News Update :
Powered by Blogger.

திருக்குறள் ஆங்கில பெயர்ப்பு செய்தது தமிழுக்கு செய்யும் துரோகம் (கொலைவெறி)

Penulis : karthik on Monday 2 January 2012 | 05:15

Monday 2 January 2012




ஒரு தமிழன் எழுதி பாடி  இன்னொரு தமிழன் இசையமைத்த  பாடல் சர்வதேச அளவில் ரசிக்கபட்டு பாரட்ட படுவதில் ஒரு தமிழனாக பெருமை அடைகிறேன். அந்த பாடலை நானும் பலமுறை கேட்டு மகிழ்ந்தேன்.அனால் பலருக்கு இந்த பாடல் விசயத்தில் தமிழ் பற்று விஸ்வரூபம் எடுத்ததிருப்பது சிரிப்பை வரவழைக்கிறது. 

இதில் எங்கு வந்தது தமிழ் துரோகம்? ஒரு படத்தில் ஒரு பாடல் இடம் பெறுகிறது என்றால் அந்த படத்தில் எந்த சந்தர்ப்பத்தில் இடம் பெறுகிறது என்பதை கூட தெரிந்துகொள்ளாமல் விமர்சிப்பது சரியானதா? 

இதுவரை எந்த பாடலிலும் அங்கில வார்த்தை வரவில்லையா? ஏன் ஒரு ஆங்கில வார்த்தை கூட கலவை இல்லாமல் உங்களால் பேச முடியுமா? அப்போ நீங்கள் தமிழுக்கு துரோகம் செய்ய வில்லையா? ஒரு தமிழன் பாடல் இந்தளவுக்கு பாரட்ட பட்டு மொழிகள் நாடுகள் தாண்டி ரசிக்கபடுவதுக்கு குறை சொல்வது எந்தவகையான மன பாங்கு என்பது இலகுவில் புரிந்து கொள்ள முடியும். இது தமிழனுக்கு கூடவே பிறந்த குணம்.

ஈழ தமிழர்களை எடுத்து கொள்ளவோம் இன்று ஈழத்தை வென்றெடுப்பது,தமிழை பற்றி பாரிய பற்று பொறுப்பு இருப்பதாக சொல்லிகொள்ளும் இவர்கள் அன்று இவர்கள் நண்பர்கள் ஈழத்துக்காக போராடும் போது அநாதரவாக விட்டுவிட்டு உயிரை காக்க ஓடியவர்கள் தானே மறுக்க முடியுமா? அப்படி சென்றவர்கள் அவர்களையும் அவர்கால் குடும்பத்தையும் காப்பாற்ற ஈழ பிரச்சனையை காரணம் காட்டி அநாட்டு  குடியுரிமை வாங்கி தங்கள் பாதுகாப்பையும் பொருளாதரத்தையும் சரி செய்துவிட்டு ஈழத்தில் இருப்பவர்களை குறை சொல்லுகிறார்கள். தமிழை மற்றவர்கள் காப்பற்றவில்லை என்கிறார்கள். இதை சொனால் அத்தனை பெரும் சேர்ந்து என்னை துரோகி என்பார்கள்.இவர்கள் சொல்கிறார்கள் கொலை வெறிபாடல் தமிழில் எழுத படாததால் இது தமிழுக்கு செய்யும் துரோகம் என்று. "சாத்தான் வேதம் ஓதுது" என்று சொல்வார்களே அந்த முது மொழி நினைவுக்கு வருகிறது.



இவர்கள் மட்டும் தமிழ் ஈழத்தை விட்டு ஓடி போனது துரோகம் இல்லை.வேறு மொழி பேசும்  நாடுகாளில் போய் வசிக்கலாம்.அனால் இவர்கள் பார்வையில் 
திருக்குறள் ஆங்கில மொழியில் மொழி பெயர்த்தது ,தமிழன் ஆங்கில அல்லது  வேறு மொழி படம் எடுப்பது,ஏ.ஆர் .ரகுமான் ஆங்கில மொழி படங்களுக்கு இசை அமைப்பது தமிழ் மொழிக்கு செய்யும் துரோகம் என்று கூட சொல்லுவார்கள் இனி வரும் காலங்களில்.ஆனால் இவர்கள் வணங்கும் கடவுளுக்கு மட்டும் கிரந்த மொழிபெயர்ப்பு தரகர்கள்  வேண்டும் அருள் வாங்க.

இப்படி எதாவது சொல்லி தங்கள் செய்த தப்பை மறைக்கிறார்கள் என்றே படுகிறது. இவர்கள்தான் முகபுத்தகத்தில் ஈழ உணர்வு நிரம்பி வழிய குழுக்கள் ஆரம்பித்து கழுத்தறுக்கிறார்கள். அங்கும் ஆளுக்கு ஒரு குழு அமைத்து பிரிந்துதான் இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் தமிழ் உணர்வு பற்று என்று சொல்லி ஒருவர் நாற்காலியில் இருந்து நாட்டை சுரண்டி குடும்பத்தை கொழுக்க வைத்து கிட்ட தட்ட அவர்கள் குடும்பம் கால் பதித்து  ஆதிக்கம்  செலுத்தாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு துரோகம் செய்யும் போது அவர்களுக்கு கோசம் போட்டு விட்டு ஒரு பாடல் தமிழை அழிக்கிறது என்று எப்படித்தான் சொல்கிறர்களோ?????

comments | | Read More...

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தபால்தலை வெளியீடு- பிரான்ஸ் அஞ்சல் துறை அங்கீகாரம்


Prabhakaran Stamp

பிரான்ஸ்: பிரான்ஸ்சில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தபால்தலை வெளியிடடப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு அஞ்சல் துறை அங்கீகாரம் வழங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் சார்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தபால் தலைகள் வெளியிடப்பட்டன.

தமிழீழ வரைபடம், விடுதலைப் புலிகளின் மலரான கார்த்திகைப் பூ, புலிக்கொடி மற்றும் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தைக் கொண்ட 4 வகையான தபால் தலை முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சிறப்பு தபால் முத்திரைகளுக்கு பிரான்ஸ் அஞ்சல் துறை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இவற்றைப் பயன்படுத்தி தங்களது தபால்கள் மற்றும் சரக்குகளை தமிழர்கள் அனுப்ப முடியும் என தமிழர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பிரான்ஸ் வாழ் சிங்கள மக்கள் மற்றும் இலங்கை அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் தூதரகம் கூறுகையில், "விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிகள் அமைப்பின் சின்னங்களைக் கொண்ட தபால் தலைகள் வெளியானது குறித்து எங்களுக்கும் தெரிய வந்துள்ளது. ஆனால் பிரான்ஸ் அஞ்சல்துறை லபோஸ்ட் இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger