Monday, 16 September 2013
ல்போர்ன், செப்.17- ஆஸ்திரேலியா நாட்டில் பணி புரியும் இந்திய வம்சாவழி டாக்டர், மனு மைம்பில்லி கோபால் (வயது 39). இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 2 பெண்களிடம் அடி வயிற்றுப்பகுதியை பரிசோதிக்க வேண்டும் என்று கூறி கற்பழித்ததாக கூறப்படுகிறது. 39 மற்றும் 18 வயதுள்ள அந்த இரு பெண்களின் புகாரின் பேரில், கடந்த பிப்ரவரி மாதம் டாக்டர் கோபால் கைது செய்யப்பட்டார். மெல்போர்னில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவில் கேரள மாநிலம் கொச்சிக்கு விமானத்தில் செல்ல முயன்றபோது அவர் போலீசாரிடம் பிடிபட்டார். அவர் மீது ஆஸ்திரேலியா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. தன் மீதுள்ள குற்றச்சாட்டை மறுத்து வரும் டாக்டர் கோபால், இரு பெண்களும் சதித்திட்டம் காரணமாக கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளதாக கூறி இருந்தார். இந்த நிலையில், டாக்டர் கோபால் மீது மற்றொரு 18 வயது பெண்ணும் கற்பழிப்பு புகார் கூறி இருப்பதாக விசாரணை குழுவை சேர்ந்த போலீசார் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையில், கற்பழிப்பு வழக்கில் டாக்டர் கோபாலுக்கு மெல்போர்ன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ...