Friday, 19 July 2013
தர்மபுரியில் காதல் கலப்பு திருமணம் செய்த இளவரசன் கடந்த 4–ந் தேதி
ரெயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்தார். அவரது மரணம் பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தினாலும் டெல்லி டாக்டர்கள் 3 பேர் நடத்திய மறு பிரேத பரிசோதனை
மூலம் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இதனால் இளவரசன் மரண சர்ச்சை
முடிவுக்கு வந்தது.
கலப்பு திருமண விவகாரத்தில் தனது தந்தை நாகராஜ் மற்றும் கணவர் இளவரசன் ஆகியோரை இழந்து உள்ள திவ்யாவுக்கும், அவரது குடும்பத்திற்கும் ஆலோசனை (கவுன்சிலிங்) வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
கோர்ட்டு உத்தரவு நகல் திவ்யாவுக்கு தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன் மூலம் அனுப்பப்பட்டது. 20–ந் தேதி கவுன்சிலிங் பெற திவ்யா சம்மதம் தெரிவித்து இருந்தார். இதன்படி திவ்யா, அவரது தாயார் தேன்மொழி. தம்பி மணி ஆகிய 3 பேரும் நாளை கவுன்சிலிங் பெற வேண்டும்.