17. பிடித்த விளையாட்டு?  மைதானத்தைப் பொறுத்து!     18.கண்ணாடி அணிபவரா?  மைனஸ் பவரா இருப்பவங்க.. கண்ணாடி அணி'பவரா' இருப்பாங்க. நாம இன்னும் அந்த பவருக்கு வரலை.     19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?  கட்!     20.கடைசியாகப் பார்த்த படம்?  கேக்கறது எமதர்மனா?     21.பிடித்த பருவ காலம் எது?  கெக்கெக்கே...அந்தணன் பதில் சொல்ல அருமையான கேள்வி!     22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?  வண்ணதாசனின் 'நடுகை' சிறுகதைத்தொகுப்பு.  .     23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?  ...................     24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?   ஒவ்வொரு சத்தத்துக்கும் அர்த்தம் உண்டுதானே? முன்பு சில பிடிக்காமல் இருந்தது.   இப்போது உணர்ந்துகொண்டேன்.     25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?  ....................     26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?  கூட்டுத் திறமையே இருக்குங்க!     27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?  இப்படியெல்லாம் பொத்தாம்பொதுவா கேக்கறத ஏத்துக்கமுடியாது!     28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?  வேதம் படிச்சுகிட்டிருக்கு. டிஸ்டர்ப் பண்ணாதீங்க!     29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?  'ஹேர் பின் வளைவுகளில்'  கிளுகிளுப்பாக அனுமதித்து..உச்சத்தில் உச்சிகுளிர வைக்கிற  'மலைகளின் இளவரசி'!     30.எப்படி இருக்கணும்னு ஆசை?  .....................     31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?  ..............     32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?  ஒரு வரியில சொல்லணும்னா..'வாழ்வே ஒரு வரிதான்'!
comments | | Read More...

விஜயகாந்த் கைது: தே.மு.தி.க.,வினர் சாலைமறியல்

முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் பிரதமருக்கு கறுப்புக் காட்ட கிளம்பிய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை போலீசார் கைது செய்தனர். தி.நகரில் இருந்து கறுப்புக்கொடி காட்ட கிளம்பிய விஜயகாந்த் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 600 தே.மு.தி.க.,வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையறிந்த தே.மு.தி.க.,வினர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
comments | | Read More...

கனிமொழியுடன் கருணாநிதி பிரதமரை சந்தித்தார் கேரளாவை வலியுறுத்துங்கள் என்றும் கோரினார்

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை தி.மு.க., தலைவர் கருணாநிதி இன்று சந்தித்து பேசினார். கருணாநிதியுடன் அவரது மகளும் எம்.பி.,யுமான கனிமொழியும் சென்று பிரதமரை சந்தித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் நடக்கும் கணித மேதை ராமானுஜர் 125-வது பிறந்த தின விழாவில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கரைக்குடி புறப்பட்டு செல்கிறார். அங்கு நடக்கும் பல்கலை., விழா மற்றும் தனியார் மருத்துவமனை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நேற்று மாலையில் வந்த பிரதமரை ,தமிழக முதல்வர் ஜெ., சந்தித்து பேசினார். இவர் தமிழக பிரச்னைகள் குறித்து விவாதித்தார்.

இன்று காலையில் கவர்னர் மாளிகைக்கு சென்ற கருணாநிதி பிரதமரிடம் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பேசினார். இந்த பேச்சின்போது கருணாநிதி வலியுறுத்திய விஷயங்கள் வருமாறு: முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும், இது தொடர்பான கோர்ட் உத்தரவை கேரள அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த பிரச்னையில் கேரள அரசு இணங்கி செல்ல அந்த அரசிடம் , பிரதமர் வலியுறுத்தி கூற வேண்டும் என்றும் கோரினார். இலங்கை தமிழர் பிரச்னை குறித்தும் பேசினார். கருணாநிதியுடன் கனிமொழி மற்றும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சென்றனர். 2 ஜி வழக்கில் ஜாமினில் இருக்கும் கிறிஸ்துமஸ் விழா கோர்ட் விடுமுறை என்பதால் கனி‌‌மொழி தற்போது சென்னையில் இருக்கிறார்.


கறுப்பு கொடி காட்ட முயற்சி: விஜயகாந்த் கைது : இதற்கிடையில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்து பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டப்படும் என தே.மு.தி.க., அறிவித்திருந்தது. இதனையொட்டி டி.நகரில் இருந்து கறுப்புக்கொடியுடன் தனது கட்சி தொண்டர்களுடன் புறப்பட்ட போது விஜயகாந்த் , போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவருடன் 4 எம்.எல்.ஏ.,க்களும் கைதாகினர்.

comments | | Read More...

ஜனவரி 2 முதல் கோச்சடையான் ஷூட்டிங்

 
 
ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கும் படம், 'கோச்சடையான்'. இதில் ரஜினி ஹீரோவாக நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார். இதில் ரஜினி ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கேட்டதாகத் தெரிகிறது. இதுபற்றி முடிவு தெரியாத நிலையில், சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக அசின் நடிக்கலாம் என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சூப்பர் ரஜினி இன்னும் படத்தில் நடிக்கும் அளவிற்கு உடல் தகுதி அடையவில்லை. இதனையடுத்து ஜனவரி 2 முதல் கோச்சடையான் ஷூட்டிங் நடைபெறும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



comments | | Read More...

சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு விபத்து: 22 பேர் பலி?

 
 
சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வது வாடிக்கையானது. இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சுற்றுலா செல்வதற்காக ஒரு படகில் பயணம் செய்தனர்.
 
இதில் எதிர்பாராத விதமாக படகு ஏரியில் கவிழ்ந்தது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் ஏரியில் முழ்கினர். இதில் சுமார் 21 பேர் பயணித்திருக்கலாம் எனவும், இதுவரை 4 பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர் எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தகவல் அறிந்ததும் மீட்புப் பணிக்காக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர்.



comments | | Read More...

டெண்டுல்கர் மகனின் பேட்டிங், பவுலிங் திறமை-டீன் ஜோன்ஸ் வியப்பு

 
 
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூனின் கிரிக்கெட் திறமை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் வியப்பும் பாராட்டும் தெரிவித்துள்ளார். அர்ஜூன் மிகப் பெரிய வீரராக உருவெடுப்பார் என்றும் பாராட்டியுள்ளார் ஜோன்ஸ்.
 
அரசியல், சினிமாவில் மட்டுமா வாரிசுகள் வர வேண்டும். கிரிக்கெட்டிலும் கூட ஏகப்பட்ட வாரிசுகள் கிட்டத்தட்ட அத்தனை நாடுகளிலுமே உள்ளனர். அந்த வரிசையி்ல் சச்சினின் வாரிசான அர்ஜூன் தந்தையைப் போலவே கிரிக்கெட்டில் இப்போதே பிரமாதப்படுத்தி வருகிறார்.
 
பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் அவர் ஜொலிக்கிறார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வந்துள்ள சச்சினுடன் அர்ஜூனும் வந்துள்ளார். மெல்போர்ன் மைதானத்தில் வெள்ளிக்கிழமையன்று அவர் தந்தை சச்சின் மற்றும் வீரேந்திர ஷேவாக்குடன் இணைந்து பந்து வீசி, பேட்டிங் செய்து பயிற்சியும் எடுத்தார்.
 
கிட்டத்தட்ட அரை மணி நேரம், நடந்த இந்த பயிற்சியின்போது சச்சின் தனது மகனுக்கு பந்து வீசினார். அதேபோல அர்ஜூன், ஷேவாக்குக்குப் பந்து வீசினார்.
 
இந்த பயிற்சியை டீன் ஜோன்ஸ் அமர்ந்திருந்து வேடிக்கை பார்த்து ரசித்தார். பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அசத்துகிறார் அர்ஜூன். அவருடைய தந்தையின் திறமையில் 100ல் ஒரு பகுதியை மட்டும் அவர் வெளிப்படுத்தினால் போதும் மிகப் பெரிய வீரராக முடியும்.
 
தனது மகனின் கிரிக்கெட் திறமை குறித்து கூர்ந்து கவனித்து வருகிறார் சச்சின் என்று நினைக்கிறேன். சமீபத்தில் அர்ஜூனுடன் நான் பேசியபோது, தான் பள்ளி கிரிக்கெட் போட்டி ஒன்றில் சதம் அடித்தது குறித்தும், ஒரு போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தியது குறித்தும் அர்ஜூன் சிலாகித்துக் கூறினார்.
 
அவருக்குள் நல்ல திறமை உள்ளது. நிச்சயம் பெரிய வீரராக வருவார் என நம்புகிறேன் என்றார் ஜோன்ஸ்.
 
மேலும் அவர் கூறுகையில், அர்ஜூனுக்கு யார் பயிற்சி தருகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதுபோல முக்கிய வீரர்களுடன் அவர் பயிற்சியின்போது உடன் இருந்து கவனித்தாலே போதும் நல்ல பயிற்சி கிடைக்கும் என்றார் ஜோன்ஸ்.



comments | | Read More...

பாரதிராஜாவின் இயக்கம் நிறுத்தம்

 
பாரதிராஜா கேரள நாயகிகளான இனியா, கார்த்திகா, ஆகியோரை வைத்து அன்னக்கொடியும் கொடிவீரனும் என்ற படத்தை இயக்கி வந்தார்.
முல்லை பெரியாறு பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் படப்பிடிப்பு வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி இரு நாயகிகளையும் ஊருக்கு அனுப்பி விட்டாராம் இயக்குநர். பிரச்சினைகள் முடிந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் முடிவில் இருக்கிறார்.


comments | | Read More...

இளையராஜா வீடு முன்பு பெரியார் தி.கவினர் ஆர்ப்பாட்டம்

 
 
கேரளத்தைச் சேர்ந்த மலபார் கோல்ட் நிறுவனத்தின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி இசைஞானி இளையராஜாவின் வீடு முன்பு பெரியார் தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.
 
கேரளத்தவர்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெருமளவில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கடையடைப்பு உள்ளிட்டவை நடந்து வருகின்றன.
 
இந்த நிலையில் இசைஞானி இளையராஜா வீடு முன்பு பெரியார் தி.க. தொண்டர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். டிசம்பர் 28ம் தேதி மலபார் கோல்ட் நிறுவன இசை நிகழ்ச்சியில் இளையராஜா கலந்து கொள்கிறார். இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். மலபார் கோல்ட் நிறுவனம் கேரளாவைச் சேர்ந்ததாகும். இதனால் இதில் இசைஞானி இளையராஜா கலந்து கொள்ளக் கூடாது, அதைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி இளையராஜாவின் வீடு முன்பு பெரியார் தி.கவினர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
பின்னர் அவர்களில் சிலர் வீட்டுக்குள் சென்று இசை நிகழ்ச்சியை இளையராஜா புறக்கணிக்க வேண்டும் என்று கோரி மனு ஒன்றையும் அளித்தனர்.
 
இந்தப் போராட்டம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger